புதன், ஏப்ரல் 19, 2006

சன் டிவியின் ஏகபோக அநியாயங்கள் - 2

சரி, ஏகபோக ஆதிக்கம் என்றால் என்ன? 100 சதவீதம் சந்தையையும் கையில் வைத்திருந்தால்தான், ஏகபோகம் என்று இல்லை. தொழிலின் தன்மையை பொறுத்து 70 சதவீதம் சந்தையை பிடித்து விட்டாலே கூட ஏகபோக வலிமை வந்து விட்டது என்று கருதலாம். போட்டியாளர் என்று வலிமையுடன் வேறு யாரும் செயல்படாத நிலை ஏற்பட்டு விட்டாலே, ஏகபோகம் என்று அரசு கருத ஆரம்பிக்கலாம்.

ஏகபோகம் என்று ஆகி விட்டால் என்ன மாற வேண்டும்? சாதாரண போட்டி நிறைந்த சூழலில் நியாயமாகக் கருதப்படும் பல நடவடிக்கைகள் ஏகபோக வன்மை பெற்றவுடன் தவறாகக் கொள்ளப்படும். எடுத்துக்காட்டாக,
  • தனது பொருட்களை வினியோகிக்கும் முகர்வர், போட்டியாளரின் பொருளையும் வினியோகிக்கக் கூடாது என்று ஒப்பந்தம் போடுவது போட்டி நிறைந்த சூழலில் சரியான அணுகுமுறை.
  • தனது பிரபலமான ஒரு பொருளுடன் அவ்வளவு பேர் பெறாத ஒரு பொருளை இணைத்து விளம்பரப்படுத்துவதும், வினியோகிப்பதும் பொதுவாகக் கையாளப்படும் ஒரு உத்தி.
இந்த இரண்டு உத்திகளுமே, ஒரு ஏகபோக சந்தையில் சட்டவிரோதமாகி விடுகின்றன. பயனர் கணினிகளுக்கான இயங்குதள சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் மைக்ரோசாப்டு நிறுவனம், தனது வலை உலாவி இன்டெர்நெட் எக்ஸ்புளோரரை இலவசமாக இயங்குதளத்துடன் சேர்த்து வழங்கி நெட்ஸ்கேப்பு நிறுவனத்தை திவாலுக்கு தள்ளியது சட்ட விரோதம்.

போட்டி இயங்கு தளஙகளை விற்றால், விண்டோசு உரிமத்தின் விலையை ஏற்றி விடுவதாக கணினி விற்கும் நிறுவனங்களை மிரட்டி, போட்டி இயங்குதளங்களின் இளம் வேர்களிலேயே வெந்நீர் ஊற்றி விட்ட உத்தியும் சட்ட விரோதம்.

சரி இப்போது சன் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு வருவோம்.

தமிழகத்தில் சுமங்கலி கேபிள் நிறுவனம் பல நகரங்களில் ஏகபோக பலம் பெற்றுள்ளது. அதைப் பயன்படுத்தி அதே குழுமத்தைச் சேர்ந்த, சன் தொலைக்காட்சியின் தொழிலை பாதுகாத்து வளர்க்கும் முகமாக, போட்டியாளர்களின் ஓடைகளை தரக் குறைவாக ஒளிபரப்புவது, சரியாக ஒத்துழைக்காத ஓடைகளை வரிசையில் மிகக் கீழே கொடுப்பது, புதிதாக வரும் போட்டி ஓடைகளுக்கு சரியான வாய்ப்புகள் அளிக்காமல் இருட்டடிப்பு செய்வது எல்லாமே தவறுகள்.

இன்னும், அதே குழுமத்தைச் சேர்ந்த சூரியன் பண்பலையை மட்டும் முதல் வரிசையில் இடமளித்து கேபிள் மூலமாக ஒலிபரப்பும்போது, போட்டியான ரேடியோ மிர்ச்சியையோ, எஃப்எம் கோல்டையோ அப்படி ஒலிபரப்ப வழி செய்யாமல் இருப்பது தவறு.

சன் தொலைக்காட்சியில், கட்டணமே இல்லாமலோ, மிகக் குறைந்த கட்டணத்திலோ, குங்குமம் பத்திரிகைக்கு விளம்பரம் செய்தால், ஏகபோக வலிமை பெற்ற நிறுவனம் என்ற முறையில், பிற பத்திரிகைகளுக்கும், அதே கட்டணத்தில் விளம்பரம் செய்யும் உரிமையை அளிக்க வேண்டும்.

