எந்த சமூகத்தில் சிறுபான்மையினரும், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களும் தமது உரிமைகளை பாதுகாத்துக் கொண்டு வாழ முடிகிறதோ அந்த சமூகம்தான் தளைத்து வளரும்.
நம்முடன் சேர்ந்து உருவான பாகிஸ்தான் என்ற நாடு, சிறுபான்மையினரை நசுக்கி வைத்திருக்க இன்றைக்கு அவர்களது அரசியலும், பொருளாதரமும் தேங்கல் நிலைகளை அடைந்து விடவில்லையா?
அமெரிக்கா, அடிமை முறையை ஒழித்த பிறகுதான் உலகப் பேரரசாக இருபதாம் நூற்றாண்டில் வளர முடிந்தது.
ஒரு சிறுபான்மையினராக இருக்கும் நிலைமையை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். காலையில் அரசு வானொலியை திருகினால் பெரும்பான்மை மதத்தின் பக்திப் பாடல்கள், அரசுப் பள்ளியில் குழந்தையை படிக்க அனுப்பினால் தமிழ் புத்தகத்தில் இறை வணக்கப் பாடல் இந்துப் பாடல். இந்துத் திருவிழா ஒன்று வந்தால் ஊரெல்லாம் கோலாகலம், அதைக் கொண்டாடமல் இருக்கும் தன் வீட்டில் வெறுமை. தன் மத பண்டிகை வரும்போது, பெரும்பான்மையினர் தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டு செல்வார்கள். இங்கும் ஒரு வெறுமை மனதைச் சூழ்கிறது.
இதற்கு விடை என்ன? மூட்டை முடிச்சுகளைக் கட்டி கொண்டு உங்கள் ஆட்கள் இருக்கும் ஊர் போய் சேருங்கள் என்பதுதான் இந்துத்துவாவின் பதில். நீங்களும் இந்த மண்ணின் புதல்வர்கள்தான், உங்கள் நம்பிக்கைகளை பழக்கங்களை பின்பற்ற சில சிரமங்கள் இங்கு இருக்கத்தான் செய்யும். ஆனால் அதை நீக்குவதற்கான எல்லா ஆதரவுகளையும், நாங்கள் செய்வோம் என்பதுதான் காந்தீய/இந்திய வழி. அதுதான் நம் நாட்டின் ஆன்மா.
என்றைக்கு அந்த ஆன்மா இறக்கிறது, அன்றைக்கு இந்தியா என்ற நாடு இறந்து விடும். அதன்பிறகு மொழி வழி, மத வழி, ஏன் சாதி வழி நாடுகள் உருவாகி விடும் இந்தியாவின் இடத்தில்.
நுனிமரத்தில் இருந்து கொண்டு அடியை வெட்டும் கதைதான் இந்துத்துவாவாதிகளின் கதை.
12 கருத்துகள்:
//
ஒரு சிறுபான்மையினராக இருக்கும் நிலைமையை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். காலையில் அரசு வானொலியை திருகினால் பெரும்பான்மை மதத்தின் பக்திப் பாடல்கள், அரசுப் பள்ளியில் குழந்தையை படிக்க அனுப்பினால் தமிழ் புத்தகத்தில் இறை வணக்கப் பாடல் இந்துப் பாடல். இந்துத் திருவிழா ஒன்று வந்தால் ஊரெல்லாம் கோலாகலம், அதைக் கொண்டாடமல் இருக்கும் தன் வீட்டில் வெறுமை. தன் மத பண்டிகை வரும்போது, பெரும்பான்மையினர் தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டு செல்வார்கள். இங்கும் ஒரு வெறுமை மனதைச் சூழ்கிறது.
//
அது சரி,
சில சந்ததியினர் முன்பு எல்லோரும் இந்துக்கள் (இதைச் சொல்பவர்கள் வேறு யாருமல்ல இந்துத்வாவாதிஅக்ள் தான்). அவர்களும் தீபாவளி, பொங்கல் கொண்டாடியவர்கள் தான். இன்று, நீ முஸ்லீம், நீ கிறுத்துவன் என்று பாகுபாடு கூறி தீபாவளி கொண்டாடக்கூடாது என்று பிரச்சாரம் செய்பவர்கள் இந்துத்வா வாதிகளா? நல்ல தமாஷ் தான்.
நான் அரசு வானொலி (ஆகாஷவாணி-All india radio) வில் தான் நாகூர் E.M ஹனீபா பாடிய பாடல்க்ள் கேட்டிருக்கிறேன். இன்றும் மதுரை வானொலியில் காலையில் இந்து, இஸ்லாம், கிறுத்துவப் பாடல்கள் ஒலிக்கின்றன.
