செவ்வாய், அக்டோபர் 10, 2006

பின்னூட்ட பரிசு அறிவிப்பு

பொருளாதாரம் பற்றிய தொடரில் இடப்பட்ட பின்னூட்டங்களின் ஐந்தாவது வாரத் தொகுப்பு.

பொருளாதாரம் பற்றிய தொடருக்கான சிறந்த பின்னூட்டத்துக்கு பொருளாதாரம் தொடர்பான புத்தகங்கள், அல்லது விரும்பிய புத்தகங்களை புத்தகக் கடையில் வாங்கிக் கொள்ளுமாறு பரிசுக் கூப்பன் அளிப்பது நல்லது என்ற கருத்தை ஏற்று இந்த வாரம் முதல் (அக்டோபர் 11 முதல் தொடங்கும்) சிறந்த பின்னூட்டத்துக்கு 250 ரூ மதிப்புள்ள பரிசு கூப்பன் அளிக்கப்படும்.

4 கருத்துகள்:

பொன்ஸ்~~Poorna சொன்னது…

அதுக்குள்ளயா? வாரம் சீக்கிரம் முடிந்துவிட்டதா, பதிவுகளின் எண்ணிக்கை குறைந்ததால் எனக்கு இப்படித் தோன்றுகிறதா ? :)

மா சிவகுமார் சொன்னது…

புதன், வியாழன், வெள்ளி, சனி என்று வாரம் நான்கு பதிவுகள் பொன்ஸ். இந்த வாரப் பதிவுகள் நாளை முதல் தொடங்கும்.

அன்புடன்,

மா சிவகுமார்.

Muthu சொன்னது…

சிவா,

பழைய புக் எல்லாம் தள்ளி விட்டாச்சா?:))

தமாசு தாங்க...

மா சிவகுமார் சொன்னது…

:-)

வாங்க முத்து,

தமாசு இருக்கட்டும். எனக்கென்னவோ புது புத்தகங்களை விட யாராவது ஒருவர் படித்து நன்றாயிருக்கிறது என்று கொடுக்கும் புத்தகங்களுக்கு மதிப்பு அதிகம் என்று நினைப்பு. எனக்குப் பிடித்தப் புத்தகங்களைப் பேய் போலக் காத்து வந்த காலங்களும் உண்டு. நூற்றுக் கணக்கான புத்தகங்களை எப்போதாவது படிப்போம் என்று அடுக்கி வைத்து நினைக்கும் போதெல்லாம் எடுத்துப் படித்துக் கொள்ளும் சுகத்துக்கு ஈடு உண்டா?

புத்தகக் கடையில் மேய்ந்து பிடித்ததைப் பொறுக்கி எடுப்பதும் இன்னொரு சுகம்தான்.

அன்புடன்,

மா சிவகுமார்