திங்கள், ஜனவரி 28, 2008

பகல் கொள்ளையர் - ரிலையன்சு

நான் ஏன் ரிலையன்சு பொருட்கள்/ சேவைகளை வாங்குவதில்லை?

சந்தைப் பொருளாதாரத்தின் சாபக்கேடு, வணிக நிறுவனங்களும் அரசு நிர்வாகங்களும் கள்ள உறவு வைத்து கொண்டு வாடிக்கையாளர்களையும் பொது மக்களையும் ஏமாற்றுவதுதான்.
  1. 'சிடிஎம்ஏ தொழில் நுட்பத்தில் செல்பேசி சேவை வழங்குபவர்கள், குறிப்பிட்ட வட்டாரத்துக்கு வெளியே இணைப்பு கொடுக்கும் ஊர்மாற்று சேவை (roaming) அளிக்க அனுமதி கிடையாது' என்ற விதிக்குட்பட்டு உரிமம் வாங்கிய ரிலையன்சு நிறுவனம், அந்த விதிகளை மீறி நாடெங்கும் ஊர்மாற்று சேவை வழங்கியது.
    சில வாரங்களுக்குப் பிறகு அது முறையீட்டு அமைப்பின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதும், தண்டத் தொகையாக சில நூறு கோடி ரூபாய்கள் கட்டி விட்டு அத்தகையை சேவையையே அனுமதிக்க வைத்து விட்டது ரிலையன்சு.
    இது போல விதியை உடைத்து, மற்ற போட்டியாளர்களை விட சிறப்பு திறன் பெற்றுக் கொள்வது ரிலையன்சுக்குப் பழகிப் போன ஒன்று.

  2. கிராமப் புறங்களில் தொலைதொடர்பு சேவை வழங்கும் பொறுப்புடைய பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மானியமாக தனியார் நிறுவனங்கள் ADC எனப்படும் இணைப்புக் குறைபாட்டுக் கட்டணம் கொடுக்க வேண்டும். வெளிநாட்டிலிருந்து ஒரு அழைப்பு இந்தியாவுக்கு வந்தால் கணிசமான தொகை குறைபாட்டுக் கட்டணமாக பிஎஸ்என்எல்லுக்குப் போகும்.
    அதை உடைத்து, கள்ளத்தனமாக பிஎஸ்என்எல் வலையமைப்பையே பயன்படுத்தி, உள்ளூரிலிருந்தே இணைப்பு வருவதாக பொய்த் தோற்றம் ஏற்படுத்தி கோடி கோடியாகச் சம்பாதித்தது ரிலையன்சு நிறுவனம்.
    உண்மை அம்பலமானதும் தண்டம் கட்டி விட்டுத் தொடர்ந்து அந்த சட்ட விரோதச் செயலை செய்து வருகிறது.

  3. நெகிழித் தொழிலில் வேறு போட்டியாளர்களை ஒழித்து முற்றுரிமை (monopoly) பெற்று விடும்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டு இப்போது முற்றுரிமையுடன் கொள்ளை ஆதாயம் சம்பாதிப்பதாக அந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நண்பர் தெரிவிக்கிறார்.

  4. சந்தைப் பொருளாதாரத்தில் பெரிய நிறுவனத்தின் உரிமையாளர்கள் என்ற பொறுப்பில் இருப்பவர்கள், தம்மிடம் வந்து சேரும் செல்வம் சமூகம் முழுவதற்குமானது. குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட பதவியில் நாம் இருப்பதால் நம்மிடம் வருகிறது என்று உணர்ந்து பொறுப்புடன் அதை மீண்டும் தொழில் வளர்ச்சிக்கோ, சமூக நலனுக்கோ பயன்படுத்த வேண்டும்.

    முகேஷ் அம்பானி 200 மில்லியன் டாலர்களுக்கு விமானம் வாங்கி தனது மனைவிக்கு பரிசளிப்பதும், 400 கோடி ரூபாய்களுக்கு சொந்த வீடு கட்டிக் கொள்வதுமாக பணத்தை ஊதாரித்தனமாக வீணாக்குகிறார்.
இப்படி தவறான வழிகளில் நிறுவனத்தை வளர்த்துத் தொழிலைப் பெருக்குவது, அப்படி அடாவடியாகப் பிடித்து சந்தை ஆதிக்கத்தின் மூலம் கிடைக்கும் ஆதாயத்தை பொறுப்பில்லாமல் செலவழிப்பது என்ற இரட்டைக் குற்றவாளியான ரிலையன்சு குழுமம் அரசாங்கத்தால் குற்றம் சாட்டப்பட்டு இழுத்து மூடப்பட்டிருக்க வேண்டும். அது நடக்காமல் போவதால், என்னளவில் அந்தக் குழுமத்தைப் புறக்கணித்து வருகிறேன்.
  • ரிலையன்சு பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் போடுவதில்லை.
  • ரிலையன்சு ஃபிரஷ் கடைகளில் பொருள் வாங்குவதில்லை.
  • ரிலையன்சு தொலைபேசிச் சேவைகளைப் பயன்படுத்துவதில்லை.
  • ரிலையன்சு இணையச் சேவைகளைப் பயன்படுத்துவதில்லை.
நெகிழித் துறையில் நாம் வாங்கும் பொருட்களில் பல ரிலையன்சுக்கு ஆதாயம் சேர்க்கின்றன என்பதை உணர்கிறேன். அவற்றின் முழு விபரமும் மாற்றும் கிடைத்தவுடன் அவற்றையும் புறக்கணிக்க ஆரம்பிப்பேன்.

56 கருத்துகள்:

சுந்தர் / Sundar சொன்னது…

அப்படி போடுங்க தலைவரே !

KARTHIK சொன்னது…

//ரிலையன்சு பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் போடுவதில்லை//


காரணம் மாற்ற பெட்ரோல் நிலையங்களில் விலை 47.50 ரிலையன்ஸ் 51.00 அதனால் மற்றபடி மற்றது எதும் என்னால் முடியாது.

வடுவூர் குமார் சொன்னது…

இதெல்லாம் அனுமதிக்கிற அரசாங்கத்தை புறகணிக்கிறேன் என்று இந்தியாவையே விட்டுவிடாதீர்கள்..மா சி.
தவறாக புரிந்துகொள்ளாமல் இருக்க :-)

இம்சை சொன்னது…

சிவா, தவறு இருந்தா மன்னிச்சிக்கோங்க... நான் ரிலையன்ஸ் பிரஷ்சில் காய்கறி வாங்குபவன்.

சிறு கடைகளுக்கு போகும் போது பேரம் பேச வேண்டும். பூனாவில இருக்கும் உண்மை தமிழனான எனக்கு சார் (4), சே (6) இத தவிர ஹிந்தி தெரியாது . இது கூட கிரிக்கேட் கமெண்ட்ரி கேட்டு கத்துகிட்டது.

இந்த ரிலையன்ஸ் பிரஸ் போனா பேரம் பேச தேவை இல்ல, வேண்டும் அளவு வாங்கலாம். அதாவது 1/2 KG , 1 KG வாங்க வேண்டியது இல்ல. 225 GM, 350 GM எல்லாம் கூட வாங்கலாம்.

விலை கூட நான் சேக் பண்ணினேன் மற்ற இடங்களை விட கம்மி.

ஏசி போட்டு கடை வெச்சி இருக்கான் அதனால குடும்பத்தோட போய் காய்கறி வாங்கலாம். அவங்களுக்கும் கொஞ்சம் வெளிய போய் வந்த மாதிரி இருக்கும்.

என் குட்டி பையனுக்கு இப்ப இருந்தே ஒரு ஒரு காய், கனி எல்லாம் கைல குடுத்து அத பத்தின நன்மைகளை எடுத்து சொல்லலாம். 2 மணி நேரம் கடைல இருந்தாலும் யாரும் ஒண்ணும் சொல்வது இல்லை.

சரி இந்த கருத்துக்கு எங்க இருந்து எல்லாம் ஆப்பு வர போகுதோ....

இம்சை சொன்னது…

இன்னைக்கு எனக்கு நேரம் சரியில்ல, சொந்த செலவுல சூனியம் வெச்சிக்கறேன். வாங்க வாங்க...

முகேஷ் அம்பானி 200 மில்லியன் டாலர்களுக்கு விமானம் வாங்கி தனது மனைவிக்கு பரிசளிப்பதும், 400 கோடி ரூபாய்களுக்கு சொந்த வீடு கட்டிக் கொள்வதுமாக பணத்தை ஊதாரித்தனமாக வீணாக்குகிறார்.

இது எனக்கு தப்பா தெரியல... நானும் தான் என் மனைவிக்கு என்னோட தகுதிக்கு ஒரு ஸ்கூட்டி வாங்கி குடுத்து இருக்கேன்....அது எப்படி பணம் வீணாகுது. அவன் கிட்ட நிறையா இருக்கு செய்யறான்.

இம்சை சொன்னது…

நான் ரிலையன்ஸ் சேர் வாங்கல, ஆனா கொஞ்ச நாள் முன்னாடி எல்லாரும் ரிலையன்ஸ் பத்தி தான் பேசிட்டு இருந்தாங்க

பெயரில்லா சொன்னது…

ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு நிறுவனங்கள் செய்வது இதையேதான்.

இத்தனை பிரச்சனை / சறுக்கல் இருந்தாலும் மக்களுக்கு ஏன் ரிலையன்ஸ் பிடித்து இருக்கு யோசிச்சீங்களா ?

சேவையில் தரம். இங்கு யு.கேயிலிருந்து இந்தியாவுக்கு கால் செஞ்சா பக்கத்து வீட்டில் இருந்து கால் செய்வது போல் தெளிவாக இருக்கு. விலை முன்பு கட்டுவதில் கால் பங்குதான்.

இம்சை சொல்வது போல் காலற பிள்ளைகளுடன் போய் வர வியர்வை இல்லாமல் ஒரு இடம்.

ஒரு காலத்துல அரசு தொலைபேசி மட்டும்தான், அவங்க செய்யாத அட்டகாசமா இவங்க செய்யறாங்க.
அவங்க அட்டகாசம் + மோசமான சேவை.

இது அட்டகாசம் + சிறந்த சேவை.

இம்சை சொன்னது…

எங்க வீட்டில பிஎஸ்ன்எல், ரிலையன்ஸ் பிராட் பேன்ட் இருக்கு. கடந்த 1 வருடத்தில் ரிலையன்ஸ் 2 முறை தான் டவுன் ஆனது. Excellent customer service but BSNL I don't want to talk.