பாடப் புத்தகத்தை திறந்தால், தமிழ் தாய் வாழ்த்து, தேசிய கீதம் தான் பர்த்திருக்கிறேன். அது எல்லாம் இந்து மதப்பாடலகள் என்றால், வேறு எதைத்தான் அதில் அச்சடிக்கச் சொல்கிறீர்கள். இந்திய மண்ணின் பெறுமை இந்து மதத்தில் இல்லையா? அதில் பெறுமை கொள்பவர் எல்லாம் இந்துத்வாவாதி அல்லது உங்கள் அகராதியில் இந்து அடிப்படைவாதி என்றால், அப்படிப் பட்ட இந்து என்னதான் செய்வான்.?
சும்மா, திம்மி போல் பேசுவதை விடுத்து யோசியுங்கள் அன்பரே!!
சரஸ்வதி வந்தனம் பாடினால் உங்களுக்கு என்ன கேடு வந்து நேர்ந்ததா? இந்தியாவில் சரஸ்வதி வந்தனம் பாடாமல், சவூதியிலா பாட முடியும்?
வந்தேமாதரம் என்றால் அல்லாஹ் விற்கு எதிரான பாடல் என்று பாட மறுத்து பத்வாக்கள் வெளியிட்டது யார்? அதற்கு பயந்து உங்களைப்போல் உள்ள ஒரு திம்மி நாட்டின் தேசியகீதத்தை மற்றிவிட்டார். அதையும் இப்போது நீங்கள் இந்து மதப்பாடல் என்கிறீர்கள்.
வங்க எல்லோரும் "ஹல்லேலுயா" அல்லது "அல்லஹ் ஹு அக்பர்" தான் தேசியகீதமாகப் பாடுவோம்!!
//
நுனிமரத்தில் இருந்து கொண்டு அடியை வெட்டும் கதைதான் இந்துத்துவாவாதிகளின் கதை.
//
அப்படியா?
நல்ல கதை...தொடருங்கள் உங்கள் பிரச்சாரத்தை. உங்களுக்கு ஜிஞ்சா அடிக்கும் கூட்டம் நிரையவே இருக்கிறது இந்த தமிழ்மணத்தில்.
இந்துத்வா பற்றி நேரே, சாவர்கர், கோல்வார்கர், எழுதிய புத்தகங்களைப் புரட்டிவிட்டு வந்து எழுதுனீர்கள் என்றால் நன்று, அதை விடுத்து, தெருவில் கிடைக்கும் ஹிந்துத்வாவிற்கு எதிரான பிரச்சார புஸ்தகங்களிலிருந்து தான் உங்கள் ஹிந்துத்வா அறிவு வளர்கிறது என்றால் அதற்கு பாவம் ஹிந்துத்வாவாதிகள் என்ன செய்யமுடியும்.? உங்களுக்கு பதில் சொல்வது அவர்கள் வேலை அல்ல.
வஜ்ரா ஷங்கர்.
இதற்கு விடை என்ன? மூட்டை முடிச்சுகளைக் கட்டி கொண்டு உங்கள் ஆட்கள் இருக்கும் ஊர் போய் சேருங்கள் என்பதுதான் இந்துத்துவாவின் பதில். நீங்களும் இந்த மண்ணின் புதல்வர்கள்தான், உங்கள் நம்பிக்கைகளை பழக்கங்களை பின்பற்ற சில சிரமங்கள் இங்கு இருக்கத்தான் செய்யும். ஆனால் அதை நீக்குவதற்கான எல்லா ஆதரவுகளையும், நாங்கள் செய்வோம் என்பதுதான் காந்தீய/இந்திய வழி. அதுதான் நம் நாட்டின் ஆன்மா.
You have neither understood Hindutva not Gandhian thinking.
The minorities have all rights
in this country governed by a
secular constitution.Text books
in Tamil Nadu do npt propagate
Hinduism and give equal importance
to all faiths.So give up these
imagined problems.
சிறுபான்மையினரின் உரிமையை பற்றி யார் வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் ஒரு இஸ்லாமியன் பேசக் கூடாது.
இஸ்லாம் பெரும்பான்மையாக இருக்கும் எந்த ஒரு நாடும் இந்த உலகில் இவரின் கொள்கையை ஏற்றுக்கொண்டதில்லை.
