வெள்ளி, ஏப்ரல் 01, 2011

மீனவர் ராஜா முகமதுவுக்குத் திரட்டிய நிதி ஒப்படைப்பு


பெட்ரோல் குண்டு வீச்சில் தீக்காயம் அடைந்து தொழிலுக்குப் போக முடியாமல் இருக்கும் மீனவர் ராஜா முகமதுவுக்கு இணைய நண்பர்கள் வழங்கிய நிதியை ஜெகதாபட்டிணத்தில் இருக்கும் அவர் வீட்டுக்குப் போய் கொடுத்தோம்.

நிதி விபரங்கள்


ஜெகதாபட்டிணம் விசைப்படகு சங்க நண்பர்கள் ஜாகிர், நஸீர் மற்றும் பிற நண்பர்களும் உடன் இருக்கிறார்கள்.

மார்ச் முதல் வாரத்தில் பார்த்ததை விட உடல்நிலை பெரிதும் தேறி நடமாட ஆரம்பித்திருக்கிறார் திரு ராஜா முகமது. முழுவதும் குணமாகி மீண்டும் தொழிலுக்குப் போக பல மாதங்கள்  ஆகலாம்.  வலது கையில் இருக்கும் காயத்தினால் அந்தக் கை செயல்பட முடியாமல் இருக்கிறது.

இணைய நண்பர்கள் செய்த இந்த உதவிக்கு திரு ராஜா முகமதுவும் அவரது மனைவியும்  உளமார்ந்த நன்றி கூறினார்கள. 'நிறைய பேர் வந்து பார்த்து விட்டுப் போனாங்க. நீங்க எல்லாம் சேர்ந்து உதவி செய்ததற்கு ரொம்ப நன்றி' என்று ராஜா முகமதுவின் கண்கள் கலங்கின.

10 கருத்துகள்:

Unknown சொன்னது…

happy about it...

KARTHIK சொன்னது…

அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்

KARTHIK சொன்னது…

உங்களுக்கும் நன்றி அண்ணா :-))

நாஞ்சில் பிரதாப் சொன்னது…

நன்றி மா.சி.சார்

suvanappiriyan சொன்னது…

சிறந்த சேவைக்கு வாழ்த்துக்கள்.

கல்வெட்டு சொன்னது…

.

bittersweet என்று சொல்வார்கள். அது போல இது நல்லதும் கெட்டதும்.

தன்னை நிர்வகிக்க‌ தான் தேர்தெடுத்த அரசாங்கத்தின் கையாலதனத்தால் ஒரு குடிமகனுக்கு வந்த கதி. இப்படி பிறரிடம் கையேந்த வேண்டிய நிலைமை.

இதைத்தானே அரசியல்வாதியும் "இலவசம்" , "செத்தா காசு" என்று கொடுக்கிறார்கள் என்று ப்ரியாணிக்குஞ்சுகள் சந்தில் சிந்துபாடக்கூடும். :-(((

ஆனால், இணைய நண்பர்கள் செய்த உதவி என்பது ஒட்டுப் பிச்சைக்காகவும் அரசியல் கணக்கிற்காகவும் செய்யப்பட்ட ஒன்று அல்ல. "என் இனம், உனக்காக உயிரைக் கொடுக்க முடியாவிட்டாலும், என்னால் ஆன முதலுதவி" என்ற ஒரே உணர்ச்சியால் விழைந்தது இது.

அவரை ஒரு மூத்த சகோதரனாகவே அவரைப் பார்க்கமுடிகிறது. எனவே இதை உதவி கூட என்று சொல்லாமல் கடமை என்று சொல்லலாம்.

.

எண்ணம் விதைத்ததில் , இருந்து செயல்படுத்திய,செயல்படுத்த உதவிய , இன உணர்வு இருந்தும் பொருளாதார காரணங்களால் கொடுக்கமுடியாவிட்டாலும் " "அய்யோ கொடுமையே" என்றள‌வில் வருத்தப்பட்டு இருந்தாலும் நீங்கள் அன்பான மனிதர்களே.....

அனைவருக்கும் ப்ரியங்களைத் தவிர நன்றி சொல்லி அந்நியப்டுத்திக் கொள்ளவிரும்பவில்லை.


இது போல ஒவ்வொருவருக்கும் செய்ய முடியுமா என்றால் , முடியாது என்பதே உண்மை.

முடிந்த அளவு இவர்கள்படும் கொடுமைகளை பொது மக்களிடம் சேர்க்கவாவது செய்யவேண்டும்.

சீரியலில் சித்திக்கும் சித்தப்பாவிற்கும் அழும் பெண்கள் "ராஜா முகமது" போன்ற மனிதர்களும் நம்முடைய மாநிலத்தில்தான் உள்ளார்கள் என்றாவது தெரிந்துகொள்ளும் வரை.

.

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

உங்களைப்போன்றோர் அதிகரிக்கணும்..

வாழ்த்துகள் நற்செயலுக்கு

மா சிவகுமார் சொன்னது…

நாம் அனைவரும் இணைந்து இது போன்று துன்பத்தைச் சந்தித்த ஒருவருக்கு உதவி செய்ய முடிவது, இணையம் தந்துள்ள மிகப் பெரிய வாய்ப்பு.

அதைப் பயன்படுத்தி இதைச் செய்ய முடிந்தது, நமது இணையச் செயல்பாடுகளை நியாயப்படுத்திக் கொள்ளக் கூடிய ஒன்று.

கல்வெட்டு சொல்வது போல நமக்குள் நன்றி சொல்லிக் கொள்ள வேண்டியதில்லை. வழியும் கண்ணீரைத் துடைக்க நம்மால் முடிந்தவற்றை செய்வதற்கு ஒரு ஊக்கமாக இதை எடுத்துக் கொள்வோம்.

அன்புடன்,
மா சிவகுமார்

செ.சரவணக்குமார் சொன்னது…

மிக நல்ல செய்தி.

உதவிய இணைய நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

nayanan சொன்னது…

சிறந்த பணி, பங்களிப்பு.
அனைவருக்கும் பாராட்டுக்கள்.

அன்புடன்
நாக.இளங்கோவன்