கடைசியில் பெரும்பரிசாக தொடர் முடிந்ததும் சாமுவேல்சனின் எகனாமிக்ஸ் என்ற புத்தகத்தை மொத்தத்தில் சிறந்த பின்னூட்டம் இட்டவர்களுக்குக் கொடுக்கலாம்.
புத்தகங்களின் பெயர்கள்
- ஆர் கே நாராயணனின் Waiting for Mahatma (novel)
- லூயி ஃபிஷரின் Mahatma Gandhi (Biography)
- காந்தியின் Society, social service and reforms 1 (collection of writings)
- காந்தியின் Society, social service and reformts 2 (collection of writings)
- ஷெர்லக் ஹோம்ஸ் கதைகள் (detective stories)
- அண்ணாவின் சொற்பொழிவுகள்
- ஆதம் ஸ்மித்தின் The Wealth of Nations (One of the greatest Books)
துளசி அக்கா சொன்னது:
"சிவஞானம்ஜி பெரியவர். பேராசிரியர், அதுவும் பொருளாதாரத்துலே. அவர் மார்க் போட்டா
சரியா இருக்கும், இருக்கணும்.
பொதுமக்கள் சார்பா நானும் மார்க் போடலாம்தான்."
- ஒவ்வொரு பின்னூட்டத்துக்கு நூற்றுக்கு இத்தனை என்று மதிப்பெண் இருவரும் தனித்தனியே கொடுத்து கடைசியில் எதற்கு கூட்டுத் தொகை மிக அதிகமோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். (ஒரு வாரத்துக்கும் சேர்த்து).
- எந்தப் பின்னூட்டமும் தேர்வு பெறவில்லை அல்லது பின்னூட்டமே இல்லாமல் இருந்தால் புத்தகங்களை துளசி அக்கா இந்தியா வரும்போது வரும் போது எடுத்துக் கொள்வதற்காக வைத்துக் கொள்கிறேன் :-)
- ஒவ்வொரு வாரமும் புதன், வியாழன், வெள்ளி, சனி என்று நான்கு நாட்கள் பதித்து விட்டு, ஞாயிறு, திங்கள், செவ்வாய் இடைவெளி. செவ்வாய் கிழமை முடிவு அறிவிக்கப்பட்டு, புதன் கிழமை அடுத்த வாரம் ஆரம்பித்து விடும்.
- சென்னை அல்லது தமிழ் நாட்டில் இருப்பவர்களுக்குத்தான் அனுப்ப முடியும். மற்றவர்கள் ஊர் வரும்போது பெற்றுக் கொள்ளலாம் :-)
- "அருமையான பதிவு" போன்ற ஒருவரி பின்னூட்டம் பரிசுக்கு உரியதல்ல :-)
- http://masivakumar.blogspot.com/2006/08/economics-1.html
- http://masivakumar.blogspot.com/2006/08/economics-2.html
- http://masivakumar.blogspot.com/2006/08/economics-3.html
- http://masivakumar.blogspot.com/2006/08/economics-4.html
- http://masivakumar.blogspot.com/2006/08/economics-5.html
- http://masivakumar.blogspot.com/2006/08/economics-6.html
- http://masivakumar.blogspot.com/2006/08/economics-7.html
- http://masivakumar.blogspot.com/2006/08/economics-8.html
15 கருத்துகள்:
நல்ல முயற்சி..
வாழ்த்துக்கள்..
சரிதான் போங்க,
எகனாமிக்ஸில் பரிட்சையிலேயே எழுத முடியல. இங்க முடியுமான்னு தெரியல. டிரை பண்ணிதான் பாக்கறது.
சரி, இதில எது எதற்கு பரிசு புரியல. இந்த புஸ்தகத்தையெல்லாம் தள்ளிவிடறதுக்காக பின்னூட்ட போட்டியா, இல்ல பின்னூட்டம் வாங்கறதுக்காக புத்தகம் பரிசா? எப்படியோ, கொழக்கட்ட வெந்தா சரி
நன்றி
ஜயராமன் இப்படி 'பாயிண்டை கப்'னு பிடிப்பாருன்னு நான் எதிர்பார்க்கலை:-))))
ச்சும்மா............
நல்லது நாலுபேருக்குப் போட்டுமுன்னுதான் இந்த போட்டி. இல்லை சிவா?
படிச்சுட்டு ஒண்ணும் சொல்லாமப் போற ஆளுங்களை ரெண்டு வார்த்தை பேச/எழுத
வைக்கும் உத்தின்னு வச்சுக்கலாமா?
பேப்பர் திருத்தற வேலை எனக்குக் கிடைச்சிருக்கு.
எல்லாரும் என்னை'யும்' கவனிச்சுக்கணும், ஆமா:-)))))
சிவா,
//நல்ல முயற்சி..
வாழ்த்துக்கள் //
இதுக்கெல்லாம் பரிசு இல்லைதானே? :-)))))))))))))))000
புக்க எடுத்து வைங்க...வந்துகிட்டே இருக்கேன்....
