சுய இன்பம் பெறுவதால் உடலுக்கு எந்தக் கெடுதலும் இல்லை. மனதில் ஏற்படும் குற்ற உணர்ச்சியைத் தவிர்த்து விட்டால் எந்த பின்விளைவுகளும் கிடையாது என்பது பெட்டிக் கடைகளில் விற்கும் திரைச்சித்ரா. பருவகாலம் முதல், Marriage Manual என்று கையேடுகளிலும், இணையத்தில் சக்கை போடு போடும் எல்லா விதமான பாலுணர்வைத் தூண்டும் தளங்களும் தரும் உறுதி மொழி.
சோதிடம் பார்க்க வருபவர்களிடம் 'உங்களுக்கு ஒரு பெரிய கவலை மனதில் இருக்கிறது' என்று ஆரம்பிப்பது பாதுகாப்பானது. கவலை இல்லா விட்டால் சோதிடம் பார்க்க ஏன் வருகிறார்கள். திரைச் சித்ராவின் வாசகர்களுக்கு எது ஆறுதலைத் தருமோ எது அவர்களது விற்பனையைப் பாதிக்காதோ அதை சொல்வதுதானே நியாயம்?
பாதிப்பே இல்லையா, என்ன?
எஸ்கே ஐயா சொல்வது போல "ஒரு சொட்டு விந்துக்கு பல சொட்டு ரத்தம் இழப்பாகும்" என்ற பயமுறுத்தல்களை விட்டு விடுவோம்.
உண்மையை நம்மளவில் ஆராய்ந்து பார்ப்போம். சுயஇன்பத்துக்குப் பிறகு ஏற்படும் குற்றஉணர்ச்சி தவிர்க்கவே முடியாது. எவ்வளவு பெரிய மேதாவியாக இருந்தாலும் துடைத்துப் போட்டு விட்டுப் போய்க் கொண்டிருக்க முடியாது. மனித மனதையும் உடலையும் எண்ணிப் பார்த்தால் இதன் பின்னணி விளங்கும்.
உணர்வுகளைத் தூண்டி, உடலைத் தயார் செய்து, விந்து வெளியேற்றுவது ஒரு பெண்ணுடன் இணைந்து குழந்தை பெறுவதற்காக இயற்கை வகுத்த வழி. அதை விடுத்து செயற்கையாக உணர்வுகள் மூலம் உடலை செலுத்தி வெறுமையில் முடிவது உடலளவிலும் மனதளவிலும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.
பதினைந்து நிமிடம் கோவிலுக்குப் போனால் ஏற்படும் நிம்மதி அடுத்த பல மணி நேரங்களுக்கு தொடர்கிறது என்றால் ஒரு மணி நேரம் படம் பார்ப்பதில் செலவிட்டால் அதன் விளைவுகள் எத்தனை மணி நேரம் நீடிக்கும்?
தேவை இல்லை
வாரத்துக்கு அல்லது மாதத்துக்கு எத்தனை மணி நேரம் இந்த பலனற்ற செயலில் செலவளிக்கிறோம்? இது இல்லாமல் முடியாது என்ற விவாதத்துக்கு இதை எண்ணிப் பாருங்கள். ஒரு சச்சின் டெண்டுல்கரோ, விஸ்வநாதன் ஆனந்தோ தமது நேரத்தை இப்படிச் செலவிட்டிருப்பார்களா? சாதிக்க வேண்டும் என்று இருப்பவர்கள், ஒரு மணி நேரம் விதைத்தால் எத்தனை மணி நேர பலன் கிடைக்கும் என்று திட்டமிட்டு செயல்படுவார்கள் அல்லவா?
எல்லோரும் செய்வதால் நாமும் செய்ய வேண்டியதில்லை
இது நம்ம ஊரில் மட்டும் இல்லை, உலகளவில் இணையத்தில் கொடி கட்டிப் பறக்கும் ஒரு தொழில் பாலுணர்வு தொழில்தான். அமெரிக்க விவாதத் தளங்களிலும் இது பற்றிய கிண்டல்கள் இயல்பாக வெளிப்படுகின்றன. ஆனால், ஒவ்வொருவரும் இந்த மணி நேரங்களையும் தொடரும் பாதிக்கப்பட்ட நேரங்களையும் புதியன படைக்கும் முயற்சிகளில் செயல்பட்டால் ஒரு சமூகம் எவ்வளவு சாதிக்கலாம்?
