புதன், அக்டோபர் 11, 2006

பில்கேட்சும் பிச்சைக்காரனும் (economics 29)

  • 'கேகே நகர் அருகில் நடைபாதையில் ஒரு மூலையில் அடுப்பு, சில பாத்திரங்கள். கணவனும் மனைவியும் கூலி வேலைக்குப் போய் காசு கொண்டு வந்தால் மாலையில் உலை கொதித்துக் குழந்தைகளுக்குச் சாப்பாடு. ஒரு நாள் உடம்பு சரியில்லை என்றால், வயிற்றுக்கு ஈரத்துணிதான்' என்று அன்றாடம் கஞ்சி காய்ச்சும் கோடிக் கணக்கானவர்கள் ஒரு பக்கம்.

  • மகன்களின் திருமணத்துக்காக ஊரையே அலங்கரித்து ஐநூறு கோடி ரூபாய் செலவளித்து இந்தித் திரைப்பட உலகையும், அரசியல் அரங்கையும் வரவழைத்துக் 11,000 விருந்தினர்களுடன் கொண்டாடிய சகாரா குழும தலைவர் சுப்ரதா ராய் இன்னொரு பக்கம் .

ஏன் இவ்வளவு வேறுபாடுகள்? வாழ்க்கைத் தரங்கள் எப்படி மாறுபடுகிறன? ஏன் சிலருக்கு நாள் வருமானம் நூறு ரூபாய்க்குள் இருக்கிறது, சிலருக்கு சில கோடிகளாக இருக்கிறது?

கடற்கரையில் கடலை விற்றால் பத்து ரூபாய் ஆதாயமும், ரிலையன்ஸ் பெட்ரோல் விற்றால் ஆயிரக்கணக்கான் ஆதாயமும் கிடைப்பது ஏன்?

சென்னை நுங்கம்பாக்கத்தில் நிலத்தின் விலையும் திருநெல்வேலி தாண்டி பொட்டல் காட்டில் நிலத்தின் விலையும் ஏன் வேறுபடுகின்றன?

சம்பள வேறுபாடுகளைத் தீர்மானிப்பவை

  • இருதய அறுவைச் சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் இருபது ஆண்டுகளுக்கு மேலாகப் படித்து, பல ஆண்டுகள் அனுபவம் ஈட்டி வருவதால் தேவை அதிகமாக அதிகமாக புதிதாக நிபுணர்கள் எளிதில் உருவாகி விட முடியாது.
    நவீன வாழ்க்கை முறை, மருத்துவ முன்னேற்றங்களினால் இருதய சிகிச்சை நிபுணர்களின் தேவையும் அதிகரித்துக் கொண்டே போக அவர்களுக்குக் கிடைக்கும் சம்பளம் அதிமாக இருக்கிறது. - தேவை உயர்ந்து கொண்டே போக, வழங்கல் அதிகமாக முடியாத துறை.

  • கடற்கரையில் கடலை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கைக்கேற்ப அரைக் கால் சட்டை போட்ட கடலை விற்கும் பையன்கள் எத்தனை வேண்டுமெனறாலும் கூடிக் கொள்ளலாம். பல ஆண்டுகள் படிப்பில் முதலீடு தேவையில்லாத வேலையில் உழைப்புக்கான ஊதியமும் குறைவு. - தேவைக்கேற்ப வழங்கல் அதிகமாகிக் கொள்ளும் வேலை.

  • இணைய வசதி வந்த பிறகு மொழிபெயர்ப்பு சேவையின் சந்தை அளவு விரிந்து விட்டது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனும் ஆங்கிலமும் தெரிந்த தமிழருக்கு சென்னையில் மொழிபெயர்ப்பு வாய்ப்புகள் கிடைப்பது மாக்ஸ்முல்லர் பவன் மூலம் மட்டுமே இருந்திருக்க வேண்டும்.

    இன்றைக்கு இணையத்தின் மூலம் உலகின் எந்த மூலையிலிருந்தும் தேவைக்குச் சேவை அளிக்கும் வாய்ப்புக் கிடைக்க சென்னையில் இருக்கும் மொழிபெயர்ப்பாளருக்கு வருமானம் அதிகரிக்கிறது.
செயற்கையான சம்பள மாற்றங்கள்

  1. இப்படி ஒவ்வொரு துறையிலும் தமது சம்பள வீதத்தை அதிகரித்துக் கொள்ள முனைகிறார்கள் தொழிலாளர்கள். தொழிற்சங்கங்கள் அமைப்பதன் மூலம், சங்க உறுப்பினர் மட்டும்தான் வேலைக்கு வைத்துக் கொள்ள அனுமதிப்போம் என்று வழங்கலை மட்டுப் படுத்தி தொழிற்சாலையில் கிடைக்கும் ஊதியத்தை உயர்த்திக் கொள்கிறார்கள்.

  2. சில ஆண்டுகள் பணி செய்யும் CA ஒருவரிடம் வேலை பார்த்து, CA தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால்தான் தணிக்கையாளர் ஆகலாம் என்று விதி அமைத்து Chartered Accountant பணிக்கு வருபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறார்கள்.

