வியாழன், ஜனவரி 10, 2008

கரையான் புற்றுக்குள் பாம்பு - இசுரேல்

இப்போது இசுரேல் என்று சொல்லப்படும் பகுதி பாலஸ்தீனமாகவே இருந்து வந்தது.

சில மதப் புத்தகங்களைத் தவிர்த்து வேறு எந்த வரலாற்று ஆதாரங்களும் இல்லாமல், அந்த நேரத்தில் ஆண்டு கொண்டிருந்த பிரித்தானியா பாலஸ்தீனத்தை பிரித்து ஒரு பகுதியை யூதர்களின் நாடாகவும், இன்னொரு பகுதியை பாலஸ்தீன அரேபியர்களுக்கும் கொடுக்க முடிவு செய்தது. அதை ஐக்கிய நாட்டுச் சபையும் ஏற்றுக் கொண்டது. ஆனால், பெரும்பான்மையாக அங்கு வசித்த பாலஸ்தீனர்களும் பாலஸ்தீனத்தைச் சுற்றியிருந்த பிற அரபு நாடுகளும் அதை ஏற்றுக் கொள்ளவே இல்லை.

ஒரு தொழிற்சாலை அமைப்பதற்காக பரம்பரை பரம்பரையாக பாவித்து வந்த நிலத்தை விட்டுக் கொடுக்கும் வலியை விட பல மடங்கு பெரியது, தமது நிலத்தை/தொழிலை/வீட்டை யாருக்கோ சொந்த நாடு அமைக்க விட்டுக் கொடுப்பது. அதைத்தான் செய்யும் படி பாலஸ்தீனியர்கள் வற்புறுத்தப்பட்டார்கள். உலகெங்கிலுமிருந்தும் யூதர்கள் இசுரேலுக்கு குடியேற ஊக்குவிக்கப்பட்டார்கள்.

அப்படி தமது நாட்டை இழந்த பாலஸ்தீனியர்களுக்கும் அவர்களுக்கு ஆதரவான அரபு நாடுகளுக்கும் இருக்கும் வலியும் கோபமும் புரிந்து கொள்ளக் கூடியதே.

அமெரிக்காவின் ஆதரவிலும் ஆயுதங்களினாலும் தமது மக்களின் வீரத்தினாலும் யூதர்களின் புதிய நாடு பாலஸ்தீனிய எதிர்ப்பை ஒடுக்கி வல்லானாக வாய்க்கால் வகுத்துக் கொண்டிருக்கிறது. பாலஸ்தீனியர்களுக்காக ஒதுக்கப்பட்டபகுதிகளைக் கூடப் பிடித்து வைத்துக் கொண்டு சொந்த ஊருக்குள்ளேயே அகதிகளாக மாற்றி விட்டிருக்கிறது.

பாலஸ்தீனமும் இந்தியா போல பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. தென்சென்னை பகுதியை, பாகிஸ்தான் பிரிவினையால் நாடற்று போய் விட்ட சிந்திக்களுக்கு சொந்த மாநிலம் என்று தனியாகப் பிரித்து விட்டால் எப்படி இருக்கும். மயிலாப்பூரில், திருவல்லிக்கேணியில், அடையாறில், நங்கநல்லூரில் ஆண்டாண்டு காலமாக இருப்பவர்களை எல்லாம் 'பெட்டியைக் கட்டிக் கொண்டு அந்தப் பக்கமா போயிடுங்க இந்த இடமெல்லாம் பாவம் தமக்கென்று நாடு இல்லாத சிந்திக்களுக்குக் கொடுக்க முடிவு செய்து விட்டோம்' என்று இந்திய நாடாளுமன்றம் சொன்னால் எப்படி இருக்கும்?

அதே கதைதான், இஸ்ரேலிலும் நடந்தது. யாருடைய நிலத்தை யாரோ எடுத்து யூதர்களுக்கு வழங்கி விட்டார்களாம். அதற்கு பரவலான பிரதிநிதித்துவம் இல்லாத ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்புதல் வேறு. கேட்க வேண்டிய அந்த ஊர் மக்களை யாரும் கேட்கவில்லை!

அன்றிலிருந்து அமெரிக்காவின் அடாவடியான இசுரேல் ஆதரவு போக்கால் உலகில் அமைதி குலைந்திருக்கிறது. தனது வணிக நலன்களுக்காக சவுதி அரேபியா, குவைத் போன்ற நாடுகளின் ஆட்சியாளர்களை கைக்குள் போட்டுக் கொண்டு அவர்களது சர்வாதிகார ஆட்சிகளையும் தாங்கிப் பிடித்து வருகிறது. மக்கள் விருப்பப்படி ஆட்சி நடக்கும் நாடுகள் ஈராக், ஈரான் மட்டுமே. அந்த இரண்டுடன் அமெரிக்காவுக்கு ஆகாது.

எப்போ தீர்வு வரும்?

58 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

தீர்வு வரும்...
வினைக்கு எதிர் வினை உண்டு என்கிற விதி பொய்யாகும்போது....

மா சிவகுமார் சொன்னது…

// வினைக்கு எதிர் வினை உண்டு என்கிற விதி பொய்யாகும்போது....//

(எல்லா பின்னூட்டத்துக்கும் கோனார் உரை கேட்கும் நிலை வந்து விட்டது எனக்கு :-)). புரியலையே!

அன்புடன்,
மா சிவகுமார்

வஜ்ரா சொன்னது…

ஐயா,


இசுரேல் பற்றிய எனது சில பதிவுகளைப் பார்த்து, உங்கள் கருத்துக்களைச் சொல்லவும்.


இங்கே "கிழி "க்கவும்

வஜ்ரா சொன்னது…

//
சில மதப் புத்தகங்களைத் தவிர்த்து வேறு எந்த வரலாற்று ஆதாரங்களும் இல்லாமல்,
//

இல்லை என்பதற்கு என்ன ஆதாரம் ?


ஏனென்றால் வரலாற்று ஆதரங்கள் நேரில் கண்ட கோடான கோடி மக்களில் நானும் ஒருவன்.


//

அப்படி தமது நாட்டை இழந்த பாலஸ்தீனியர்களுக்கும் அவர்களுக்கு ஆதரவான அரபு நாடுகளுக்கும் இருக்கும் வலியும் கோபமும் புரிந்து கொள்ளக் கூடியதே.

//


அரேபிய மண்ணிலிருந்து விரட்டி அடித்து, ஹிட்லர் முடிக்காததை தாங்கள் முடிக்கப்போவதாகக் கொக்கரிக்கும் அரபுகள் "வலி" நிச்சயமாக மனிதர்களைக் கொசுக்களைப் போல் கொன்று குவிக்கும் கம்யூனிச ஆரதவாளருக்குத்தான் புரியும்.


எங்களைப் போன்ற ஜடங்களுக்கு அதெல்லாம் புரியாது.

dondu(#11168674346665545885) சொன்னது…

பழைய கதையையே பேசினால் எப்படி? பாலஸ்தீனம் என்ற நாடும் தனியாக இருந்ததேல்லை. ஒட்டோமான் துருக்கியின் ஒரு சிறு பிராந்தியம் அது. அதை பிரிட்டன் முறைப்படி ஐ.நா. தீர்மானத்தின்படி இரண்டு பகுதிகளாக்கியது. அதற்கு முன்னமேயே இஸ்ரவேலர்கள் நெகேவ் பாலைவனத்தை தங்கள் உழைப்பால் சோலைவனமாக்கினர். தங்களுக்கு கொடுத்த பகுதியை வைத்து இஸ்ரேல் ராஜ்ஜியம் செய்ய பாலஸ்தீனியர் அரபுகளின் தூண்டுதலின் பேரில் தங்கள் நிலப்பகுதிகளை ஜோர்டானிடமும் எகிப்திடமும் பறிகொடுத்தனர்.

மேலும் இஸ்ரேல் அமைய சோவியத் யூனியனும் அதன் ஆதரவாளர்கள் கூட வாக்களித்தனர் என்பதையும் சௌகரியமாக மறக்கிறீர்களே.

எனது இஸ்ரேல் பற்றிய பதிவுகளை பாருங்கள்.

சோம்பேறி அரேபியர்களுக்கு வக்காலத்து வாங்குவதை விடுங்கள். நமக்கும் பாகிஸ்தானுக்கும் பிரச்சினை என்றால் அவர்கள் பாகிஸ்தானத்தைத்தான் ஆதரிப்பார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சவூதி தமிழன் சொன்னது…

சிவகுமார்,

மனச்சான்றுடன் எழுதப்பட்ட அருமையான பதிவு.

இப்பதிவுக்குப் பின்னூட்டம் எதிர்வினையாற்றுபவர்களின் சார்பு நிலை ஒன்றும் வியக்கத் தக்கதில்லை.

//சில மதப் புத்தகங்களைத் தவிர்த்து வேறு எந்த வரலாற்று ஆதாரங்களும் இல்லாமல், //

உண்மை தான். ஆதாரம் இருப்பதாகப் புளுகுபவர்கள் தான் ஆதாரத்தைக் கொண்டுவரவேண்டுமே அன்றி,

இல்லை என்பதற்கு ஆதாரம் காட்டத் தேவையில்லை.

பதிவுக்கு நன்றி!

பெயரில்லா சொன்னது…

//சில மதப் புத்தகங்களைத் தவிர்த்து வேறு எந்த வரலாற்று ஆதாரங்களும் இல்லாமல்,//

இதுதான் மட்டையடி என்பது. வரலாற்றை கொஞ்சம் படித்து பார்த்து விட்டு நீங்கள் தொடரலாம்.

உங்களுக்கு இப்படி பதிவெழுத வேண்டிய அவசியம் என்னவென்றுதான் புரியவில்லை. உங்களின் காந்திய பதிவுகளினால் உங்கள் மேல் அதிக நம்பிக்கை இருந்தது.

