ஒரு தமிழ் தொழில் நிறுவனம், வலிமை பெற்று தேசிய அளவில், உலக அளவில் பெரிதாகினால் நமக்கெல்லாம் பெருமைதானே. தனது சொந்த ஊரில் ஆதிக்கம் செலுத்தினால்தான் பிற இடங்களில் போக வலு கிடைக்கும். சன் டிவி, உலகைப் பிடிக்குமளவு வளரும் வாய்ப்பு இருக்கிறது.
இதற்கான எனது சில பரிந்துரைகள் (காசா பணமா, பரிந்துரைத்து வைப்போம்!)
1. தொலைக் காட்சியின் பெயரை சூரியன் தொலைக்காட்சி என்று மாற்றுகிறோம்.
2. நிறுவனத்தின் அலுவலகத்தை அண்ணா அறிவாலயத்திலிருந்து, நடுநிலையான இடத்துக்கு மாற்றுகிறோம்.
3. திமுக சார்பு நிலையில் இருந்து வந்த எமது செய்தி அறிக்கைகள், செய்தி அலசல்கள் நடுநிலைக்கு மாறுகின்றன.
4. எமது நிறுவனத்தில் கட்சி சார்பாக இருப்பவர்கள், திமுக கட்சி சார்பில் தொடங்கப்படும் உதயசூரியன் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு மாற ஊக்குவிக்கப்படுவார்கள்.
5. கேபிள் வினியோகம், மற்றும் ஒளிபரப்பு நிறுவனங்கள் ஒன்றற்கு ஒன்று தனித்து செயல்படுமாறு அமைப்புகளை ஏற்படுத்துகிறோம்.
6. உலகத் தரத்தில் இயல்பு மொழியில் நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குவோம்.
7. சுமங்கலி நிறுவனத்தில் புதிய ஓடைகளை சேர்ப்பதிலும், இருக்கும் ஓடைகளை வழங்குவதிலும், வெளிப்படையான ஒரு முறையைக் கடைபிடிப்போம்.
4 கருத்துகள்:
உங்களில் எத்தனை பேர் இதை சரியாகச் செய்திருக்கிறீர்கள்.
அன்னா சாலையை மவுன்ட் ரோட் என்றும்
திருவல்லிக்கேணியை ட்ரிப்லிகேன் என்றும்
அமைந்தகரையை அமிஞிக்கரை என்றும்
எழும்பூரை எக்மோர் என்றும்
பூந்தமல்லியை பூனமல்லி என்றும் சொல்லாமல், எழுதாமல் இருங்கள். நாங்களும்
முயற்சிக்கிறோம் உடன்பிறப்பே!.
நீங்க என்ன தான் மாங்கு மாங்குன்னு விழுந்து கத்துனாலும் அவங்க காதுல ஏறபோறதில்லை!!
கண்டிப்பாக முயற்சிப்போம். அண்ணாசாலை, பூவிருந்தவல்லி, திருவல்லிக்கேணி எல்லாம் அழகிய தமிழ் பெயர்கள், அவற்றை அப்படியே பயன்படுத்துவோம்.
///உங்களில் எத்தனை பேர் இதை சரியாகச் செய்திருக்கிறீர்கள்.
அன்னா சாலையை மவுன்ட் ரோட் என்றும்
திருவல்லிக்கேணியை ட்ரிப்லிகேன் என்றும்
அமைந்தகரையை அமிஞிக்கரை என்றும்
எழும்பூரை எக்மோர் என்றும்
பூந்தமல்லியை பூனமல்லி என்றும் சொல்லாமல், எழுதாமல் இருங்கள். நாங்களும்
முயற்சிக்கிறோம் உடன்பிறப்பே!///
அண்ணா சாலை not அன்னா சாலை
கருத்துரையிடுக