பெயரில்லா சொன்னது…

வணக்கம் மா.சிவக்குமார்

உங்களுடைய தன்முனைப்பு சரியானதே
நானும் என்னலவில் நீங்கள் குறிப்பிட்டதை ஆராய்ந்துவிட்டு உண்மையெனில் நானும் உங்கள் வழியை பின்பற்றுவேன்

உங்களின் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் ஏதேனும் எனக்கு அஞ்சலிட முடியுமா என் முகவரி rajasekaran.rr@gmail.com


சரி அதென்ன நெகிழித் துறை எனக்கு தெறியவில்லை

குழலி / Kuzhali சொன்னது…

வணக்கம் மா.சி.,
நான் பல வருடங்களாக சரவணபவன் உணவகத்தில் சாப்பிடுவதில்லை சரவணபவன் உணவு எவ்வளவு நன்றாக இருந்தாலும், சரவணா ஸ்டோர்ஸ்ல் பொருள் வாங்குவதில்லை எத்தனை விலை மலிவாக இருந்தாலும் ,எங்களூரில் நண்பனோடு கொடுக்கல் வாங்கல் பிரச்சினை என்று வந்தபின் அவரின் குழந்தை மனைவியையும் கூட கொலை செய்த பஸ் ஓனரின் பஸ்ஸில் ஏறுவதில்லை எத்தனை அவசரமாயிருந்தாலும்.... இன்னும் இது போன்ற ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கிறது.... சேவை தரமெல்லாம் நன்றாக இருந்தும் நான் புறக்கணிக்கும் மனிதர்கள் / நிறுவனங்கள் / கடைகள்...

இலவசக்கொத்தனார் சொன்னது…

எனக்கு ரிலையன்ஸ் சேவைகள் பலவற்றை பயன்படுத்தும் வசதி இல்லை. ஆனால் அவர்களது நெடுந்தொலைவு தொலைபேசி சேவையைப் பயன் படுத்தி இருக்கிறேன். அதில் குறை சொல்வதற்கு எதுவுமில்லை.

//முகேஷ் அம்பானி 200 மில்லியன் டாலர்களுக்கு விமானம் வாங்கி தனது மனைவிக்கு பரிசளிப்பதும், 400 கோடி ரூபாய்களுக்கு சொந்த வீடு கட்டிக் கொள்வதுமாக பணத்தை ஊதாரித்தனமாக வீணாக்குகிறார்.//

அவர் பணத்தை அவர் செலவு செய்கிறார். அதில் இது ஊதாரித்தனம், இது ஊதாரித்தனம் இல்லை என நாம் சொல்ல முடியுமா? விட்டால் நான் என் தங்கமணிக்கு எதாவது வாங்கிக் கொடுக்க வேண்டுமானால் ஒரு வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும் என ஆகி விடும் போல இருக்கிறதே. எனக்குத் தெரிந்து அது ரிலையன்ஸ் பணத்தில் (கம்பெனி பெயரில்) வாங்கியதாகத் தெரியவில்லை.

அப்புறம் just for the records அந்த விமானத்தின் விலை சுமார் 60 மில்லியன் டாலர்கள், நீங்கள் சொல்வது போல் 200 மில்லியன் இல்லை என்றே நினைக்கிறேன். தாங்கள் தவறாக தகவல் தரக்கூடாது என்பதற்காகத்தான் இது. மற்றபடி 60ஆய் இருந்தால் என்ன, 200ஆக இருந்தால் என்ன? ஒரே வாய்பிளப்புதான். :))

Anil சொன்னது…

ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்து.. :)

Unknown சொன்னது…

சிவா,
ரிலையன்ஸ்-ன் பதாள்கங்கா புராஜக்ட்ல் ஆரம்பித்து பவர் IPO வரை நிறைய சாணக்கியத்தனங்களை (??? அல்லது மொள்ளமாரிதனம்)பேசலாம்.

புறக்கணிப்பது என்பது உங்களின் வருத்தத்தைக் காட்டவே. குறைந்த பட்ச வருத்தத்தை/ எதிர்ப்பை / கோபத்தை பதிவு செய்கிறீர்கள்.

ஆனால் நீங்கள் போடும் சட்டையில் இருந்து , உபயோகப்படுத்தும் சில பிளாஸ்டிக் வரை ரிலையன்ஸ் நேரடியாக இல்லாமல், மறைமுகமாக ஊடுருவித்தான் உள்ளது.

அவர்களின் வீச்சு அப்படி.

நாளை ரிலையன்ஸின் பவர் திட்டங்கள் வந்தவுடன் எந்த கிரிட்ல யாரின் மின்சாரம் வருகிறது என்று தெரியாது. பயன்படுத்தித்தான் ஆக வேண்டும்.

கூடிவாழ்தலின் அல்லது சார்ந்து வாழ்தலின் தத்துவம். பிடிக்காவிட்டாலும் சகித்துக்கொள்ள வேண்டிய நிலைமை.

காடுதான் சரியான வழி சிவா :-)))

பெயரில்லா சொன்னது…

//நெகிழித் துறையில்//// மாசி. அண்ணே அது என்ன ? ஷேர் மார்க்கெட்டா ?

Bharath சொன்னது…

நேர்மையான கம்பெனி என்று ஏதாவது உள்ளதா? என்னை பொறுத்தவரை Reliance is influential not cheaters. மேலும் அவர்களுடய வியாபார தந்திரங்களால் அடித்தட்டு மக்கள் வரை பயன் சென்றடைகிறது.

K.R.அதியமான் சொன்னது…

Shiva,

Sure Reliance group abused the license, permit raaj in the 70s and 80s to grow. (as shown in the film 'Guru'). as long as the regulations and regulators are contrary to markets they will be bypassed or corrupted. before accusing reliance, we must ask ourselves how honest are we all in dealing with black money (tax evasion) in land registrations, declaring all our incomes properly, buying all commodities with bill (there by paying extra amount as tax, esp gold, electronics, etc), and more...

This presudo-socialism has corrupted almost all of us. RIL is in the top bracket. that is all.
But for Rel-comm breaking the TRAI and DoT raaj (thru hook or crook), telcom tariffs would not have beomce so cheap so fast since 2002. Rel-Comm was the first telco to offer incomming free calls, etc.

as for Reliance Petro and RIL, but for thier dynamic growth, poylster and cloth would never have become so cheap in India. in the 60s and 70s, the poor were desparate for clothings and dress which were more costly due to govt regulations. now a labourer can buy a shirt with 2 or 3 days of his daily wages. We must thank Relicane for all this.

When Mayawathi banned Reliance Fresh in UP, there was a strong protest from the farmers who sold to Relicane. and R-Fresh vegetables are cheaper and betterm whcih reduces the food cost of the people.

and diesel in govt PSU bunks are adulterated. hence mnay truckers fill their tanks at Rel bunks even though the price is slightly higher. Pls analyse the real situtation in OIL, HPCL and BPCL bunks where the bunk owner cannot make a decent return on his capital without adulteration. the PSUs pay too little commision and the officers are all corrupt and are in collusion with the bunk owners. in this matter Reliance and Essar bunks are far far better. and Relicance petroleum complex in Jamnagar is one of the best and biggest in the world and their productivity and efficiceny is the best and state of art. and they broke all records in gestation and commisionning of greefield petro-projects. Pls compare the record of govt MRL and HPCL and ONGC; or the work ethics, corruption and 'leakages' within the govt oil PSUs.

பெயரில்லா சொன்னது…

//ரிலையன்சு தொலைபேசிச் சேவைகளைப் பயன்படுத்துவதில்லை. ரிலையன்சு இணையச் சேவைகளைப் பயன்படுத்துவதில்லை.//


:)) எதிராளி ரிலையன்ஸ் தொலைபேசி வெச்சிருந்தா அதுக்காக அவங்களோட பேசாம இருந்துடாதீங்க.

ரிலையன்ஸ் இணைய இணைப்புல யாராவது பின்னூட்டம் போட்டா அனுமதிப்பீங்களா?

பெயரில்லா சொன்னது…

ஒங்க புறக்கணிப்பு கதையை கேட்டா ஆத்தோட கோபிச்சுகிட்டு கழுவாம போனவன் கதை தான் ஞாபகத்துக்கு வருகிறது

பெயரில்லா சொன்னது…

இப்படிஎல்லாம் பேசும் மா.சி போன்றவர்கள் ரிலயன்ஸ் ஷேரில் குறைந்தது பத்து லட்ச ரூபாயாவது போட்டு வைத்திருப்பார்கள்.



ரிலையன்ஸைத் தப்புச் சொல்வதற்கு முன் சில விஷயத்தை யோசிக்க வேண்டும்.



இந்திய அரசு ஊழியர்கள் செய்யும் உள்வேலைக்கு ரிலையன்ஸை குற்றம் சாட்டினால் எப்படி ?


ரிலையன்ஸ் ஷேர் ஹோல்டர்களுக்கு லாபம் தரும் கம்பெனி. அதன் நோக்கம் லாபம் தான். ஆனால், நம் வரிப் பணத்தில் ஓடும் அரசு நிறுவனம் ரிலையன்ஸுக்கு லாபம் வரும் படி வேலைசெய்தால் அது ரிலையன்ஸ் தப்பா ? 

மா சிவகுமார் சொன்னது…

//அப்படி போடுங்க//
நன்றி சுந்தர்.

//காரணம் மாற்ற பெட்ரோல் நிலையங்களில் விலை 47.50 ரிலையன்ஸ் 51.00//
அப்படி ஒரு காரணம் இருக்கா! ஆரம்பத்தில் ஓரே விலைதான் இருந்தது என்று பார்த்திருக்கிறேன்.

//அனுமதிக்கிற அரசாங்கத்தை புறகணிக்கிறேன் //
வணக்கம் குமார்.
'யாமார்க்கும் குடியல்லோம்'. தவறாகப் புரிந்து கொள்ளவில்லை என்று சொல்ல :-)

வாங்க இம்சை,

//ஏசி போட்டு கடை வெச்சி இருக்கான் அதனால குடும்பத்தோட போய் காய்கறி வாங்கலாம். அவங்களுக்கும் கொஞ்சம் வெளிய போய் வந்த மாதிரி இருக்கும்.//

இது போன்று ஏசி போட்டு, எடை போட்டு வைத்திருக்கும் எல்லா இடங்களையும் தவிர்க்க வேண்டாம். ரிலையன்ஸ் குழுமத்தை பல காரணங்களுக்காக தவிர்க்கிறேன்.

உங்களுக்கும் மனதில் இப்போது ஒரு கேள்வி உருவாகியிருக்கிறது. நீங்களே அலசிப் பார்த்து முடிவு செய்யுங்கள்.

