செவ்வாய், ஏப்ரல் 18, 2006

நரேந்திர மோடி என்ற மோடி மஸ்தான்.

ஜெயலலிதாவின் ஆணவமும், மற்றவரை மதிக்காத போக்கும் ஊரறிந்தவை. லல்லு பிரசாத் யாதவின் ஊழல்களும், கோமாளிப் பேச்சுகளும் ஊடகங்களின் பசிக்கு நல்ல இரை போட்டன. கருணாநிதியின் குடும்ப அரசியலை அவர் அரசியல் எதிரிகள் வாய் கிழிய கண்டிக்கலாம்.

இவை எல்லாவற்றையும் விட பயங்கரமானது, அபாயகரமானது நரேந்திர மோடியின் அரசியல். நர்மதா பசாவோ இயக்கத்தின் மேதா பாட்கருக்கு போட்டியாக உண்ணாவிரதம் இருந்த கீழ்மைத்தனம் இப்போது குஜராத்தில் பெரும் வீரமாக போற்றப்பட்டுக் கொண்டிருக்கும். பாட்கருக்கு ஆதரவாக பேசிய அமீர்கானுக்கு பதில் அளித்த விதமும் மோடி பாணி அரசியலுக்கு நல்ல எடுத்துக்காட்டு.

நூற்றுக்கணக்கான இசுலாமிய உயிர்களைக் குடித்த வெறித்தனம் இவரது அரசியல் பாணியின் முத்திரை. இதில் அபாயம் என்னவென்றால், அதை எதிர்த்து பேசுபவர்கள் எல்லாம், குஜராத்துக்கு வெளியே இருப்பவர்கள மட்டுமே். குஜராத்தில், நீதிமன்றங்கள் கூட தமது பணியை சரிவர செய்ய முடியாத சூழலை உருவாக்கி விட்ட பாசிச பாணி அது.

எதிர்க் கட்சிகளும், ஊடகங்களும், மனசாட்சி உள்ளவர்களும், வாய் மூடி மௌனிகளாக ஆகி விடும் அரக்க அரசியல் மோடி பாணி அரசியல். எதிர்த்து நில்லும் மனத்திண்மையை அழித்து விடும் தந்திரங்கள் நிறைந்தது இந்த பாணி அரசியல்.

ஏதோ இந்தியாவின் ஒரு மூலையில், குஜராத்தில் இது எல்லாம் நடக்கிறது என்று வாளாவிருப்பது ஆபத்து. களைச்செடிகள் போல கண் மூடி திரும்பி பார்ப்பதற்குள் தம் நச்சு வேர்களை நாலாபுறமும் பரப்பி விடும் கொடிய பாணி இந்த அரசியல்.

நம் நாட்டின் எதிர்காலத்தில் அக்கறை இருப்பவர்கள், மக்களாட்சியில் நம்பிக்கை கொண்டவர்கள் அனைவரும், மோடிக்கு எதிரான நிலையை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

4 கருத்துகள்:

சிறில் அலெக்ஸ் சொன்னது…

ஹ்ம்ம்ம்..

சிரியஸா உண்மைகளச் சொன்னா யாரும் எதிர்வினை செய்யறதில்ல போலிருக்கு.

:(

மா சிவகுமார் சொன்னது…

சிறில்,

கிட்டத்தட்ட இவ்வளவு நாட்களுக்குப் பிறகு உங்கள் கண்களில் பட்டது போல, தேவைப்படுபவர்களுக்குப் போய்ச் சேர்ந்து விடும் என்ற நம்பிக்கையில்... :-)

அன்புடன்,

மா சிவகுமார்

வஜ்ரா சொன்னது…

//
நம் நாட்டின் எதிர்காலத்தில் அக்கறை இருப்பவர்கள், மக்களாட்சியில் நம்பிக்கை கொண்டவர்கள் அனைவரும், மோடிக்கு எதிரான நிலையை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
//

எனக்கு நாட்டின் எதிர்காலத்தின் மீதும் அக்கரை உள்ளது. மக்களாட்சியிலும் நம்பிக்கை உள்ளதால் நான் மோடியை ஆதரிக்கிறேன், கம்யூனிஸ்டுகளை வண்மையாக எதிர்க்கிறேன்.

சோவியத் இருந்த போது அதன் வால் பிடித்து காசு வாங்கிய கட்சி இன்று ஹைடெக் கூலிப்படையாக இருந்துகொண்டு ஊடகங்களை தன் பிடியில் வைத்துக் கொண்டு தங்களுக்கு வேண்டாதவர்களை வில்லனாக்கும் பாங்கு எவ்வளவு நாள் என்று தெரியவில்லை. அதை நம்பி இப்படி குஜராத்தின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போட நீங்கள் நினைக்கிறீர்கள் என்று பார்க்கும் போது வருத்தமாக உள்ளது.

ஏதோ, உங்கள் (அவ) நம்பிக்கை உங்களுக்கு.

மா சிவகுமார் சொன்னது…

சங்கர்,

குஜராத் மக்களின் உழைப்புக்கும் தொழில் முனைவுக்கும் அவர்கள் என்றுமே சோடை போனதில்லை. ஆரம்பத்திலிருந்தே குஜராத் இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றுதான். ஏதோ மோடி வந்துதான் குஜராத்தை தூக்கிப் பிடிக்கிறார் என்று துக்ளக் சோ சொல்கிறார்.

இந்தியாவின் பன்முகத் தன்மையை குலைக்க முயலும் இயக்கங்களின் பிரதிநிதிதான் மோடி என்பது என் கருத்து. எங்கள் ஊர் நாகர்கோவிலில் அவரைப் போன்ற சிலரை நான் பார்த்திருக்கிறேன். அத்தகையவர்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கு தடையாகத்தான் இருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்