செவ்வாய், மே 16, 2006

ஆயிரம் ஆண்டுகளின் தன்னிகரில்லாத் தலைவன் - 10

காந்தியின் இறப்புக்கு இரங்கல் செய்தி அனுப்பாத ஒரே பெரிய நாடு சோவியத் யூனியனாம். தன்னுடைய வாழ்க்கைக்கு ரஷ்யாவின பெருமையான் கவுன்ட் டால்ஸ்டாயை ஆன்மீக வழிகாட்டியாகக் கொண்ட காந்தி, கடவுளை மறுக்கும் கம்யூனிஸத்தை ஏற்றுக் கொள்ள மறுத்ததே "தோழர்களின்" கோபத்துக்குக் காரணம்.

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப்படும்

என்ற வள்ளுவர் வாக்குக்கிணங்க வாழ்ந்த காந்தி, மனதில் துர் எண்ணங்களை ஒழித்து நல்ல சிந்தனைகளை வளர்த்திட இறைபக்தியே ஒரே வழி என்று கண்டார். கடவுளை மறுக்கும் ஒரு கோட்பாடு உண்மையை எப்படி அறிந்திருக்க முடியும் என்ற வெறுப்புதான் கம்யூனிசத்தையும், கம்யூனிஸ்டுகளையும் வலுவாக எதிர்க்கவும் கண்டிக்கவும் தூண்டியது.

காந்தியை தமது எதிரிகளாகப் பார்த்தவர்களின் பட்டியல்:

1. கடவுள் இல்லை என்று சொல்லும் கம்யூனிஸ்டுகள்
2. கடவுள் பக்தி கொண்ட இந்து தீவிரவாதிகள்
3. முஸ்லீம்கள், அவர்களை எதிர்க்கும் இந்துக்கள்
4. தாழ்த்தப்பட்டோர்களின் பிரநிதிகள்

ஆனால், இதை எல்லாம் தாண்டி சக மனிதன் மீது தான் கொண்டிருந்த அளவற்ற அன்பினால் கோடிக்கணக்கான, தன் தேசக் குடிமக்களையும், தன்னைப் பார்த்தேயிராத வெளிநாட்டவரையும் கட்டிப்போட்டவர் அந்த மந்திரவாதி.

கத்தியின்றி ரத்தமின்றி ஆங்கில ஏகாதிபத்தியத்தை இந்தியாவின் ஆன்ம சக்திக்கு முன் மண்டியிட வைத்தவர் அந்தப் படைத் தளபதி.

3 கருத்துகள்:

அசுரன் சொன்னது…

அதிருக்கட்டும், காந்தி ரெயிலிலிருந்து தள்ளி விட்ட பின்புதான் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டும் என்று விரும்பினார் என்பதன் மர்மம் என்ன? இந்த சம்பவம் பற்றிய காந்தியின் சுயசரிதையில் உள்ள அவரது எழுத்துக்களை படித்தால் சில விசயங்கள் புரிபடும்.

அதற்கு முன்பு வசதியான தனது இந்திய இங்கிலாந்து வழ்க்கையில் மக்கள் கஸ்டப்படுவது தெரியாமலேயே இருந்ததின் மர்மம் என்ன?

பெரும்பாலான மக்கள் போராட்டங்களில் அவர் நிலபிரபுத்துவ(இந்த வார்த்தை உங்களுக்கு அந்நியமான வார்த்தையில்லை என்று கருதுகிறேன். சிலருக்கு இந்த வார்த்தை பிடிப்பதில்லை) ஆதரவாக நிலைப்பாடு எடுத்துள்ளது ஏன்?

வன்முறையைக்கூட அரசு நடத்தினால் சரிதான் என்று பல நேரங்களில் முரன்பட்டதேன்?

சுபாஸ் சந்திர போஸ் தலைமை பதவிக்கு வர விடமால் மிரட்டல் நாடகம் நடத்தியது ஏன்?

அம்பேத்காரால் பலமுறை அம்பலப்படுத்தப்பட்டது ஏன்?


உங்களுக்கு வராலாற்று பொருள்முதல்வாதம் தெரியும் என்று நம்புகிறேன். ஆதலால் காந்தியைப் பற்றி மீண்ரும் பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நான் ஆய்வு செய்த வகையில் அவர் பிரிட்டிஸாருக்கு தேவைப் பட்ட ஒரு முகமூடி என்பதாகத்தான் தெரிகிறது.

when the mask was no more required, that is freedom struggle gone out of the mask, british gave freedom to us. and in this the role of USA should be mentioned.


காந்தியின் மறைவுக்கு இரங்கல் செய்தி அனுப்பாமல் இருந்தது அடிப்படை பண்பாடில்லாத செயல். அதை கம்யூனிச ரஸ்யா செய்திருக்கும் என்றால் எனக்கு அவமானமாகத்தான் உள்ளது.

மா சிவகுமார் சொன்னது…

போனபெர்ட்,

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. நீங்கள் எழுப்பிய கேள்விகள் அனைத்தும் நியாயமானவை. அவற்றிற்கு எனக்குத் தெரிந்தவரை விரிவாகப் பதில் சொல்கிறேன். இன்னும் இரண்டு வாரங்களுக்குப் பிறகு தனிப்பதிவாக வெளியிடுகிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்.

அசுரன் சொன்னது…

தங்களது காந்தி பற்றிய பதிவிற்க்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

காந்தியைவிட மிக மிக சிக்கலான ஒருவர் பாரதியார். சமீபத்தில்தான் அவரைப் பற்றி ஒரு நிலைப்பாட்டிற்க்கே வர முடிந்தது.

வாய்ப்பு இருந்தால் அவரையும் பற்றி நமது அனுவங்களை பகிர்ந்து கொள்ளலாம்.

தங்களுடன் உரையாடுவது(கணினியில் உரையாடுவதற்க்கு என்ன பெயர் வைக்கலாம்?) மிக்க இனிமையாக உள்ளது.

வாழ்த்துக்கள்!