இதை எல்லாம் கண்காணிக்க எம்ஆர்டிபி சட்டம் என்று ஒன்று இருந்தது. இதன் மூலம் மத்திய அரசு சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆராய்ந்து, அது தன்னுடைய ஏகபோக வலிமையை போட்டியாளர்களுக்கும், நுகர்வோருக்கும் ஊறு விளைவிக்கும் வண்ணம் பயன்படுத்தியதாக கண்டுபிடித்தால் அதற்கான சட்ட மூலமான நிவாரணங்களை செயல்படுத்துமாறு உத்தரவிட அதிகாரம் உண்டு.

சன் தொலைக்காட்சி குழுமத்தின் இந்த உத்திகளால் நமக்கு என்ன குறை வந்து விட்டது? அதற்கு அரசு என்ன செய்திருக்க வேண்டும்?

8 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நீங்களும் பாப்பானா?

Radha N சொன்னது…

முதலில் சானலின் பெயர் 'சன் டிவியா? அல்லது 'தமிழ்மாலையா?' என்பதை கேட்டு சொல்லுங்களேன்?

அருண்மொழி சொன்னது…

Sivakumar,

I agree to some of your comments. But you have to notice something.

They cannot increase the viewership just because they were in central govt or has cable network or has the muscle power.

They have been running the TV for the past 14 years and I have seen tremendous progress on the technical side (I am not here to discuss on the contents - I am against most of their programs).

We got to give due credit to their professionalism. Kalanidhi is trying to establish a media empire in south india. He has succeeded to an extent. People think that SUN TV empire is going to grow. Just look at the IPO oversubscription.

ஜெயக்குமார் சொன்னது…

/I am not here to discuss on the contents - I am against most of their programs/

அது தானய்யா முக்கியம் தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு வளர்ச்சியடைந்தாலும் நல்ல தரமான நிகழ்ச்சிகளை கொடுக்கவில்லை என்றால் அது அணுசக்தியை அழிவுபாதையில் பயன்படுத்துவது போன்றதாகும்.

பிரதீப் சொன்னது…

நான் தெரியாமல்தான் கேட்கிறேன்.

குங்குமத்திற்கு சன் டிவியில் கொடுப்பது போன்ற விளம்பரத்தைதானே நமது எம்ஜியாருக்கு ஜெயா டிவியில் கொடுக்கிறார்கள்?

தினகரனை ஒரு ரூபாய்க்கு விற்றால் நமது எம்ஜியார் இலவசமாகவே தரப் படுகிறதாமே? இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

ஜெயக்குமார் சொன்னது…

/குங்குமத்திற்கு சன் டிவியில் கொடுப்பது போன்ற விளம்பரத்தைதானே நமது எம்ஜியாருக்கு ஜெயா டிவியில் கொடுக்கிறார்கள்?
/

நமது எம்ஜியாரை தினகரன் போல வெகுஜனப்பத்திரிக்கையாக விற்கவில்லை. அதை திமுக-விற்கு முரசொலி போல அதிமுக-வின் கொள்கை பத்திரிக்கையாகவே விற்கப்படுகிறது. தினகரனையும் தமிழ் முரசையும் கூவி கூவி விற்பவர்கள், கருணாநிதி கடிதம் எழுதும் முரசொலியையும் அதுபோல விற்கலாமே. அப்படி செய்யமாட்டார்கள், ஏனென்றால் டப்பு தேராதே.

அருண்மொழி சொன்னது…

//அது தானய்யா முக்கியம் தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு வளர்ச்சியடைந்தாலும் நல்ல தரமான நிகழ்ச்சிகளை கொடுக்கவில்லை என்றால் அது அணுசக்தியை அழிவுபாதையில் பயன்படுத்துவது போன்றதாகும்//

Jayakumar,

We are discussing about the SUN TV's market share & how they are shut other channels/media out. If you want to discuss about SUN TV's contents - create a separate posting.

If you do not like the programs - just switch it off or change to some other channel.

மா சிவகுமார் சொன்னது…

arunmozhi,

What you say is right? What I am trying to describe is the effect of a monopoly on the industry. I have written in more detail in the later postings.