தன் வீட்டிலிருந்து துரத்தப்பட்டு வெளிநாட்டில் வாழும் ஒரு அகதியின் புலம்பல் இன்றைய இந்து நாளிதழில் வெளியாகி உள்ளது. இசுரேல் என்ற நாட்டுக்கு 15ம் தேதி 58 வயது. அதை இசுரேலியர்கள் கொண்டாடும் வேளையில் இந்த அகதியைப் போல பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் கசப்பான நினைவுகளுடன், தமது வாழ்வைத் தொலைத்த வலியுடன், சொந்த நாட்டில் அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.
அவர்களது சோகத்தில் நாமும் பங்கு கொள்வோம்.
4 கருத்துகள்:
இந்துக் கட்டுரைக்கான சுட்டி
ஐயா...பாலஸ்தீனர்கள் அகதிகள் ஆனதற்கு, அரபு நாடுகள் கூட்டமைப்பு இஸ்ரேல் மீது தொடுத்த போர் தான் காரணம்.
அரபு நாடுகள் பலஸ்தீனர்களிடம், போருக்கு வசதியாக கிராமங்களை விட்டுச் செல்லுமாறு கூறினர். அவர்களும் காலி செய்து கொண்டு அகதிகளாக ஜோர்டன், லெபனான் என்று சென்றனர். அதிர்ஷ்டவசமாக (துரதிர்ஷ்டவசமாக) இஸ்ரேல் போரில் வெற்றி பெற்றுவிட்டது. உள்ளதும் போச்சு லொள்ளக் கண்ணா ஆகிவிட்டனர்.
சும்மா இஸ்ரேலைக் குரைகூறியே காலத்தை ஓட்டும் அறிவு ஜீவிக்களிடமிருந்து விலகி, வேறு கோணத்திலும் யோசிக்கவேண்டும். உண்மை விளங்கும்.
1972ல் சிரியா பிரதமர் Khalid Al Azm அவ்ரது நினைவலைகள் என்று சொன்னது..
"Since 1948 it is we who demanded the return of the refugees...while it was we who made them leave...We brought upon...arab refugess, by inviting them and bringing pressure to bear upon them to leave...We have rendered them dispossesed...We have accustomed them to begging....We have participatd in lowering their moral and social level.....The we exploited them in executing crimes of murder, arson, and throwing bombs up on ....men, women and children-all these in the service of political purpose"
வஜ்ரா ஷங்கர்.
அடடே, ஷங்கர் அவசரப்பட்டுவிட்டீர்களே.
சிவக்குமார் ஒரு வேளை காஷ்மீர் பண்டிட்கள் பற்றி கூறியிருக்கலாம். ஆனாலும் அதுவும் இடிக்கிறது. காஷ்மீர் பண்டிட்களுக்கு அகதிகள் அந்தஸ்து கூட இல்லை என்று எங்கோ படித்த நினைவு. கேவலம் ஹிந்துக்கள்தானே. ஒருவேளை இலங்கை தமிழர்களாகவிருக்குமோ?
கருத்துரையிடுக