நம்முடைய படைப்பாற்றலுக்கு வடிவம் கொடுக்க வேண்டும்
சுய இன்பம் காண்பது நம்முடைய உருவாக்கும் உந்துதலுக்கு அரைகுறை நிறைவு அளித்து விடுகிறது. அதை விடுத்து உணர்வுகளைக் கவிதைகளாகவோ, ஓவியமாகவோ, கதையாகவோ வடிக்க ஆரம்பிக்கலாமே, புதியது படைத்த முழு நிறைவும் கிடைத்து விடும்.
10 கருத்துகள்:
---ஒரு சச்சின் டெண்டுல்கரோ, விஸ்வநாதன் ஆனந்தோ தமது நேரத்தை இப்படிச் செலவிட்டிருப்பார்களா?---
How can we be so sure?
---சுயஇன்பத்துக்குப் பிறகு ஏற்படும் குற்றஉணர்ச்சி தவிர்க்கவே முடியாது.---
depends on 'Human Nature', its underlying value system, their assumptions. (one suggestion is: Amazon.com: Ten Theories of Human Nature: Books: Leslie Stevenson,David L. Haberman)
---விந்து வெளியேற்றுவது ஒரு பெண்ணுடன் இணைந்து குழந்தை பெறுவதற்காக இயற்கை வகுத்த வழி. ---
Then, are you against GLBT too (Gays, Lesbians, bi-sexual, transgender)?
---பதினைந்து நிமிடம் கோவிலுக்குப் போனால் ஏற்படும் நிம்மதி அடுத்த பல மணி நேரங்களுக்கு தொடர்கிறது என்றால் ஒரு மணி நேரம் படம் பார்ப்பதில் செலவிட்டால் அதன் விளைவுகள் எத்தனை மணி நேரம் நீடிக்கும்?---
If a management guru (similar to the temple visit) consults for one hour he/she may get 200 dollars. The same rate is not given for a construction worker (movie experience in the above metaphor). Apples & oranges... :D
பாலா,
நீங்கள் சொல்வது போல, நான் குறிப்பிட்டது போல இதைப் பற்றிய விவாதங்கள் ஆராய்ச்சிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நடந்து வருகின்றன. இரண்டு பக்கமும் கட்சி கட்டிக் கொண்டு விவாதிக்கிறார்கள்.
நான் சொல்வது 'ஒவ்வொருவரின் மனதளவில் என்ன தோன்றுகிறது என்று எண்ணிப் பார்க்க வேண்டும்' என்பதை. என்னுடைய சொந்த அனுபவத்தில் தவிர்ப்பது செய்வது இரண்டுக்குமான வேறுபாடு மிகப்பெரிதாக உள்ளது.
ஒவ்வொருவரும் தாமே முயற்சி செய்து தெரிந்து கொள்ள வேண்டியதுதான். ஆறு மாதங்கள் முழுமையான ஒதுக்கம். ஆறு மாதங்கள் வளமையான பழக்கம். இரண்டு கால கட்டத்திலும் என்ன வேறுபாடுகள் தெரிந்தன என்று புரிந்து கொண்டு முடிவு செய்து கொள்ளலாம்.
நாற்பது ஆண்டுகளுக்குக் குறையாத வயது வந்த வாழ்க்கையில் ஆறு மாதம் என்பது அவ்வளவு பெரிதில்லைதானே :-)
இதற்கு விளைவுகளை மாறுதல்களை நாட்குறிப்புகளாகப் பதிவு செய்தால் ஒப்பீடு எளிதாக இருக்கும்.
அன்புடன்,
மா சிவகுமார்
சிவகுமார்,
என் சொந்த அனுபவத்தில் இதை (6 மாத விடுத்தலை) செய்தே பார்த்திருக்கிறேன்.
என் கருத்து என்னவென்றால், கட்டாயம் இதைச் செய்யவேண்டுமென்றில்லை, அதே நேரம் கட்டாயம் அதை செய்யாமலிருக்கவும் வேண்டுமென்றில்லை. கஷ்ட்டப்பட்டு பால் உணர்வுகளை அடக்கிவைப்பதும் நல்லதல்லவே.
