வெள்ளி, ஜூன் 30, 2006

ஆறு விலக்கங்கள்

வவ்வால் மற்றும் போனபெர்டடின் அன்பு அழைப்புக்கு இணங்கி ஆறு பற்றி ஒரு பதிவு. எனக்கு வியப்பளித்த ஒரு ஆறு கோட்பாட்டைப்பற்றி எழுதுகிறேன்.

Six Sigma என்ற ஆறு விலக்கங்கள் அடிப்படையிலான தரக் கட்டுப்பாடு முறைகள் பிரசித்தி பெற்றவை. இந்தக் கட்டுரை எழுதுவதற்கா விக்கிபீடியாவில படிக்கும் போதுதான் அமெரிக்காவின் மோட்டரோலா நிறுவனம் இந்தச் சொற்றொடருக்கு காப்புரிமை வாங்கியிருக்கிறது என்று தெரிந்தது.

இது ஒரு புள்ளியியல் கோட்பாடு. பெரும்பாலானவை சராசரிக்கு அருகிலும், அதற்கு மேலேயும் கீழேயும் போக எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும் என்பது பல இடங்களில் பொருந்தும் ஒன்று. இதை புள்ளியிலில் ஒரு நார்மல் கர்வ் அல்லது இயல்பங்கீடாக வரைவார்கள்.

மாணவர்களின் மதிப்பெண்களை எடுத்துக் கொள்வோம். நாற்பது மாணவர்களின் சராசரி மதிப்பெண் நாற்பது என்றால் நாற்பது பேரும் 35 முதல் நாற்பத்தைந்துக்குள் பெற்றிருந்தார்களா, அல்லது இருபது பேர் எண்பதுக்கு மேலும் இருபது பேர் பத்துக்கு கீழும் பெற்றிருந்தார்களா அல்லது இன்னும் பரவலான மதிப்பெண்களா என்று தெரியாது. அதைக் குறிக்க சராசரியிலிருந்து ஒவ்வொரு மதிப்பெண்ணும் எவ்வளவு மாறுபடுகிறது என்ற திட்ட விலக்கம் குறிப்பிடப்படுகிறது.

இந்தத் திட்ட விலக்கம்தான் சிக்மா எனப்படுகிறது.

சோப்புக் கட்டிகள் செய்வதைப் பார்க்கலாம். சோப்பின் எடை நூற்றைம்பது கிராம் இருக்க வேண்டும். ஆனால் எல்லாம் துல்லியமாக 150 கிராம் இல்லாமல் போகலாம். ஒரு கிராம் முன்னே பின்னே ஒத்துக் கொள்வோம் என்று வைத்துக் கொள்வோம்.

நம்முடைய சோப்பு செய்யும் இயந்திரத்தில் தினசரி பத்து லட்சம் கட்டிகள் செய்யலாம். காலையில் செய்முறைய அமைக்க ஒரு மணி நேரம் ஆகும். அதன் பிறகு விடாமல் ஓடி பத்து லட்சம் கட்டிகள் வெளியே வந்து விடும். அதற்கு முன்னால், ஒரு மணி நேரத்தில் நூறு கட்டிகளைச் செய்து பார்த்து எடைகளை அளந்து அது 149 முதல் 151க்குள் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்கும் போது பத்து லட்சம் கட்டிகளும் அதற்குள் வந்து விடும்படி நம்முடைய செய்முறை இருக்கிறதா என்று சோதித்து விட வேண்டும்.

6 சிக்மா கட்டுப்பாட்டில் பத்து லட்சம் கட்டிகளில் நான்கை விடக் குறைவானவைதான் எடை 49ஐ விடக் குறைந்தோ 51ஐ விட அதிகமாகவோ போகலாம். இதற்கு நூறு கட்டிகளை அளக்கும் போது ஒவ்வொரு கட்டியின் எடை போட்டு, அவற்றின் சராசரி மற்றும் திட்ட விலக்கத்தைப் பார்க்க வேண்டும். பன்னிரண்டு (2x6) திட்ட விலக்கங்களுக்குள் 99.9996599% சோப்புக் கட்டிகள் இருக்க வேண்டும். அப்படியென்றால் திட்ட விலக்கம் (51-49)/12=2/12 ஐ விடக் குறைவாக இருக்க வேண்டும். நூறு கட்டிகளில் திட்ட விலக்கம் இதை விட அதிகமாக இருந்தால் பத்து லட்சம் கட்டிகளில் நிச்சயமாக நான்கை விட அதிக எண்ணிக்கையில் கட்டிகள் நிராகரிக்கப்பட்டு விடும். எனவே செய்முறைகளில் மாறுதல்கள் செய்து நூறு கட்டிகளில் திட்ட விலக்கம் 0.083 க்கு மேல் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் செய்முறையை மாற்றி இன்னொரு மாதிரியை செய்து அளந்து பார்க்க வேண்டும்.

