- நரேந்திர மோடி என்ற மோடி மஸ்தான்.வெறுப்பு அரசியலின் அபாயங்கள்
- மோடி என்ற மோடி மஸ்தான் - 2அடிப்படை வாதிகளின் பிடிவாதம்
- சாதிப் பறைசாற்றலைக் கண்டித்து
- இடஒதுக்கீட்டுக்கு எதிரான கூத்துகள்ஊடகங்களின் ஒரு தலைப்பட்ச போக்கு
- இந்துத்துவா - ஒரு மறுமொழிஏன் சிறுபான்மையினருக்கு சிறப்புச் சலுகைகள்?
- "மெரிட்"டும் இடஒதுக்கீடும்மெரிட் என்பது மதிப்பெண்கள் மட்டும் இல்லை
- இந்தியாவின் மதச்சார்பின்மைஇந்தியா இந்து நாடு அல்ல
- இந்தியாவின் மதச்சார்பின்மை - 2சாணக்கியன், வஜ்ரா ஷங்கருடன் ஒரு விவாதம்
- இசுரேலுக்கு வயது 58இசுரேல் உருவானது அநியாயமானது
இனத்தாலோ, மதத்தாலோ, மொழியாலோ ஒதுக்கப்படாமல் ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியாக வாழும் உலகத்தை உருவாக்குவோம். இல்லாமை இல்லாத நிலையை உருவாக்குவோம்.
செவ்வாய், ஆகஸ்ட் 08, 2006
அடிப்படை வாதங்கள் (தொகுப்பு )
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
4 கருத்துகள்:
வணக்கம் வணக்கத்துடன்,
"முகமூடி போட்டுக்கொண்டு வலைபதியுபவர்களே எழுத துணியா கருத்துக்களை எழுதுகிறீர்களே, தேவையா? :)"
நீங்கதான் முகமூடி போட்டிருக்கீங்களே, எழுதுங்களேன் :-)
காலையில்தான் இதைப்பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன் எனக்கு அகாலமாக சாவு வரும் என்றால் அது நரேந்திர மோடி போன்ற தீவிரக் கொள்கையாளர் மூலமாகத்தான் என்று தோன்றியது, (அவ்வளவு பெரிய ஆள் என்று நினைப்பு எனக்கு :-)
"சின்ன இடைஞ்சலுக்கே "போச்சு, போச்சு, எல்லாம் போச்சு, இணையத்தில படிக்கவே முடியலே ஒரே ஆபாசம் அக்கிரமம்னு" கூக்கிரலிட்டா ஒன்னுத்துக்கும் ஆகாது."
அதாவது மாற்றுக் கருத்தை முன் வைப்பவர்களைப் பற்றிக் குறை சொல்ல வேண்டாம் என்று சொல்கிறீர்கள். அவர்களின் வீட்டுக்கு ஆட்டோ அனுப்பி தடுக்காவிட்டால் நானும் எழுத்தில் எதிர்ப்பதில் தவறு இல்லை என்று நினைக்கிறேன், சரிதானே?
"உங்களின் சிந்தனைகளை, நீங்கள் சரியென்று நினைப்பதை முன்வையுங்கள். ஒத்த/எதிர் கருத்துக்களையும் விவாதியுங்கள். இதுவே அறிவு வளர்ச்சிக்கு உதவும்."
முடிந்த வரை, இந்த உந்துதல் தொடரும் வரை தொடர்ந்து எழுதுகிறேன். இல்லா விட்டாலும் வேறு ஒரு வகையில் வெளிப்பாடுகள் ஏற்பட்டு விடும்.
பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
மா சிவகுமார்
""முதலில் உங்கள் பாதுகாப்பைப் பார்த்துக் கொள்ளவும். பிறகு மற்றவர்களின் சாதி சார்பைப் பற்றிக் கவலைப்படலாம். மட்டுறுத்தலைச் செயலாற்றவும் மேலும் அனானி மற்றும் அதர் ஆப்ஷனைத் தூக்கினாலே பதிப் பிரச்சினை ஒழியும்."
ஐயா,
எனது பதிப்பில் பதிவோடு தொடர்புடைய எந்த பின்னூட்டத்தையும் மட்டுறுத்தப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளேன். வேண்டாத விளம்பர பதிவுகளை மட்டும் அழித்து விடலாம்.
எதிர்காலத்தில் இந்த நிலையை மாற்றுவதற்கான வலுவான காரணம் எதுவும் வந்து விடாது என்று நம்புகிறேன்."