அழகப்பன் சொன்னது…

உலகின் மிக முக்கியப் பிரச்சனை குறித்து எழுதியுள்ளீர்கள். இரு தினங்களுக்கு முன் நானும் இது குறித்து பதிவெழுதினேன். அதனையும் வாசித்துப் பாருங்கள்.

http://etheytho.blogspot.com/2008/01/blog-post.html

//மக்கள் விருப்பப்படி ஆட்சி நடக்கும் நாடுகள் ஈராக், ஈரான் மட்டுமே. அந்த இரண்டுடன் அமெரிக்காவுக்கு ஆகாது.//

மக்கள் விருப்பம் எல்லாம் இரண்டாம் பட்சம்தான். அமெரிக்க நலன்தான் முக்கியம் என்பது தாங்கள் அறிந்த ஒன்றுதானே?

என் பதிவின் பின்னூட்டத்தில் மஸ்தான் என்பவருக்கு அளித்த பதிலை இங்கே தருகிறேன்.

---
//But we cant say all bramins supporting jews, who is supporting jews here, must be they don’t know full history, otherwise them eyes and ears are covered by a steel.//

அனைத்து பார்ப்பனரும் இஸ்ரேலின் செயல்களை ஆதரிக்கிறார்கள் என்று கூறமுடியாதுதான். யூதர்களில்கூட மிகச்சிலர் இஸ்ரேலின் செயல்களை கண்டிக்கின்றனர். அதுபோலவே பார்ப்பனரிலும் இருக்கின்றனர். ஆனால் பெரும்பான்மையான பார்ப்பனர் இஸ்ரேல் ஆதரவுடையவர்களாகவே இருக்கின்றனர். வலையுலக டெண்டுல்கர் என்று அழைக்கப்படுபவர் இது குறித்து ஒரு சில பதிவுகள் கூட எழுதியுள்ளார்.
----

உங்களுக்கு வந்துள்ள பின்னூட்டங்களிலிருந்தும் இந்த உண்மையை அறிந்திருப்பீர்கள். யுதர்களுக்கும் இந்திய பார்ப்பனருக்கும் இடையிலான ஒற்றுமை இதுதான்.

பார்ப்பனீயமும், யூதமும் பிறப்பினாலேயே வருவது. யாரும் தழுவி ஏற்க முடியாது.

பாலத்தீனியர்களின் வரலாறு குறித்து (சுருக்கமாகவேனும்) எழுதவேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாகவே உள்ளது. உங்கள் பதிவிற்கு வந்துள்ள பின்னூட்டங்களிலிருந்து என் எண்ணம் உடனடித் தேவை என்றும் புரிகிறது. என் அடுத்தப் பதிவாக அதனை இடுகிறேன். (நேரமின்மை காரணமாக கடந்த ஆண்டு நான் பதிவேதும் எழுதவில்லை. எனவே சற்று தாமதமாகலாம்.)

Me சொன்னது…

//தென்சென்னை பகுதியை, பாகிஸ்தான் பிரிவினையால் நாடற்று போய் விட்ட சிந்திக்களுக்கு சொந்த மாநிலம் என்று தனியாகப் பிரித்து விட்டால் எப்படி இருக்கும். மயிலாப்பூரில், திருவல்லிக்கேணியில், அடையாறில், நங்கநல்லூரில் ஆண்டாண்டு காலமாக இருப்பவர்களை எல்லாம் 'பெட்டியைக் கட்டிக் கொண்டு அந்தப் பக்கமா போயிடுங்க இந்த இடமெல்லாம் பாவம் தமக்கென்று நாடு இல்லாத சிந்திக்களுக்குக் கொடுக்க முடிவு செய்து விட்டோம்' என்று இந்திய நாடாளுமன்றம் சொன்னால் எப்படி இருக்கும்?//


தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும் திருகுவலியும். சரியான "நச்"

Gopalan Ramasubbu சொன்னது…

Robert Fisk எழுதிய The Great War for Civilisation" படித்திருக்கிறீர்களா? மத்திய-கிழக்கு நாடுகளின் ஒவ்வொரு போராட்டத்தையும் விவரிக்கும் மிகச்சிறந்த ஒரு நூல்.

http://www.robert-fisk.com/book_extracts_index.htm

லக்கிலுக் சொன்னது…

சுருக்கமாக எழுதப்பட்ட அருமையான பதிவு. இன்றைய நிலையில் பாலஸ்தீனியர்கள் உலகத்தால் ஒதுக்கப்பட்டவர்களாக மாறிப்போனதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியமும், சூடு சொரணையில்லாமல் அதை அடிவருடுபவர்களுமே காரணம்.

பதிவுக்கு நன்றி மாசி.

வஜ்ரா சொன்னது…

மா. சி ஐயா,


உங்களுடன் ஒரு கருத்தில் நான் உடன் படுகிறேன்.


அது, அமேரிக்கா எல்லா நாடுகளிலும் போய் ஜனநாயகத்தைத் திணிப்பது. ஆனால் அதன் நலன் பாதிக்கும் என்பதற்காக சவுதி போன்ற நாடுகளில் இன்னும் முடியாட்சியை ஆதரிப்பது. பாகிஸ்தான் அதிபர் முஷரப்பு நிலையும் சவுதி மன்னர் நிலை தான்.

இஸ்ரேல் Gaza பகுதியை விட்டு வெளியேறிய பின்னும் ஏன் குஷ் கதீஃப் போன்ற பிரதேசங்களில் கசாம் ராக்கெட்டுகள் வந்து விழுந்த வண்ணம் உள்ளன ?


முஹம்மத் அப்பாஸ், டீ விக்களில், திரையரங்குச் செய்தித் துணுக்குகளில் எல்லாம் வந்து peaceful co-existence என்றும் Two state solution என்றும் பேசினார். ஆனால் அவர் தேர்தலில் நின்று எத்தனை வாக்குகள் பெற்றார் ?


பாலஸ்தீனர்களுக்கு தங்கள் நாடு என்று ஒன்று அமையவேண்டும் என்ற எண்ணம் மிக மிகக் குறைவு. மிக அதிகமாக மேலோங்கியிருக்கும் எண்ணம், யூதர்களை விரட்டுவதில் தான் உள்ளது.


அத்தகய எண்ணத்தின் வெளிப்பாடு தான் தற்கொலைப்படைத் தாக்குதல், பொது மக்களை மீது ராக்கெட் தாக்குதல் போன்றவை.


அரபு, இஸ்ரேலியப் பிரச்சனையைப் புரிந்து கொள்ளும் பக்குவம் இந்தியர்களில் வெகு சிலருக்கே முடியும். அரபு மனப்பான்மையைப் புரிந்தவர்கள் மட்டுமே இஸ்ரேல் பக்கத்து ஞாயத்தைப் பார்க்க முடியும்.



இஸ்ரேல் ஒன்றும் தவறே செய்யாத நாடு என்றெல்லாம் நான் சொல்லவில்லை. நான் சொல்வதெல்லாம், இஸ்ரேல் செய்யும் செயல்கள் அடாவடிச் செயல்களே, அவர்கள் இப்படிச் செய்யவில்லை என்றால் அவர்களால் அந்த இடத்தில் வாழ முடியாது. பேச்சு வார்த்தை மூலம் பிரச்சனை தீரும் என்றால் அதில் முதலாவதாக வந்து உட்கார்ந்து பேசித் தீர்க்க இஸ்ரேலியர்கள் என்றுமே தயார். ஆனால் இது வரை ஒரு பேச்சு வார்த்தை கூட வெற்றி பெறவில்லை என்பதை ஏன் நீங்கள் யோசிக்கவே இல்லை ?







இதன் முடிவு, ஏதாவது ஒரு இனம் (அரபு அல்லது இஸ்ரேலிய) அழிந்தால் தான் வரும்.

பெயரில்லா சொன்னது…

//இப்போது இசுரேல் என்று சொல்லப்படும் பகுதி பாலஸ்தீனமாகவே இருந்து வந்தது.//

ஆதாரம் இல்லா வாதம்.

//மயிலாப்பூரில், திருவல்லிக்கேணியில், அடையாறில், நங்கநல்லூரில் ஆண்டாண்டு காலமாக இருப்பவர்களை எல்லாம் 'பெட்டியைக் கட்டிக் கொண்டு அந்தப் பக்கமா போயிடுங்க ..... என்று இந்திய நாடாளுமன்றம் சொன்னால் எப்படி இருக்கும்?//

எந்த பக்கம் மா.சி உங்க வீட்டு பக்கமா ?

//எப்போ தீர்வு வரும்?//

எது தீர்வு ?

//அரேபியர்களுக்கு வக்காலத்து வாங்குவதை விடுங்கள். நமக்கும் பாகிஸ்தானுக்கும் பிரச்சினை என்றால் அவர்கள் பாகிஸ்தானத்தைத்தான் ஆதரிப்பார்கள்.//

போட்டு தாக்கு.

மா சிவகுமார் சொன்னது…

வஜ்ரா, டோண்டு சார்,

உங்கள் இசுரேல் ஆதரவு நிலை நன்கு தெரிந்ததே. டோண்டு சாரின் பதிவுகளை ஏற்கனவே படித்திருக்கிறேன். அவர் நியாயமான காரணம் எதுவும் சொல்வதாக நினைவில்லை.

//பாலஸ்தீனம் என்ற நாடும் தனியாக இருந்ததேல்லை.//
நாகர்கோவில் என்று ஒரு நாடும் தனியாக இருந்ததில்லை. அதற்காக எங்க ஊரை எடுத்து வேறு யாருக்கோ தேங்காய் உடைத்தால் நாங்களும் போராட ஆரம்பித்து விடுவோம்.

//சோவியத் யூனியனும் அதன் ஆதரவாளர்கள் கூட வாக்களித்தனர் //

எங்கள் ஊரைப் பிடுங்கி தாரை வார்ப்பதற்கு ஆதரவாக இந்திய நாடாளுமன்றமும், தமிழக சட்டமன்றமும் வாக்களித்திருந்தாலும் அது எங்கள் வலியை எப்படி குறைத்து விடும்?

//நமக்கும் பாகிஸ்தானுக்கும் பிரச்சினை என்றால் அவர்கள் பாகிஸ்தானத்தைத்தான் ஆதரிப்பார்கள்.//

நம்மை யார் ஆதரிப்பார்கள் என்று பார்த்து நடப்பது சந்தர்ப்பவாதம். அதை எல்லாம் தாண்டி அடிப்படை நியாயம், தருமம் என்று பார்த்து கூட நாம் ஒரு இயக்கத்தை ஆதரிக்கலாம்.