//அது எப்படி பணம் வீணாகுது. அவன் கிட்ட நிறையா இருக்கு செய்யறான்.//

ஒருவரிடம் சேரும் பணம் அவர் சார்ந்த சமூக அமைப்புகளின் பலனால் மட்டுமே வருகிறது. இந்த அமைப்புகள் இல்லாமல் ஒருவர் எவ்வளவு திறமையாக இழைத்தாலும் தன் வயிற்றுக்கான உணவு தேடவே நேரம் போதாது.

அதனால் அப்படிச் சேரும் பணத்தை மீண்டும் சமூக நலனுக்காக முதலீடு செய்யாமல் இருப்பது அன்னமிட்ட கைக்கு துரோகம் செய்வது போன்றதுதான் என்பது என் கருத்து.

//நான் ரிலையன்ஸ் சேர் வாங்கல, //

நானும் வாங்கல. எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்வதே எனக்குச் சரியாக போகிறது. எதிர்காலத்திலும் ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகளை முதலீட்டுக்காக நிச்சயம் பயன்படுத்த மாட்டேன்.

அன்புடன்,
மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//இத்தனை பிரச்சனை / சறுக்கல் இருந்தாலும் மக்களுக்கு ஏன் ரிலையன்ஸ் பிடித்து இருக்கு யோசிச்சீங்களா ? //

//எங்க வீட்டில பிஎஸ்ன்எல், ரிலையன்ஸ் பிராட் பேன்ட் இருக்கு. கடந்த 1 வருடத்தில் ரிலையன்ஸ் 2 முறை தான் டவுன் ஆனது. Excellent customer service but BSNL I don't want to talk.//

எனக்குப் பிடிக்கலைன்னுதான் சொல்றேன். என்னைப் போல பலர் இருக்கலாம்.

'என்ன வேண்டுமானாலும் செய்யலாம், மக்கள் பொருட்படுத்த மாட்டார்கள்' என்பதுதான் இப்படிப்பட்டவர்களின் துணிவு. ஒற்றைக் குரல்களாவது ஒலிப்பது நல்லதுதானே.

வணக்கம் இராஜராஜன்,

//உங்களின் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் ஏதேனும் எனக்கு அஞ்சலிட முடியுமா என் முகவரி//

கடந்த சில ஆண்டுகளாக நான் படித்த செய்திகளின் அவதானித்த நிகழ்வுகளின் தாக்கம்தான் இந்த இடுகை. இதற்கான செய்திச் சுட்டிகளைத் திரட்டித் தர முயற்சிக்கிறேன்.

//அதென்ன நெகிழித் துறை //
//அது என்ன ? ஷேர் மார்க்கெட்டா ?//
நெகிழி == Plastics :-)

குழலி,

நம்மைப் போலவே சிலராவது இருப்பார்கள் என்று நான் நினைத்தது சரிதான் :-). நன்றி.

இலவசக் கொத்தனார்,

//அவர் பணத்தை அவர் செலவு செய்கிறார். அதில் இது ஊதாரித்தனம், இது ஊதாரித்தனம் இல்லை என நாம் சொல்ல முடியுமா?//

'அவரிடம் சேர்ந்த பணத்தை எப்படி வேண்டுமானாலும் செலவு செய்யலாம்' என்பது நியாயம் கிடையாது. சமூக அமைப்புகளும், சட்ட திட்டங்களும், அரசுகளும் இல்லை என்றால் அவருக்கு இந்தப் பணம் வந்து சேர்ந்திருக்காது.

அவருக்கு முன்பு பல பேர் செய்த முதலீடுகளின் மீதுதான் அவர் இயங்கிக் கொண்டிருக்கிறார். அதைத் திருப்பி அளிப்பதுதான் சரியான வழியில் செல்வத்தை கையாளும் முறை.

டாடா குழுமத்தின் கொள்கையைப் பாருங்கள். சுட்டி

மற்ற நிறுவனங்களில் தவறுகள் நடக்கவில்லை என்று சொல்லவில்லை. ஆனால் தலைவரிடமிருந்தே சரியான வழிகாட்டுதல் இல்லாத ஒரு குழுமம் ரிலையன்சு என்பது என் கருத்து.

//அந்த விமானத்தின் விலை சுமார் 60 மில்லியன் டாலர்கள், நீங்கள் சொல்வது போல் 200 மில்லியன் இல்லை என்றே நினைக்கிறேன்.//

சுட்டிக் காட்டியதற்கு நன்றி. நானும் ஒரு முறை சரிபார்க்கிறேன்.

//ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்து//
நன்றி மயில்.

அன்புடன்,
மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் கல்வெட்டு,

//கூடிவாழ்தலின் அல்லது சார்ந்து வாழ்தலின் தத்துவம். பிடிக்காவிட்டாலும் சகித்துக்கொள்ள வேண்டிய நிலைமை.//
அதில் வளரும் களைகளை இனம் கண்டு ஒழிப்பதும் தேவைதான். இல்லா விட்டால் கூடி வாழும் அடிப்படையே செல்லரித்துப் போய் விடும்.

//நேர்மையான கம்பெனி என்று ஏதாவது உள்ளதா?//
ஆம் அனலிஸ்ட்.

//என்னை பொறுத்தவரை Reliance is influential not cheaters. மேலும் அவர்களுடய வியாபார தந்திரங்களால் அடித்தட்டு மக்கள் வரை பயன் சென்றடைகிறது.//
என்னுடைய கருத்து மாறுபடுகிறது என்பதுதான் இடுகையின் போக்கு. நன்றி.

(ஆங்கிலத்தில்) கருத்துக்கு நன்றி அதியமான்.

//:)) எதிராளி ரிலையன்ஸ் தொலைபேசி வெச்சிருந்தா அதுக்காக அவங்களோட பேசாம இருந்துடாதீங்க.//
இல்லை. இதுவரை செய்யவில்லை. :-)

//ரிலையன்ஸ் இணைய இணைப்புல யாராவது பின்னூட்டம் போட்டா அனுமதிப்பீங்களா?//
பின்னூட்டங்களுக்கு காவல் காப்பே கிடையாது :-)

சபரிகிரீசன்,
//ஆத்தோட கோபிச்சுகிட்டு கழுவாம போனவன் கதை தான் ஞாபகத்துக்கு வருகிறது//

சோறு கண்ட இடத்தில் உண்டு, படுக்கை கண்ட இடத்தில் தூங்கி, ஆறு கண்ட இடத்தில் கழுவி வாழ்வதில் என்ன பெருமை.

எப்படியும் வாழ்வோம் என்று இல்லாமல்், இப்படித்தான் வாழ்வேன் என்று வகுத்துக் கொண்டு வாழும் மக்கள், சமூகங்கள் மேம்படும்.

உங்கள் தேர்வு உங்கள் விருப்பம்.

அனானி,
//இப்படிஎல்லாம் பேசும் மா.சி போன்றவர்கள் ரிலயன்ஸ் ஷேரில் குறைந்தது பத்து லட்ச ரூபாயாவது போட்டு வைத்திருப்பார்கள்.//
இல்லை.

//இந்திய அரசு ஊழியர்கள் செய்யும் உள்வேலைக்கு ரிலையன்ஸை குற்றம் சாட்டினால் எப்படி ?//

அவர்களையும் குற்றம் சாட்டுவோம்.

//ரிலையன்ஸ் ஷேர் ஹோல்டர்களுக்கு லாபம் தரும் கம்பெனி. அதன் நோக்கம் லாபம் தான். ஆனால், நம் வரிப் பணத்தில் ஓடும் அரசு நிறுவனம் ரிலையன்ஸுக்கு லாபம் வரும் படி வேலைசெய்தால் அது ரிலையன்ஸ் தப்பா ?//

ஆமா,, தப்புதான். வழிப்பறிக் கொள்ளை செய்தாலும் லாபம் வரும்தான். அகப்படாமல் செய்து விட்டால் அவர்கள் மீதும் தப்பு கிடையாதா!

அன்புடன்,
மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

This is the problem with us. We do not understand what is true freedom and long back we lost the capability to differentiate right from wrong. I agree with you Sivakumar. In all these days, I have never ever used Reliance, even once. Most of the comments on this blog is about the customer service of reliance. This is not about customer service. This is about morality. This one organization [now, 2] has been corrupting our country since inception. People supported reliance in early years saying it gave good returns for their shares. Even Mr.Mani Ratnam had supported what ever they did and tried to justify that as part of business strategy in his movie guru. What ever they do, how much ever they earn, reliance would never and ever be in good books of morale, like early Tata. I am sad to see people supporting this organization in the name of customer service and other monetary benefits they gain. One of my uncles is a technology supplier for reliance refineries. He is a strong supporter of reliance just that he gets his payment on time and its the only company which pays him on time, to the milli second precision. But, again, its not about that. As I said earlier, we Indians have been rejected from learning the value of true freedom and morality. Time will change.

Cheers,
Nokia Fan.

பெயரில்லா சொன்னது…

//
ஆமா,, தப்புதான். வழிப்பறிக் கொள்ளை செய்தாலும் லாபம் வரும்தான். அகப்படாமல் செய்து விட்டால் அவர்கள் மீதும் தப்பு கிடையாதா!
//

அரசு இயந்திரத்தில் உள்ள வேலை பார்க்காமல் சம்பளம் வாங்கும் சோற்றுக்குப் பதிலாக வேறு எதையோ திங்கும் ஜடங்களைக் காசு கொடுத்து வாங்க முடிகிறது. ரிலையன்சைப் புறக்கணிப்பதால் இது சரி செய்ய முடியாது.


இன்று ரிலையன்ஸ் செய்வதை நாளை வோடாபோன் செய்யக்கூடும். அதற்கு முன் சுதாரிக்கவில்லையென்றால் மீண்டும் 17ம் நூற்றாண்டுக்கு ரீவைண்டு ஆகி, ஓடப்பர் உடையப்பர் எல்லாம் மாறி அடிமைகளாக ஒப்பப்பர்களாக ஆகிவிடுவோம். அதற்காகத் தான் சொன்னேன்.


உடனே, பகல் கொள்ளை, வழிப்பறி, என்று பேசுகிறீர்கள்.


எது வழிப்பறி ?


ரிலையன்ஸ் செய்வதா, மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பென்சன் வாங்கிக் கொண்டு ரிலையன்ஸுக்கு வேலை பார்க்கும் அரசு நிறுவனங்கள் செய்வதா ?


//

அவர்களையும் குற்றம் சாட்டுவோம்.

//


எப்போ ?


இதுவரை அரசு இயந்திரங்களின் திறன் பற்றி குற்றம் சாட்டி, பகல் கொள்ளையர்கள்- BSNL, வழிப்பறித் திருடர்கள் - MTNL என்றெல்லாம் பதிவு மா.சி போன்ற "நடு நிலையாளர்களிடமிருந்து" வந்ததாகச் வலையுலக சரித்திரமே இல்லை. கேக்குறவன் " கே*" யாக இருந்தால் என்னவேணா சொல்லுவீங்களோ ?