பொருமையா விளக்கமா ஆனா சுருக்கமா எழுதனும்னு எனக்கு ஆசை இருந்தது...நீங்க அழகாகவே எழுதி இருக்கீங்க... சந்தை பொருளாதாரம் என்ன ரொம்ப கவர்ந்த விசயம், ஜல்லிகட்டு மாதிரி, விளையாடுரவுங்களுக்கு ஒரு வீர விளையாட்டு களம் தான் இந்த சந்தை பொருளாதாரம். இதோ, தொடரின் ஒரு பகுதிக்கு (#7) எனது மறுமொழி....
---------
ஒரு நாட்டின் அரசு (உள்) சந்தை பொருளாதாரத்தில், இரண்டு வகையான நுழையீட்டு செயல்பாடுகள் கை கொள்ள வேண்டியிருக்கும், அவை:
(1). சந்தை ஒழுக்கப்பாடு செயல்கள்.
(2). சந்தை (கிரியா)ஊக்க செயல்கள்.
ஒழுக்கம்/ஊக்கம் - இவை இரண்டையும் தானாக செய்து கொள்ள சந்தைக்கு தானாக தெரியாது, சத்தும் கிடையாது.
ஒழுக்கம் பொருத்தவரை, சந்தை பொருளாதாரத்தை கொண்ட ஒரு நாட்டின் அரசு, உள் நாட்டு சந்தையில் கீழ்கண்டவைகளை கண்காணிக்க வேண்டும்:
(*) செயற்கையாக சந்தையை கட்டுபடுத்துதல்.
(*) பொருள்களின் விலையை ஆட்டுவித்தல்.
(*) இதர ஏகபோக ஆதிக்க முனைவு.
(*) முறை தவறிய சந்தை பயிற்சிகள்/முயற்சிகள் (உன்fஐர் மர்கெட்/cஒம்பெடிடிஒன் ப்ரcடிcஎச்).
சந்தை பொருளாதாரதரத்தில், சுயநலத்தின் பரிணாம நிலையாக மேற்கண்ட போக்கிரித்தனங்களை பல நிருவனங்க்கள் செயல்படுத்த முயலும். இத்தகைய போக்கிரித்தனமான செயல்பாடுகள் மூலம் சந்தை பொருளாதார சூழியிலை மெதுவாக் துருப்பிடிக்க செய்து, இறுதியாக சந்தை பொருளாதாரத்தை நீர்துப் போக துவங்கும். அத்தகைய சந்தையை சேதப்படுத்தும் செயல்களை தானாக சரிசெய்து கொள்ள சந்தை பொருளாதாரத்திற்க்கு தெரியாது அல்லது சத்து கிடையாது.
எனவே அந்த நாட்டின் அரசு கீழ் கண்டவற்றை செயல்படுத்த வேண்டும்:
(*) சந்தை போக்கிரிதனங்களை களையெடுத்தல்.
(*) ஏகபோக நிறுவனங்களை பலத்தை மட்டுப்படுத்துதல்.
(*) பெரிய நிறுவனங்களை பிரித்து முறைப்படுத்தல்.
(*) புதிய சந்தை விதிகளை விதிகளை நிறுவுதல்.
(*) சந்தையில் சமநிலை போட்டிக்கான காரணிகளை நிலை நிறுத்துதல்/பாதுகாத்தல்.
என்னடா இப்டி தானா செயல்படுற ஓர் சந்தை முறைபாடை ஒரு அரசு நுழையீடு செய்வது சரியா என தோன்றலாம். பலருடைய சுயநலத்தின் தேவைக்கு கூட்டகா செயல்படும் பொருளாதார முறையில், தனது சந்தையின் சுயநலத்தை காக்க ஒரு அரசு முனைவது முறையே.
-------
ஊக்கம் பொருத்தவரை, ஒரு அரசு.... ரொம்ப பெருசா போகுது, அப்புறமா கமெண்ட் போடுறேன்.
-------
... தனியா ஒரு லைன் ...
பொதுவா எல்லாரும் நல்லா இருந்தால் தான், நம்ம சுயநலம் கூட போதிய பலன்/நலன் தரும். அதனால, சுயநலம் ஜெயிக்கனும்னா கூட, ஒருவித பொதுநலம் வேணும், அவந்தான் புரிந்தல் கொண்ட கேப்பிடலிஸ்ட் ... இல்லாம, கால்..கால்னு...கத்துனா, அவன் பொருக்கித்தனமான் கேப்பிடலிஸ்ட், அல்லது நீண்ட கால நிலையான வெற்றியின் ரகசியம் அறியாத கத்துக்குட்டி கேப்பிடலிஸ்ட். சந்தை பொருளாதாரத்தின் பங்காளியான கேப்பிடலிசத்தின் நீண்டகால வாழ்விற்க்கு ஒருவித சோசியலிசம்/கம்யூனிசம் தேவைதான்.... மருத்துல சேர்க்கபடுகிற ஆல்கஹால் போல.