'எல்லாவற்றிலும் நமக்கு என்ன ஆதாயம்' என்று மட்டும் பார்த்து செயல்படுவது குறுகிய காலத்தில் வெற்றி தந்தாலும், நீண்ட கால நோக்கில் அப்படிச் செயல்படும் சமூகங்கள் அருகிப் போய் விடும்.

புகழேந்தி, அனானிகள்,

உங்கள் கருத்துக்கள் பதிவின் பொருளுக்குப் பொருந்தாமல் இருப்பதால் நீக்கி விட்டேன், புரிதலுக்கு நன்றி.

அனானி,

//வரலாற்றை கொஞ்சம் படித்து பார்த்து விட்டு நீங்கள் தொடரலாம்.//
எனக்கு எட்டிய வரை படித்துப் பார்த்து விட்டுதான் எழுதவே செய்தேன். ஒரு ஆராய்ச்சியாளர் போல பரவலாக ஆய்வு செய்யா விட்டாலும், எனக்குப் புரிந்து கொள்ளும் வரை படித்துதான் எழுதினேன்.

//உங்களுக்கு இப்படி பதிவெழுத வேண்டிய அவசியம் என்னவென்றுதான் புரியவில்லை.//

'பாதகம் செய்பவரைக் கண்டால்...'

கருத்துகளுக்கு நன்றி அழகப்பன், உறையூர்க்காரன், லக்கிலுக்.

19, 20ம் நூற்றாண்டுகளில் ஒரு தேசம் அமைவதற்கு இரண்டு காரணிகள் தேவை என்று கருதினார்களாம்(இரண்டும் இருக்க வேண்டும்)
1. பொதுவான வரலாறு, பண்பாடு மற்றும் சேர்ந்து வாழ விரும்பும் மக்கள் கூட்டம்
2. அவர்களுக்கென்று தனியாக பிழைத்துக் கொள்ளும்படியாக ஒரு நிலப்பரப்பு

யூதர்களுக்கு 2வது இல்லாமல் இருந்தது. அடாவடியாக உருவாக்கிக் கொண்டார்கள், அடுத்தவர் இடத்தில்.

DFC
//எது தீர்வு ?//

தரும்ப்படி தீர்வு:
இசுரேலியர்கள் தம் அடாவடியை விட்டொழித்து பாலஸ்தீனியர்களுக்கு முழு உரிமைகளையும், எல்லா நிலங்களையும் கொடுக்க வேண்டும்.

யூதர்களுக்கு தாயகமாக அவர்களுக்கு பெருமளவு ஆதரவளிக்கும் அமெரிக்காவில் இடம் பார்ப்பது கூட செய்யலாம்.

நடைமுறை

60 ஆண்டுகளுக்கும் மேல் நடந்து விட்ட குடியேற்றங்கள், நாட்டு அமைப்புகள் பிரச்சனையை சிக்கலாக்குகின்றன. அதை மனதில் கொண்டு பாலஸ்தீனியர்கள் யூத சகோதரர்களும் இதே இடத்தில் பிறரை மதித்து வாழும் பண்புடன் தொடர இடம் அளிக்க முன் வர வேண்டும்.

இதில், கொடுப்பவர்கள் பாலஸ்தீனியர்கள், வாங்குபவர்கள் யூதர்கள். இப்போது இருப்பது போல 'நான்தான் வல்லான், என்னிடம் வந்து கெஞ்சுங்கள்' என்று ஒண்ட வந்த பிடாரி சொல்வது நியாயம் கிடையாது.

மாற்றாக, யூதர்களின் கடின உழைப்பும் அமெரிக்காவின், பண பலமும் அமெரிக்காவிலேயே யூதர்களுக்கு புதிய தாயகம் உருவாக்குவதை எளிமைப்படுத்த உதவலாம்.

அன்புடன்,
மா சிவகுமார்

K.R.அதியமான் சொன்னது…

மாசி,

தீர்வுகள் அவ்வளவு எளிமையானவை அல்ல.

இஸ்ரேலின் முழு சரித்திரத்தையும் படிக்கும் வரை, உஙக்ளைப் போலவே எண்ணினேன்.

பின் லேடன் அமேரிக்காவை தாக்க முக்கிய காரணமே அவர்களின் கண்மூடித்தனமான இஸ்ரேல் ஆதரவுதான்.

ஆனால், பாலஸ்தீனர்களுக்கு (ஏன் அனைத்து அரபியர்களுக்குமே) அடிப்படை ஜனனாயகத்தில் நம்பிக்கையோ, எற்றுக்கொள்ளும் மனமுதிற்ச்சியோ இல்லை. மிக முக்கியமாக ஒற்றுமை இல்லை. பாலஸ்தீன குழுக்கலான ஃபாடா வும், ஹமாசும் ஒருவரை ஒருவர் அழிக்க போர் புரிவதை பாருங்கள். அடிப்படை நேர்மையும் இல்லை. யாசர் அராஃபத் பல் மில்லியன் டாலர்களை ஊழ்ல் புரிந்ததாக குற்ச்சாட்டு. அவர் மனைவியும், பி.எல்.ஓ தலைமையும் இந்த பணதிற்க்காக அடித்துக் கொள்ளும் வெக்ககேடு.

காசா மற்றும் கிழுக்கு கரை பகுதிகளில் (முழு பாலஸ்தீன கட்டுப்பாட்டில் இருப்பவை)
நேர்மையான, அடிப்படை ஜனனாயகத்தை மதிக்கும் ஆட்சி கிடையாது. எதிராளிகளை கொல்வதும், துப்பாக்கி கலாச்சாரமும் சர்வ சாதாரணம். அர‌சின் ப‌ண‌த்தை கையாட‌ள் செய்வ‌து, ஊழ்ல் மிக‌ சாதார‌ண‌ம். இவ‌ர்க‌ளால் ஒரு ந‌ல்ல‌ ஆட்சி த‌ர‌ முடியிம் என்று தோன்ற‌வில்லை. அத‌ற்க்கா இஸ்ரேல், பால‌ஸ்தீன‌ விடுதலையை அங்கீகரிக்க கூடாது என்று சொல்லவில்லை. மறுபக்கத்தையும் பாருங்கள்..

ஜோர்டன், சிரியா மற்றும் லெப்னான் நாடுகள் அந்தக்காலத்தில் பாலஸ்தினியர்களிடம் நியாயமாக நடக்கவில்லை. பாலஸ்தினிய பகுதிகளை ஆக்கிரமித்து, தஙகள் நாட்டுடன் சேர்க்கவே சதி செய்தன. அரபிய ஒற்றுமை என்பது வெறும் மாயை.

காசா பகுதியிலிருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறி விட்டன. ஆனாலும் அங்கிருந்து ராக்கேட் அடிப்பது தொடர்கிறது. இப்போது நிகழும் அமைதிக்கான காரணம், பாட்டாவும், ஹமாசும் சண்டை செய்து ஓய்ந்து போயிருப்பதும், கடும் பொருளாதார நெருக்கடிகளும்தான்.

படிக்க வேண்டிய நூல்கள் :

1.Arab Israeli Wars
2.O Jerusalem
3.Exodus
4.Haj

அமைதியும், சமாதனாமும் நிரந்தரமாக நிலை பெற்று, பால்ஸ்தீன நாடு ஒழுங்கு பெற்றால், இஸ்ரேலைவிட பேலஸ்தீனரக்ளுக்கே அதிக நன்மையும், வளமும் கிடைக்க வாய்ப்பு. இஸ்ரேலின் சுபிட்சத்திலிருந்து பயன் பெறலாம். (proximity benefits - மெக்ஸிகே, அமேரிக்கா அருகே இருந்து பயன் பெறுவதை போல)

மா சிவகுமார் சொன்னது…

வாங்க அதியமான்,

(பாருங்க, தமிழில் அருமையாக எழுதுகிறீர்கள். பாராட்டுகள். :-)

'பாலஸ்தீனியர்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது, எப்படி நடந்து கொள்கிறார்கள்' என்பது வேறு விவாதத்தில் பேசப்பட வேண்டியது.

இசுரேலின் உருவாக்கம், அடாவடி செய்யும் இசுரேல் தானே அடி வாங்கும் அப்பாவி போலக் காட்டிக் கொண்டிருக்கும் இன்றைய நிலை பற்றி உங்கள் கருத்து என்ன?

அன்புடன்,
மா சிவகுமார்

K.R.அதியமான் சொன்னது…

அடாவடி என்பது பார்வையாளர்களின் கோணத்திலிந்துதான்.
'அடிக்கு அடி திருப்பி கொடு, இல்லையேல் எதிரிகள் நம்மை
வலிமையற்றவனாக நினைத்து மேலும் அடாவடி செய்வர்' என்பதே இஸ்ரேலின் தத்துவம்.

இஸ்ரேலியர்கள் பல லச்சம் ஏக்கர்க‌ளை 1900 முதல் கொஞசம் கொஞ்சமாக விலைக்கு வாங்கியதை மறந்துவிடாதீர்கள். 1920களில் பல எகிப்திய, ஜோர்டானியர்கள் பாலஸ்தின பகுதிகளுக்கு குடி பெயர்ந்தனர். முக்கிய காரணாம், யூதர்களின் திறமை, மற்றும் உழைப்பினால் அப்பகுதிகள் மற்ற இடங்களைவிட மிக வளமாக திகழ்ந்தன. (இன்றும்தான்). 1980களுக்கு பின், பெரும்பாலான அரபிய நாடுகள், (ஏன், பி.எல்.ஓ உம்தான்) இஸ்ரேலை முழுவதுமாக அழிக்க வேண்டும் என்ற நிலைபாட்டிலிருந்து மாறி, பாலஸ்தீனர்களுக்கு ஒரு தனி நாடு கிடைத்தால் போதும், இஸ்ரேலுடன் peaceful co-existance என மாறின‌..

இஸ்ரேல் உருவான வரலாறு இன்று விவாதத்திற்கு தேவையில்லை. நிகழ்காலமும், எதிகாலமும்தான் விவாதிக்கப்பட வேண்டும்.

