புதன், ஏப்ரல் 20, 2011

போர்க்குற்றவாளிகளைத் தண்டியுங்கள்


hm@nic.in

மதிப்புக்குரிய உள்துறை அமைச்சர் திரு ப சிதம்பரம் அவர்களுக்கு,

ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட ஒரு ஆய்வுக் குழு, தமிழ்ஈழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசு பல போர்க்குற்றங்களை செய்ததாக குற்றம் சாட்டியிருப்பதாக பல ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது.

போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த 2008-09 ஆண்டிலேயே தமிழ்நாட்டு மக்கள் இது போன்ற கொடுமைகள் நிகழ்கின்றன என்ற தமது அச்சத்தை பல வழிகளில் வெளிப்படுத்தி வந்தார்கள். அந்த நேரத்தில் இந்திய அரசு இந்தக் கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்ட மக்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, இலங்கை அரசை பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளில் ஆதரித்து அதன் செயல்களுக்கு பாதுகாப்பு அளித்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வுக்குழு அறிக்கை வெளியாகியிருக்கும் நிலையில் இந்தியக் குடிமகன் என்ற முறையில் உங்களிடம் இரண்டு கோரிக்கைகளை வைக்கிறேன்.

1. போர்க்குற்றங்கள் செய்த இலங்கை அரசை நமது இந்திய அரசு ஆதரிக்கக் கூடாது.
2. ஐக்கிய நாடுகள் சார்பாக போர்க்குற்ற விசாரணை ஆணையத்தை உடனடியாக உருவாக்க இந்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.
3. நீண்ட கால நோக்கில் இலங்கையின் வடக்கு கிழக்கை பகுதிகளை பன்னாட்டு படைகளின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்து, மக்களிடையே கருத்து வாக்கெடுப்பு மூலம் மக்கள் பிரநிதிகளைக் கொண்ட அரசாங்கம் உருவாக்க இந்திய அரசு முயற்சிக்க வேண்டும்.

உங்கள் உண்மையுள்ள,

மா சிவகுமார்,
(முழுமுகவரி)

==================================
http://pmindia.nic.in/feedback.htm

Dear Sir,

Several media outlets have reported that a U.N.-appointed panel has found "credible allegations" that war crimes were committed in the Sri Lanka's war with the LTTE.

People of Tamil Nadu have been voicing their apprehensions about these war crimes even during 2008-09.

As a citizen of India I request you to
1. not to support Sri Lanka government anymore.
2. take an active role in setting up a War Crime Tribunal to go into these atrocities.

Your sincerely,
  
Ma Sivakumar

2 கருத்துகள்:

Yoga.s.FR சொன்னது…

நன்றி சகோதரரே,நன்றி!இந்தக் கடிதத்தை மாதிரியாக்கி ஈழத் தமிழர் மேல் அன்பு கொண்ட ஏனையோரும் அனுப்புவது போல் அமைத்திருக்கலாமே?பலரும் நெருக்குதல் கொடுப்பது அதிக பலன் கொடுக்கலாமில்லையா?

மா சிவகுமார் சொன்னது…

உண்மை யோகா,

அந்த நோக்கத்தில்தான் பதிவாக வெளியிட்டேன்.

இந்தக் கடிதத்தை நகல் எடுத்து மாற்றியோ மாற்றாமலோ, எல்லோரும் பிரதம மந்திரிக்கு அவரது வலைத்தளம் மூலமாகவும், ப சிதம்பரத்துக்கு மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறேன்.