வெள்ளி, ஜூன் 30, 2006

ஆயிரம் ஆண்டுகளின் தன்னிகரில்லாத் தலைவன - 15

"ஒரு சமூக சேவகனின் முதல் எசமான் அவரது மனசாட்சிதான். நாட்டின் சமூகச் சட்டங்கள் மனசாட்சிக்கு் எதிராக இருக்குமானால், அவற்றை பின்பற்ற வேண்டியதில்லை. பெரிய மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு ஒரு மனிதனின் மனமாற்றம் போதும். எவ்வளவோ துன்பங்கள், தண்டனைகள் கிண்டல்களைச் சந்தித்தாலும், தனது நம்பிக்கையில், சமூகத்துக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையில் உறுதியாக இருக்கும் ஒருவனது முன்னால் எல்லாம் தூளாகி விடும்."

சிறுவர் மணத்தின் மூலம் தன்னை விட இரண்டு வயது மூத்த சிறுமிக்கு விபரம் தெரியாத வயதிலேயே பெற்றோரால் மணமுடிக்கப்பட்ட ஒரு பதினைந்து வயது சிறுவனுக்கு "அந்த மணத்தைப் புறக்கணிக்குமாறும், அந்த ஆணும் பெண்ணும் தமது வாழ்க்கையை மீள அமைத்துக் கொள்ள வேண்டும்" என்று காந்தி சொன்ன அறிவுரை சட்டத்துக்கு எதிரானது என்று எழுதுகிறார் ஒரு வழக்கறிஞர்.

'ஒரு இந்து ஆண் பல தார மணம் புரிந்து கொள்ளலாம், பெண்ணுக்கோ ஒரே திருமணம்தான் என்று இருப்பதால் அந்தப் பெண்ணின் கதி என்ன ஆகும்' என்றும் கேட்கிறார் அந்த வழக்குரைஞர்.

அந்த வழக்கறிஞருக்குப் பதிலாகத்தான் காந்தி மேற்சொன்னதை எழுதுகிறார்.

3 கருத்துகள்:

VSK சொன்னது…

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கமு டையான் உழை [594]

மா சிவகுமார் சொன்னது…

நன்றி ஐயா,

தளராத ஊக்கம் உடையவனுக்கு எல்லா வளங்களும் செல்லும். அதர்வினாய் என்றால் என்ன?

(என்னுடைய திருக்குறள் புத்தகங்கள் எல்லாம் இப்போது என்னருகில் இல்லை. ஓரிரு நாட்களில் ஒன்று புதிதாக வாங்கி விடுகிறேன். அது வரை பொருள் கேட்டு உங்களுக்குத் தொந்தரவு அளிப்பேன் :-)

அன்புடன்,

மா சிவகுமார்.

VSK சொன்னது…

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்== வளங்கள் யாவும் எங்கே, எங்கே எனக் கேட்டு விரைந்து செல்லும்,

ஊக்கம் உடையான் உழை== தளரா ஊக்கம் உடையவனின் வீடு நோக்கி.

அதர்வு என்பதை 'அதிர்வு' என்ற பொருளில் கொள்ளலாம் இங்கு.
'தட தட' வென அதிர்ந்து வெகு வேகமாக வருதலைக் குறிக்கிறது.

சற்று கற்பனை செய்து பாருங்கள், சுகமாக இருக்கும்!!

நன்றி.