பெயரில்லா சொன்னது…

Reliance is exploiting the Government run institutes by knowing how to grease the palms of BSNL, MTNL officials. No doubt about that.

Why is Government run enterprises are not willing to fight reliance in the market but are ready to give in to reliance's bribing tactics ?

Why is government run enterprises are not willing to get privatized ?

Why is Ma. Si wanting to blame Reliance for what it is today, than first blame himself for being a tax paying citizen whose taxes are wasted in giving salaries to utterly incompetent CEO's of Government run enterprises ?

Government run companies are to be blamed for what reliance is doing. If they are not corrupt and incompetent Reliance would have faced a stiff competition. Even now, in remote areas, reliance is facing stiff competition from BSNL in network coverage, Broadband service etc., But, the CEO's of Government companies willing to capitalize on this advantage or just simply let reliance overtake them ?

பெயரில்லா சொன்னது…

நான் ரிலையன்ஸ் இன்போகால் (தம்பி) உபயோகித்த வரையில் எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை.
BSNL, don't ask that crap service.

பெயரில்லா சொன்னது…

ரிலையன்சின் கொள்கையே "Mera Pappa ka tha ek Sapna. Sabka Paisa Apna " அதாவது "என் நைனாவோட கனவு இது. எல்லாரோட துட்டும் நம்மளுது".

ஊருக்கே தெரிஞ்ச ஒரு விசயத்துக்கு எதுக்கு மா.சி ஒரு இடுகை எழுதி நேரத்தை வீணாக்குகிறீர்?

Unknown சொன்னது…

// "Mera Pappa ka tha ek Sapna. Sabka Paisa Apna " //

:-)))))

K.R.அதியமான் சொன்னது…

மாசி,

ஒரு வேளை, ரிலையன்ஸ் குழுமம் சென்னையில் ஒரு லெதர் டிவிசன் ஆரம்பித்து, அதற்கான மென்பொருள் (ஈ.ஆர்.பீ) வடிவமைக்க உங்கள் நிறுவனத்திற்க்கு ஆர்டர் கொடுத்தால்.... ?

'கோயானாட்ட' வேண்டான்னு சொல்லமாட்டீங்கன்னு நம்புகிறேன். :)))))

Unknown சொன்னது…

அதியமான்,
இதுதான் 'ஆப்பு'ங்றது :-))

//ஒரு வேளை, ரிலையன்ஸ் குழுமம் சென்னையில் ஒரு லெதர் டிவிசன் ஆரம்பித்து, அதற்கான மென்பொருள் (ஈ.ஆர்.பீ) வடிவமைக்க உங்கள் நிறுவனத்திற்க்கு ஆர்டர் கொடுத்தால்.... ?//

:-)))))

*****
காசா பணமா? இதோ என் பங்கிற்கு ... :-))

ரிலையன்ஸ் ஒரு தொலைக்காட்சி ஆரம்பித்து, வலைப்பதிவு பற்றி பேச அழைத்தால் சிவா என்ன செய்வார்?

இவ்வளவு ஏன், ஜெயா/சன்/மக்கள்.. தொலைக்காட்சியில் வலைப்பதிவு பற்றி சிவாவின் பேட்டி(மறு ஒளிபரப்பு) வந்து இடையில் ரிலையன்ஸ் விளம்பரம் வந்தால் என்ன செய்வார்?

மறைமுகமாக சிவாவையே ரிலையன்ஸின் விளம்பர மாடலாக மாற்றி விடுமே? இது போன்ற விளம்பரங்கள். :-)))

**
சிவாவின் நோக்கம் சரியாக இருந்தாலும், 'ஒத்துழையாமை இயக்கம்' ஒரு எல்லைக்குள்ளேயே இருக்கும். ரிலையன்ஸ் அரசாங்கத்தின் அனைத்து சந்து பொந்துகளிலும் போய்வரும் :-)).

மா சிவகுமார் சொன்னது…

கருத்துகளுக்கு நன்றி நோக்கியா ஃபேன்.

சட்டத்தின் எல்லைகளைத் தொட்டுச் செல்வது எல்லா நிறுவனங்களும் செய்வது.

ஆனால், கிடைத்த வாய்ப்பில் எப்படி வேண்டுமானாலும் ஆதாயம் பார்ப்பேன் என்று இயங்கும் தொழில் நிறுவனங்களை நியாயப்படுத்த முடியாது.

சட்டத்தை வளைத்து உடைத்து அதற்கான பரிகாரங்களை சட்ட விரோதமாக செய்வது தன்னை உருவாக்கிய சமூகத்துக்கு எதிரான நிறுவனத்தின் கொடுஞ்செயல்.

//ரிலையன்ஸ் செய்வதா, மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பென்சன் வாங்கிக் கொண்டு ரிலையன்ஸுக்கு வேலை பார்க்கும் அரசு நிறுவனங்கள் செய்வதா ?//
//Government run companies are to be blamed for what reliance is doing.//

ஒருவரது குறையை சுட்டிக் காட்டினார். அவனும் செய்றானே என்பது என்ன பதில் அனானி? இரண்டு தவறுகள் ஒரு போதும் சரியாக முடியாது. இரண்டுமே தவறுகள்தான்!.

//BSNL, don't ask that crap service.//
நாங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக BSNL அகலப்பட்டை சேவை பயன்படுத்தி வருகிறோம். சேவையில் குறிப்பிடும்படி குறைகள் இல்லாதவாறு பராமரித்து வருகிறார்கள். ஓரிரு முறை இணைப்பு பழுதான போது ஒரு நாளுக்குள் சரி செய்து விட்டார்கள்.

தனியார் நிறுவனங்கள் எல்லாம் வில்லன்கள், அரசுத் துறை நிறுவனங்கள்தான் விமோச்சனம் என்று சொல்லவில்லை. ரிலையன்சு என்று குழுமத்திற்கு நேர்மைக்கு எதிராகச் செயல்படுவதே கொள்கையாக இருக்கிறது என்பது என் கருத்து.

//அதாவது ‘என் நைனாவோட கனவு இது. எல்லாரோட துட்டும் நம்மளுது‘.//
வணக்கம் லெமூரியன். துட்டு மட்டும்தான் ஒரே குறிக்கோளாக செயல்படுவதுதான் சிக்கல்.

அதியமான், கல்வெட்டு

//ரிலையன்ஸ் குழுமம் சென்னையில் ஒரு லெதர் டிவிசன் ஆரம்பித்து, அதற்கான மென்பொருள் (ஈ.ஆர்.பீ) வடிவமைக்க உங்கள் நிறுவனத்திற்க்கு ஆர்டர் கொடுத்தால்.... ?//

//ரிலையன்ஸ் ஒரு தொலைக்காட்சி ஆரம்பித்து, வலைப்பதிவு பற்றி பேச அழைத்தால் சிவா என்ன செய்வார்?//

//இவ்வளவு ஏன், ஜெயா/சன்/மக்கள்.. தொலைக்காட்சியில் வலைப்பதிவு பற்றி சிவாவின் பேட்டி(மறு ஒளிபரப்பு) வந்து இடையில் ரிலையன்ஸ் விளம்பரம் வந்தால் என்ன செய்வார்?//

உண்மையிலேயே கிடுக்கிப் பிடி போட்டு விட்டீர்கள் :-)

நான் என் புறக்கணிப்பு பற்றி தீர்மானித்த போது ரிலையன்சு எங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளராக நினைத்தே பார்க்கவில்லை.

நிறுவனத்திற்குத் தேவையான பொருட்கள் சேவை வாங்குவதிலும் ரிலையன்சு நிறுவனங்களை ஒதுக்கி விட முடிகிறது.

உண்மையிலேயே குழப்பமான கேள்வியாகத்தான் இருக்கிறது. கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் (ஓரிரு நாடகள்). ஒரு பதில் சொல்கிறேன்.

அன்புடன்,
மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

ஆமாம் டாடா கம்பெனி சார்பாக சுமார் 150 எம்பிக்கள் எப்பொழுது இருப்பார்களாமே? எந்த வலைப்பதிவராவது அது பற்றி எழுதியிருந்தால் அறியத்தாருங்கள்.

மா சிவகுமார் சொன்னது…

அதியமான்,

//கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் (ஓரிரு நாடகள்). ஒரு பதில் சொல்கிறேன்.//

என் பதில் இங்கே!

நினைத்துப் பார்த்திருக்காத ஒரு கோணம்தான்.

1. இத்தகைய புறக்கணிப்பை மேற்கொண்டது திடீரென்று செய்தது இல்லை. பல மாதங்களாக வெளியில் சொல்லாமல் புறக்கணித்து பார்த்து செய்ய முடியும் என்று பார்த்துதான் எழுதினேன். எழுதி வைத்ததையும் பல வாரங்கள் கழித்துதான் வெளியிட்டேன்.

இவ்வளவு அலசல் கூட போதாது என்பது தெரிகிறது. ஒரு கோணம் விட்டுப் போனது. இது போன்ற முடிவுகளை வெளிப்படுத்தும் முன்பு இன்னும் முழுமையாக பல கோணங்களில் அலசிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

2. இந்தக் கேள்வியை இன்னொரு விதமாகவும் கேட்கலாம். ரிலையன்சு போல ஒரு நிறுவனம் தோல் துறையில் இருந்தால் என்ன செய்வேன்? அல்லது நமது வாடிக்கையாளர்களில் யாராவது ரிலையன்சு போல செயல்பட ஆரம்பித்தால் என்ன செய்வேன்?

3. மூன்று கேள்விகளுக்குமே விடை ஒன்றுதான். ரிலையன்சு போன்ற நிறுவனம் என்ற கேள்விக்கே இடமில்லை. பல நிறுவனங்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டாலும், ரிலையன்சைப் போல ஒரு கார்பொரேட் செயல்முறையாக, என்னவானாலும் பரவாயில்லை, நாம் பணம் ஈட்டி விட வேண்டும் என்று செயல்படும் நிறுவனங்கள் அவ்வளவு சீக்கிரம் வளர்ந்து விடப் போவதில்லை. அப்படியே ஒரு நிறுவனம் அதை விட மோசமாக செயலாற்ற ஆரம்பித்தால், பெரிதாக வளராமலேயே மறைந்து விடும் சாத்தியங்கள்தான் அதிகம்.

ரிலையன்சு எல்லா தர்ம தடைகளையும் உடைத்து மேலும் மேலும் வளர்ந்து கொண்டு போகிறது. அதனால் ரிலையன்சு என்பது மிகச் சிறப்பாக உணர்ந்து புறக்கணிக்கப்படும் ஒன்று.