தூண்டுதல் இருக்கும்போது தகுந்த சூழலில் சுய இன்பம் காண்பது தவறில்லை. தேவையில்லாத திருமணத்துக்கு வெளியிலான பாலுறவை, சில தவறான உறவுகளை இது தவிர்க்கும் என்றே நம்புகிறேன்.
அதிகமாய் சுய இன்பம் அனுபவிப்பது தாம்பத்யத்தில் ஈடுபாட்டை குறைக்கிறதாம். இதுவும் ஓரளவு உண்மையாகவே தெரிகிறது.
:)
என்னுடைய முந்தைய பதிவு: Jerk Off
சிவா,
//ஒரு சச்சின் டெண்டுல்கரோ, விஸ்வநாதன் ஆனந்தோ தமது நேரத்தை இப்படிச் செலவிட்டிருப்பார்களா?//
என்ன அவ்ளோ ஆணித்தரமாக ஒரு முடிவாக அந்த "சாதித்தவர்களைப்" பற்றியான கணிப்பில் கூறியிருக்கிறீர்கள்.
அவர்களும் அடிப்படையில் மனிதர்கள்தாம் ;-). அதற்காக இதனையே முழு நேர வேலையாக எண்ணியிருக்க வேண்டியதில்லை :-))
மற்றபடி தாங்களின் எண்ணவோட்டங்களை மற்றவர்களிடமும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. எது, எது எப்பப்பா செய்யணுமோ அதே மாதிரி அத அத அப்பப்பா செஞ்சுப்புடணுமுங்கோ, சிவா :-)))
நீங்க எங்கேயோ போயீட்டீங்க், பிரியுது உங்களோட வளர்ச்சி, நிஜமாலுமே...
சற்றும் ஏற்றுக் கொள்ளமுடியாத செய்திகள் கொண்ட பதிவு.
குற்ற உணர்வு இல்லாதவர்கள் சிலரை குற்ற உணர்வு கொள்ளவைப்பதும், இலேசாக இருப்பவர்களை பலமாக திசை திருப்புவதும், குற்ற உண்ர்வுடன் செய்து கொண்டிருப்பவர்களை பீதி கொள்ளச் செய்வதும் இப்பதிவின் பலன்களாக இருக்கும்.
இதை எதிர்த்துச் சொல்பவர் சிலர். தவறில்லை என்று சொல்பவர் மிகப் பலர். இதில் மருத்துவர்களும் மற்றவர்களும் ஏராளமாக உண்டு.
பாபாலாவின் பதிவு மிக முக்கியமானதும் அருமையானதுமாகும்.
ஒரு வாதத்துக்காக எல்லா ஆண்களும் இதைச் செய்வதை இன்று நிறுத்திவிடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். கொஞ்ச நாளில் உலகம் நாசமாய்ப் போய்விடும்.
மிருகக் காட்சி சாலைகளில் சில மிருகங்களுக்கு இது செய்துவிடப் படுவதுண்டு.
//உணர்வுகளைத் தூண்டி, உடலைத் தயார் செய்து, விந்து வெளியேற்றுவது ஒரு பெண்ணுடன் இணைந்து குழந்தை பெறுவதற்காக இயற்கை வகுத்த வழி.//
Fundamentally wrong you are.
//Then, are you against GLBT too (Gays, Lesbians, bi-sexual, transgender)?//
Balaji,
இன்னோரு பாயிண்ட விட்டுட்டீங்களே. எப்பெல்லாம் விந்து வெளிடறாரோ அப்பெல்லாம் குழந்தையா ஆக்கிட்டுத்தான் விடுவேன்னு அடம்புடிச்சாருன்னு வைங்கோ, பாப்புலேசன் பிரச்சினை என்னத்துக்காகிறது. அப்புறம், ஒருதடவையே மில்லியன் வருதே, அத்தனையும் குழந்தையாக்கிட்டுத்தான் விடுவாரமா? இவரப் படைச்ச கடவுளேல்ல வேண்டாம்னு முடிவெடுத்து ஒரு மில்லியன்ல ஒண்ணுதான் பிழைச்சாலும் பிழைக்கும்னெல்லாம் அவரேல்ல முடிச்சுட்டாரு.
// இரண்டு பக்கமும் கட்சி கட்டிக் கொண்டு விவாதிக்கிறார்கள். //
இததான் யூஸ் பண்ணி நிறய பேரோட வாழ்க்கை ஓஓஓடிக்கிட்டிருக்கு.