அதற்குப் பின்னால் நீங்கள் அதர் மற்றும் அனானி ஆப்ஷன்களை எடுக்க வேண்டியிருந்ததே நான் சொன்னது அந்த விதத்தில் சரிதான் என்பதைக் காட்டுகிறது.
மேலும் நான் என் சாதியைப் பற்றிக் கூறியதை அடிப்படை வாதம் என்று எவ்வாறு கூறுகிறீர்கள் என்பது புரியவில்லை. அதை ஏன் அவ்வாறு கூற நேர்ந்தத் என்று கூறியதை நீங்கள் கவனித்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை. உங்கள் புரிதல் இவ்வளவுதானா என்பதைப் பார்க்கும்போது சலிப்பே ஏற்படுகிறது. இருப்பினும் நான் கூற நினைப்பதை அச்சலிப்பு தடுத்து விடாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"அதற்குப் பின்னால் நீங்கள் அதர் மற்றும் அனானி ஆப்ஷன்களை எடுக்க வேண்டியிருந்ததே நான் சொன்னது அந்த விதத்தில் சரிதான் என்பதைக் காட்டுகிறது."
முப்பதைந்து ஆண்டு வாழ்க்கையில் புரிந்து கொண்டது ஒன்று, "நாம் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் இருப்பது போலத் தோன்றினாலும், ஒருவர் காரண காரியங்களோடு விளக்கிக் கூறினால் உண்மையை ஏற்றுக் கொள்வது அறிவுடைமை என்று" :-). உங்கள் அனுபவத்தில் நீங்களும் நிறையப் பார்த்திருப்பீர்கள்.
"மேலும் நான் என் சாதியைப் பற்றிக் கூறியதை அடிப்படை வாதம் என்று எவ்வாறு கூறுகிறீர்கள் என்பது புரியவில்லை."
நீங்கள் சொன்ன வாதமும் புரிந்தது சார், ஆனால் எந்தச் சூழலிலும் சாதிப் பெயரைக் குறிப்பிடுவது மோசமான மன நிலையைக் குறிப்பிடுவதாக எனக்குப் படுகிறது. என் கருத்து என்னோடு. உங்களது சலிப்பும் புரிந்து கொள்ளக் கூடியதே.
அன்புடன்,
மா சிவகுமார்
வணக்கம் வணக்கத்துடன்,
நீங்களும் உங்கள் கருத்துக்களை எடுத்து வைப்பது மிக முக்கியம். உங்களுக்கு இருக்கும் புரிதல்கள், எண்ணங்கள் வேறு யாருக்கும் தோன்றாமல் போகலாம். லோகம் விளங்க ஓவ்வொருவரின் பங்கும் தேவைதானே!
//தயவுசெய்து ரத்தக்காவு கொடுத்து அதிகார பசியை தீர்த்து கொள்பவர்களுடன், சுமூக வாழ்வை முன்னிறுத்தும் உங்களை எவ்விதத்திலும் ஒப்பிடாதீர்கள்.
உண்மையில் அத்தகைய கோட்பாடு சார்ந்த, இயக்கம் சார்ந்த முழு நேரப் பணியாளர்களின் உறுதி எனக்கு எப்போதும் வியப்பாகவே இருக்கிறது. அவர்கள் வேற்று விதமாக கருத்து வைத்திருக்கிறார்கள் என்பதால் நமக்கு வில்லன்கள் போலப் பட்டாலும், தனி மனிதர்களாக அத்தகைய நபர்களின் நம்பிக்கைகள் மற்ற எவருக்கும் குறைந்ததில்லை. கொலை செய்வதையும் புனிதமாக வேலையாக செய்பவர்கள் அவர்கள் (இந்துத்துவாவாதிகளும் சரி, பிற மத தீவிர வாதிகளும் சரி)
//ஆனால் உங்கள் பாதுகாப்பை உங்களை தவிர வேறு யாரால் உறுதிப்படுத்த இயலும்?
பொய் சொல்வதற்கு தீர்க்கமான நினைவுத் திறன் வேண்டும் உண்மை சொல்வதற்கு தெளிவான சிந்தை இருந்தால் போதும்தானே. அதே போல நல்லது செய்ய எந்த பாதுகாப்பு அரணும் தேவையில்லை. உண்மையான அல்லது கற்பனை எதிரிகளை நினைத்து நாம் குழம்பிக் கொள்வதால் என்ன பலன்? நமது பாதுகாப்புக்கு நாமே பொறுப்பு, சரிதானே? :-)
அன்புடன்,
மா சிவகுமார்
கருத்துரையிடுக