4. தோல் துறையில் அப்படி ரிலையன்சு போன்ற பெரு நிறுவனங்கள் நுழைவதற்கான சாத்தியங்கள் வாய்ப்புகள் குறைவு. அப்படியே நுழைந்தவர்களும் சிறு/நடுத்தர அளவில் மற்ற நிறுவனங்களுடன் போட்டி போடும் அளவில்தான் செயல்பட முடிந்திருக்கிறது. அதனார் ரிலையன்சு தோல் துறையினுள் வர மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

5. அப்படி ரிலையன்சு தோல் துறையில் நுழைந்தால் என்ன செய்வேன்?
தனிப்பட்ட முறையில் அவர்களுடன் எந்த விதமான உறவும் வைத்துக் கொள்ள மாட்டேன் என்பதுதான் விடையாக இருக்கும். அதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?

அப்படி அவர்கள் வந்து விட்டால் அவர்களுக்கு சேவை வழங்குவதை எப்படித் தவிர்ப்பேன்? அது நிறுவனத்தின் மற்றவர்கள் மீது கொள்கையை திணிப்பது போல் ஆகி விடாதா? முதலீட்டாளர்கள், பணி செய்பவர்கள் என்று எல்லோருக்கும் ஏற்படும் இழப்புக்கு என்ன பதில்?

நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் நாம் கடைப் பிடிக்கும் நேர்வழிகள் பெரும் அடித்தளமாக இருக்கின்றன.

'எவனோ கொடுத்தான் என்று 50 ரூபாய் ஒரு நாள் வாங்கிட்டு வந்துட்டாங்க, அன்னைக்கு வீட்டுக்கு வரும் போதே குழந்தைக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தது. அதை அப்படியே கொண்டு டாக்டருக்கு கொடுத்து விட்டு வந்தோம். அதற்குப் பிறகு அப்படிப்பட்ட பணத்தைத் தொடுவதேயில்லை'

'ஏன் நியாயத்துக்குப் புறம்பான வழியில் பணம் பெற்றுக் கொள்ளக் கூடாது' என்பதற்கு அம்மாவின் விளக்கம். சின்ன வயதிலேயே இதைக் கேட்டு வளர்ந்தது கூட இது போன்ற செல்வம் ஈட்டுவதை நினைத்துப் பார்க்க முடியாமல் செய்திருக்கலாம்.

யாராவது கையூட்டு அல்லது அன்பளிப்பு கேட்கும் போது 'நம் பணத்தை பிடுங்குகிறானே' என்பதை விட 'இந்தப் பணத்தை எடுத்துப் போனால், இவருக்கு வீட்டில் என்ன குழப்பம் ஏற்படுமோ' என்று அனுதாபம் விஞ்சி நிற்கிறது. அதனால் மறுத்து விடுவதும் எளிதாகி விடுகிறதோ!

அதே போல் 'ஒரு நிறுவனத்துடன் உறவு வைத்துக் கொண்டு பணம் ஈட்டுவது நிறுவனத்தின் அடிப்படையைக் குலைத்து வளர்ச்சியை முறித்து விடும்' என்பது என் நிலைப்பாடாக இருக்கும். அதை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கலாம். எல்லோரையும் மனம் மாற்றம் செய்யும் அளவுக்கு வலுவான நடைமுறை காரணங்கள் என்னிடம் இல்லாமல் போய் விடலாம்.

அதனால் 'நிறுவனம் ஆரம்பித்து இவ்வளவு நாள் சரியாக வழி காட்டினார். இப்போது ஒத்து வராது. வேறு யாராவது பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் நேரம் வந்து விட்டது' என்று குழுவினர் முடிவு செய்து கொள்ளலாம். அப்படிப்பட்ட நாளில் நான் முழு நிறைவுடன் பொறுப்பில் இருந்து இறங்கி அடுத்து பொறுப்பேற்பவரிடம் விட்டு நகர்ந்து விடுவேன்.

அதியமான் சொன்னது போல கேனைத்தனமாக ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சொல்லவில்லை என்றே நினைக்கிறேன். எல்லா சாதக பாதகங்களையும் அலசி மனதுக்குப்பட்ட வரை சரி என்று படுவதைத்தான் சொல்லியிருக்கிறேன்.

அன்புடன்,
மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

//முகேஷ் அம்பானி 200 மில்லியன் டாலர்களுக்கு விமானம் வாங்கி தனது மனைவிக்கு பரிசளிப்பதும், 400 கோடி ரூபாய்களுக்கு சொந்த வீடு கட்டிக் கொள்வதுமாக பணத்தை ஊதாரித்தனமாக வீணாக்குகிறார்.

இது எனக்கு தப்பா தெரியல... நானும் தான் என் மனைவிக்கு என்னோட தகுதிக்கு ஒரு ஸ்கூட்டி வாங்கி குடுத்து இருக்கேன்....அது எப்படி பணம் வீணாகுது. அவன் கிட்ட நிறையா இருக்கு செய்யறான்.//

Good points Mr.Imsai.

Mr.Sivakumar seems you are not married yet. If married, Have you not bought anything costly to your wife?
Wouldn't that amount be better spent on what you call "சமூக நலனுக்காக முதலீடு".

I have two simple questions.
1. Can u please list out things which costly things you have bought.
2. If you have avoided spending some X amount on an item. How did spend/invest it on "சமூக நலனுக்காக முதலீடு"

Can you please answer.

K.R.அதியமான் சொன்னது…

நண்பா மாசி,

எதோ ஓட்டரதுக்காகதான் இப்படி மடக்கினேன். இவ்வளவு சீரியசா பதில் சொல்ல வேண்டாம். நல்லா இருவே... :))))

K.R.அதியமான் சொன்னது…

நண்பா மாசி,

எதோ ஓட்டரதுக்காகதான் இப்படி மடக்கினேன். இவ்வளவு சீரியசா பதில் சொல்ல வேண்டாம். நல்லா இருவே... :))))

பெயரில்லா சொன்னது…

என்ன கொடுமையிது....

போகிற போக்கில்...சன் டிவி பார்க்க மாட்டேன், தினகரன் படிக்க மாட்டேன், தி.மு.க என்கிற பேரை சொல்ல மாட்டேனெல்லாம் பதிவு போடுவீர்கள் போலிருக்கே....

யுத்தம் என்றால் அது யுத்தம்தான்...அங்கே கொலைவெறியோடு எதிரே நிற்பவனிடம் அஹிம்சை பேசுவது போலிருக்கிறது உங்கள் வாதம்....

வியாபாரத்தில் வெறும் நேர்மையை வைத்துக்கொண்டு ஒரு சின்ன வட்டத்தில் சுழலலாம். சாதுர்யமே உங்களின் எல்லைகளை அகலமாக்கும்....ரிலையன்ஸ் அதைத்தான் செய்கிறது என நினைக்கிறேன்.

ரிலையன்ஸ் என்கிற பெயருக்கு பின்னால் பாதுகாப்புடன்,ஆதாயத்துடன் இருக்கிற கோடிக்கணக்கான முதலீட்டாளர்கள், ஊழியர்கள் இவர்களை பற்றியும் யோசிக்க வேண்டும்....

நேர்மையான நிறுவனம் என வெறும் டாட்டாவை மட்டுமே சுட்டும் நீங்கள் உங்களின் நிறுவனத்தினை ஏன் சுட்டவில்லை....மறந்துவிட்டீர்களா அல்லது மனசாட்சி தடுக்கிறதா...?

அஸ்சாம் மாநித்தில் தங்களின் தேயிலை தோட்ட தொழில்களை காத்துக்கொள்ள போடோ தீவிரவாதிகளுக்கு டாட்டா நிறுவனம் நன்கொடை கொடுத்து மாட்டிக்கொண்ட விவகாரம் உங்களுக்கு தெரியுமா...அதை திருவாளர் ரட்டன் டாட்டா எப்படி கையாண்டார் என்பதை படித்திருக்கிறீர்களா....

யோக்கியன் என்பதற்கு இதுதான் என எந்த அளவுகோலும் வைக்கமுடியாது....

உங்களின் கூட்டுக்குள் இருந்து வெளியே வாருங்கள் நண்பரே....

பெயரில்லா சொன்னது…

////BSNL, don't ask that crap service.//
நாங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக BSNL அகலப்பட்டை சேவை பயன்படுத்தி வருகிறோம். சேவையில் குறிப்பிடும்படி குறைகள் இல்லாதவாறு பராமரித்து வருகிறார்கள். ஓரிரு முறை இணைப்பு பழுதான போது ஒரு நாளுக்குள் சரி செய்து விட்டார்கள்.//

You happened to be lucky.
Well, I still use BSNL broadband as no other service available in my area :(

Well this is what happened.

1. I applied for Rs 900+ unlimited download plan in June 2007.
2. They entered it as Rs 250 plan.
3. After a month, they send a bill for Rs 5000+
4. I went to their office to refute this bill and they maintained that I applied for 250 plan only.
5. I contested that it is not the case.
6. After couple of visits to their office, was told to meet their commercial officer (in different office in another part of the city).
7. In between, my net connection was disconnected.
8. I met the commercial officer.
9. He directed me to the desk clerk.
10. She repeated that their system shows that it was 250 plan.
11. I demanded for the original application.
12. She found the application atlast and I indeed applied for 900+ plan.
13. She was like, "the staff is very much loaded and it is possible for the counter person to make mistakes. That it is the duty of the customer to cross check the details."
14. I showed the ack copy I was given ask her to show me where it is printed as 250 plan.
15. Actually, it was printed all over the pre-printed fields and not at all possible to verify the data which even this clerk agreed it is not possible to verify.
16. She got the approval from commercial officer to turn on the connection and update the system to the correct plan.
17. Couple more phone calls to restore the connection.
18. Next month the bill is for 20000+ Rs for additional download.
19. Again another visit to the office and promise to update the system without fail.
20. Atlast it seem to be okay and this is August 2007.
21. Visit the local office to get duplicate bill and pay the amount.
22. Well for 3 months, it went fine.
23. Again I'm receiving bills for excessive usage.
24. Another round of visit to the commercial officer's office(November 2007). Another round of explanation.
25. It was told commercial officer approved a temporary work order for 3 months only.
26. I asked is it my fault? The clerk understood my plight and promised to personally ensure this issue is resolved.
27. Indeed it was resolved and I was called to inform about the change.
28. She also said that (for whatever strange reason), even next month bill will be over charged and that I need to call her for rectifying it permenantly.
29. I called in Decmber again and it got resolved.
30. Again visit the local BSNL office to get duplicate bill and paid it.
31. It took six months and several visits (on week days :( ) to BSNL offices to set right a simple clerical error.

Who is going to compensate for the my productivity loss at work, physical stress, fuel charge for my bike, loss of the promised service although I've been paying the fee to BSNL?