சவுதி முதலிய காட்டுமிராண்டி வழக்கமுள்ள நாடுகள் போகட்டும், பொருளாதாரத்தில் முந்திய மலேசியா போன்ற நாடுகளும் அப்படித்தான். இஸ்லாமியர்கள் மதம் மாறுவதையும் பிற மத்த்தினருடன் மணவாழ்க்கை கூடுவதையும் அவை ஏன் தடுத்து விடுகின்றன?
அவ்வாறு இஸ்லாமிய வெறியுடன் இருக்கும் எல்லா முஸ்லிம் நாடுகளும் பொருளாதாரத்தில் தேய்ந்து விடவில்லையே?
தாங்கள் சொல்வது ஒன்றும் சரியில்லை.
நன்றி
//நம்முடன் சேர்ந்து உருவான பாகிஸ்தான் என்ற நாடு, சிறுபான்மையினரை நசுக்கி வைத்திருக்க இன்றைக்கு அவர்களது அரசியலும், பொருளாதரமும் தேங்கல் நிலைகளை அடைந்து விடவில்லையா?
//
சீனா திபெத்தை ஆக்கிரமித்தும் அவர்களை கொன்று குவித்தும் அவர்களின் நிலங்களில் ஹன் இன மக்களை குடியமர்த்திய பின்னரும் நன்றாக தான் இருந்து கொண்டு இருக்கிறது.
சவுதியில் ஒரு குறிப்பிட்ட பிரிவு இஸ்லாமியர் படும்பாட்டை பற்றி உங்களுக்கு தெரியும்.அவர்களும் நன்றாக தான் இருக்கிறார்கள்.
ரஷ்யா நன்றாக வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது - செசன்யர்களை அழித்துவிட்டு.
"தளைத்து" வளர்ந்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
சிறுபான்மை சமூகம் திருப்பி அடிக்க வரும் நிலையில் இருந்தால் மட்டுமே இந்த தளைத்து வளரும் சமாச்சாரம் இல்லாமல் போகும்.உதாரனம் : இலங்கை.
வலிமை மட்டுமே முடிவு செய்கிறது - வாழ்வா சாவா என்று.
//அதுதான் நம் நாட்டின் ஆன்மா.//
சைவ-வைனவ,சைவ-சமன ஆகிய மத சண்டைகளை பற்றி நிச்சயமாக கேள்விபட்டு இருப்பீர்கள்.
அப்போது இந்த ஆத்மா இல்லையே. :)
//நுனிமரத்தில் இருந்து கொண்டு அடியை வெட்டும் கதைதான் இந்துத்துவாவாதிகளின் கதை. //
அது இஸ்லாமிய தீவிரவாதிகளின் கதையும் தானே அன்பரே?
அடியை அவர்கள் பச்சையாக்க நினைப்பதே இல்லையா என்ன?
(எனக்கு தெரிந்து கோவை சிறையில் கூட சில ஆன்மாக்கள் இதற்க்கு தான் ஆசைபடுகிறார்களாம்.)
//
சைவ-வைனவ,சைவ-சமன ஆகிய மத சண்டைகளை பற்றி நிச்சயமாக கேள்விபட்டு இருப்பீர்கள்.
அப்போது இந்த ஆத்மா இல்லையே. :)
//
சமுத்ரா,
சைவ வைனவ சமண மதச் சண்டைகளில் பாம் வீச மாட்டார்கள். !!
வஜ்ரா ஷங்கர்.
என்னுடைய சொந்த ஊர் நாகர்கோவில். எங்கள் ஊரிலும் பக்கத்து கிராமங்களிலும் இந்துத்துவா சக்திகளின் தாக்கம் மிக அதிகம். சிறு வயதில் சாவார்கர், கோல்வால்கர் எல்லாம் படித்து வளர்ந்தவன் தான் நான். எல்லாவற்றையும் அலசி, இந்துத்துவா என்று இன்று நடக்கும் அரசியல் அழிவு அரசியல் என்பதே எனது கருத்து.
திம்மி என்றால் என்ன? :-)
ஜிஞ்சா என்றால் என்ன?
சில தலைமுறை முன்பு இந்துவாகத்தானே இருந்தாய், தீபாவளி கொண்டாடி விட்டுப் போயேன் என்று கூறும் திமிர்தான் இந்துத்துவா. அது தவறு. வானொலியிலும் பாடப் புத்தகங்களிலும் சிறுபான்மை மதத்தினருக்கு இடம் இருப்பது நிச்சயமாக இந்துத்துவாவின் தயவில் இல்லை. இந்தியாவின் பண்பாடு அது. அதை அழிக்க முனைவதுதான் இந்துத்துவா.