பார்க்கவும் :

http://en.wikipedia.org/wiki/State_of_Palestine#Mutual_recognition

http://en.wikipedia.org/wiki/State_of_Palestine#The_status_of_the_occupied_territories

வஜ்ரா சொன்னது…

//
உங்கள் இசுரேல் ஆதரவு நிலை நன்கு தெரிந்ததே. டோண்டு சாரின் பதிவுகளை ஏற்கனவே படித்திருக்கிறேன். அவர் நியாயமான காரணம் எதுவும் சொல்வதாக நினைவில்லை.
//

நன்றி,

டோண்டு ஐயாவை விடுங்கள்.
நான் எனது பதிவில் சொல்லிய, சுட்டிய காரணங்கள் பற்றி .. ?

Unknown சொன்னது…

அன்பின் மாசி,
//சோம்பேறி அரேபியர்களுக்கு வக்காலத்து வாங்குவதை விடுங்கள். நமக்கும் பாகிஸ்தானுக்கும் பிரச்சினை என்றால் அவர்கள் பாகிஸ்தானத்தைத்தான் ஆதரிப்பார்கள்.//
என்று ஒருவர் எழுதியிருந்ததற்கு

அரேபியருக்காவது ஒரேமதம் என்கிற காரணம் இருக்கிறது ஆனால் இந்த பார்ப்பனியர்கள் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அடிவருடித்தனம் செய்வதற்கு என்ன காரணம் இருக்கிறது என்கிற என் ஆதங்கத்தைத்தான் பின்னூட்டியிருந்தேன். ஏனோ நீக்கிவிட்டீர்கள்.
உங்கள் பதிவு, உங்கள் க.சுதந்திரம், நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.
நன்றி.

பெயரில்லா சொன்னது…

//எனக்கு எட்டிய வரை படித்துப் பார்த்து விட்டுதான் எழுதவே செய்தேன்.//

நீங்கள் படிக்க வேண்டியது அதிகம் இருப்பதாக பட்டதால்தான் அப்படி ஒரு பதில் எழுதியிருந்தேன்.

தென்சென்னையில் சிந்திக்கு கொடுப்பதற்க்கும், ஜெருசலேமிற்க்கு யூதர்கள் குடிபுகுவதற்கும் வித்தியாசம் தெரியாத அளவிற்க்கு வரலாறு படித்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது.

அதியமான் / வஜ்ரா அவர்கள் இன்னொரு பக்கத்தை எடுத்து காட்டியிருக்கிறார்கள்.

//'பாதகம் செய்பவரைக் கண்டால்...'
//

நியாயம்தான். எனக்கும் ஹமாஸ் போன்ற, அல்-கொய்தா போன்ற தீவிரவாத குழுக்களின் பாதக செயல்களை கண்டால் கோபம்தான் வருகிறது. என்ன அதைப் பற்றி எழுதினால் நான் முற்போக்குவாதியாக காட்டி கொள்ள முடியாது. அவ்வளவுதான்.

சதுக்க பூதம் சொன்னது…

அமெரிக்காவின் பொருளாதாரம் யூதர்களின் கையில் உள்ளது. பெட்ரோடாலர் பணம் கொண்டு அமெரிக்க கார்ப்புரேசன்களின் பெரும்பான்மை பங்குகளை அரேபியர்கள் வாங்கிவிட்டால்(முதலில் வாங்க விட பட்டால்), அமெரிக்காவின் கொள்கை மாற வாய்ப்புள்ளது.

bala சொன்னது…

//இந்த பார்ப்பனியர்கள் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அடிவருடித்தனம் செய்வதற்கு என்ன காரணம் இருக்கிறது என்கிற என் ஆதங்கத்தைத்தான் பின்னூட்டியிருந்தேன். ஏனோ நீக்கிவிட்டீர்கள்//

இது என்ன கேள்வி புகழேந்தி அய்யா,
நம்ம அரை டிக்கட் அழகப்பனை கேளுங்க;அவர் கூட மிக சீரிய ஆராய்ச்சி செய்து, "பெளத்தமும்,பார்ப்பனீயமும்,பிறப்போடு வருபவை;யாரும் தழுவு ஏற்க முடியாது" என்ற உண்மையை கண்டுபிடித்து எழுதுவார்;நம்ம மா சி அய்யாவும் வாயெல்லாம் பல்லாக "அட நம்ம பதிவுக்கு பொருத்தமான பின்னூட்டம்" என்று சொல்லி "நல்ல கருத்துக்கு நன்றி அழகப்பன்"னு பதில் போடுவார்'இதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு "அயோக்யத்தனமும்,ஜாதி வெறியும்,திராவிடீயமும் பிறப்போடு தோன்றுபவை;யாரும் தழுவி ஏற்க முடியாது என்ற உண்மை கச்சிதமாக புரிகிறது.

பாலா

மா சிவகுமார் சொன்னது…

உங்கள் கருத்தைத் தெளிவுபடுத்தியதற்கு நன்றி அதியமான்.

புகழேந்தி,
//உங்கள் பதிவு, உங்கள் க.சுதந்திரம், நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.//
இப்படிச் சொல்லி விட்டு மீண்டும் அதே கருத்தை பின்னூட்டமாகப் போட்டு விட்டீர்களே!

//தென்சென்னையில் சிந்திக்கு கொடுப்பதற்க்கும், ஜெருசலேமிற்க்கு யூதர்கள் குடிபுகுவதற்கும் வித்தியாசம் தெரியாத அளவிற்க்கு வரலாறு படித்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது.//

நீங்கள்தான் வித்தியாசம் சொல்லுங்களேன்! 'சிந்து சமவெளியின் குடிகள்தான் தென்னிந்தியாவுக்கு வந்தார்கள், அவர்களுக்கு உரிய இடம்தான் தென் சென்னை' என்று ஒரு காரணம் சொல்லவா முடியாமல் போய் விடும்? அதே மாதிரியான சப்பைக் கட்டுதான் பாலஸ்தீனதில் இசுரேல் உருவாக்கக் கொடுக்கப்பட்டது என்று எனக்குப் புரிகிறது.

பாலா,

புகழேந்தியின் பின்னூட்டத்தோடு உங்கள் பதிலும் இருக்கட்டும். இரண்டுமே எனக்கு பொருத்தமில்லாமல்தான் படுகின்றன என்று மட்டும் சொல்லி வைக்கிறேன்.

வஜ்ரா,

நான் சீனாவில் இருக்கும் போது அவர்கள் தரப்பு வாதங்கள் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தன. கொஞ்சம் தூரத்துக்கு வந்த பிறகு ஒப்பீடு கிடைத்தது.

நீங்களும், உங்கள் இசுரேல் வாசம் முடிந்து (அங்குதானே இருக்கீங்க?) வெளியில் சில ஆண்டுகள் இருந்த பிறகு இரண்டு தரப்பையும் அலசி எல்லோருக்கும் புரியும் படி உங்கள் கருத்துக்களை எழுதி உதவுவீர்கள் என்று நினைக்கிறேன்.

அன்புடன்,
மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

மாசி! டோண்டு தனது பின்னூட்டத்தில் ,"இஸ்ரவேலர்கள் நெகேவ் பாலைவனத்தை தங்கள் உழைப்பால் சோலைவனமாக்கினர்." இதற்கு பதிலளிக்கும் வகையில் தான் எனது பின்னூட்டம் அமைந்திருந்தது. இந்த கருத்தை அவர் இஸ்ரேல் குறித்த பதிவிலும் சரி, பின்னூட்டத்திலும் சரி குறிப்பிடுவதற்கு தவறுவதே இல்லை. ஆனால் இக்கருத்து வாதத்துக்கே ஒவ்வாது கருத்து. இதனை அவருக்கு புரிய வைக்கவே, அவருடைய வீட்டை தான் ஆக்கிரமித்து கொண்டால் அவரை விடவும் சிறப்பாக அதனை உபயோகித்து எனது வளத்தை பெருக்கி கொண்டு எனது நாட்டுக்கும் பயனளிக்கும் வகையில் உபயோகப்படுத்துவேன் என்றால் எனது ஆக்கிரமிப்பு அவருடைய கருத்தின் அடிப்படையில் கரியாக இருக்க வேண்டும். ஒத்து கொள்வாரா டோண்டு?
அப்படியானால் இஸ்ரேல் உலக தாதாக்களான பிரிட்டன் மற்றும் அமெரிக்கா துணையோடு வந்து நிராயுதபாணியாக இருந்த பலஸ்தீனர்களின் நிலத்தை கொள்ளையடித்தது போல சென்னை தாதாக்களோடு வந்து அவருடைய வீட்டை ஆக்கரமித்து அவர் பய்னபடுத்துவதை விடவும் சிறப்பாக பயன்படுத்தினால் எனது ஆக்கரமிப்பு டோண்டு பார்வையில் சரியானதாக இருக்க வேண்டும். இதனை புரிய வைக்கும் விதத்தில் இருந்த எனது பின்னூட்டத்தை தலைப்புக்கு சம்பந்தமில்லை என்று அகற்றியது வருந்ததக்கது மாசி!
நீதிமான்

பெயரில்லா சொன்னது…

பேரறிஞர் அதியமான், "இஸ்ரேலியர்கள் பல லச்சம் ஏக்கர்க‌ளை 1900 முதல் கொஞசம் கொஞ்சமாக விலைக்கு வாங்கியதை மறந்துவிடாதீர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளாரே!
நமது நாட்டில் நாம் சொந்தமாக கொண்டுள்ள நமது நிலம் நாம் அதிலிருந்து பயன் அடைந்து கொள்ள மாத்திரமே சொந்தம் அன்றி அதனை தனி நாடாக பிரகடனப்படுத்த நமக்கு கிடையாது என்பதனை அந்த பேரறிஞர் அறிவாரா? சொந்த நாட்டின் மக்களக்கே இது தான் நிலையானால் வந்தேறிக்கு நிலத்தை வாங்கியதனால் தனது நாடாக பிரகடனபடுத்த எப்படி உரிமை வர முடியும்? விளக்கம் உண்டா? அதியமான்!