In this entire episode, I met three BSNL officers that were really good in their work and some of the worst specimens of 'babudom'. The lady in the local office handling customer complaints(who has amazing patience against unruly, angry and irresponsible crowd); the commercial officer (who immediately understood their goofup and waived the excessive charge and approved the restoration of service) and the lady clerk who helped to resolve my case by following up with concerned officer(Note: I didn't grease her palm).

Now compare this with my following experience.

1. I bought a refurb IPOD in US and returned to India in two weeks. Unfortunately the IPOD never worked and I didn't get time to repair/return it. I went to APPLE's local service center with the original bill. They inspected the piece and in 10 mts came back and said since it is covered in 1 year global warranty, it will be replaced in 10 days as this slightly old model. After 10 days, I got a call to pick my replacement IPOD. The new piece works fantastic. I indeed have no regrets about their defective piece due to their service.

2. My rental car had a damage in US freeway. Since I had my own insurance, I didn't buy rental car insurance and unfortunately my insurance company didn't settle the claim of the rental car agency. I filed a claim with VISA card in their website as they too provide rental car coverage when charged on their card. I sent "one" postal mail with all repair documents and repair bill sent to me by the rental car agency. In three weeks flat, I received an email from VISA that my claim is settled directly with the rental agency and received a letter confirming the same from the rental car agency.

Now this is what I call customer service, indeed the service that delights the customer.

I leave it for others to decide whether my grouse against BSNL is unjustified.

மா சிவகுமார் சொன்னது…

//Mr.Sivakumar seems you are not married yet.//

I am married anony.

//If married, Have you not bought anything costly to your wife?//

விலை அதிகமானது என்று எதைச் சொல்வீர்கள். எது ஆடம்பரம் என்பது குறித்து நான் நிறைய யோசித்திருக்கிறேன்.

எது ஆடம்பரம்?
அதில் எவ்வளவு என் பணம்?

//1. Can u please list out things which costly things you have bought.//
நினைவிலிருந்து (கடந்த 10 ஆண்டுகளில்).

1. மின்சாரத்தில் இயங்கும் தையல் எந்திரம்
2. வீடியோ கேமரா
3. குளிர்சாதனப் பெட்டி
4. துணிதுவைக்கும் இயந்திரம்
5. மாவு அரைக்கும் எந்திரம்
6. இரு சக்கர வண்டி
7. குழந்தை புத்தகங்கள், பொம்மைகள்
8. கணினிகள்
9. செல்பேசி
10. புத்தகங்கள்
11. வீடியோ பெட்டி
12. பாட்டு கேட்கும் கருவி

//2. If you have avoided spending some X amount on an item. How did spend/invest it on "சமூக நலனுக்காக முதலீடு"//
சமூக நலனுக்காக முதலீடு என்பது தானமாக கொடுப்பது இல்லை. உதாரணமாக, குறிப்பிட்ட தொகையை மனைவிக்கு தனி வானூர்தி வாங்கப் பயன்படுத்தாமல் ஒரு காலணி தொழிற்சாலை அமைக்க முதலீடு செய்வது சமூக நலனுக்காக பயன்படுத்துவது.

//எதோ ஓட்டரதுக்காகதான் இப்படி மடக்கினேன்.//

ஆனாலும், நியாயமான கேள்விதேனே அதியமான், நன்றி. :-)

//போகிற போக்கில்...சன் டிவி பார்க்க மாட்டேன், தினகரன் படிக்க மாட்டேன், தி.மு.க என்கிற பேரை சொல்ல மாட்டேனெல்லாம் பதிவு போடுவீர்கள் போலிருக்கே....//
பார்க்க மாட்டேன் என்று பதிவு போடலை. வேறு மாதிரி எழுதியிருந்தேன். இன்று நிலைமை பெரிதும் மாறியிருக்கிறது.

சன் டிவியின் ஏக போக அநியாயங்கள் என்ற பதிவுகளைப் பாருங்கள்.

//வியாபாரத்தில் வெறும் நேர்மையை வைத்துக்கொண்டு ஒரு சின்ன வட்டத்தில் சுழலலாம். சாதுர்யமே உங்களின் எல்லைகளை அகலமாக்கும்//

தவறு! இப்படிப் பேசி பேசித்தான் நேர்மையின்மையை நிரந்தரமாக்கி வருகிறோம். நேர்மையை வைத்துக் கொண்டு உலகமெங்கும் பரவலான சேவை வழங்கும் நிறுவனம் வளர முடியும். செய்து காட்டுவோம்.

//நேர்மையான நிறுவனம் என வெறும் டாட்டாவை மட்டுமே சுட்டும் நீங்கள் உங்களின் நிறுவனத்தினை ஏன் சுட்டவில்லை....மறந்துவிட்டீர்களா அல்லது மனசாட்சி தடுக்கிறதா...?//

இரண்டும் இல்லை.

எங்கள் நிறுவனம் பெருமைப்பட்டுக் கொள்ளும் அளவுக்கு வளர்ந்து விடவில்லை என்ற ஒரே காரணம்தான். மேலே சொன்னபடி நேர்மையாகவே தொழில் செய்து வளர முடியும் என்று நாள்தோறும் செய்து காட்டி வருகிறோம்.

//அஸ்சாம் மாநித்தில் தங்களின் தேயிலை தோட்ட தொழில்களை காத்துக்கொள்ள போடோ தீவிரவாதிகளுக்கு டாட்டா நிறுவனம் நன்கொடை கொடுத்து மாட்டிக்கொண்ட விவகாரம் உங்களுக்கு தெரியுமா...அதை திருவாளர் ரட்டன் டாட்டா எப்படி கையாண்டார் என்பதை படித்திருக்கிறீர்களா....//
நீங்கள் அதைப்பற்றி விபரமாகச் சொல்லுங்களேன்.

//I leave it for others to decide whether my grouse against BSNL is unjustified.//
உங்கள் புகார் முற்றிலும் நியாயமானது.

அன்புடன்,
மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

//விலை அதிகமானது என்று எதைச் சொல்வீர்கள். //

Thanks for your honest answers. It depends upon what value you assign to a particular item. And it varies with each person.

The Airplane for his wife and 27 floor home may not be costly for Mukesh.

//சமூக நலனுக்காக முதலீடு என்பது தானமாக கொடுப்பது இல்லை. உதாரணமாக, குறிப்பிட்ட தொகையை மனைவிக்கு தனி வானூர்தி வாங்கப் பயன்படுத்தாமல் ஒரு காலணி தொழிற்சாலை அமைக்க முதலீடு செய்வது சமூக நலனுக்காக பயன்படுத்துவது.//

That is valid only if the production from the "காலணி தொழிற்சாலை" can be successfully sold.

Mukesh is already doing a decent job of a business man. As any good business man he does not try to do what he cannot.

Let's stop deciding for others.

//தவறு! இப்படிப் பேசி பேசித்தான் நேர்மையின்மையை நிரந்தரமாக்கி வருகிறோம்.//

I think we are depending too much on humans. Humans are fallible, they make mistakes. We have to ensure through policies and institutions that Humans are kept honest and accountable.

The bulk of the corruption in India is that we do not keep humans in check. We do not have the right policies and we have not reformed our system at all.

Here is some reform in Communist thinking at last. Communists are welcoming Reliance Retail.

Competition is liberty...

‘No logic in opposing Reliance Retail’

Our Bureau
Mumbai, Feb. 1

After facing a wave of opposition, Reliance Retail may finally be able to open its outlets in West Bengal.

Mr Nirupam Sen, West Bengal Minister for Commerce and Industries, who met the Reliance Group Chairman, Mr Mukesh Ambani, here on Thursday, said he saw no logic in opposing Reliance when other domestic players such as Big Bazaar and Spencer’s are already operating in the State.

Some coalition parties in the State Government have been opposing Reliance Fresh launching its outlets in Kolkata, arguing that it would force many small shopkeepers out of business. At a meeting with select media persons here on Friday, Mr Sen said he would take up the issue with the coalition partners to ensure that Reliance also gets equal opportunity.

Reliance had announced plans to invest around Rs 2,000 crore in agri-based retail business in the State.

http://www.thehindubusinessline.com/2008/02/02/stories/2008020252670100.htm

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் அனானி,

//The Airplane for his wife and 27 floor home may not be costly for Mukesh.//

பொதுப் பணத்தை கோடி கோடியாக திரட்டி நடத்தப்படும் நிறுவனத்தின் வளங்களை வழிநடத்தும் ஒருவர் அப்படி செலவழிப்பது சமூக நலனுக்கு விரோதமானது என்று நான் உறுதியாக நம்புகிறேன். 'அப்படி செய்பவரின் நிறுவனத்தை புறக்கணிக்கிறேன்' என்பதுதான் என் நிலைப்பாடு.

//Mukesh is already doing a decent job of a business man. As any good business man he does not try to do what he cannot.//
இல்லை. அவரது செய்கையால் பல கோடி மக்களுக்கு நேரடியான பாதிப்பை ஏற்படுத்துகிறார். சமூக வளங்களை தவறாக பயன்படுத்துவதால் பெரிய தீமையை இழைக்கிறார். இது என் கருத்து.

//I think we are depending too much on humans. Humans are fallible, they make mistakes. We have to ensure through policies and institutions that Humans are kept honest and accountable.//
சரியாகச் சொல்கிறீர்கள். அப்படி கொள்கைகளும் அமைப்புகளும் செயல்படுவதற்கான முதல் படிதான் ஒவ்வொருவரும் தனிப்பட் வாழ்க்கை நெறிகளை தவறாமல் பின்பற்றுவது.

யார் எப்படிப் போனால் எனக்கென்ன என்று இருப்பது காட்டில் வசிக்கும் துறவிக்கு சரியாக இருக்கலாம். சமூகத்தின் முழுதும் பங்களிக்கும் ஒவ்வொருவரும் நடக்கும் தவறுகளை சரி செய்ய தம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும்.

//Here is some reform in Communist thinking at last. Communists are welcoming Reliance Retail. //

so what? :-)

அன்புடன்,
மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

//சமூக வளங்களை தவறாக பயன்படுத்துவதால் பெரிய தீமையை இழைக்கிறார்.//

But the problem is that, Does the money he spends belongs to him? If that is the case, We have absolutely no reason to condemn that.

We can condemn it only when he is spending public money collected for reasons other than private use.

If the money spent comes from his own entitlements, unfortunately we cannot choose how he is going to spend. Because that is his own money and only he can decide where to spend it, whether it is a airplane or a shoe factory.

//அப்படி கொள்கைகளும் அமைப்புகளும் செயல்படுவதற்கான முதல் படிதான் ஒவ்வொருவரும் தனிப்பட் வாழ்க்கை நெறிகளை தவறாமல் பின்பற்றுவது.//

I said that in the context of public money. I think the personal lives of others does not matter.