நன்றி கலாநிதி, சிவபாலன்.
அன்புடன்,
மா சிவகுமார்
ஜயராமன்,
துளசி அக்கா சொல்வது போல மூணாவதா ஒரு காரணமும் இருக்கலாமில்லையா?
நாம் எழுதுவதை இன்னும் நிறைய பேர் படித்து அவங்களுக்குத் தெரிஞ்சதையும் சொன்னா, நமக்கும் நல்லது என்பதுதான் முதல் காரணம். :-)
மற்றபடி நான் நேசிக்கும் எனக்குப் பிடித்தப் புத்தகங்களை மட்டுமே வாங்குவது வழக்கம். அதனால் தள்ளி விட வேண்டும் என்று தோன்றியதே இல்லை. நீங்க கிண்டலாக சொன்னாலும், அதற்கு சீரியஸாகவே பதில் சொல்லி விட்டேன் :-)
நிதித் துறையில் பணியாற்றும் நீங்கள் உங்கள் கருத்துக்களை தவறாமல் பதிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
அன்புடன்,
மா சிவகுமார்
வாங்க டண்டணக்கா,
அழகா எழுதியிருக்கீங்க. பின்னூட்டங்களை தொடர்புள்ள பதிவுகளிலேயே போட்டு விடுங்களேன்.
//சந்தை பொருளாதாரம் என்ன ரொம்ப கவர்ந்த விசயம்,
எனக்கும் சந்தைப் பொருளாதரம் குறித்து வற்றாத பிரமிப்பு உண்டு.
அரசுகளின் தேவையையும், கேபிடலிசமும் கம்யூனிசமும் எப்படி உறவாட வேண்டும் என்றும் நச்சென்று சொல்லி விட்டீர்கள்.
அன்புடன்,
மா சிவகுமார்
சிவா
அமார்த்தியசென்னுக்கு அடுத்த வாரிசாயிடுவீங்க போலிருக்கே
நியாயமான
வித்தியாசமான
தேவையான முயற்சி
மனமார்ந்த வாழ்த்துகள்மா
எதிர்காலம் ரொம்ப பிரகாசமா ஜொலிக்குது. பிடிங்க முதல் வாழ்த்து
"நியாயமான
வித்தியாசமான
தேவையான முயற்சி"--மதுமிதா
மதுமிதாவின் பின்னூட்டத்தை நான்
வழிமொழிகின்றேன்
ஜயராமன் பின்னூட்டம்....அவருக்குப்
பொருளாதாரத்தின் மீது உள்ள "லவ்ஸ்" உங்களுக்குத்தெரியாது
அப்பாடங்களுடன் தமக்கு உள்ள தொடர்பு தொடர்ந்து நீடிக்கவேண்டும்
என்பதற்காகவே CFA வை இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பவர் அவர்....
பாருங்களேன்...அவரெ பரிசைத் தட்டினாலும் தட்டிவிடுவார்
சிவா,
எகனாமிக்ஸ் எனக்கு மிகவும் பிடித்த பாடம்தான், ஒருகாலத்தில்.
நீங்க லிஸ்ட செஞ்சிருக்கற பதிவுகளையெல்லாம் படிக்கணும்.. இந்த சனி, ஞாயிறுல படிச்சிட்டு பின்னூட்டம் போடறேன்.
சரி, இதில எது எதற்கு பரிசு புரியல. இந்த புஸ்தகத்தையெல்லாம் தள்ளிவிடறதுக்காக பின்னூட்ட போட்டியா, இல்ல பின்னூட்டம் வாங்கறதுக்காக புத்தகம் பரிசா? எப்படியோ, கொழக்கட்ட வெந்தா சரி//
என்னடா ஜயராமனோட நக்கல காணோமேன்னு பார்த்தேன்..
அந்த கொழக்கட்டய வினாயகர் சதுர்த்திக்கு வச்சிக்கலாமில்லே:)
வாங்க மதுமிதா,
ஏதோ படிச்சதை மீள்படைக்கிறேன். அதைப் பார்த்து நாலு பேரு அவங்களுக்குத் தெரிஞ்சதைச் சொன்னால் நாமும் கற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணம்தான். நீங்களும் உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பின்னூட்டமாக இடுங்கள்.
அன்புடன்,
மா சிவகுமார்
ஜோசப் சார்,
நீங்க படிச்சு எங்கெல்லாம் பொருத்தமோ அதற்கெல்லாம் விபரமாக பின்னூட்டம் இடுங்கள்.
நீங்களும் சிவஞானம்ஜியும் சொல்வது போல ஜெயராமனின் கருத்துக்கள் இந்தத் தொகுப்புக்கு வளம் சேர்க்கும் என்பதில் ஐயமேயில்லை. அவரை தனி மடலிலும் கேட்டுக் கொள்ள வேண்டும்.
அன்புடன்,
மா சிவகுமார்
கருத்துரையிடுக