டோண்டுவின் அதே அலைவரிசையில் இவரும் தனது கருத்தை தெரிவிக்கிறார் பாருங்கள். "யூதர்களின் திறமை, மற்றும் உழைப்பினால் அப்பகுதிகள் மற்ற இடங்களைவிட மிக வளமாக திகழ்ந்தன". நமது திறமையை விட அமெரிக்கா அதிக திறமையுடையதே, இன்னும் சில நாடுகள் அந்த வரிசையில் வரலாம். அதற்காக நமது நாட்டை அந்த நாடு எடுத்து கொள்ள அனுமதிக்க முடியுமா? விளக்கம் உண்டா அதியமான்?
நீதிமான்

K.R.அதியமான் சொன்னது…

சிற்ற‌றிஞர் நீதிமான்,

இப்ப‌ என்ன‌ செய்ய‌ சொல்கிறீர்க‌ள் ?

இஸ்ரேலில் இருக்கும் யூதர்கள் அனைவரும் கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்ள வேண்டுமா ? அல்லது ஐரோபா/அமெரிக்காவிற்கு கூண்டோடு புலம் பெயர வேண்டுமா ? எதாவது நடைமுறைக்கு ஒத்த விசியமாக பேசலாமே ?

சம்பந்தப்பட்ட பாலஸ்தினியர்கள் மற்றும் இதர அரபிய நாடுகளுமே, இஸ்ரேல் என்ற நாட்டை ஏற்று கொண்டுவிட்டனர். பாலஸ்தீனிய நாட்டிற்கான எல்லைகளை வரைவு செய்வதில்தான் இன்னும் பிரச்சனை....

பெயரில்லா சொன்னது…

ஆக்கரமித்தவன் வெளிறே வேண்டியது நடைமுறை சாத்தியமா? அல்லது அதில் பங்கு போடவது நடைமுறை சாத்தியமா? பேரறிஞரே! அதியமான் பதில் உண்டா?

பாலஸ்தீனர்களின் பெரும்பான்மை ஆதரவோடு ஆட்சிக்கு வந்த ஹமாஸ் இஸ்ரேலை அங்கீகரிக்கவில்லை. எனவே தான் உலக தாதாக்கள் பலஸ்தீன அரசுக்கு பொருளாதார நெருக்கடியை உண்டாக்கினார்கள். அமெரிக்காவின் கைகூலிகள் இஸ்ரேலை அங்கீகரித்து விட்டால் எல்லையை தீர்மானித்து விட முடியுமா? பாலஸ்தீனர்கள் தீர்மானிக்க வேண்டும். சிற்றறிவுள்ள நான் கூறுவது பேரறிஞருக்கு புரியுதா? பதில் உண்டா அதியமான்!
நீதிமான்

பெயரில்லா சொன்னது…

The romans named what was called as judea and samaria (together called ISrael) into palestine. There are historic proof for that. Its not biblical myth.

So 3000 years back, like palestinian people now, the jewish people were rendered without a nation, and were living a life of refugees in their own home land.

And people like you now, were helping them to get a home land by eliminating palestinians and splitting what has become their home by chance of foreign invasion.

The tables have turned now, the victims have become the oppressors and the earstwhile oppressors and collaborators of oppressors have become victims and also suicide bombers.

வஜ்ரா சொன்னது…

//
நான் சீனாவில் இருக்கும் போது அவர்கள் தரப்பு வாதங்கள் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தன. கொஞ்சம் தூரத்துக்கு வந்த பிறகு ஒப்பீடு கிடைத்தது.
//


இஸ்ரேலிலேயே நிறைய இஸ்ரேல் எதிர் தரப்பு வாதங்கள் கிடைத்தன இன்றும் கிடைத்துக் கொண்டு தான் இருக்கிறது.


யெஹுதித் அஹரனோத் என்னும் ynetnews, ஜெரூசலம் போஸ்ட், என்று பல பத்திரிக்கைகள் இடது சாரிச் சிந்தனை கொண்டவையாக இருக்கின்றது.


எவ்வளவுக்கெவ்வளவு, ஆலன் டெர்ஷோவிட்ஸ், டேனியல் பைப்ஸ் எல்லாம் தெரியுமோ, அவ்வளவுக்கவ்வளவு எட்வர்ட் செட், நவோம் சாம்ஸ்கி போன்றவர்களையும் இங்கே அறிவுஜீவிகளுக்குத் தெரியும்.


அமேரிக்காவில் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் கூட கிடைக்காத இஸ்ரேல் எதிர்ப்புப் பிரச்சாரம் இஸ்ரேலில் உள்ள சிறு நகரங்களில் கூட கிடத்துவிடும்.


சீனாவுக்கும் இஸ்ரேலுக்கு நிறைய வேறுபாடு உள்ளது. அதற்கு உங்கள் இந்த வாக்குமுலமே சாட்சியாக நான் ஏற்கிறேன்.

முரளிகண்ணன் சொன்னது…

யூதர்களுக்கான நாட்டை ஏன் அமெரிக்காவிலோ அல்லது மற்ற உபயோகப்படுத்தப்படாத நிலப்பரப்பு உள்ள ஏனைய நாடுகளிலோ அமைத்திருக்க கூடாது?

பெயரில்லா சொன்னது…

முரளி! எந்த ஒரு நாடும் தனது நாட்டின் ஒரு சிறு அங்குலம் அளவுக்கு பிரிந்து போவதை அனுமதிக்க மாட்டார்கள். ஏன் அவர்கள் கொடுப்பதில்லை? இவர்கள் கொடுப்பதில்லை என்கிற வாதமும் இடிப்படையிலே தவறானது. ஆனால் இஸ்ரேலின் கொடுமைகளுக்கு பக்கபலமாக உள்ள அமெரிக்க என்ற அயோக்கியனிடம், "நீ உனது நாட்டின் ஒரு சிறு பகுதியை யூதனுக்காக தனிநாடு உருவாக இடம் கொடுப்பாயா? என்று கேட்டாலும் "இல்லை" என்ற பதில் தாமதமில்லாமல் வரும்
நீதிமான்

பெயரில்லா சொன்னது…

Have you ever condemned chinese occupation of Tibet ?

I know the reason why you did not do it.

Mainly because, tibetans don't blow themselves up in Tianenmen square or in public transport systems inside china or India.

It simply does not bother you. Any occupation has to be condemned. And there can be no justification for violence.

Terrorist related violence that we see in Israel or State sponsored violence that we see in China.

பெயரில்லா சொன்னது…

//
"நீ உனது நாட்டின் ஒரு சிறு பகுதியை யூதனுக்காக தனிநாடு உருவாக இடம் கொடுப்பாயா? என்று கேட்டாலும் "இல்லை" என்ற பதில் தாமதமில்லாமல் வரும்
நீதிமான்
//

இதே திருப்பி இஸ்ரேலியர்கள் உனக்கு கேட்கலாம்.


ஏன் பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேலில் பங்கு கொடுக்கவேண்டும், அவர்களுக்காகப் போராடும் அரபு நாடுகளில் ஏதாவது ஒரு பகுதியை பாலஸ்தீன் அரபுகளுக்குக் கொடுக்கவேண்டியது தானே என்று.


அப்போதும், தாமதமில்லாமல் "இல்லை" என்ற பதில் தான் வரும். புரியுதா ?

வஜ்ரா சொன்னது…

மா. சி,


The kingdom என்ற ஆங்கிலப்படத்தை கட்டாயம் பாருங்கள். மத்திய கிழக்கில் இருக்கும் பிரச்சனைகள் கொஞ்சம் புரியும். எல்லாத்துக்கும் பொத்தம் பொதுவாக இஸ்ரேல் பக்கம் கை காட்டாமல் உண்மையை உணருவீர்கள் என்று நம்புகிறேன்.

பெயரில்லா சொன்னது…

கவரிமான்! என்ன விவாதிக்கிறோம் என்பது புரியாமலே, எல்லோரும் எழுதுறாங்களே அதனாலே நாமும் எழுதுவோம் என்று எழுதக் கூடாது.

இஸ்ரேல் என்பது ஆங்கிலேயர்களின் ஆசீர்வாதத்தோடும், அயோக்கியன் அமெரிக்காவின் பக்கபலத்தோடும் பலஸ்தீனர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட நிலப்பரப்பு. பலஸ்தீனர்களுக்கு என தனி நிலப்பரப்பு இருக்கும் போது பிறரிடம் போய் எனக்கென்று தனிநாடு உருவாக ஒரு துண்டு நிலம் தாருங்கள் என்று ஏன் கேட்க வேண்டும்? அப்படி கேட்டாலும் கொடுக்க ஒருத்தனும் வரமாட்டான். அது அரபுகளதனாலும் சரி, அமெரிக்காவானாலும் சரி, சீனாவானாலும் சரி. புரியுதா?

ஆமா! அதியமான் என்ற பேரறிஞரை இந்த பக்கமே காணோமே! அதற்காக தான் கவரிமான் வந்துள்ளதோ? அடுத்து மாயமான் வந்தாலும் வரலாம்.
காத்திருப்போம்

நீதிமான்.

பெயரில்லா சொன்னது…

//
பலஸ்தீனர்களுக்கு என தனி நிலப்பரப்பு இருக்கும் போது பிறரிடம் போய் எனக்கென்று தனிநாடு உருவாக ஒரு துண்டு நிலம் தாருங்கள் என்று ஏன் கேட்க வேண்டும்?
//

பாலஸ்தீனர்கள் என்று சொல்லப்பட்டவர்களில் யூதர்களும் அடக்கம். (பார்க்க) ஹெரொடோடஸ் என்னும் யவன வரலாற்றறிஞர் கூறியது.

யூதர்கள் தனி நாட்டுக்காக பணத்தைத் திரட்டி நிலப்பரப்பை காசு கொடுத்து வாங்கினார்கள். யூதரல்லாத பாலஸ்தீனர்களுக்கும் தனி நாடும் கிடைத்தது (British mandate on palestine). அதை எடுத்துக் கொள்ளாமல் ஏணைய அரபு தேசங்கள் பேச்சைக் கேட்டு கிடைத்ததையும் இழந்து அனாதையாக நிற்கிறார்கள். அவர்களுக்காகப் பரிதாபப்படலாம்.

