காந்தி வங்காளத்தின் நவகாளி கிராமத்துக்குப் போகிறார். முஸ்லீம்கள் வலுக்கட்டாயமாக இந்துக்களை மதம் மாற்றவும், இந்துப் பெண்களை சூறையாடவும், இந்து வீடுகளையும் கோவில்களையும் எரிக்கவும் செய்த இடம் நவகாளி. காந்தி எதற்கு அங்கே போகிறார்?
"பெண்மையில் கூக்குரல் என்னை அழைக்கிறது. வன்முறையின் கடைசிப் பொறி வரை அணையும் வரை நான் வங்காளத்தை விட்டுப் போக மாட்டேன். அதற்கு பல வருடங்கள் ஆகலாம். நான் இங்கேயே இறந்து விட நேரலாம். ஆனால் நான் தோல்வியை ஏற்றுக் கொள்ள மாட்டேன். நான் இங்கு இருப்பதால் மக்களுக்கு நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் மட்டும் கொடுத்து, அதற்காக என்னால் எதையும் செய்ய முடியா விட்டால் நான் இறப்பதையே விரும்புவேன்."
ஆனால், பக்கத்து பீகார் மாநிலத்தில் இந்துக்கள் முஸ்லீம்களை பழி வாங்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டார்கள்.
"பீகாரி இந்துக்களின் இந்த பாதகங்கள் காய்தே அசாம் ஜின்னா காங்கிரசை இந்துக் கட்சி என்று குற்றம் சாட்டுவதை உண்மை ஆக்கி விடலாம். காங்கிரசின் பெருமைகளை உயர்த்த பெரும் பணிகளைச் செய்துள்ள பீகார், அதன் கல்லறையை தோண்டுவதில் முதலாவதாக இருந்து விடக்கூடாது. "
புது தில்லியில் தன்னாட்சி கிடைத்ததற்கான கொண்டாட்டங்களில் பங்கு பெறவில்லை. "35 ஆண்டுகளாக எதற்காகப் பாடுபட்டேனோ அது அழிகிறதே" என்ற துக்கத்தோடு பிரிவினை செய்யப்படும் மாநிலங்களில் அமைதித் தூதுவராக செல்கிறார். ஒற்றை மனிதன் அமைதிப் படையாக அவர் சென்ற ஊர்களில் எல்லாம் மக்கள் வன்முறையைக் கைவிடுவதாக உறுதி அளிக்கிறார்கள். வங்காளத்தில் இனிமேல் அன்பு நிலவும் என்று உறுதி செய்து கொண்டு அவர் அங்கிருந்து கிளம்பிய பிறகு, எந்த விதமான கலவரமும் நடக்கவில்லை. யாராவது முதல் கல்லை எறிந்தால் அது காந்தியைக் கொலை செய்வதற்கு சமமாகும் என்று இந்துக்களுக்கும், இசுலாமியர்களுக்கும் தெரிந்திருந்தது. கலவரத்தைத் தூண்டக் கூடிய தலைவர்களும், கலவரம் செய்யக் கூடிய முரடர்களும் வெல்லப்பட்டனர். அமைதியை விரும்பும் பெரும்பான்மையினரின் கைகள் பலப்படுத்தப்பட்டன.
இனிமேல் பாஞ்சாலத்துக்குச் செல்லலாம் என்று அமைதித் தூதர் தில்லி வருகிறார். தில்லியிலோ நிலைமை மிக மோசமாக இருந்தது. பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்த இந்துக்களின் கோபம் தில்லி இசுலாமியர்கள் மீது பாயத் துடித்துக் கொண்டிருந்தது. தீவிர வாத இந்துக் கட்சியினர் பாகிஸ்தானை பழி வாங்குவதற்கு திட்டங்கள் தீட்டிக் கொண்டிருந்தனர்.
ஒரு இந்தியன் பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் தில்லியில் நடமாட முடியவில்லை என்றால் சுய ஆட்சி கிடைத்தும் நாம் அடிமைகளாகத்தான் இருக்கிறோம். சகோதரர்களான இந்துக்களும் இசுலாமியரும் அமைதியாக வாழ முடியாத நிலையை காந்தியால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
அவருடைய கடைசி உண்ணா நோன்பு, நாடெங்கும் தீவிரவாத உணர்வுகளை கிள்ளி எறிந்து குலையாத அமைதியை அமைத்துத் தந்தது. இந்தியா என்ற தேசத்தை உருவாக்கி, அதில் தீண்டாமை என்ற பழக்கத்தை அவமானமாக்கி, அதில் பல மதத்தினரும் சேர்ந்து வாழும் சூழலை உருவாக்கிச் சென்ற அந்த மகாத்மாவின் அன்புதான் இன்றும் நம் தேசத்தை வழி நடத்திச் செல்கின்றது.
