செவ்வாய், மே 16, 2006

தமிழில் கையொப்பமிடுவோம்.

பத்தாம் வகுப்புச் சான்றிதழ் வாங்கும் போதே ஆங்கிலத்தில் கையெழுத்துப் போடும் வழக்கம் வந்து விட்டிருந்தது. அதற்கு முன் ஓரிரு ஆவணங்களில் தமிழில் கையெழுத்திட்டதாக ஞாபகம்.

தமிழில் கையெழுத்திடுவது சிறுபிள்ளைத்தனம், ஆங்கிலக் கையொப்பம்தான் நாம் வளர்ந்ததைக் காட்டுகிறது என்று ஆங்கிலத்தின் பெயரைக் கையொப்பமிட பழகிக் கொண்டேன். அதன் பிறகு அது அப்படியே ஒட்டிக் கொண்டு, இன்று வங்கிக் காசோலைகள், கடவுச் சீட்டு, அலுவலக ஆவணங்கள், பிற விண்ணப்பங்கள், ஓட்டுநர் உரிமம் என்று எல்லாவற்றிலும் ஆங்கிலத்தில்தான் கையொப்பம் உள்ளது.

கையொப்பம் குறிப்பிட்ட மொழியில்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. உலகின் எந்த மூலையில் சென்றாலும், தமிழிலேய கையொப்பம் இடலாம். ஒரு முறை போடும் கையொப்பம் பிற கையொப்பங்களோடு ஒத்திருக்க வேன்டும் அவ்வளவுதான். படிப்பவருக்கு புரிய வேண்டும் என்ற தேவை கிடையாது.

இனிமேல் உருவாக்கும் ஆவணங்கள் எல்லாவற்றிலும் தமிழிலேயே கையொப்பமிடலாம். ஏற்கனவே சான்றுக் கையெழுத்தாகப் போட்டவற்றையும் படிப்படியாகத் தமிழுக்கு மாற்ற முயலாம்.

இதே போலத்தான் பெயரின் முதலெழுத்து. அது ஏன் ஆங்கிலத்தில் உள்ளது?

10 கருத்துகள்:

பிரதீப் சொன்னது…

சரியாச் சொன்னீங்க.
எனக்கு திடீருன்னு தமிழில் கையெழுத்துப் போடும் ஆர்வம் ரொம்ப லேட்டா வந்துச்சு.
ஆனா அதுக்குள்ள எல்லா அஃபிசியல் ஆவணங்களிலும் ஆங்கிலக் கையெழுத்துக் குடிகொண்டு விட்டது.

அதனால் இன்று அன் அஃபிசியலாக (கடிதத்தைப் பெற்றுக் கொண்டேன், ஆபீஸ் பஸ்ஸில் அட்டெண்டென்ஸ், இதர) எங்கெல்லாம் கையெழுத்துப் போட வேண்டுமென்றாலும் தமிழில் தான் போடுகிறேன்.

மா சிவகுமார் சொன்னது…

நானும் ஆரம்பித்து விட்டேன் பிரதீப் :-).

முத்துகுமரன் சொன்னது…

பத்தாம் வகுப்பு மதிப்பெண்தாளில் தமிழில் கையெழுத்திட்டுத்தான் பெற்றுக் கொண்டதை நினைத்து இப்பொழுது மனசுக்குள் ஒரு சிறு மகிழ்ச்சி....

மா சிவகுமார் சொன்னது…

பத்தாம் வகுப்பில் தப்பிட்டீங்க முத்து குமரன். எப்போ ஆங்கிலத்துக்கு மாறினீங்க? மாறவேயில்லையா?

அன்புடன்,

Suka சொன்னது…

சிவக்குமார்... நல்ல பதிவு.. பார்க்கலாம் , இதற்கு ஆர்வம் எப்படி இருக்கிறது என.

நான் எனது 12 ஆம் வகுப்பிலிருந்து இன்று வரை அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையெழுத்திட்டு வருகிறேன்..இது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை..

//
கையொப்பம் குறிப்பிட்ட மொழியில்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. உலகின் எந்த மூலையில் சென்றாலும், தமிழிலேய கையொப்பம் இடலாம். ஒரு முறை போடும் கையொப்பம் பிற கையொப்பங்களோடு ஒத்திருக்க வேன்டும் அவ்வளவுதான். படிப்பவருக்கு புரிய வேண்டும் என்ற தேவை கிடையாது.

//


இது உண்மை தான் என்றாலும், தமிழ்நாட்டில் இருக்கும் போது பிரச்சனை ஏது இல்லை. இதுவே நீங்கள் கர்நாடகாவில் இருந்து ஒரு வங்கி ஆவணத்தில் கையொப்பமிடும்போது தமிழில் இருந்தால் கொஞ்சம் சிக்கல் அதிகம்.

