திங்கள், ஜூன் 26, 2006

சுயநல அரசியல்வாதிகள்

தமக்கு ஆதாயம் தேடிக் கொண்ட உறுப்பினர்களின் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத் திருத்தத்தை குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அங்கீகாரம் தர மறுத்து திருப்பி அனுப்பியிருக்கிறார். முன் தேதியிட்டு இந்தத் திருத்தத்தைச் செயல்படுத்த வகை செய்வது சரியானதுதானா என்று மறு பரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

நாடாளுமன்றம் இன்னொரு முறை இதை நிறைவேற்றினால் குடியரசுத் தலைவர் அங்கீகாரம் அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை. அப்படித்தான் செய்யப் போகிறோம் என்று இடது சாரிகளும், காங்கிரசாரும் கொக்கரித்துள்ளனர்.

ஆனால், மனம் போன போக்கில் நாடாளுமன்றம் செயல்பட்டால் அதைத் தட்டிக் கேட்கும் கடமை குடியரசுத் தலைவருக்கும் உள்ளது என்பதை நிலை நாட்டிய கலாம் அவர்களுக்கு வணக்கங்களும் நன்றிகளும்.

2 கருத்துகள்:

ramachandranusha(உஷா) சொன்னது…

சிவகுமார், டைரி எழுதுவது நீங்கள்தான் என்றால், அந்த பதிவுகளில் கமெண்ட் இடும் வசதியில்லையே? வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளீர்களா?

பி.கு நண்பர் சந்திரனை விசாரித்ததாக சொல்லவும் :-)

மா சிவகுமார் சொன்னது…

ஆமாங்க,

அந்தக் குறிப்புகள் கொஞ்சம் வெளிப்படையாக வடிகட்டாமல் எழுதி வருகிறேன். அது தொடர்பாக விவாதங்கள்/கேள்விகள் வந்தால் கையாளும் பக்குவமும், நேர்மையும், உண்மையும் வரும் வரை பின்னூட்டங்கள் வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்.

இந்தக் குறிப்பையும் அதில் முன் பக்கத்தில் போட்டு விட்டால் நல்லது இல்லை ? :-)

சந்திரனிடம் உங்கள் விசாரிப்பைச் சொல்லி விடுகிறேன்.


அன்புடன்,

மா சிவகுமார்