அந்தக் கொள்கைகளை உடைத்து எறிய முயலும் இந்துத்துவா குழுக்களின் முயற்சிகள் மண்ணாகிப் போகட்டும்.
9 கருத்துகள்:
நண்பரே, காந்தி பேராசைப் பட்டார். நடைமுறை சாத்தியங்களை பற்றி தன் காலத்திலேயே அனுபவித்தும் தொலைநோக்குப் பார்வையில் சிந்திக்கத் தவறிவிட்டார் அல்லது பிடிவாதமாக மறுத்துவிட்டார். மேலும் மத நல்லிணக்கம் சீர்கெட அவரே சிலவாறு காரணமாகிவிட்டார். அதில் ஒன்றுதான் சிறுபான்மையினரை செல்லப்பிள்ளையாக நடத்தி பெரும்பான்மையினரை எதிர்த்தெழச் செய்தது. அதே கொள்கையைத்தான் காங்கிரஸ் இன்னும் செய்து வாக்கு வங்கி அரசியலை வளர்த்துக் கொண்டிருக்கிறது. எப்படி? ஒரு உதாரணம் சொல்கிறேன்.
இந்தியாவில் கிருத்தவர்களுக்கோ இஸ்லாமியர்களுக்கோ கல்வி எங்காவது மறுக்கப் பட்டிருக்கிறதா? அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் அவர்கள் அனுமதிக்கப் படாதநிலை இருந்ததா? இல்லை. சம உரிமை அளிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் இதுதான் மதச்சார்பின்மை. அவரவர் சமயங்களை கடைபிடிக்கவும் சம குடிமக்களாக நடத்தப் படுவதும்தான் மதச்சார்பின்மை. ஆனால் இந்தியாவில் அதோடு நின்றுவிடவில்லை. சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் 50% சதவீத இடங்களை அவர்கள் மதத்தினருக்கு மட்டும் என ஒதுக்கலாம் என்ற சட்டம் எதற்கு? உலகில் வேறெங்காவது இத்தகைய சட்டம் உண்டா? ஏன் இல்லை என சிந்தியுங்கள் !
கிருத்தவர் நடத்தும் கல்லூரியில் 50% கிருத்தவருக்கு இட ஒதுக்கீடு. இஸ்லாமியர் நடத்தும் கல்லூரியில் 50% இஸ்லாமியருக்கு 50% இட ஒதுக்கீடு. ஆனால் இந்துக்கள் நடத்தும் கல்லூரியில் இந்துக்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது? இதுதான் மதச்சார்பின்மையா? இதுதான் சமத்துவமா? இத்தான் பிரதிநிதித்துவமா? இதைத்தான் 'மதச்சார்பின்மை' என்ற போர்வையில் நடத்தும் 'போலி மதச்சார்பின்மை' என்கிறார்கள். இதை எதிர்த்தால் குற்றமா? இவ்வாறு இரண்டாம் தர குடிமகனாக நடத்தப் படுவதை பற்றி இந்துத்துவா விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினால் அது தவறா?
ஒரு மதத்தின் பால் ஈர்ப்பு ஏற்பட்டு ஒருவர்தானாக அந்த மதத்தைப் பின்பற்றினால் யார் என்ன சொல்லப்போகிறார்கள்? ஆனால் அறியாமையில் இருக்கும் கீழ்த்தட்டுமக்களை பணத்தைக் காட்டியும், சாப்பாட்டைக் காட்டியும், பள்ளிகளில் சிறு குழந்தைகளிடம் 'கல்லை வணங்காதே' என்று கூறியும் மதமாற்றம் செய்யப்படுபவர்களிடம் சென்று 'உன்னை மூளைச் சலவை செய்து மாற்றிக் கொண்டிருக்கிறார்கள், அதற்கு அனுமதிக்காதே' என்று உண்மையை உணருமாறு எடுத்துரைத்தால் இந்துத்துவா தவறானதா?