என்னுடைய வீடு கிரய ஆவணம் ஒன்றில் கையொப்பமிட்டதுக்கு , மாஜிஸ்ட்ரேட் அனுமதி..அதனால் காலவிரயம் என சில ஆயிரங்களை இழக்க நேரிட்டது.. மன உளைச்சல் வேறு..

குறிப்பாக ஆவணம் ஆங்கிலத்திலிருந்து அதில் நீங்கள் தமிழில் கையொப்பமிட்டால் அ, தனியாக ஒரு ஆவணம் (பெயர் மறந்துவிட்டது) அதாவது "ஆங்கிலம் தெரியாத இவருக்கு நான் படித்துக் காண்பித்தேன்" என ஒரு நண்பரிடம் கையெழுத்து வாங்கவேண்டியது அவசியம்.அங்கில அறிவு இல்லதவராகவே அவர் கருதப் ப்டுவார்..

எனவே கொஞ்சம் தயாராகி தமிழை ஆரம்பியுங்கள்.. வாழ்த்துக்கள்..

மா சிவகுமார் சொன்னது…

வணக்கங்கள் ஐயா!

ஆங்கிலம் தெரிந்தவர்களில் தமிழிலேயே கையொப்பம் இடும் யாருமே இருக்க மாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். உங்கள் பழக்கத்தைப் பற்றி அறிந்தி மிகவும் மகிழ்ச்சி. உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

வேற்று மொழியில் பத்திரம் இருந்து், கையொப்பம் அதே மொழியில் இல்லா விட்டால் இன்னொரு சான்றிதழ் இணைக்க வேண்டும் என்பது நம் ஊரில் சிரமம்தான். அதே ஆவணத்தில், ஆங்கிலத்தில் புரிந்து கொண்டேன் என்று எழுதி தமிழில் கையெழுத்திட்டால் போதாதா என்ன?

வெற்றி சொன்னது…

மா.சிவகுமார்
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

பி.கு :- தங்களின் பதிவுகளுக்கு யாராவது பின்னூட்டம் இட்டு நீங்கள் அவற்றை அனுமதித்த பின்னர், தங்களின் பதிவுகள் "அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்" எனும் தலைப்பின் கீழ் தமிழ்மண முகப்புப் பக்கத்தில் வருகுதில்லை என நினக்கிறேன். எதற்கும் ஒரு தடவை சோதித்துப் பாருங்கள்.

Suka சொன்னது…

ஐயோ சிவக்குமார் :)

என்ன தமிழ் வகுப்புக்கு ஆசிரியர் வரும் போது சொல்றமாதிரி 'வணக்கம்' போடுறீங்க .. பயமா இருக்கு :D

அப்புறம் .. மாஜிஸ்ட்ரேட் கிட்ட ஒரு லெட்டர் வாங்கிவெச்சுட்டீங்கன்னா போதும்ன்னு நினைக்கிறேன்.

என் கையெழுத்து தமிழ் தெரிஞ்சவங்களுக்குத்தான் அது தமிழ் ன்னு தெரியும் ...இல்லைன்னா இங்லிஷ் இல்லைன்னு யாரும் சொல்லமுடியாது :) அதனால எனக்கு தமிழ் கையெழுத்து போடறதுல இருக்கற முழு சிக்கல் தெரியல.. வேற யாராவது இன்னும் நல்ல தெரிஞ்சவங்க சொன்னா நல்லாயிருக்கும்.

மா சிவகுமார் சொன்னது…

வெற்றி,

அதில் ஒரு சின்ன சிக்கல். நான் என்னுடைய வலைப்பதிவில் பின்னூட்டங்களுக்கு மட்டுறுத்தலைச் செயல்படுத்தவில்லை. வெளிப்படையான விவாதத்துக்கு மட்டுறுத்தல் தடை விதிக்கிறது என்பது எனது கருத்து. பின்னூட்டம் மட்டுறுத்தல் செய்யப்படாவிட்டால் தமிழ் மணம் அவற்றை அண்மையில் மறுமொழியப்பட்ட பட்டியலில் சேர்ப்பதில்லை.

அதற்காக பின்னூட்டம் மட்டுறுத்தலை செயல்படுத்த வேண்டுமா என்பதுதான் கேள்வி :-)

மா சிவகுமார் சொன்னது…

சுகா,

தமிழிலேயே கையொப்பம் போடுகிறேன் என்று நீங்கள் சொன்னதும் வந்த மரியாதை அது :-) உங்களுக்கு மீண்டும் என் வணக்கங்கள், கொண்ட கொள்கையில் பிடிப்பாக இருந்து வரும் உங்களுக்குப் பாராட்டுக்கள் !


அன்புடன்,