Institutions and policies are designed to work regardless of private conduct. If anyone fails to comply he will be punished that is how the system works.

If Ambani makes poor spending choices with his own money that does not make me or you poorer in anyway.

Instead it may even be beneficial too the money spent will be used to pay the wages of plumber, carpenter or a construction worker who are building his 27 floor home, or a pilot to fly the airplane.

The only case where poor spending choices affect the people/society is how public/tax money is spent.

//சமூகத்தின் முழுதும் பங்களிக்கும் ஒவ்வொருவரும் நடக்கும் தவறுகளை சரி செய்ய தம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும்.//

Most of the wrongs happen with the public money. Why don't we start and try to correct that. We often forget to complain how public/tax money is wasted. That is the most sad part of all this.

//so what? :-)//
Time for reform has come. We cannot simply be holding onto useless beliefs and laws. The more we maintain status-quo more the suffering will be.

K.R.அதியமான் சொன்னது…

MaSi,

As a writer about 'economics' you must be aware of consumer spending and trickle down effects, etc. Why do you say that Mukesh's buying a plane for his wife as luxury ? It is his money and he has every right to spend as he wish. and most important, he would have payed a sales tax, excise duty while buying the plane. and the plane manufacturing company (wherever it may be) will be able to sell its products there by creating employment and other ripple effects in its down stream vendors like avionics, services, etc. Pilots and support staff will get jobs, pay taxes and so on.
Many corporates officially own Lear Jets to ferry thier executives to save time. the plane company may think of opening a factory in India if it feels there is good potential here. more jobs, services and taxes (ripple effect).

The govt of India uses (or misuses)
thousands of man hours of flying time to ferry its ministers, etc..
why don't you compare ?

Amabani is already doing great service by creating cheap and good products and services like telecom, poloymers, etc. and RIL pays thousands of crores of taxes while employing thosands more. suppose if there was no RIL (like in the 60s) and no competition to govt monopoly in telecom, petro chemicals, would things be better or cheaper ?

Lots of people own Benz cars, BMW, etc. More own jewels, diamonds, very costly silk sarees, etc. Would you say they shouldn't spend ? and lots spend millions in building huge and luxurious houses while millions are homeless. but this spending creates more jobs and spreads their money around. construction workers, painters, cement makers, furniture makers get more business and create more jobs and pay more taxes and the circle widens more.

You own a bike and cell while there are millions in rural India who would consider it a luxury as they can hardly earn a living as labourers. so is it right that you should spend on 'luxiuries' ? can you use only a bicycle ?

it is a relative and subjective term. and without such spending there will be no industrial production and jobs and growth.

Luxuxry is relative term and what many may feel as luxury may be 'essential' for you and me...

பெயரில்லா சொன்னது…

////The Airplane for his wife and 27 floor home may not be costly for Mukesh.//

பொதுப் பணத்தை கோடி கோடியாக திரட்டி நடத்தப்படும் நிறுவனத்தின் வளங்களை வழிநடத்தும் ஒருவர் அப்படி செலவழிப்பது சமூக நலனுக்கு விரோதமானது என்று நான் உறுதியாக நம்புகிறேன். 'அப்படி செய்பவரின் நிறுவனத்தை புறக்கணிக்கிறேன்' என்பதுதான் என் நிலைப்பாடு. //

Why so you think it is public money.
He will be earning crores as profit dividend, salary and performance bonus and service fee as approved by the company board.
These blokes also have personal investment in other areas providing returns.

And all these are his private (own) money. He has a right to spend it the way he deemed it fit.

It would become an abuse of public funds only when the Reliance group company funds are used to buy a luxury plane or build a palatial house for his own consumption.

பெயரில்லா சொன்னது…

//எங்கள் நிறுவனம் பெருமைப்பட்டுக் கொள்ளும் அளவுக்கு வளர்ந்து விடவில்லை என்ற ஒரே காரணம்தான். மேலே சொன்னபடி நேர்மையாகவே தொழில் செய்து வளர முடியும் என்று நாள்தோறும் செய்து காட்டி வருகிறோம். //

Wish you all the best for your future success.

Honesty in business is just a marketing ploy to project ones brand as a key differentiatior. This is my understanding based on my experience in working for almost a decade in an organization that prides for adopting honesty in business. At the end of the day, it is the managers and executives take the brunt to generate business each quarter despite all this bullcr*p about practicing honesty.

பெயரில்லா சொன்னது…

//Honesty in business is just a marketing ploy to project ones brand as a key differentiator. This is my understanding based on my experience in working for almost a decade in an organization that prides for adopting honesty in business.//

Spot on! That is the beauty of competition. It is one those institutions which keep the corporates honest. All the dishonest ones will find themselves out of the market.

Competition is liberty.

ஓகை சொன்னது…

//Luxuxry is relative term and what many may feel as luxury may be 'essential' for you and me...//

சொகுசு(luxury) என்பது எப்போதும் ஒப்பிட்டளவில் கூறப்படுவதுதான். பலர் இப்போது அணியும் உடைகளை நான் சொகுசு என்பதாக உணரும்போது நான் அணியும் உடைகளை சிலர் சொகுசு என்பதாக உணர்வதுண்டு. அரிசிச்சோறே முந்நாட்களில் பலருக்கு சொகுசான உணவுதான்.

ஓகை சொன்னது…

//Honesty in business is just a marketing ploy to project ones brand as a key differentiator.//

Definitely 'honesty' is one of the choices available for businessmen. Though it is a terribly troublesome choice, many times honesty is prooved to be a good choice.

மா சிவகுமார் சொன்னது…

//But the problem is that, Does the money he spends belongs to him? If that is the case, We have absolutely no reason to condemn that.//

இக்கால கம்யூனிஸ்டுகளால் பெரிதும் பேர் கெடுக்கப்பட்ட பொருளாதார சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ். ஆதம் ஸ்மித்துக்கு அடுத்து பொருளாதார தத்துவங்களில் அடிப்படை மாற்றம் கொண்டு வந்த பேரறிஞர்.

அவரது உபரி மதிப்பு என்ற தத்துவம் மிகவும் முக்கியமானது. எந்த ஒரு சந்தை பரிமாற்றத்திலும் உபரி மதிப்பை ஒரு தரப்பினர் கவர்ந்து கொள்ளும் சூழல்கள் நிலவும். இதன் மூலம் சேரும் செல்வங்கள்தான் கோடிகளைக் குவிக்கின்றன.

'இது என் பணம். என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள்வேன்' என்பதை உபரி மதிப்பின் அடிப்படையில் பாருங்கள். என்னிடம் வந்து சேர்ந்த பணம் என்னை விட நலிந்த, என்னிடம் சமமாக பேரம் பேச முடியாத பிரிவினரிடமிருந்து எடுக்கப்பட்டது. அதை நான் மனம் போன போக்கில் செலவழிக்கக் கூடாது. அதுதான் சமூக வளத்தின் அடிப்படை.

//Instead it may even be beneficial too the money spent will be used to pay the wages of plumber, carpenter or a construction worker who are building his 27 floor home, or a pilot to fly the airplane.//
அதியமானும் இதே 'ஒழுகிப் போகும் விளைவு' குறித்து பேசுகிறார். இது மிக மோசமான, வீணாக்கல் நிறைந்த கோட்பாடு.

ஒரு புத்தகத்தில் படித்தது போல, வீட்டின் கண்ணாடியை கல்லெறிந்து உடைத்து விட்டு அதன் மூலம் கண்ணாடியை சரி செய்வதற்கு வேலை கிடைக்கும், அந்தக் கண்ணாடி உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு தொழில் பெருகும் என்று வாதம் செய்வது போன்றது.

நாம் செய்யும் ஒவ்வொரு செலவும் சமூகத்தின் வளங்களை வழி நடத்துகின்றன. ஒவ்வொருவரும் பொறுப்புடன் நடந்து கொள்வதே முன்னேற்றுத்துக்கு வழி.

//Most of the wrongs happen with the public money. Why don't we start and try to correct that. We often forget to complain how public/tax money is wasted. That is the most sad part of all this.//

அதையும் சரி செய்ய வேண்டும். தவறுகளைப் பார்த்துப் பேசிக் கொண்டே இருப்பதுடன் கூட நம்மால் முடிந்த அளவுக்கு செயல்படுத்தலிலும் இறங்க வேண்டும் என்பது என் கருத்து. (பல இடங்களில் பேச்சோடு நின்று விடுவது நடந்தாலும்). அந்த அடிப்படையில் சமூகத்துக்கு ஊறு விளைவிப்பதாக நான் நினைக்கும் அடிப்படையில் இயங்கும் ரிலையன்சைப் புறக்கணிக்கிறேன். அவ்வளவுதான்.

//As a writer about 'economics' you must be aware of consumer spending and trickle down effects, etc.//

come on Athiyaman! திரும்பவும் அதே வாதத்தில் இறங்க வேண்டாம். 'பணக்காரர்கள் தம் விருப்பம் போல பணத்தை வாரி இறைத்தால் அவர்கள் கை மூட்டி வழியே ஒழுகிப் போகும் மிச்சங்களை மற்றவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்' என்ற வலது சாரி பொருளாதாரக் கொள்கைகள் செய்யும் கொடுமைகளை பல நாடுகளில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

//Luxuxry is relative term and what many may feel as luxury may be 'essential' for you and me...//
அப்படி சொல்லியே எல்லாவற்றையும் நியாயப்படுத்திக் கொண்டே இருங்கள்!

//Why so you think it is public money.
He will be earning crores as profit dividend, salary and performance bonus and service fee as approved by the company board.//
அனானி,

மேலே சொன்னது போல எந்த ஒரு பொருளாதார அமைப்பிலும் வல்லானின் கையில் போய்ச் சேரும் உபரி மதிப்புதான் கோடிக் கணக்கில் பணம் வைத்திருக்கும் பணக்காரர்களின் ரகசியம். அதை பொறுப்புடன் செலவழிப்பதுதான் சரியான வழி. 'என் பணம், நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்' என்பது தர்மப்படி சரி கிடையாது.

//Honesty in business is just a marketing ploy to project ones brand as a key differentiatior. //

அவ்வளவு நம்பிக்கை இழந்து விட்டீர்களே! நிச்சயமாக நேர்மையான தொழில் நிறுவனம் நடத்த முடியும். பல ஆயிரம் பேர் இணைந்து பணி புரிய முடியும். பணி புரிபவர்கள், வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள்,
விற்பனையாளர்கள் என்று ஒவ்வொருவரின் வாழ்வையும் வளப்படுத்த முடியும்.

