திங்கள், மே 15, 2006

ஐயோ பாவம் தமிழகம்

முதலமைச்சர் பணிக்கு தான் வாங்கும் எட்டாயிரத்துச் சொச்சம் ரூபாய் சம்பள உறையை திறந்து கூடப் பார்க்காமல் கட்சி அலுவலகத்தில் கொடுத்து விட்டு, முழு நேர கட்சிப் பணியாளராக கட்சி கொடுக்கும் 3200 ரூபாயை வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போகிறார் மேற்கு வங்காளத்தின் முதல்வர் புத்ததேப்.

இவரது சொத்து விவரங்கள் (தேர்தல் ஆணையகத்திடம் சமர்ப்பித்தது)

வங்கிக் கணக்குகள், வைப்புத் தொகைகள், ரொக்கப்பணம், அஞ்சலக சேமிப்பு, ஆயுள் காப்பீடு, மோட்டார் வண்டிகள், நகைகள், நிலம், கட்டிடங்கள் எதுவுமே சொந்தம் கிடையாது.

ஒரே கெட்டப் பழக்கம் புகை பிடிப்பது, அதற்கு நண்பர்களிடமிருந்து சிகரெட்டுகளை அன்பளிப்பாகப் பெற்றுக் கொள்கிறார். மனைவி ஒரு தனியார் நிறுவனத்தில் நூலகராகப் பணி புரிகிறார். அவர் சம்பளமும் குடும்பத்திற்கு வருகிறது. அவர்கள் வாழ்வது ஒரு இரண்டு அறை ஒட்டுக் குடித்தனத்தில்.

நம்ம ஊர் மக்கள் தொண்டர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் மனத்தைப் பிசைகிறது. கோடிக் கணக்கில் அசையும், அசையாச் சொத்துகள், மிகச் சிலரே வாழ முடிகிற மேல் தட்டு வாழ்க்கை முறை. இவர்களில் ஒருவர் மாறி மாறி முதலமைச்சராக வருவதுதான் தமிழகத்தின் தலையெழுத்து.

ஐயோ பாவம்.

11 கருத்துகள்:

VSK சொன்னது…

செய்தியைப் படித்துக் கண்ணீர் விட்டேன்!

'தலையெழுத்தை' நினைத்து ரத்தக் கண்ணீர்தான் விட வேண்டும்!

Santhosh சொன்னது…

ஒண்ணு விட்ட சித்தாபாவின் மச்சானின் தம்பியின் மாமனாரின் ஒண்ணுவிட்ட தம்பியின் பக்கத்து வீட்டுக்காரன் மாவட்டமா இருக்கும்பொழுதே நாம் விடற அலம்பல் தாங்குவது இல்ல. முதலில் மக்கள் திருந்தணும் இல்லாட்டி இது மாதிரியான தலைவர்கள் கிடைப்பது என்பது முடியாத காரியம்.

மா சிவகுமார் சொன்னது…

நன்றி,

இந்தச் செய்தி இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதளில் வெளி வந்தது.

வஜ்ரா சொன்னது…

என்ன தான் நான் அதி தீவிர கம்யூனிஸ எதிரி என்றாலும். ஒரு விஷயத்தில் கம்யூனிஸ்டுகளைப் பாராட்டியே ஆக வேண்டும். லஞ்சம், ஊழல் பலரிடம் இருக்காது, அது ஒரு நல்ல விஷயம். இது இந்தியாவில் தான் என்பதும் உண்மை.

ஆனால் அதே சமயத்தில் மிட்ரோகீனையும் மறக்கலாகாது.

வேறு நாடுகளில் உள்ள கம்யூனிஸ்டுகளைப் பாருங்கள், தன் நாட்டு மக்கள் குடிக்க தண்ணீர் இருக்காது, ஆனால் இவர்கள் சும்மிங் பூலுடன் பங்களாவில் வாழ்ந்து கொண்டிருப்பர்.

வஜ்ரா ஷங்கர்.

மா சிவகுமார் சொன்னது…

அது எல்லாம் கம்யூனிசம் இல்லை ஷங்கர்,

நம்ம ஊரிலும், கம்யூனிஸ்டு கட்சி பிரபலமாகி பல்வேறுபட்ட மக்களை உள்ளே அனுமதித்தால் நிலைமை மாறி விடும். பாஜக ஆட்சிக்கு வந்ததும், சந்தர்ப்பவாதிகள் பலர் ஊடுருவியது போல, அதிகாரம் வரும்போது இடைச்செருகல்களை தவிர்ப்பது எளிதில்லை. இந்திய கம்யூனிஸ்டுகள் இதுவரை நன்றாக சமாளிக்கிறார்கள் என்றுதான் தெரிகிறது.

சிவக்குமார் (Sivakumar) சொன்னது…

நல்ல பதிவு.

மா சிவகுமார் சொன்னது…

கண்டிப்பாக மூர்த்தி,

அரசின் வருமானத்தில் பெரும்பகுதி, அதிகார வர்க்கத்தின் தேவைகளுக்கு நேரடியாகவும், சட்ட விரோதமாகவும் போய்ச் சேர்ந்து விட்டால் மக்களுக்கு என்ன மிஞ்சும். இந்த "மக்கள் தொண்டர்களை" அரசியலில் இருந்து களை எடுத்தால்தான் இந்தியாவில் வறுமை ஒழியும்.

மா சிவகுமார் சொன்னது…

நன்றி விஜயன்.

அன்புடன்,

பிரதீப் சொன்னது…

தனி மனித ஒழுக்கத்தில் மற்ற கட்சியினரை விடப் பொதுவுடைமைக் கட்சியினர் பல மடங்கு தூய்மையாக இருக்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

வங்காளத்தில் கம்யூனிஸ்டுகள் மட்டுமில்லை மம்தா பேனர்ஜி கூட இப்படித்தான் !

மா சிவகுமார் சொன்னது…

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் உறுப்பினர்களும் சொத்து சேர்க்காமல் தாங்கள் நம்பும் கொள்கைக்காக வாழ்க்கையையே அர்ப்பணித்தவர்கள்தான்.

மா சிவகுமார் சொன்னது…

மூர்த்தி,

காங்கிரஸின் கருணாகரனின் கதை வேறு என்று நினைக்கிறேன்.