ஏழைகளுக்கு உதவ வேண்டும், வீண் செலவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று நினைக்கும் போதும், எழுதும் போதும்்ஏழைகளுக்கு உதவ வேண்டும், வீண் செலவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று நினைக்கும் போதும், எழுதும் போதும் எது வீண் செலவு என்ற கேள்வி எழுகிறது.
ஒருவருக்கு ஆடம்பரமாகப் படுவது இன்னொருவருக்கு அத்தியாவசியமாக இருக்கலாம். இதைச் செய்யாதே, இப்படிச் செய் என்று எப்படி முடிவு செய்வது?
1. உணவுப் பொருட்களுக்காக, உணவுக்காக செலவளிக்கும் பெரும்பான்மையானவை ஆடம்பரமாக முடியாது.
ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளில் சாப்பிடுவது, பதப்படுத்தப்பட பாலாடைக் கட்டி, பிட்சா போன்ற மேல் நாட்டு உணவுகளை காசைக் கொட்டிச் சாப்பிடுவது, காற்றூட்டப்பட்ட குளிர்பானங்களை குடிப்பது, இனிப்புகளைச் சுவைப்பது இவை எல்லாம் ஆடம்பரம் என்று சொல்லலாம். ஆனால் ஒருவரின் வாழ்க்கை முறைக்கு இது பழகி விட்டால் அதை பொருளாதார முறையில் குறை கூறுவது சரியில்ல.
ஆரோக்கிய கோணத்தில், வயிற்றுக்கு எது ஒத்து வரும் என்று ஆராய்ந்து பார்த்து மேல் நாட்டு உணவுகள் நம் ஊர் காலநிலைக்கு சரிப்படாது என்றோ, குளிர்பானங்கள் உடலைக் கெடுத்து விடும் என்றோ ஒருவர் முடிவு செய்யலாம். அது வேறு.
2. கல்விக்காக, வேலைக்காக செலவிடுவது இப்போதைய வருமானத்தை எதிர்கால நன்மைக்காக முதலீடு செய்வது.
தனக்காகவோ, தன்னைச் சார்ந்தவர்களுக்காகவோ, பிறருக்காகவோ எவ்வளவு செலவளித்தாலும் அது தகும். இதில் கணினி, புத்தகங்கள், பயணம் செய்ய ஊர்திகள், தொலைபேசிக் கணக்குகள், இணைய இணைப்பு மற்றும் பிற கருவிகள் அடங்கி விடும்.
இனிமேல் இரண்டும் புறமும் விவாதிக்க முடியும் பொருட்கள்:
3. வசதியான, பொருத்தமான உடைகளுக்கும், அழகு சாதனங்களுக்கும் ஆண்களும் பெண்களும் செலவு செய்வதும் அத்தியாவசியம்தான்.
ஆனால், தங்கமும் வெள்ளியும் இழையப்பட்ட பட்டுச் சேலைகளும், வெறும் தற்பெருமைக்காக பயன்படுத்தப்படும் அலங்காரப் பொருட்களும் எந்த வகையில் சேரும்?
4. கேளிக்கைப் பொருட்கள், கருவிகள்
தொலைக்காட்சிப் பெட்டி, திரைப்படங்கள், கேளிக்கையரங்குகள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் அனைத்துக்கும் சீரான பயன்கள் உள்ளன. நாள் முழுதும் உழைத்த பிறகு இளைப்பாறவும், பொது அறிவைப் பெருக்கிக் கொள்ளவும், குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குத் துணை புரியவும் தேவையாக இவை இருக்கும் நேரத்தில், இவை ஆடம்பரம் என்ற கோட்டைத் தாண்டி விடுவது மிகச் சீக்கிரமாகவே நடந்து விடும்.
5. விக்கிரகங்களுக்கு வழிபாடு
திரைப்பட நட்சத்திரங்களுக்கு மன்றம் அமைப்பது, அவர்கள் உருவத்துக்கு பால் அபிஷேகம் செய்வது, கோயில்களின் கூரைக்குப் பொன் வேய்வது, கோயிலில் விக்கிரகங்களுக்கு அபிஷேகம் செய்வது போன்றவை மிகக் குறைத்துக் கொள்ளப்பட வேண்டியவை. மனத் திருப்திக்காக ஒரு சிறிய தொகையைச் செலவளித்து விட்டுப் போவது நல்ல பழக்கம்.
