செவ்வாய், ஏப்ரல் 25, 2006

சன் டிவியின் ஏக போக அநியாயங்கள் - 9

ஏற்கனவே சொன்னது மாதிரி, சன் குழுமத்தின் நிலை மற்ற நிறுவனங்களிலிருந்து மாறுபட்டது. ஜெயா டிவிக்கு இதே ஆதிக்கம் கிடைத்தால் நிலைமை இன்னும் பத்து மடங்கு மோசமாக இருக்கலாம். ஆனால் தனது திறமையாலும் மற்றும் சில சாதகமான சூழ்நிலைகளாலும் தன்னை வலுவாக்கிக் கொண்ட சன் குழுமத்திற்கு ஏகபோக நிறுவனம் என்ற வகையில் பொறுப்புகள் அதிகம்.

ஒரு ஏகபோக நிறுவனம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணங்கள் உள்ளன. அப்படி நடந்து கொள்வதுதான் அந்த நிறுவனத்துக்கும் வணிக அளவிலும் நல்லது.

கூகுளை எடுத்துக் கொள்ளுங்கள். இன்றைக்கு வையவிரிவு வலையில் தேடுதல் சந்தையிலும், தேடல் பக்கங்களில் விளம்பரங்களை காட்டும் சந்தையிலும் பெரும் ஆதிக்கும் செலுத்துகிறது கூகுள். தன்னுடைய விளம்பரங்களுக்கு சாதகமாகவோ, போட்டியாளர்களின் விளம்பரங்களை கட்டுபடுத்தும் விதமாகவோ தன்னுடைய நிரலை மாற்றி அமைக்காமல் நியாயமான முறையப் பின்பற்றுகிறது கூகுள்.

என்னுடைய ஜிமெயில் பட்டியலின் மேலே யாஹூவின் விளம்பரம் தெரிகிறது. கூகுளின் நிறுவன கொள்கையே, தீங்கு செய்யாதே என்பதுதான். ஆரம்பத்திலேயே தாம் மிகப் பெரும் சக்தியாக வளருவோம் என்று உணர்ந்து அதை தவறாக பயன்படுத்து விடக்கூடாதி என்று தன்னை நெறிப்படுத்திக் கொண்ட கூகுள் போன்று சன் டிவி செயல்பட்டால், தொழில் முறையில் பெரிதும் வளர்ந்து உலக ஊடகத் துறையில் தன் முத்திரையைப் பதித்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

END

4 கருத்துகள்:

வடுவூர் குமார் சொன்னது…

சிவகுமார்
மிகச்சமீபத்தில் படித்த பதிவுகளிலே மிக அருமையான பதிவு இந்த "ஏக போக அநியாயங்கள்".(1-9௯)
நேர்மையான அலசல்.

மா சிவகுமார் சொன்னது…

நன்றி குமார்,

இன்றும் இந்த நிலை தொடருவதுதான் வருத்தமானது. பரவலாக விழிப்புணர்வு வந்தால், நிலைமை மாறும் என்று நம்புவோம்.

அன்புடன்,

மா சிவகுமார்

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

தமிழ் வலைப்பதிவுகளில் இந்த மாதிரி பயனுள்ள தொடர்கள் வருவது மகிழ்ச்சி..சன் குழுமம் மாறாவிட்டாலும், சில பேருக்காவது கொஞ்சம் விழிப்புணர்வு வந்திருக்கும்..நன்றி

மா சிவகுமார் சொன்னது…

சன் குழுமம் மட்டும் இல்லை ரவிகுமார். இன்னும் பல துறைகளில் இது போல நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இவற்றை ஒழுங்கு படுத்த வேண்டிய அரசுத் துறைகள் செயலற்றுப் போய் விட்டதுதான் பரிதாபம்.

அன்புடன்,

மா சிவகுமார்