//it is the managers and executives take the brunt to generate business each quarter despite all this bullcr*p about practicing honesty.//

அவ்வளவு சீக்கிரமாக விட்டுக் கொடுத்து விட்டு அப்புறம் குறைப்பட்டுக் கொண்டால் எப்படி? நேர்மையை உடைத்தால்தான் வளர்ச்சி ஏற்படும் என்று யார் சொன்னார்கள்?

//Spot on! That is the beauty of competition. It is one those institutions which keep the corporates honest. All the dishonest ones will find themselves out of the market.//

அது தானாக நடந்து விடும் முன்பு தீங்குகள் ஆழமாக பாதித்து விடலாம். நுகர்வோர், முதலீட்டாளர்கள், அரசாங்கம் எல்லோரும் விழிப்புணர்வுடன் பிறளும் தொழில் நிறுவனங்களை கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும்.

வணக்கம் ஓகை!

//சொகுசு(luxury) என்பது எப்போதும் ஒப்பிட்டளவில் கூறப்படுவதுதான்.//

அரிசிச் சோற்றையும் கோடிக்கணக்கில் செலவழித்துக் கட்டப்படும் வீட்டையும் தயவு செய்து ஒப்பிடாதீர்கள்.

'பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் எல்லாம் பணப் பற்றாக்குறையில் அவதிப்படுகிறார்கள். ஒரு வீடு வாங்க வேண்டுமானால் 40 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. மிகவும் கஷ்டப்படுகிறார்கள்' என்றார் ஒரு நண்பர்.
'வயிற்றுக்குச் சோறில்லாமல் படுவதும் கஷ்டம். 40 லட்ச ரூபாய்க்கு வீடு வாங்க முடியாமல் படுவதும் கஷ்டம்' என்றால் என்ன பொருள்!

//Definitely 'honesty' is one of the choices available for businessmen. Though it is a terribly troublesome choice, many times honesty is prooved to be a good choice.//

அப்படி, நேர்மைதான் ஒரே சரியான தேர்வு என்ற நிலைமையை சூழலை ஏற்படுத்தினால்தான் விடிவு!

அன்புடன்,
மா சிவகுமார்

dondu(#11168674346665545885) சொன்னது…

//அரிசிச் சோற்றையும் கோடிக்கணக்கில் செலவழித்துக் கட்டப்படும் வீட்டையும் தயவு செய்து ஒப்பிடாதீர்கள்.//

ஏன் கூடாது?
பாலுக்குச் சர்க்கரை இல்லை
என்பார்க்கும் பருக்கையற்ற
கூழுக்குப் போட உப்பில்லை
என்பார்க்கும் முட்குத்தித் தைத்த
காலுக்குத் தோற் செருப்பு இல்லை
என்பார்க்கும் கனக தண்டி
மேலுக்குப் பஞ்சணை இல்லை
என்பார்க்கும் விசனம் ஒன்றே

இந்த ரேஞ்சில் போனால் கோக் பெப்ஸி குடிக்க மறுப்பீர்களா? உள்ளூர் வியாபாரத்தை அழித்து இங்கு வந்தவை அவை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மா சிவகுமார் சொன்னது…

டோண்டு சார்,

'பருக்கையற்ற கூழுக்குப் போட உப்பில்லை' என்ற நிலையில் இருப்பவர் இந்தப் பாடலை மேற்கோள் காட்டினால் புரிந்து கொள்ளலாம். வசதியாக வாழும் நம்மைப் போன்றவர்கள் இதைக் குறிப்பிடுவது எந்த விதத்தில் நியாயமாகும்?

//இந்த ரேஞ்சில் போனால் கோக் பெப்ஸி குடிக்க மறுப்பீர்களா?//
வேறு காரணங்களுக்காக குடிப்பதில்லைதான்.

அன்புடன்,
மா சிவகுமார்

dondu(#11168674346665545885) சொன்னது…

//'பருக்கையற்ற கூழுக்குப் போட உப்பில்லை' என்ற நிலையில் இருப்பவர் இந்தப் பாடலை மேற்கோள் காட்டினால் புரிந்து கொள்ளலாம். வசதியாக வாழும் நம்மைப் போன்றவர்கள் இதைக் குறிப்பிடுவது எந்த விதத்தில் நியாயமாகும்?//
அப்படி வாருங்கள் வழிக்கு. நான் என் மனைவிக்கு விமானங்கள் எல்லாம் வாங்கி தரும் அளவுக்கு பணக்காரன் இல்லை. இருப்பினும் அம்பானி போன்றவர்கள் அவ்வாறு செய்வதையும், செய்ய முடியாமல் போவதில் படும் விசனத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது.

கோக் பெப்சியை வேறு காரணங்களுக்காகத்தான் குடிப்பதில்லை என்கிறீர்கள். ஆக, அவர்கள் அவர்கள் உள்ளூர் வியாபாரத்தை அழித்து வந்தது உங்களுக்கு பெரிய காரணமாக படவில்லை, அப்படித்தானே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

மா சிவகுமார் சொன்னது…

//அப்படி வாருங்கள் வழிக்கு.//

அப்படி என்ன வழி!

//நான் என் மனைவிக்கு விமானங்கள் எல்லாம் வாங்கி தரும் அளவுக்கு பணக்காரன் இல்லை. இருப்பினும் அம்பானி போன்றவர்கள் அவ்வாறு செய்வதையும், செய்ய முடியாமல் போவதில் படும் விசனத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது.//

சிரிப்புதான் வருகிறது. பொறாமையில் பேசவில்லை சார், பரிதாபத்தில் பேசுகிறேன். கோபத்தில் பேசுகிறேன்.

//கோக் பெப்சியை வேறு காரணங்களுக்காகத்தான் குடிப்பதில்லை என்கிறீர்கள். ஆக, அவர்கள் அவர்கள் உள்ளூர் வியாபாரத்தை அழித்து வந்தது உங்களுக்கு பெரிய காரணமாக படவில்லை, அப்படித்தானே?//

ஆமாம்.

அன்புடன்,
மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

//
ரிலையன்சு பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் போடுவதில்லை.
//

அவசரமாக குடும்பத்துடன் சினிமாவுக்கு விரைந்து சென்று கொண்டிருக்கும் சமயத்தில் வழியில் வண்டியில் பெட்ரோல் தீர்ந்து போய்விட்டால், பக்கத்தில் ரிலையன்ஸ் பெட்ரோல் மட்டுமே கிட்டும் சூழலில் சினிமா plan ஐ டிராப் செய்துவிட்டு குடும்பத்தினரை வண்டியை தள்ளவிடுவாரா மா.சி. ?


பேத்தல் வாதங்கள். எல்லாம்.


உங்களுக்கு கூகிள் பிடிக்கவில்லை என்பதால், அதன் சேவையை பயன் படுத்தாமல் இருந்துவிடுங்கள். அதனால் யாருக்கு நட்டம் ? கூகிளுக்கா ?

வலையுலகு கூகிள், கூகிள் அல்லாத என்று பிரிக்க முடியாத அளவுக்கு பிண்ணிப் பிணைந்துவிட்டது. அதே போல் தான் ரிலையன்ஸும். நம் வாழ்வில் பல தரப்பட்ட இடங்களில் நம்மையறியாமலே பல சேவைகள் ரிலையன்ஸால் நமக்குக் கிட்டுகின்றது.

நீங்கள் பேசும் BSNLசெல்பேசியின் லோகல் கால்கள், ரிலையன்ஸ் கம்பெனி சர்வர்களால் கூட டைவர்ட் செய்யப்பட்டு அதன் இலக்கை அடையலாம். நீங்கள் அனுப்பும் தோல் பொருட்கள் ரிலையன்ஸ் பெட்ரோலினால் ஓடும் லாரியில் போய் அதன் இலக்கை அடையலாம். அதனால் அந்த கஸ்டமரின் சேவையை நீங்கள் நிராகரிப்பீர்களா ?


DYFI போன்ற முட்டாள்கள் தான் இப்படி புறக்கணிப்புப் போராட்டம் எல்லாம் செய்கிறார்கள். முன்னொருகாலத்தில், மக்களிடம் இவ்வளவு தெளிவும்,
awareness ம் இல்லை. ஈசியாக ஏமாந்தார்கள். இப்போதெல்லாம் dyfi கூட்டத்துக்கு dyfi ஆட்களே டேக்கா கொடுக்கிறார்கள். அவர்களுக்கும் பிள்ளை குட்டி இருக்குல்ல ? எத்தனை நாளைக்குத்தான் அடுத்தவனுக்காக தன் வாழ்க்கையை நாசம் செய்து கொள்வார்கள். ?




பூனை கண்ணை மூடிக் கொள்வதால் உலகம் ஒன்றும் இருண்டுவிடாது.

மா சிவகுமார் சொன்னது…

//நம் வாழ்வில் பல தரப்பட்ட இடங்களில் நம்மையறியாமலே பல சேவைகள் ரிலையன்ஸால் நமக்குக் கிட்டுகின்றது.//

அப்படி இருப்பதை நானும் உணர்கிறேன் கருப்பு பூனை. அது இன்னும் முற்றிப் போய் விடாமல் இருக்க விரும்புகிறேன். என்னால் முடிந்த அளவு ரிலையன்ஸ் நிறுவனத்தைப் புறக்கணிக்கிறேன்.

நீங்கள் சொல்வது போல சாகக் கிடக்கும் போது தண்ணீர் ஊற்ற வந்தால் அது ரிலையன்சு கடையில் வாங்கியது என்று வாயை மூடிக் கொள்ள மாட்டேன்தான்!

ரிலையன்சு, விதிகளை வளைத்து, உடைத்து எந்தக் கட்டுக்குள்ளும் அடங்காமல் செயல்படுவதை உணர்ந்தே அதைப் புறக்கணிப்பதை செய்து வருகிறேன்.

(பிகு: கூகிள் சேவைகளை புறக்கணிப்பதே இல்லை)

அன்புடன்,
மா சிவகுமார்

Unknown சொன்னது…

//ஒருவரிடம் சேரும் பணம் அவர் சார்ந்த சமூக அமைப்புகளின் பலனால் மட்டுமே வருகிறது. இந்த அமைப்புகள் இல்லாமல் ஒருவர் எவ்வளவு திறமையாக இழைத்தாலும் தன் வயிற்றுக்கான உணவு தேடவே நேரம் போதாது.

அதனால் அப்படிச் சேரும் பணத்தை மீண்டும் சமூக நலனுக்காக முதலீடு செய்யாமல் இருப்பது அன்னமிட்ட கைக்கு துரோகம் செய்வது போன்றதுதான் என்பது என் கருத்து//

மிக சரியாக கூறினீர்கள் நண்பர் சிவகுமார் அவர்களே.