அவர்கள் பிரச்சனையின் தீர்வை இஸ்ரேலர்களும் பாலஸ்தீனர்களுமே காண வேண்டும். "நீதிமான்"களான அமேரிக்காவோ, அரபு தேசங்களோ அல்ல. ஏனென்றால் மற்ற நாடுகள் அவர்கள் நலனையே முதலில் பார்ப்பார்கள்.

பெயரில்லா சொன்னது…

//பாலஸ்தீனர்கள் என்று சொல்லப்பட்டவர்களில் யூதர்களும் அடக்கம்.//
பாலஸ்தீனத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும், கிருஸ்தவர்கள் மற்றும் யூதர்களும் சிறுபான்மையினர்களாகவும் இருந்தார்கள் என்பதில் ஐயமில்லை. முஸ்லிம்களும் பாலஸ்தீனத்தில் அடக்கம் என்பதற்காக ஒரு பாக்கிஸ்தான் முஸ்லிம் பாலஸ்தீனத்தில் தனது நாடாக குடியேற முடியுமா? கிருஸ்துவர்களும் அடக்கம் என்பதற்காக பிலிப்பின் நாட்டு கிருஸ்தவன் பாலஸ்தீனத்தில் உரிமை கொண்டாட முடியுமா? முடியாது அல்லவா? அது போல தான் ஐரோப்பாவில் சிதறி கிடந்த யூதன்களும் பாலஸ்தீனத்தை தங்கள் நாடாக உரிமை கொண்டாட முடியாது.

//யூதர்கள் தனி நாட்டுக்காக பணத்தைத் திரட்டி நிலப்பரப்பை காசு கொடுத்து வாங்கினார்கள்//
காசு கொடுத்து நிலம் வாங்கிவிட்டால் அதை ஒரு நாடாக பிரகடனபடுத்த முடியும் என்று சொல்வது சஙபரிவார சாக்கடைகளின் அறிவுக்கு மட்டுமே சாத்தியம். இதில் தேசபக்தியை பற்றி வேறு பேச வருவானுங்க வெட்கம் கெட்டவனுங்க.
//யூதரல்லாத பாலஸ்தீனர்களுக்கும் தனி நாடும் கிடைத்தது//
பாலஸ்தீனர்களின் மண்ணை ஐரோப்ப வந்தேறி யூதனுக்கு வாரி வழங்கிவிட்டு, மீதி உன்னோட தனிநாடு என்றால் சுயமரியாதை உள்ளவன் சந்தோசமாக வாங்கி கொள்வானா? அது எல்லாம் சங்பரிவார சாக்கடைகளுக்கு எங்கே புரியும்? அடுத்தவன் இடத்தை அபகரிப்பவர்களுக்கு இழந்து நிறபவனின் வேதனை புரியாது. அவனது போராட்டம் தீவிரவாதமாக தான் தெரியும். சுயமரியாதைகாரனுக்கு அவன் விடுதலை வீரானாக தெரிவான்.

மானமிழந்த வேறு மான்கள் ஏதேனும் இன்னும் வருகிறதா? காத்திருக்கிறேன்.
நீதிமான்

மா சிவகுமார் சொன்னது…

நீதிமான், தொண்டைமான், துவரிமான், கவரிமான்,

உங்கள் கருத்துக்களை தொடர்ந்து எழுதுவதற்கு நன்றி.

அதியமான்,

//சம்பந்தப்பட்ட பாலஸ்தினியர்கள் மற்றும் இதர அரபிய நாடுகளுமே, இஸ்ரேல் என்ற நாட்டை ஏற்று கொண்டுவிட்டனர். பாலஸ்தீனிய நாட்டிற்கான எல்லைகளை வரைவு செய்வதில்தான் இன்னும் பிரச்சனை....//

உண்மைதான், அதற்குத்தான் இசுரேலியர்கள் தாம், பிறர் நிலத்தை ஆக்கிரமித்து நாட்டை உருவாக்கியிருப்பதை உணர்ந்து அடக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது என் கருத்து.

வஜ்ரா,

இசுரேல் பற்றி எல்லோருக்கும் புரியும்படி, நிறைய எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

நீங்கள் சொன்ன திரைப்படத்தையும் வாய்ப்பு கிடைத்தால் பார்க்க முயற்சிக்கிறேன்.

//Have you ever condemned chinese occupation of Tibet ?I know the reason why you did not do it.//

நீங்கள் சொல்வது போல திபெத்தியர்கள் தமது போராட்டத்தை அமைதியாக நடத்துவதுதான் உலகத்தின் பார்வையை ஈர்க்காமல் இருக்கிறது. பாலஸ்தீனத்துப் பிரச்சனையைப் போன்றது இல்லையென்றாலும், திபெத் சீனாவின் மனிதாபிமானமற்ற அரசியலின் அவல உதாரணமாக விளங்குகிறது என்பதில் சந்தேகமில்லைதான்.

அன்புடன்,
மா சிவகுமார்

அழகப்பன் சொன்னது…

அன்பின் மா.சி.

இப்பதிவின் பின்னூட்டங்களுக்கான மறுமொழி நீண்டு விட்டதால் தனிப்பதிவாக இட்டுள்ளேன்.

http://etheytho.blogspot.com/2008/01/2.html

மா சிவகுமார் சொன்னது…

அழகப்பன்,

சாதி ரீதியாக எல்லாவற்றையும் பொருத்திப் பார்க்க முயல்வது (சில நேரங்களில் பொருத்தமாக இருந்தாலும்) தற்காலத்துக்கோ எதிர்காலத்துக்கோ நல்ல பலன்களைத் தராது என்று நினைக்கிறேன்.

சாதிப் பிரிவினைகளால் நடந்த கொடுமைகளுக்கு அநியாயங்களுக்கு விடிவு கண்டு அமைப்புகளை இடித்துக் கொண்டிருக்கிறோம். வீணான கசப்புணர்வையும் வெறுப்பையும் வளர்க்காமல் அதைச் செய்தால் எல்லோருக்கும் பலனளிக்கும்.

'இனிய உளவாக...'

அன்புடன்,
மா சிவகுமார்

வஜ்ரா சொன்னது…

//
உண்மைதான், அதற்குத்தான் இசுரேலியர்கள் தாம், பிறர் நிலத்தை ஆக்கிரமித்து நாட்டை உருவாக்கியிருப்பதை உணர்ந்து அடக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது என் கருத்து.
//

அவர்கள் என்னேரமும் பேச்சுவார்த்தைக்குத் தயார் நிலையில் தான் இருக்கிறார்கள் என்பது தவிற வேறு அடக்கத்தின் உதாரணம் வேண்டுமா ?


பேசுவதற்கு பாலஸ்தீன அடிப்படைவாத இஸுலாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பதும், அத்தகய அடிப்படைவாதிகள் மக்களின் செல்வாக்கைப் பெற்றுவருவதும் பெறுகிவருகிறது. இது தான் கவலைக்குறிய, மற்றும் தீர்வுக்க்த் தடையான பெரும் பிரச்சனை. வீட்டிற்குள் கரையான் புற்று போல...உள்ளிருந்து பாலஸ்தீனர்களை அழித்து வருகிறது.


தீவிரவாதிகள் ஒவ்வொறு முறையும் இஸ்ரேலில் உள்ள பொது மக்களைத் தாக்கும் போதும், இஸ்ரேல் திருப்பித் தாக்கும். அந்தத் தாக்குதல் பல மடங்கு பலம் வாய்ந்ததாகவும் இருக்கும் பட்சத்தில் உயிர்ப்பலி அதிகம், பாலஸ்தீனர்களுக்குத்தான். மேலும், பாலஸ்தீனத்தைத் தாக்க perfect excuse இஸ்ரேலியர்களுக்குக் கொடுப்பவர்கள் இந்தத் தீவிரவாதிகள்.

பெயரில்லா சொன்னது…

http://www.youtube.com/watch?v=gMLJJEDDDGc

கொஞ்ச நேரம் காந்தித்தொப்பி, பச்சைக்கண்ணாடி, காவி கண்ணாடி எல்லாத்தையும் எல்லாரும் கழட்டிவச்சுட்டு இதுல ஆரமிச்சு முழுசா பத்து வீடியோவையும் பார்க்கலாமே!

வஜ்ரா சொன்னது…

நன்றி திரு. எ.பா.யோ.வ,

Obsession: Radical Islam's war against the West என்கிற டாக்குமெண்டரி எல்லோரும் பார்க்கவேண்டியது.


துரதிர்ஷ்ட வசமாக இவர்கள் பார்வை, சங் பரிவார் பார்வையை ஒத்திருப்பதால் நம்ம உள்ளூர் அறிவாளிகள் இதை எதிர்ப்பார்கள். இந்த எதிர்ப்பிற்கு அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகள் தோள் கொடுக்கும் "தோழர்களாக" இருப்பார்கள்.

மா சிவகுமார் சொன்னது…

வஜ்ரா,
//அவர்கள் என்னேரமும் பேச்சுவார்த்தைக்குத் தயார் நிலையில் தான் இருக்கிறார்கள் என்பது தவிற வேறு அடக்கத்தின் உதாரணம் வேண்டுமா ?//
ஒரு முறை இதை மறுபரீசிலனை செய்து பாருங்கள் வஜ்ரா. இசுரேலின் அடாவடி நடத்தை அவர்களின் ஆதரவாளர்கள் கூட ஏற்றுக் கொள்ளக் கூடியது என்றுதான் படுகிறது.

//துரதிர்ஷ்ட வசமாக இவர்கள் பார்வை, சங் பரிவார் பார்வையை ஒத்திருப்பதால் நம்ம உள்ளூர் அறிவாளிகள் இதை எதிர்ப்பார்கள். இந்த எதிர்ப்பிற்கு அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகள் தோள் கொடுக்கும் "தோழர்களாக" இருப்பார்கள்.//

கண்ணாடிகளைக் கழற்றி வைத்துக் கொண்டு உங்கள் கருத்துக்களைச் சொல்ல முயலுங்களேன். ஏன் அடுத்தவர்களை இவ்வளவு மலிவாக எடை போடுகிறீர்கள்?