//குற்ற உணர்வு இல்லாதவர்கள் சிலரை குற்ற உணர்வு கொள்ளவைப்பதும், இலேசாக இருப்பவர்களை பலமாக திசை திருப்புவதும், குற்ற உண்ர்வுடன் செய்து கொண்டிருப்பவர்களை பீதி கொள்ளச் செய்வதும் இப்பதிவின் பலன்களாக இருக்கும்//
true. good point mate.
btw, I will NOT come back to this site. me no time wasting.
ஒட்டு மொத்தமாக இது பற்றி.. பொதுப் பார்வைக்கு வர முடியாதுங்கண்ணா..
ஆனா.. நாள் ஒன்றுக்கு ஒன்பது முறை என்ற அளவில் இருப்பவர்களை குறைத்துக்கொள்ளச் சொல்லலாம்.
நிறுத்தச்சொல்ல முடியாது.
அவசியமான வயதில் பாலியல் உணர்வுகளுக்கு வடிகாலாக.. பண்பாடு என்பதை காரணம் காட்டி மணம் முடித்து வைக்கத் தொடங்கி விட்டால்.. பலவிதமான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்து விடும்.
இன்று பெரிய அளவில் சாதிக்கும் பலரும் பாலியல் வடிகாலுக்கு வழி இருப்பவர்கள் தான் என்பதையும் உணர வேண்டும்.(சிலருக்கு வெளியே தெரியுது, சிலர் மறைக்கிறார்கள் என்பது தான் உண்மை)
சிவக்குமார்,
பலவிதங்களிலும் இது பலனில்லாததும் திசை திருப்புவதும் விதண்டாவாதமானதுமான பதிவு.
//சோதிடம் பார்க்க வருபவர்களிடம் 'உங்களுக்கு ஒரு பெரிய கவலை மனதில் இருக்கிறது' என்று ஆரம்பிப்பது பாதுகாப்பானது. கவலை இல்லா விட்டால் சோதிடம் பார்க்க ஏன் வருகிறார்கள்//
இது சோதிடம் அல்ல. மருத்துவம். அத்தனை மருத்துவர்கள் சொல்வதை திரைச்சித்ராவும் சொன்னால் அதனால் அதை மறுத்துவிடுவீர்களா? நேரவிரயம் என்பதைத் தவிர வேறு எந்த காரணத்தியும் நீங்கள் சொல்லவில்லையே!
//சுயஇன்பத்துக்குப் பிறகு ஏற்படும் குற்றஉணர்ச்சி தவிர்க்கவே முடியாது. //
பலருக்கு நிச்சயமாக இல்லை. சிலருக்கு ஏற்படுது இதுபோன்ற ஆதாரமற்ற திசை திருப்பும் பதிவுகளைப் படிப்பதாலும் சுய தெளிவு இல்லாததாலும் இதைத் தெளிவு படுத்திக் கொள்ள வெட்கப் படுவதாலும்.
சச்சின் போன்ற பிரபலமானவர்களை நேரடியாக இந்த அந்தரங்க விஷயத்தில் தொடர்பு படுத்தி மேற்கோள் காட்டுவது எந்த விதத்தில் நியாயமானது? எந்த விதத்தில் நாகரீகமானது? இது தண்டனைக்குரிய குற்றமாகக் கூட இருக்கக்கூடும்.
//நேரவிரயம் என்பதைத் தவிர வேறு எந்த காரணத்தியும் நீங்கள் சொல்லவில்லையே!//
அதைத்தான் வலியுறுத்திச் சொல்ல வந்தேன். சரியான தகுதிகள் இல்லாமல் குற்றுவுணர்ச்சி பற்றி எழுதியது தவறுதான்.
//சச்சின் போன்ற பிரபலமானவர்களை நேரடியாக இந்த அந்தரங்க விஷயத்தில் தொடர்பு படுத்தி மேற்கோள் காட்டுவது எந்த விதத்தில் நியாயமானது? எந்த விதத்தில் நாகரீகமானது?//
'இப்படியே விளையாடிக் கொண்டிருந்தால், நீ எப்படி சச்சின் டெண்டூல்கர் போல பெரிய ஆளாக முடியும்' என்று சொல்வதில் என்ன நாகரீகக் குறைவு ஓகை?
அன்புடன்,
மா சிவகுமார்
கருத்துரையிடுக