இந்துத்துவாவை தவறாக புரிந்துகொள்ளாதீர் நண்பரே. காந்தி ஒரு மகத்தான மனிதர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் தவறு செய்வது மனித இயல்பு என்பதற்கு இணங்க அவர் செய்த சில தவறான முடிவுகள்தான் இந்தியாவை இன்றும் சில மாயைகள் பிடித்துக் கொண்டிருப்பதற்கு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.
நல்ல பதிவு!
சாணக்கியன் அவர்களே,
எந்த சமூகத்தில் சிறுபான்மையினரும், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களும் தமது உரிமைகளை பாதுகாத்துக் கொண்டு வாழ முடிகிறதோ அந்த சமூகம்தான் தளைத்து வளரும்.
நம்முடன் சேர்ந்து உருவான பாகிஸ்தான் என்ற நாடு, சிறுபான்மையினரை நசுக்கி வைத்திருக்க இன்றைக்கு அவர்களது அரசியலும், பொருளாதரமும் தேங்கல் நிலைகளை அடைந்து விடவில்லையா?
அமெரிக்கா, அடிமை முறையை ஒழித்த பிறகுதான் உலகப் பேரரசாக இருபதாம் நூற்றாண்டில் வளர முடிந்தது.
ஒரு சிறுபான்மையினராக இருக்கும் நிலைமையை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். காலையில் அரசு வானொலியை திருகினால் பெரும்பான்மை மதத்தின் பக்திப் பாடல்கள், அரசுப் பள்ளியில் குழந்தையை படிக்க அனுப்பினால் தமிழ் புத்தகத்தில் இறை வணக்கப் பாடல் இந்துப் பாடல். இந்துத் திருவிழா ஒன்று வந்தால் ஊரெல்லாம் கோலாகலம், அதைக் கொண்டாடமல் இருக்கும் தன் வீட்டில் வெறுமை. தன் மத பண்டிகை வரும்போது, பெரும்பான்மையினர் தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டு செல்வார்கள். இங்கும் ஒரு வெறுமை மனதைச் சூழ்கிறது.
இதற்கு விடை என்ன? மூட்டை முடிச்சுகளைக் கட்டி கொண்டு உங்கள் ஆட்கள் இருக்கும் ஊர் போய் சேருங்கள் என்பதுதான் இந்துத்துவாவின் பதில். நீங்களும் இந்த மண்ணின் புதல்வர்கள்தான், உங்கள் நம்பிக்கைகளை பழக்கங்களை பின்பற்ற சில சிரமங்கள் இங்கு இருக்கத்தான் செய்யும். ஆனால் அதை நீக்குவதற்கான எல்லா ஆதரவுகளையும், நாங்கள் செய்வோம் என்பதுதான் காந்தீய/இந்திய வழி. அதுதான் நம் நாட்டின் ஆன்மா.
என்றைக்கு அந்த ஆன்மா இறக்கிறது, அன்றைக்கு இந்தியா என்ற நாடு இறந்து விடும். அதன்பிறகு மொழி வழி, மத வழி, ஏன் சாதி வழி நாடுகள் உருவாகி விடும் இந்தியாவின் இடத்தில்.
நுனிமரத்தில் இருந்து கொண்டு அடியை வெட்டும் கதைதான் இந்துத்துவாவாதிகளின் கதை.
நேரம் கிடைக்கும் போது வந்து பதில் சொல்கிறேன்... சற்று பொறுக்கவும்...
சிவக்குமார், நீங்கள் மிகவும் மேலோட்டமாக பார்த்துவிட்டு எழுதியுள்ளீர்கள். வானொலியில் பக்திப் பாடல்கள் ஒளிபரப்பாகும் போது கேட்டுப் பாருங்கள். கிருத்தவ மற்றும் இஸ்லாமிய பாடல்களும்தான் ஒலிபரப்பாகின்றன.
பள்ளியில் கம்பராமாயணத்தோடு ஏசுகாவியத்தையும், முகமது நபிகல் வாழ்க்கை வரலாற்றையும்(செய்யுள் வடிவில்), புத்தமத பாடல்களையும் சேர்ந்தேதான் படித்தோம். இந்துமதப் பாடல்களை சற்றே அதிக எண்ணிக்கையில் படித்தோம். ஏனெனில் சங்க இலக்கியங்கள் எழுதப்பட்ட காலத்தில் இந்தியாவில் வேறு மதங்கள் இருக்கவில்லை.