அன்புடன்,
மா சிவகுமார்

K.R.அதியமான் சொன்னது…

Neethiman,

Just got back today and saw all the comments only now. I never use any annony or other option names for my comments. i think all these maans in other options are the work of the old pervert polli dondu or his allakkai. i use my IP no too within brackets to make sure that my name is not misused.
i think you are new to this. hence this confusion.

and reg Israeli aggression : i am not justifying or blindly supporting all actions of Israel. but it is a dirty war and both sides are equally guilty of murdering innocents. Only Israelis don't delibrately target innocent Palestinian civilians. they are killed in crossfire or in more cynical terms ' collateral damage; ; but Hamas and others delibratrely massacre Isralei civilians for the past 60 years or so. They massacared the Isreali Olyimpic team in Munich in 1972.
Every action begets a reactions and it never ends.

Israel simply does not trust the Palestianians or Arabs or almost most others. They have had bitter experience in the past. (i am not saying this is the correct attitude, but this is the reality). their claasification of non-Jewish people is :
1.enemies
2.neutrals
(no real or long term friends)

If Israel pulls back to pre-1967 positions and if the new settlements in W.Bank are dismanteled and a Palestine state is recognised and stabilised, then the narrowest point in Israel will be just 9 miles (and very near its most densely populated areas).
and the W.BAnk heights which now act as natural buffer will be with Arabs.

We must read thru what Israel faced in '67 and '73 wars when the mightly Egyptian army AND Syrian and Jordanian and other armies attcked Israel. It was a magninificent and cruel war for survial. Israel has to loose only once, observed its PM Golda Meir, whereas the Arabs have the luxury of loosing as many times. only the crippling defeat of Egypt made them sue for peace and thereafter signed the camp David agreements with Israel. Now Egypt is no longer in the picture. So different from the scene of 70s.

For all the wrongs and misdeeds that Israel is accused of now, i still draw inspiration from its saga of courage and determination agaianst all odds. A tiny nation with no natural resoruces, attacked on all sides by a much , much larger and sophisticated army with latest Soviet supplied weapons ; out-numbered and out-gunned on all fronts ; but their determination, courage and endurance proved the old dictim that it is the man behind the machine (or aereplane) that matters than the tools of war.

Whenever i feel depressed or defeated, i draw inspiration and motivation from the magnificant saga of Israeli endurance and courage against adversity and their 'never-say-die' spirit. (pls see O Jerusalem, Arab-Israeli Wars, etc)..

This inherent fear of future massed invasion by hostile Arab armies is still deep in Israeli psyche. it is practically impossible for them to overcome it.
hence their obstinate refusal to budge from W.Bank. Only future may see some real improvement and change for good.

Still the overall picture is vague and incomplete for us viewing from outside. Lot more exposure and study of the past is needed.

I guess, in another 100 years or so, when oil runs out in middle east, they will loose their strategic importance and financial clout. and with that Palestinian problem will get settled along with all forms of 'Islamic jihadi terrorism' ; 100 year back in 1910s, the same middle east was a impoverished and weak cluster of kingdoms and countries, with no significance in the rest of the world. the same condition may retrun in another 100 years....

பெயரில்லா சொன்னது…

//பழைய கதையையே பேசினால் எப்படி? பாலஸ்தீனம் என்ற நாடும் தனியாக இருந்ததேல்லை. ஒட்டோமான் துருக்கியின் ஒரு சிறு பிராந்தியம் அது. அதை பிரிட்டன் முறைப்படி ஐ.நா. தீர்மானத்தின்படி இரண்டு பகுதிகளாக்கியது.//

// . நமக்கும் பாகிஸ்தானுக்கும் பிரச்சினை என்றால் அவர்கள் பாகிஸ்தானத்தைத்தான் ஆதரிப்பார்கள்.
//

dondu wrote both.
If you apply dondu's logic to india /pakistan...

Britain muraippadi dhaane pakistan pirithadhu. Does Dondu accept giving up land for pakistan? why pakistan should be enemy? பழைய கதையையே பேசினால் எப்படி? India என்ற நாடும் தனியாக இருந்ததேல்லை. அதை பிரிட்டன் முறைப்படி ஐ.நா. தீர்மானத்தின்படி இரண்டு பகுதிகளாக்கியது. (Both partitions were done in the same year 1947 ). Forget aganda bhaaradham.

வஜ்ரா சொன்னது…

//
கண்ணாடிகளைக் கழற்றி வைத்துக் கொண்டு உங்கள் கருத்துக்களைச் சொல்ல முயலுங்களேன். ஏன் அடுத்தவர்களை இவ்வளவு மலிவாக எடை போடுகிறீர்கள்?

//

மா. சி,



நம்ம உள்ளூர் இடது சாரிகள் என்ன சொல்கிறார்கள் என்று நீங்களே பாருங்கள்.


இஸ்ரேல் உடனான உறவுகளை முற்றிலும் துண்டிக்கவேண்டும் என்றெல்லாம் உளரிக் கொட்டிக் கொண்டிருந்தார்கள்.


சில மாதங்களுக்கு முன் சீதாரா யெச்சூரி இஸ்ரேல் வந்தார், உளரல்களின் தீவிரம் தற்போது குறைந்துள்ளது.


பொதுவாகவே இடது சாரிக்கள் சங் பரிவாரங்கள் எடுக்கும் முடிவுகள் (குறிப்பாக இஸ்லாமியர்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில்) diametrically opposing கருத்தைத் தான் சரி என்று ஒப்புக் கொள்வார்கள். இது இடது சாரிக்கட்சியில் எழுதப்படாத நியதி.


அது இஸ்லாமிய அடிப்படைவாதம் ஆக இருக்கட்டும், பொதுச் சிவில் சட்டமாக இருக்கட்டும், இல்லை, மதச்சார்பற்ற நாட்டில் மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு ஆகட்டும். எதிலுமே, சங் பரிவாரங்கள் சொல்வது சரியானது என்று தெரிந்தும், அதை எதிர்க்கவே காரணங்கள் கண்டுபிடித்து எதிர்த்துவந்துள்ளனர்.


வோட்டு சேகரிக்க மலிவான உக்திகளைப் பயன் படுத்துபவர்களை மலிவாக எண்ணாமல் வேறு எப்படி எண்ணுவது ?

வஜ்ரா சொன்னது…

இஸ்ரேலியர்களுக்கும் அரபுகளுக்கும் நடக்கும் போர் பற்றி ஒரே ஒரு கருத்தை முன்வைத்துக் கொள்கிறேன்.


அரபுகள் இந்தப் போரில் வெற்றி பெற்றாலும், தோற்றாலும் அவர்கள் வாழத்தான் போகிறார்கள். மத்திய கிழக்கில் உள்ள பல்வேறு அரபு தேசங்களில் அவர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.


இஸ்ரேலியர்களைப் பொருத்தவரை இந்தப் போரில் வெற்றி பெற்றால் வாழலாம், தோற்றால் அத்துடன் முடிந்தது. ஆகவே இந்தப் போரில் வெற்றி என்பது இஸ்ரேலியர்களுக்கு வாழ்வாதாரப் பிரச்சனை. ஆகவே அவர்கள் எத்தகய அடாவடித்தனமும் செய்யத் தயங்க மாட்டார்கள். சும்மா, 2 போர் வீரர்களைக் கடத்தியதற்கே, ஒரு சர்வதேச விமான நிலையத்தை எப்படித் தரைமட்டமாக்கினார்கள், லெபனான் ஊர்களில் குண்டு மழை பொழியச் செய்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். இதே போல் தான் பாலஸ்தீன் உடனும் செய்கிறார்கள்.


இதில் ஞாயம் கற்பிக்கா நான் வரவில்லை.

dondu(#11168674346665545885) சொன்னது…

//Britain muraippadi dhaane pakistan pirithadhu. Does Dondu accept giving up land for pakistan?//
இந்தியாவும் பாகிஸ்தானும் இரு தனி நாடுகள். அண்டை நாடுகள். அவற்றுக்குள் முதலிலிருந்தே பிரச்சினை. அவ்வாறு வரும்போது இசுலாமிய அரபுகள் அவர்கள் சக இசுலாமியரான பாகிஸ்தானத்தைத்தான் ஆதரிப்பார்கள். ஆகவே அரபுகளை ஆதரிப்பதால் நமக்கு என்ன பலன் என்றுதான் கேட்டேன். வெளி உறவு விஷயங்களில் நாட்டின் சொந்த நலன் மிக முக்கியம். நம்ம மாசிவக்குமார் சார் சொல்வது போல பகைவனுக்கெல்லாம் அருள்வாய் என்று இருக்க முடியாது. தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள்.

அதுவே இஸ்ரேலை ஆதரிப்பதால் நமக்கு பல பொருளாதார நலன்கள் கிட்டும்.

சும்மா நம்மூர் இசுலாமியரின் ஓட்டுகளுக்காக பம்மாத்து செய்கிறது காங்கிரஸ் அரசு. நேரு ஆரம்பித்து வைத்தது. நடுவில் வாஜ்பேயி வந்தாரோ ஏதோ பிழைத்தோமோ.

அனானி நான் சொன்ன வாதத்தைத்தான் தன்னையறியாமல் நிரூபித்து உள்ளார்.

மேலும் வஜ்ரா சொல்வது போல இஸ்ரேலுக்கு இது வாழ்வா சாவா பிரச்சினை. மற்றவர்களுக்கு என்ன, புத்தர் மாதிரி உபதேசம் செய்வார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பெயரில்லா சொன்னது…

//அதுவே இஸ்ரேலை ஆதரிப்பதால் நமக்கு பல பொருளாதார நலன்கள் கிட்டும்//
பாப்பனுடைய புத்தியை படம் பிடித்து காட்டும் டோண்டு. ஒருவரை ஆதரிப்பதும் எதிர்ப்பதும், அவரிடத்தில் நீதி இருக்கிறதா? அல்லது அநீதி இருக்கிறதா? என்பதை வைத்து அமைய வேண்டுமே தவிர, இவனை ஆதரித்தால் நமக்கு என்ன பலன்? இவனை எதிர்த்தால் நமக்கு என்ன பலன் என்ற அடிப்படையில் இருக்க முடியாது. வாய்மையுடையவர்களும், நீததத்தை விரும்புகிறவர்களும் இதனை ஒரு போதும் ஏற்று கொள்ள மாட்டார்கள்.

