தேர்தல் இறுதி முடிவுகள்
திமுக - 80
காங்கிரசு - 30
பாமக - 20
வ கம்யூனிஸ்டு - 7
இ கம்யூனிஸ்டு - 8
அதிமுக - 65
மதிமுக - 15
விடுதலைச் சிறுத்தைகள் - 5
பிறர் - 4
கருணாநிதி அறிக்கை:
கூட்டணி ஆட்சி அமைக்கத் தயார் என்ற எங்கள் கட்சியின் நிலையை ஏற்றுக் கொண்டு தமிழக மக்கள் தீர்ப்பு அளித்துள்ளனர். எங்கள் கட்சியில் எனக்கு உறுதுணையாக இருந்து பல ஆண்டுகள் உழைத்துள்ள திரு அன்பழகன் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் கட்சிக்கும் ஆட்சிக்கும் வழி நடத்துவேன்.
கூட்டணிக் கட்சியான காங்கிரசின் திரு சிதம்பரம் அவர்கள் துணை முதலமைச்சராக பொறுப்பேற்க முன் வந்தால் நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைவோம். அவர் அதை விரும்பாவிட்டால், காங்கிரசு ஆட்சி சுட்டிக் காட்டும் ஒருவரை துணை முதலமைச்சராக ஏற்றுக் கொள்கிறோம்.
முந்தைய ஆட்சி கொண்டு வந்த கேபிள் டிவி மசோதாவை திருத்தி, கேபிள் டிவி வினியோகத்தில் எந்த நிறுவனமும் ஏகபோகம் செலுத்தாமல் இருக்க சட்டம் ஏற்படுத்துவோம். ஒவ்வொரு பகுதியிலும் அரசால் நடத்தப்படும் சேவை உட்பட குறைந்தது நான்கு வினியோகஸ்தர்கள் இருக்க வேண்டும் என்று சட்டம் இயற்றுவோம்.
முந்தைய அரசு கொண்டு வந்த நல்ல திட்டங்களைத் தொடர்ந்து அமல்படுத்துவோம். அதிமுக எங்கள் ஆட்சிக்கு ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும் என்று நம்புகிறோம்.
செல்வி ஜெயலலிதா, திரு வைகோ, திரு திருமாவளவன் போன்ற தலைவர்கள் தவறாமல் சட்டசபைக்கு வந்து மக்களுக்கு சேவை செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். தேவைப்பட்டால் அவர்களை சந்தித்து விவாதிக்கவும் தயாராக உள்ளோம்.
முதலமைச்சர் உட்பட உயர் அதிகாரிகளின் மீதான புகார்களை விசாரிக்க ஒரு மக்கள் நீதிமன்றம் ஏற்படுத்தப்படும்.
என்னுடைய சொந்த வாழ்வில், என்னுடைய சொத்துகளை எல்லாம் என்னை வாழ வைத்த தமிழக மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் பயன்படும் வகையில் செலவளிக்க ஒரு தர்ம நிறுவனம் ஏற்படுத்தி அதற்கு தானம் செய்து விடுகிறேன். எளிமையான வாழ்க்கை நடத்த உறுதி பூணுகிறேன்.
ஜெயலலிதா அறிக்கை
மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம்.
வெற்றி பெற்றுள்ள திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் தோல்விக்கு என்ன காரணங்கள் என்று ஆராய்ந்து பார்த்து கீழ்க் கண்ட முடிவுகளை அறிவிக்கிறோம்:
1. கட்சியில் இளைய தலைமுறை தலைவர்கள் வளர்வது ஊக்கப்படுத்தப்படும்.
2. ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக சட்டசபையிலும் வெளியிலும் செயல்படுவோம்.
3. எனது சொத்துகளையெல்லாம் தர்ம காரியங்களுக்கு தானம் செய்து விட்டு, நானும் எனது உடன் பிறவா சகோதரியும் எனக்குக் கிடைக்கப் போகும் சட்டமன்ற உறுப்பினர் சம்பளத்தில் வாழ முடிவு செய்துள்ளோம்.
4. மாதத்துக்கு ஒரு முறை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்து மக்களின் பிரச்சனைகளைப் புரித்து கொண்டு அவற்றை தீர்த்து வைக்கப் போராடுவோம்.
4 கருத்துகள்:
இப்படியெல்லாம் நடந்தா நல்லதுதான்.அய்யோ ..ரொம்ப புல்லரிகுதப்பா...
ஸ்டர் டிவி எக்ஸிட் போல்-ல், திமுக அணி 175 இடங்கள் பெறும் என்றும், திமுக தனி மெஜாரிடி பெறும் என்றும் கணித்துள்ளது - தினமணி வலைப்பத்வு செய்தி..
ஜெயலலிதா அறிக்கைய பார்த்தா புல்லரிக்குதுங்க.. நடக்குமா இப்படி.. அதிர்ச்சியில...போய் சேர்ந்துடுவேன்..இப்படியெல்லாம் அறிக்கை விட வேண்டாம்னு சொல்லிவைங்க ஜி..
நான் சொல்ல அவசியமே இல்லாமல், அம்மா எவ்வளவு விவரமான அறிக்கைகளை கொடுத்து வருகிறார் :-(. தமிழகத்தை இறைவன் காப்பாற்றட்டும்.
கருத்துரையிடுக