3 சிக்மா தரத்தில் நூற்றுக்கு 99.7% பொருட்கள் தர நிர்ணயத்துக்குள் வந்து விடும். பத்து லட்சத்துக்குப் பார்க்கும் போது 3,000 கட்டிகள் நிராகரிக்கப்பட்டு விடும். இதுதான் பொதுவாகப் பின்பற்றப்படும் தர நிர்ணய அளவு. 6 சிக்மா அளவு என்பது நிறுவனம் முயன்று விரயத்தைக் குறைத்து லாபத்தை அதிகமாக்கிக் கொள்ளுதல். உலகில் மிகச் சில நிறுவனங்களே இந்தக் கட்டுப்பாட்டுத் தரத்தை அடைந்துள்ளன.

ஆறு பற்றி பதிவிட எனக்கு நேரில் தெரிந்த, வலைப்பதிவில் அடக்கி வாசிக்கின்ற சிலரை அழைக்கிறேன்.

1. எல்லோரையும் கவர்ந்து விடும் நாகரீகக் கோமாளி
2. பல் துறை வித்தகர், பரவலான அறிவுடைய கொம்பன
3. எழுதினால் துள்ளு தமிழில் கலக்கி விடும் "உருப்படாத" நாராயணன்
4. எங்களுக்கெல்லாம் அண்ணன் கார்த்தி
5. நான் சந்தித்திராத நாச்சியார்
6. தமிழில் எழுதஅழைக்கும்் துர்கா

5 கருத்துகள்:

t.h.u.r.g.a.h சொன்னது…

I really don't understand what this is about.Can you explain it to me?

t.h.u.r.g.a.h சொன்னது…

too bad...i have 6 things to say but i dun have 6 friends to forward this

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் துர்கா,

வலைப்பதிவில் ஏற்கனவே நண்பர்கள் இல்லை என்றால் நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் :-). அப்படியே இருந்தாலும், ஆறு பேருக்கு இணைத்து விடும் பகுதியை மட்டும் விட்டு விடலாம். நேரம் கிடைக்கும் போது முயன்று பாருங்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்

வவ்வால் சொன்னது…

வணக்கம் சிவக்குமார்,

கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது (படிக்கிற காலத்திலேயே டைம்க்கு போனதில்லை)வெளியூர் வேலைல மாட்டிக்கிட்டேன் இப்போ தான் திரும்பி வந்தேன். உங்கள் ஆறு வித்தியாசாமா போட்டுடிங்களே, இந்த டோட்டல் குவாலிட்டி மேனேஜ்மென்ட் சமாச்சாரம்லாம் புரொடக்ஷன் இல்லைனா மெக்கானிக்கல் படித்தவர்களுக்கு தான் புரியும், இப்போ எல்லா பொறியியல் பிரிவிலும் " பொறியியல் பொருளாதாரம் மற்றும் நிர்வாகம்னு" ஒரு சப்ஜெக்ட் வைத்து லேசா இந்த 6 சிக்மா எல்லாம் கோடு போட்டுக்காட்டுறாங்க, எம்.பி.ஏ விலும் இதெல்லாம் இருக்கு ஆனா எல்லாருக்கும் புரிய வைத்து விட்டிங்க.

6 சிக்மாவிற்கு மோட்டொரோலா காப்புரிமை வாங்கி இருக்குனு ஒரு புதிய தகவல் தந்துள்ளீர்கள்.இதைக்கண்டு பிடித்தது ஜப்பானியர்கள் தானே? தமிழ் நாட்டில் இந்த 6 சிக்மா தரம் முதலில் வாங்கியது டி.வி.எஸ் என்று கேள்விப்பட்டுள்ளேன்.

மா சிவகுமார் சொன்னது…

நீண்ட நாட்களுக்குப் பிறகு!!!

வாங்க வவ்வால்.

நானும் படித்தது எல்லாம் மறந்து போயிருந்தது. திரும்பத் தேடிப் பிடித்துப் படித்து எழுதினேன். காப்புரிமை யார் வாங்குவது என்பது ஒரு வரைமுறை இல்லாமல் போய் விட்டது. அமெரிக்காவில் மென்பொருட்களுக்கான காப்புரிமை வாங்கும் பந்தயங்களைப் பற்றிப் படித்துப் பாருங்கள். கொடுமையாக இருக்கும்.

கொஞ்சம் பதிவுகளைப் போட ஆரம்பியுங்கள் :-)

அன்புடன்,

மா சிவகுமார்