கவிதா சில நாட்களுக்கு முன் கோயில்களில் செய்யப்படும் அபிஷேகங்களைப் பற்றி எழுதிய பதிவில் ஒரு சூடான விவாதம் நடந்தது. உங்கள் கணினியையும் பிற உடமைகளையும் விற்று ஏழைகளுக்கு கொடுத்து விட்டு கோயிலில் நிகழும் வீணாக்கலைக் கண்டியுங்கள் என்று ஒருவர் எழுதியிருந்தார்.
6.போதைப் பொருட்கள், சூதாட்டச் செலவுகள்
புகையிலைப் பொருட்கள், மது பானங்கள், பாக்கு, சூதாட்டம் (லாட்டரிச் சீட்டும் சேர்த்து), விபச்சாரம், போன்றவை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட வேண்டும்.
9 கருத்துகள்:
வணக்கம் சிவக்குமார்,
ஒருவருக்கு ஆடம்ப்பரமாக தெரிவது இன்னொருவருக்கு அத்தியவசியமாக தெரியலாம் என சொன்னது மிக்க சரி.நானும் பல தடவை இந்த இணையம்,செல் போனுக்காக எல்லாம் செலவு செய்வது ஆடம்பரமா தேவையா எனக்கேட்டுக்கொள்வதுண்டு. செல் போன் நான் கடந்த 3 மாதமாக தான் உபயோகிக்றேன்,இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் நான் 2000 ஆண்டிலேயே ஒரு கருப்பு வெள்ளை செல் போன் வாங்கிவிட்டேன் அதை சிறிது நாளிலேயே ஒரம்கட்டியும் விட்டேன் பின்னர் இப்பொழுது தான் மீண்டும் பயன்பாட்டிற்கு எடுத்தேன்.(கான்டாக்ட் நம்பர் இல்லாத நீ எல்லாம் என்ன மனிதன் என்று பலர் கேட்டதால்)
சாலையில் பிச்சை எடுப்போரை பார்க்கும் போதெல்லாம் நாம் பேசவும் , சும்மா இணையத்தில் அரட்டை அடிக்கவும் எத்தனை செலவு பண்ணுகிறோமே என ஒரு வகையான உணர்வு வரும். எனக்கும் எது ஆடம்பரம் எது அத்தியாவசியம் என கண்டறிவதில் ஒரு குழப்பம் இருந்து வருகிறது.
ஆமாம் வவ்வால்,
அதே குழப்பம்தான் எல்லோருக்கும். ஒரு செலவு நம்மைத் தவிர பிறருக்கும் பலன் அளிக்கிறது என்று இருந்தால் அதை நியாயப்படுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். கடைசியில் ஒவ்வொருவருக்கும் அவரவர் மனசாட்சிதான் வழிகாட்டி.
அன்புடன்,
மா சிவகுமார்
வாங்க துர்கா,
நாம் சம்பாதிப்பது 100% நம்முடைய திறமையால்தானா? நமக்கு மானிய விலையில் படிப்புச் சொல்லித் தந்த பள்ளிக்கூடம், கல்லூரி, நம்மைத் தாங்கிப் பிடித்த சமூகத்துக்கு அதில் எந்த பங்கும் இல்லையா?
அளவுக்கு (Quantity) மீறாமல் இருக்க வேண்டும் என்பது சரிதான். அதன் கூடவே எதில் (Quality) செலவளிக்கிறோம் என்பதும் கவனிக்கப்பட வேண்டியது என்று நினைக்கிறேன்.
அன்புடன்,
மா சிவகுமார்
இதோ வந்துவிட்டேன் சிவகுமார்.வணக்கம்.நான் தமிழில் blogging செய்வது தற்பொழுது சற்று கடினம்.பல வருடங்கள் கழித்து இப்பொழுதான் தமிழில் எழுத ஆரம்பித்துள்ளேன்.ஆங்கிலத்தில் 'blogging' செய்வதும் எனக்கு புதியது.மேலும் நேற்றுதான் தமிழில் டைப் பண்ண கற்று கொண்டேன்.ஏதாவது எழுத்து பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.
நான் சொல்ல வந்ததை நேற்று மிக சுருக்கமாக சொல்லிவிட்டேன்.நாம் பொருளாதரம் மற்றும் தேவைகள் ஒட்டியே செலவுகள் இருக்க வேண்டும்,இல்லையென்றால் அது ஆடம்பார செலவு.இது என் கருத்து.அதனால்தான் அளவுக்கு மீறமால் இருந்தால் எந்த ஒரு செலவும் ஆடம்பாரம் இல்லை என்று சொன்னேன்.