  3. மறுபுறம் வேலை கொடுப்பவர்கள் எதிர்மறையான வேலைகளில் இறங்குகிறார்கள். அமெரிக்காவில் தகவல் தொழில் நுட்ப துறையில் சம்பளங்கள் மிக அதிகமாக ஏறிக்கொண்டிருப்பதைத் தடுக்க H1 விசா என்ற பிரிவில் இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான பேரை அமெரிக்காவுக்கு வர அனுமதி பெற்று அமெரிக்க நிறுவனங்கள் தமது சம்பளச் செலவுகளைக் குறைக்க முயற்சி செய்தன.

அரசின் கொள்கைகளும் சம்பள அளவைத் தீர்மானிக்கின்றன.
  • எல்லாக் குழந்தைகளுக்கும் பதினைந்து வயது வரைக் கட்டாயக் கல்வி என்று முன்னேறும் பார்வை கொண்ட சமூகங்கள் தீர்மானித்துள்ளன. பத்து ஆண்டுகளாவது கல்வியில் முதலீடு செய்து மக்களின் திறமையை வளர்த்து விட்டால் திறன் குறைந்த வேலையில் குறைந்த சம்பளத்தில் வறியவர்களாக வாழும் நிலையைத் தவிர்க்கலாம்.

  • குறைந்த பட்ச ஊதியம் என்று ஒரு தொகையை சட்டம் மூலம் கட்டாயம் ஆக்குவதன் மூலம் முதலாளிகள் வேறு வழியில்லாத தொழிலாளர்களை ஏய்ப்பதை தடுத்து ஊதிய அளவை உயர்த்துகின்றன அரசுகள்.

  • குழந்தைகளை குறைவான கூலிக்கு வேலைக்கு அமர்த்துவதன் மூலம் சம்பளச் செலவைக் குறைக்க முயற்சி செய்வதும் சட்ட விரோதம்.

  • ஒரே வேலை செய்யும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் வேறு வேறு ஊதியம் கொடுப்பது போன்ற தட்டிக் கேட்க முடியாதவர்களை ஏய்க்கும் போக்கை ஒரே வேலைக்கு ஒரே ஊதியம் என்று சட்டங்கள் இயற்றுகின்றன.
சரி, பில் கேட்சுக்கு ஏன் இவ்வளவு வருமானம்?

7 கருத்துகள்:

dondu(#11168674346665545885) சொன்னது…

"இன்றைக்கு இணையத்தின் மூலம் உலகின் எந்த மூலையிலிருந்தும் தேவைக்குச் சேவை அளிக்கும் வாய்ப்புக் கிடைக்க சென்னையில் இருக்கும் மொழிபெயர்ப்பாளருக்கு வருமானம் அதிகரிக்கிறது."
அதிசயம் ஆனால் உண்மை. தற்சமயம் சென்னையிலேயே அதிக வேலை கிடைத்து விடுகிறது. ரேட்டும் சென்னையில்தான் நன்றாகக் கிடைக்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பழூர் கார்த்தி சொன்னது…

மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.. முந்தைய இடுகைகளையும் படித்து விடுகிறேன்...

***

பாராட்டுக்கள் !!

மா சிவகுமார் சொன்னது…

நன்றி டோண்டு சார்.

மொழிபெயர்ப்பு துறை கொடி கட்டிப் பறக்கிறது என்று ஏஜன்சி நடத்தும் ஒரு நண்பரும் சொன்னார். எழுதும் போது உங்களை மனதில் வைத்துதான் எழுதினேன் :-)

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

பாராட்டுக்களுக்கு நன்றி சோம்பேறி பையன்.

மற்ற பதிவுகளையும் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தவறாமல் பதிவு செய்யுங்கள். பொருளாதாரம் பற்றிய ஒரு சிறப்பான தொகுப்பு உருவாக்க வேண்டும் என்று நோக்கம், அதற்கு அனைவரது பங்களிப்பும் உதவும்.

அன்புடன்,

மா சிவகுமார்

பத்மா அர்விந்த் சொன்னது…

சிவகுமார்
கணிணித் துறையிலும் ஒரு மாற்றத்தை முதன்முதலில் மக்களால் எளிதாக பயன்படுத்தும் வகையில் கொண்டுவந்ததும், பல அலுவகங்கள் இதனால் மிகப்பெரிய பயனடைந்ததும் இதற்கு ஒருகாரணம். இன்று பல படிப்பறிவில்லாத பாமர மக்கள் கூட கணிணியை உபயோகிக்க வகையில் click and use முறையை கொண்டுவந்ததோடு மட்டும் இல்லாமல் அதனை மிக சிறந்த இணைப்பொருட்களையும் அடுக்கடுக்காஅக கொண்டுவந்த நுட்பத்திற்காகவும் இந்த பணம்.
அதேபோல எளிதாக யாரும் வரக்கூடிய துறையில் இத்தனை அளாவு பணம்/வருமானம் கிடைப்பது கடினம். மேலும் தன் நிறூவனத்தீற்கான ஒரு brandதோற்றூவித்து அதற்கு ஒரு மதிப்பும் ஏற்படுத்தியதும் முக்கியம். சோனி பொன்ற நிறூவனங்களின் இந்த rand value is very high as well.

மயிலிறகு சொன்னது…

Sinthikka vaikkum pathivu..

மா சிவகுமார் சொன்னது…

நன்றி மயிலிறகு.

அன்புடன்,

மா சிவகுமார்