//இஸ்ரேலுக்கு இது வாழ்வா சாவா பிரச்சினை. மற்றவர்களுக்கு என்ன, புத்தர் மாதிரி உபதேசம் செய்வார்கள்//
இல்லாதவனுக்கு, அபகரித்த அயோக்கியனுக்கு என்ன வாழ்வா சாவா பிரச்சனை? இழந்து நிற்கிறவனுக்கு தான் அவனுடைய போராட்டம் வாழ்வா சாவா பிரச்சனையாகும். புத்தனை போல் உபதேசித்தால் சமுதாயத்திற்கு நிச்சயம் நன்மை உண்டு. ஆனால் இஸ்லாத்தின் மீது வெறி கொண்ட பித்தனாக டோண்டுவை போல பிதற்றுகிறார்களே அவர்களால் சமுதாயத்திற்கு நஷ்டம் தான்.

நீதிமான்

மா சிவகுமார் சொன்னது…

வஜ்ரா,

//பொதுவாகவே இடது சாரிக்கள் சங் பரிவாரங்கள் எடுக்கும் முடிவுகள் (குறிப்பாக இஸ்லாமியர்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில்) diametrically opposing கருத்தைத் தான் சரி என்று ஒப்புக் கொள்வார்கள். இது இடது சாரிக்கட்சியில் எழுதப்படாத நியதி.//

இடதுசாரிகளை பல வகைகளில் குறை சொல்லலாம் என்றாலும் சந்தர்ப்பவாதம், கொள்கை ஆதாரம் இல்லாமல் முடிவு எடுப்பவர்கள் என்று சொல்ல முடியாது. சங் பரிவாரங்கள் ஒன்றை சொல்வதாலேயே அதை எதிர்ப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. இந்திய அமெரிக்க அணு சக்தி குறித்த உடன்பாட்டில் இரண்டு குழுவினரும் ஒரே மாதிரியான நிலைப்பாட்டை எடுக்கத்தானே செய்தார்கள் (வெவ்வேறு காரணங்களுக்காக இருந்தாலும்)

//இஸ்ரேலியர்களைப் பொருத்தவரை இந்தப் போரில் வெற்றி பெற்றால் வாழலாம், தோற்றால் அத்துடன் முடிந்தது. ஆகவே இந்தப் போரில் வெற்றி என்பது இஸ்ரேலியர்களுக்கு வாழ்வாதாரப் பிரச்சனை.//

உண்மைதான். ஆனால் அப்படி தன் வாழ்வுக்காகப் போராடுபவர்களுக்கும் தார்மீக பலம் இல்லை என்றால் என்றும் வெற்றி கிடைக்காது. இசுரேலின் நிலைக்கு ஆதாரம் இல்லாததால்தான் அவர்கள் இவ்வளவு பாதுகாப்பில்லாமல் உணர்ந்து அடாவடிகளைச் செய்கிறார்கள்.

பொதுவாக அதிகமாக சவுண்ட் விடும் பார்ட்டிகள் மனதளவில் நடுக்கம் கொண்டிருப்பார்கள் என்பது நான் பார்த்தது.

டோண்டு சார்,

//வெளி உறவு விஷயங்களில் நாட்டின் சொந்த நலன் மிக முக்கியம்.//

எந்த விஷயத்திலும் நமது ஆதாயம் மட்டும் பார்த்து செயல்பட முடியாது. சில நேரங்களில் நமது அரசு செய்யும் தவறுகளைக் கூடத் தட்டிக் கேட்க வேண்டியிருக்கும்.

தமது ஆதாயத்தை மட்டும் பார்த்து தமது அணுகுமுறைகளை வகுத்துக் கொள்வது சீன பாரம்பரியம்.

நீதியின் பக்கம் நிற்பது நமது வழக்கமாக இருக்க வேண்டும். அதனால் உடனடியாக சில பாதகங்கள் இருந்தாலும் நீண்ட கால நோக்கில் சமூகம் நிச்சயமாக வளம் பெறும்.

நீதிமான்,

சரியான கருத்துக்களைச் சொல்கிறீர்கள் (எனக்குச் சரி எனப்படுபவை). யாரையும் தனித்தாக்குதல் செய்யாமல் சொன்னால் நன்றாக இருக்கும்.

அன்புடன்,
சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

//யாரையும் தனித்தாக்குதல் செய்யாமல் சொன்னால் நன்றாக இருக்கும்.//

மாசி தங்களது அறிவுறுத்தல் எனக்கு நன்மையை தரும். நன்றி
நீதிமான்.

வஜ்ரா சொன்னது…

//
எந்த விஷயத்திலும் நமது ஆதாயம் மட்டும் பார்த்து செயல்பட முடியாது. சில நேரங்களில் நமது அரசு செய்யும் தவறுகளைக் கூடத் தட்டிக் கேட்க வேண்டியிருக்கும்.

தமது ஆதாயத்தை மட்டும் பார்த்து தமது அணுகுமுறைகளை வகுத்துக் கொள்வது சீன பாரம்பரியம்.

நீதியின் பக்கம் நிற்பது நமது வழக்கமாக இருக்க வேண்டும். அதனால் உடனடியாக சில பாதகங்கள் இருந்தாலும் நீண்ட கால நோக்கில் சமூகம் நிச்சயமாக வளம் பெறும்.
//

நல்லவேளையாக உங்களைப் போல் நல்லுள்ளம் படைத்தவர்கள் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிக்கும் இடத்தில் இல்லை. இந்தியா தப்பித்தது.

சீனப் பாரம்பரியம் எல்லாம் ஒரு மண்ணும் இல்லை. எந்த நாடும் தன் நலனில் அக்கரை இல்லாமல் பொது நலனுக்காக பாடுபட்டால் அந்த நாடு உருபடாமல் தான் போகும்.


எல்லா விஷயத்திலும் தன் நலனையே முதன்மையாகப் பார்க்கவேண்டியது ஒவ்வொரு நாட்டின் கட்டாயம்.

நீதி என்பதெல்லாம் கலத்திற்கேற்ப மாறுபடும். என்றுமே ஒரே நீதி எல்லாம் இருந்ததில்லை.



அமேரிக்கா இன்று இஸ்ரேலை ஆதரிக்கும், நாளை பாலஸ்தீனைக்கூட ஆதரிக்கும். அதன் நலன் தான் அதுக்கு முக்கியம். அதே போல் சீனா, தன் நலனைக் கருத்தில் கொண்டு பாகிஸ்தானை ஆதரிக்கும், போர் விமானங்கள் வழங்கும். இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்தும்.


நாம் மட்டும் மங்குனி போல் பாலஸ்தீனர்களை இஸ்ரேல் கொடுமை படுத்துகிறது, இனி இஸ்ரேல் ஆயுதங்கள் வேண்டாம் என்று சொல்ல முடியுமா ?


//
இந்திய அமெரிக்க அணு சக்தி குறித்த உடன்பாட்டில் இரண்டு குழுவினரும் ஒரே மாதிரியான நிலைப்பாட்டை எடுக்கத்தானே செய்தார்கள் (வெவ்வேறு காரணங்களுக்காக இருந்தாலும்)
//


நான் எழுதியதைக் கவனமாகப் பார்க்கவும்.


இஸ்லாமியர்கள் என்ற entity வந்துவிட்டால் இடது சாரிகள் எடுக்கும் முடிவு சங் பரிவாரங்கள் எடுக்கும் முடிவுக்கு நேர் எதிர் முடிவாகவே இருக்கும்.

dondu(#11168674346665545885) சொன்னது…

//நல்லவேளையாக உங்களைப் போல் நல்லுள்ளம் படைத்தவர்கள் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிக்கும் இடத்தில் இல்லை. இந்தியா தப்பித்தது.//
ஆமென்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பெயரில்லா சொன்னது…

The road to hell is paved with good intentions

பெயரில்லா சொன்னது…

உள்நாட்டுலையே பல பிரச்சனைகள் இருக்க, அதை விட்டுபுட்டு இஸ்ரேலுக்கு போயிட்டிங்க.

மேலும் இது நம் நாட்டுக்கு சம்பந்தம் இல்லாத பிரச்சனை. பாலஸ்தீன்காரன் வந்து எங்கள காப்பாத்துனு கேட்டானா? அப்படி இருந்தும் இவ்வளோ வாதாம் தேவையா.

1.//சில நேரங்களில் நமது அரசு செய்யும் தவறுகளைக் கூடத் தட்டிக் கேட்க வேண்டியிருக்கும்.//

மற்ற நேரங்களில் அரசு செய்யும் தவறுகளைக கேக்காமல் விடுவீர்களோ! அதே அணுகுமுறை இஸ்ரேலுக்கு கிடையாதா?

2.//நீதியின் பக்கம் நிற்பது நமது வழக்கமாக இருக்க வேண்டும். அதனால் உடனடியாக சில பாதகங்கள் இருந்தாலும் நீண்ட கால நோக்கில் சமூகம் நிச்சயமாக வளம் பெறும்.//

நீதிபக்கம் நின்றால் போதாது, யார் நீதியை வழங்குவது?
அமெரிக்கவை போல நீதி வழங்கறேன், ஜனநாயகம் பரப்பறேன் என்றால் ஓட்டாண்டி ஆக வேண்டியதுதான். ஏழை இந்தியாவுக்கு இது அவசியமற்ற வேலை.

மா சிவகுமார் சொன்னது…

//நல்லவேளையாக உங்களைப் போல் நல்லுள்ளம் படைத்தவர்கள் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிக்கும் இடத்தில் இல்லை. இந்தியா தப்பித்தது.//
//ஆமென்.//
:-)

//உள்நாட்டுலையே பல பிரச்சனைகள் இருக்க, அதை விட்டுபுட்டு இஸ்ரேலுக்கு போயிட்டிங்க.//
புரிந்ததை பகிர்ந்து கொள்வதுதானே. எல்லாமே மனிதப் பிரச்சனைகள்தான். பிற சமூகங்களின் வரலாற்றைத் தெரிந்து கொள்வது நம்மை நாமே இன்னும் சிறப்பாக புரிந்து கொள்ளவும் உதவும்.

அன்புடன்,
மா சிவகுமார்

பெயரில்லா சொன்னது…

dondu mama actual kelviyai - wide - il vittuvittar.