நீங்கள் சொல்லுவதும் சரிதான்.கண்டிப்பாக நம்மால் திறமையால் மட்டும் வாழ்க்கையில் முன்னேற முடியாது.இதில் பலரின் பங்கேற்ப்பு கண்டிப்பாக உள்ளது.
Sorry to type in English now.This 2 paragraph took me almost more than 4 hours to type.Thank you for reading my blog.I hope I could have a blog in tamil soon.Take care bye.
நன்றி துர்கா,
நான்கு மணி நேரம் முயன்று எழுதியப் பத்தியில் பிழைகள் மிகக் குறைவு. ஆடம்பாராம் என்பதற்குப் பதிலாக ஆடம்பரம் என்று எழுதி விட்டால் நீங்கள் எழுதியது மிக அழகாக வந்துள்ளது.
உடனே ஒரு தமிழ் பதிவைத் தொடங்கி வாரம் ஒரு பதிவாவது முயன்று போட்டு விடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழ் எழுதுவதில் பயிற்சியாக இருப்பதோடு, உங்கள் உலகத்தை தமிழ் கூறும் வலைப் பூவுலகத்துக்கு அறிமுகம செய்து வைக்கலாம்.
அன்புடன்,
மா சிவகுமார்.
வணக்கம் சிவகுமார்.உங்கள் ஆலோசனைக்கு நன்றி.கூடிய விரைவில் கண்டிப்பாக தமிழில் என் வலைப்பதிவை நீங்கள் எதிர்பார்க்கலாம்.உங்கள் வலைப்பதிவு மிகவும் அருமையாக உள்ளது.மேலும் உங்கள் வலைபதிவு படிப்பவார்களின் சிந்தனையைத் துண்டக்கூடிய விதமாக அமைந்துள்ளது அதன் தனி சிறப்பு.
இப்படிக்கு,
துர்கா
நன்றி துர்கா,
உங்களுடைய எழுத்துக்களைப் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.
அன்புடன்,
மா சிவகுமார்
அற்புதமான பதிவு
தங்கள் பின்னூட்டத்தில் இந்த பதிவை குறிப்பிட்டிருந்தீர்கள். உடனே, ஆவலாக வந்து பார்த்தேன்.
கருத்துக்களை தெளிவாகவும் மிக சீராக (லாஜிகல்) வைத்திருக்கிறீர்கள். மறுக்க முடியுமா!
என் கருத்தை தான் நான் தங்களுக்கு எப்போதோ சொல்லி விட்டேனே.
இந்த உலகில் ஆடம்பரம் என்று எதுவுமே இல்லை. உன் உழைப்பில் நீ ஈட்டிய வசதிகளை உன் மனம் போல் இழந்துகொள். இதில் ஏது தர்க்கம். உணவுக்கு செலவிட்டால் ஆடம்பரம் இல்லை, அபிஷேகத்திற்கு என்றால் அனாவசியம் என்றெல்லாம் ரூட் போட முடியாது.
நான் உபவாசம் இருந்து அபிஷேகம் செய்தால் அந்த உணவுக்கு ஈகுவலாக என் அபிஷேகத்தில் ஆடம்பரத்திற்கு கொஞ்சம் டிஸ்கவுண்ட் கிடைக்குமா?
இது குதர்க்கம் தான். விளையாட்டாக கேட்டேன். பொருள் இல்லை.
உணவுக்கு செலவிட்டால் ஆடம்பரம் இல்லையா? யார் சொன்னது. எங்கள் சென்னையில் இப்போது ஒரு இரவு 5 நட்சத்திர ஹோட்டலில் நண்பர்களுடன் சாப்பிடும் பணத்தில் எங்கள் வீட்டு வேலைக்காரன் ஒரு மாதம் குடித்தனம் நடத்துகிறான். இது அக்கிரமம் இல்லையா?
லஷ்மி மித்தல் தன் பெண் கல்யாணத்துக்காக எத்தனை ரூபாய் செலவழித்தார் என்று கேள்விப்பட்டிருப்பீர்களே? அதில் தமிழ்நாடு கவர்மெண்ட் ஒரு மாதம் நடந்துவிடும்.
நன்றி
கருத்துரையிடுக