சரி, தமிழ்த்தாய் வாழ்த்தே பாடாமல் அவர்களின் மதப்பாடல்களை மட்டும் பாடும் பள்ளிகளை உங்களுக்குத் தெரியுமா? எனக்குத் தெரியும். அங்கு படிக்கும் பெரும்பான்மை சமூகத்து குழந்தைகளின் மன உணர்வுகளையும் இதே அக்கறையோடு ஏன் கவனிக்கத் தயங்குகிறீர்கள்? இந்துக் குழந்தைகளிடம் வளையல் போட்டுக்கொண்டு வரக்கூடாது என்றும் பூ வைத்துக்கொண்டு வரக்கூடாது என்றும் நிர்பந்திக்கும் சிறுபான்மை பள்ளிகளை கேள்விப் பட்டிருக்கிறீர்களா? நான் கேள்விப் பட்டிருக்கிறேன். இப்படி நமது கலாச்சாரத்தையே அழிக்க நினைக்கும் துணிவு அவர்களுக்கு எப்படி வந்தது? எனக்குச் சொல்ல வேண்டாம். நீங்களே யோசித்து வைத்துக்கொள்ளுங்கள்.
மதரீதியாக அதிக அளவில் அவமானப் படுத்தப்படுபவர்களும், மன உளைச்சலுக்கு உள்ளாக்கப் படுபவர்களும் இந்துக்களேயன்றி சிறுபான்மையினர் அல்ல. இந்த விவாதத்தை முழுமையாக படித்துப் பாருங்கள். http://sivapuraanam.blogspot.com/2006/03/blog-post_10.html
அப்புறம் பண்டிகைகள் கொண்டாடுவது பற்றி சொல்லியிருக்கிறீர்கள். தீபாவளிப் பண்டிகை ஒன்றுதான் நீங்கள் சொல்லியுள்ள அளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. படித்த நகரத்து சிறுபான்மையினத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கும் பட்டாசு வாங்கிக்கொடுத்து இதை சரி செய்து விடுகிறார்கள். மற்ற பண்டிகைகளில் வித்தியாசம் இல்லை. இந்தியாவில் தீபாவளிக்கு விடுமுறை, கிருஸ்துமஸுக்கும் விடுமுறை, ரம்ஜானுக்கும் விடுமுறை. கிருஸ்துமஸ் கொண்டாடப் படும்போது,வீடுகளில் எல்லாம் நட்சதிரங்கள் மின்னும்போது இந்துக்களும், முஸ்லீம்களும் இன்னபிறரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
நாம் தேர்த்திருவிழா கொண்டாடுவதுபோல் கிருத்தவர்களும் தேர் இழுக்கிறார்கள் இப்பொழுது. முஸ்லீம்கள் ஒரு பண்டிகையின்போது சாலையில் ஊர்வலமாக்ச் செல்கிறார்கள்.
இன்றைக்கு எந்தப் பண்டிகையானாலும் தொலைக் காட்சியில் சிறப்பு நிகழ்ச்சிகள் பார்ப்பதுதான் முக்கிய சந்தோசம் ஆகிவிட்டது. தீபாவளி அன்று சிம்ரன் நமக்கு வாழ்த்துச் சொல்வதை அவர்களும் பார்க்கிறார்கள். ரம்ஜானுக்கு மும்தாஜ் வாழ்த்துச் சொல்வதை நாமும் பார்க்கிறோம்.
ஆக,பண்டிகைகளின் போது ஏற்படும் வெறுமை என்பது நீங்கள் சொல்லியிருக்கும் அளவிற்கு வீச்சு அற்றது.
//மூட்டை முடிச்சுகளைக் கட்டி கொண்டு உங்கள் ஆட்கள் இருக்கும் ஊர் போய் சேருங்கள் என்பதுதான் இந்துத்துவாவின் பதில்//
நீங்கள் சொல்வது தவறு. பெரும்பான்மையினரின் உணர்வுகள் மதிக்கப் படவேண்டும், பெரும்பான்மையினருக்கும் சிறுபான்மையினருக்கு சமமாக உரிமைகள் வழங்கப் படவேண்டும் இந்திய கலாச்சாரம் காக்கப் படவேண்டும் என்பதுதான் இந்துதுவாவின் கொள்கையே தவிர சிறுபான்மையினர் வெளியேற வேண்டும் என்பது அல்ல. இந்துத்துவாவின் பெயரில் அப்படி ஒருசிலர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கக் கூடும். அவர்கள் திருத்தப்படவேண்டிய அல்லது புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள். அதற்காக ஒட்டுமொத்தமாக இந்துத்துவாவை குறை சொல்லாதீர்கள்.
