புதன், மே 17, 2006

"மெரிட்"டும் இடஒதுக்கீடும்

இட ஒதுக்கீட்டை எதிர்த்து ஆங்கில செய்தி ஓடைகளில் நடைபெறும் விவாதங்களில் அடிக்கடி குறிப்பிடப்படும் ஒன்று இட ஒதுக்கீட்டால் தரம் குறைந்து விடும்' "மெரிட்" மாணவர்கள் "மெரிட்" இல்லாத மாணவர்களால் வஞ்சிக்கப்படுவார்கள் என்று மேல் தட்டு பையன்களும் பெண்களும் நாசூக்கான ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். இணைய விவாத மையங்களிலும், அஞ்சல் குழுக்களிலும் இதே வாதம் முன் வைக்கப்படுகிறது.

சரி, "மெரிட்" எனப்படும் தகுதி என்பது என்ன? அதை வரையறுத்தது யார்? பள்ளி இறுதி வகுப்பில் எடுக்கும் மதிப்பெண்களும், நுழைவுத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களும் மட்டும்தான் தகுதியைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்பட வேண்டுமா?

மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில், ஒருவர் ஓரிரு ஆண்டுகள் பணி அனுபவத்துக்குப் பிறகு விண்ணப்பித்தால் அந்த விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். யாரும் யாருக்கும் குறைந்தவர்கள் கிடையாது. இறுதித் தேர்விலும், நுழைவுத்தேர்விலும் மதிப்பெண் பெறும் திறமை ஒரு குழுவினரிடம் இருந்தால், மற்ற குழுவினரிடம் (பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர்) சமமான வேறு திறமைகள் இருக்கும். அந்தத் திறமைகளை கணக்கில் எடுத்துத் தகுதியைக் கணக்கிடலாமா?

எடுத்துக்காட்டாக, ஒரு விவசாயின் மகன் மண்வெட்டி பிடித்து வேலை செய்யும் திறமை பெற்றிருக்கலாம், அதுவே ஒரு கல்லூரிப் பேராசிரியரின் மகனுக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் இருவருமே "தகுதி"ப் போட்டியில் பேனா பிடித்து காகிதத்தில் எழுதும் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் போட்டியிட வேண்டி இருப்பது எப்படி நியாயம்? விவசாயின் மகனுக்கு மதிப்பெண் குறைந்து விட்டதால் அவருக்கு தகுதி இல்லை என்று எப்படி முடிவு செய்ய முடியும்?

ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்த வசதிகளை பகிர்ந்து கொள்ளும் நேரம் வரும்போது எழுப்பப்படும் வாதங்கள் மிகவும் செயற்கையாக தென்படுகின்றன.

4 கருத்துகள்:

வஜ்ரா சொன்னது…

நல்ல கேள்வி தான்!!

நம்ம மக்கள் எல்லாரும் தம் புள்ள எஞ்சினியர் ஆகணும் டாக்டர் ஆகணும்னு தான நெனக்கிறான்...வெள்ளாமெ பாக்கணும்னு யாரும் நெனக்கிறதில்லெ...

வஜ்ரா ஷங்கர்.

மா சிவகுமார் சொன்னது…

வெள்ளாம பார்க்க அவ்வளவு பேர் தேவையில்லை. வெள்ளாமை பார்ப்பவரின் மகன் வெள்ளாமையையே பார்க்க வேண்டும் என்று இல்லாமல் அவர் விரும்பும் துறையைத் தேர்ந்தெடுக்க வழி செய்து கொடுக்க வேண்டிதான் இடஒதுக்கீடுகள். சரிதானே?

வஜ்ரா சொன்னது…

சிவகுமார்,

அதைச் சரி செய்ய இடஒருக்கீடு தவிர வேறு வழிகள் இல்லையா?

இட ஒருக்கீடு என்பது குறுகிய காலப் பலன் தரும் வழி, On a long run its a disaster.

இதனால் இட ஒருக்கீடு வங்கி முன்னேரிய ஜாதி ஒன்று உருவாகி இருப்பதை நீங்கள் கண்கூடாகப் பார்க்கலாம். இவர்கள் தம் மக்களையும் முன்னேர விடாமல், அடுத்தவர்களையும் முன்னேர விடாமல் தடுத்து வைத்திருப்பதையும் 50 ஆண்டுகால இடஒதுக்கீடு கற்றுகொடுக்கும் பாடம்.

இது சமுதாயம் பிளவுபட்டு சீரழிய வழி.

நன்றி,
வஜ்ரா ஷங்கர்.

அசுரன் சொன்னது…

Good Posting Sivakumar.

I do oppose those who oppose reservation.

The reason is that majority of those who oppose reservation have upper class affiliation and afriad of loosing opportunities with other caste.

Even they will suggest alternate solutions.

The only way to identify them is that they won't to anything worth for the suggestions they propose instead of reservation. they won't do anything for social justice. Though they protest vehemently and even taking to street for anti reservation.

I have no illusion that reservation will do magic. But I am against those who protest reservation.

Here you can find my perception about reservation.

http://kaipulla.blogspot.com/2006/05/reservation-haunts-againmore-teeth.html