ஜம்மு-காஸ்மீரிலும்,வடகிழக்கு மாநிலங்களிலும் இந்துக்கள் சிறுபான்மையினர்தானே? அங்கு ஏன் இந்துக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கக் கூடாது? அரசியல்வாதிகள் ஏன் வழங்க முன்வரமாட்டார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். 'சிந்தித்துப் பாருங்கள்' என்று நான் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். குறைந்தது 1 மணி நேரமாவது யோசிக்கவேண்டும்.
அரசியல் லாபங்களுக்காக போலிமதச்சார்பின்மை கடைபிடிக்கும் அரசியலும், தங்களின் பிரச்சினைகளை தாங்களே சரியாக புரிந்து கொள்ளாத உங்களைப் போன்றவர்களும்தான் மதங்களுக்கிடையேயான ஒருமைப் பாட்டுச் சீர்குலைவுகளுக்கு காரணம். தாழ்த்தப்பட்ட மக்கள் ஒடுக்கப் பட்டிருந்ததைப் போல சிறுபான்மையினர் ஒருபோதும் ஒடுக்கப் பாட்டவர்களாக இருந்ததில்லை. எனவே சிறுபான்மையினருக்கு சிறப்பு உரிமைகள் என்பது அர்த்தமற்றது; அரசியல் கேலிக் கூத்து; இந்தியாவின் சாபக் கேடு; 'நோய் முதல்நாடி' அறிந்து ஒழிக்கப் படவேண்டியது.
மேலே சொன்னவை இந்துத்துவா பற்றியும் சிறுபான்மையிஸம் பற்றியும் என் பதில்கள்.
காந்தியை பற்றிப் பேசவேண்டுமானால், காந்தியை கடவுள் போலக் கருதி விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதாமல் அவரிடம் குறைகள் இருக்குமானால் அதையும் தெரிந்து கொள்ள உங்களுக்கு மன வளர்ச்சி தேவை. முதல்படியாக, "தாழ்த்தப்பட்டவர்கள் ஏன் காந்தியிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என்ற அண்ணல் அம்பேத்கார் எழுதியுள்ள புத்தகத்தைப் படியுங்கள். மதப் பிரச்சினைகளில் காந்தியின் செயல்பாடுகள் பற்றிய புத்தகங்கள் பற்றித் தெரியவில்லை. கேட்டுச் சொல்கிறேன்.
போலிமதச்சார்பின்மை குறித்து நான் அனுப்பிய மின்னஞ்சல் கிடைத்ததா?
சாணக்கியன்,
விரிவான விளக்கத்துக்கு நன்றி.
நீங்கள் கூறுவது எல்லாம் உண்மையில் நடக்கின்றன. இதை எல்லாம் ஒழித்து விட வேண்டும் என்பதுதானே இந்துத்துவாவாதிகளின் கொள்கை? சிறுபான்மையினருக்கு கிடைக்கும் உரிமைகளை எல்லாம் அவர்களுக்கு கொடுக்கும் சலுகை போல சித்தரித்துக் காண்பிப்பதுதானே இன்றைய சூடோ-இந்துத்துவாவாதிகள் செய்கிறார்கள்.
நான் கொஞ்சம் மேலோட்டமாக எழுதுகிறேன் என்று உணர்ந்துதான், ஒரு மாதத்துக்கு எழுதியவற்றை வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். உங்கள் மின் அஞ்சலுக்கான பதிலையும் பிறகு வெளியிடுகிறேன்.
காந்தியைப் பொறுத்த வரை நான் அவரை கடவுளாக கருதவில்லை. எதையுமே, தானே உணர்ந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று போதித்து வாழ்ந்து காட்டியவர் காந்தி. அதே பாதையைப் பின்பற்ற முயன்று வருகிறேன். காந்தி சொன்னதாலேயே எதுவும் சத்திய வாக்கு ஆகி விடவில்லை, அவர் எதிர்த்ததாலேயே எதுவும் சைத்தான் ஆகி விடவில்லை.
என்னுடைய முஸ்லீம் நண்பர்களுடனும் காந்தி பற்றி அவர்களுடைய படித்தலை கருத்துகளைக் கேட்டு வருகிறேன். ஜூன் 17க்குப் பிறகு விரிவாக என்னுடைய பதிவுகளை எழுதுகிறேன்.
அன்புடன்,
நான் கேட்டுள்ள கேள்விகள் எதற்கும் நீங்கள் பதில் சொல்லவில்லை. அவற்றில் உள்ள நியாயங்களை ஒப்புக்கொள்ள முன்வருவீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் பதிவுக்கு காத்திருப்பேன்.
//உரிமைகளை எல்லாம் அவர்களுக்கு கொடுக்கும் சலுகை போல சித்தரித்துக் காண்பிப்பதுதானே இன்றைய சூடோ-இந்துத்துவாவாதிகள் செய்கிறார்கள்.//
இது உங்களது சிறந்த கற்பனை. எங்கே உரிமைகள் சலுகைகளாக சித்தரிக்கப் படுகின்றன? ஓர் உதாரணம் சொல்லுங்கள் பார்ப்போம்...
பெரும்பான்மையினர் தங்கள் உரிமைகளை கேட்பது கூட தவறான செயல் என்ற மாயை கனிசமான மக்களை நம்பச் செய்திருப்பது போலி-மதச்சார்பற்றவாதிகளின் திறமையைக் காட்டுகிறது. அந்தத்திறமைக்கு தலைவணங்குகிறேன்.
Hi Sivakumar,
I totally disagree with you on the specific point "அமெரிக்கா, அடிமை முறையை ஒழித்த பிறகுதான் உலகப் பேரரசாக இருபதாம் நூற்றாண்டில் வளர முடிந்தது." It is not true. Still racism is there in US. And they emerged as a world power in 1930s. If racism was completly erased, why Mratin luther king had emerged. And china is emerging as a super power despite the ethinic cleansing of Tibatians. And still vowing to conquer Taiwan. Still it is the fastest growing economy in the 21st century. Things are quite simpler lets not complicate it. And who said, pakistan's economy is a stagnent one? It is not. It is also growing as fast india's. The trouble is internal crisis in NWFP and baloch province. And the terrorists in East. Their population is just more than the population of UP and it is too much problem for them to handle. Tell me how many hindus are doing terrorist activities in Pak, Bangaladesh.... I'm not supporting hindutva but just contradicting your point. And the question is how you are going to live with someone all long your life, whose primery belif is killing others to spread his idealogy. How many mullahs openly declared, that they are going to renounce that one particular part of ideaology? Not even one. In no part of the world, majorities are worrying about the minorities. Only in india. Do muslims allow anyone to build a temple/church in the place of Mecca? Leave of mecca, any other place in saudi? Hindus belive Ayodha is a place, where ram is born and lived years together, it is a place like mecca for muslims. But Baber masjid is a place where there is no hamas for decades together. Don't hindus have the right to build their dream temple by demolishing a "useless" structure which belongs to muslims? Does it an utter injustice to hindus. In top 5 religions by population, everybody have their own nation but the third contender hindus don't have. Don't hindus have the credibility to have a nation of their own? Why shouldn't a country where 80% are hindus can't be a hindu nation? Why hindus lost their rights in their own country? Just one only answer i can find, "The psedo secularist vote bank". You know muslims are not minorities, they are 18 crore vote bank. Whereas, hindus are splitted in the names of castes. And there is a caste based vote bank for their own caste based parties. And all that hindus needed is a party of their own to support their cause. They need to unite. And unity can't come with the existing disparities. So truly speaking hindus are minorities in india. And the biggest problem india facing, the cross border terrorism is due to the idealogy of nehru and gandhi. If they conquered the whole kashmir that time alone, we won't even face the current crises of terrorism.
//"அமெரிக்கா, அடிமை முறையை ஒழித்த பிறகுதான் உலகப் பேரரசாக இருபதாம் நூற்றாண்டில் வளர முடிந்தது." //
ஒரு பேச்சுக்கு இதை உண்மை என்று வைத்துக்கொண்டால் கூட இது மிகவும் தவறான ஒப்புமை. ஏனெனில் சிறுபான்மையினர் ஒருபோதும் இந்தியாவில் அடிமைகளாகவோ உரிமைகள் அற்றவர்களாகவோ நடத்தப்பட்டது கிடையாது. இல்லாத பிரச்சனைக்கு தீர்வு எதற்கு?
கருத்துரையிடுக