அனானி,
நீங்கள் சொல்வது சரி. அதைத்தான் நானும் சொல்கிறேன், இந்த நிலைமையை அழித்து விடக் கூடுவதுதான் இந்துத்துவா சக்திகள்.
சமுத்ரா,
சீனா திபெத்தை ஒடுக்குவதால்தான் வளர்கிறது என்கிறீர்களா? திபெத்தை ஒடுக்காமல் இருந்திருந்தால் அவர்கள் இன்னும் சிறப்பாக வளர்ந்திருப்பார்கள் என்கிறேன் நான். சிறுபான்மையரை ஒடுக்கும் சமூகத்தின் அவலம்தான் இலங்கை, நீங்களே சுட்டிக் காட்டியுள்ளீர்கள்.
வலிமை மட்டும் வாழ்வா சாவா என்று முடிவு செய்வது காட்டு வாழ்க்கையில்தான். நாகரிகமடைந்த்த நாடுகளில் முறை வேறு.
//
திம்மி என்றால் என்ன? :-)
//
திம்மி
//
சில தலைமுறை முன்பு இந்துவாகத்தானே இருந்தாய், தீபாவளி கொண்டாடி விட்டுப் போயேன் என்று கூறும் திமிர்தான் இந்துத்துவா.
//
உங்கள் இந்துத்வா அறிதல் அவ்வளவு தான் என்றால், அதற்கு ஒன்றும் செய்ய இயலாது. அல்லது, இது தான் உங்கள் கருத்து என்றால் அதை நீங்கள் சொல்ல எந்தத் தடைகளும் இல்லை.
தீபாவளி பொங்கல் கொண்டாடினால் தான் என்ன? எத்தனை இந்துக்கள், ஈத் பண்டிகை இஸ்லாமிய நண்பர்களுடன் பிரியாணி அடித்துக் கொண்டாடுகின்றனர்.
நோம்புக் கஞ்சி குடிக்க கருணாநிதி, ஜார்ஜ் புஷ் என்று முதலமைச்சர்கள், அதிபர்கள் எல்லாம் செல்வதில்லையா...யாராவது ஒரு இஸ்லாமிய தலைவர் இந்துக் கோவிலில் அல்லது பண்டிகையைக் கொண்டாடி இருக்கிறாரா? இதனைக் கேட்பது இந்துத்வா...
நாங்கள் தீபாவளி எல்லாம் கொண்டாடமாட்டோம் என்ற திமிர் யாருக்கு?
//
இந்தியாவின் பண்பாடு அது. அதை அழிக்க முனைவதுதான் இந்துத்துவா.
//
அனேகமாக இந்துத்வா இல்லை என்றால் இன்னுமொறு ஐம்பது நூறு ஆண்டுகளில் இந்தியாவில் "நீங்கள் கொண்டாடும் அந்த இந்தியம்" இல்லாமல் போய்விடும் அபாயம் உள்ளது. "போலி மதச்சார்பின்மை" காரணமாக.
வஜ்ரா ஷங்கர்.
கண்டிப்பாக அப்படி நடக்காது ஷங்கர். என்று வரை நாம் அடுத்தவரின் உரிமைகளை உணர்வுகளை மதித்து நடக்கிறோமோ் அன்று வரை இந்தியா வாழும், இந்தியம் வாழும். இந்த்துத்துவா என்ற பெயரில் சகிப்புத் தன்மையை அழிக்க முயலும் முயற்சிகளை நாம் விழிப்போடு இருந்து வேரறுக்க வேண்டும்.
ஒரு பண்டிகையைக் கொண்டாட விட்டால் திமிரா? என்ன நணபரே, எல்லோரும் ஒரே மாதிரி ஆகி விட்டால் மனித குலமே வேரறுந்து போய் விடும். வேற்றுமைகளைக் கொண்டாடி, வேறுபாடுகளை மதிக்கக் கற்றுக் கொள்வோம்.
ஷங்கர்,
திம்மி என்ற சொல்லைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி.
ஒரு கை ஓசை தராது அன்பரே!!
நாம் மட்டும் வேருபாடுகளைக் கொண்டாடவேண்டும், அவர்கள் செய்யமாட்டார்கள். இது என்ன one way traffic ஆ?
//
இந்த்துத்துவா என்ற பெயரில் சகிப்புத் தன்மையை அழிக்க முயலும் முயற்சிகளை நாம் விழிப்போடு இருந்து வேரறுக்க வேண்டும்.
//
சகிப்புத்தன்மை அழிக்கும் முயற்சி இந்துத்வா பெயரில் தான் நடக்கிறாதா?
நம் சமுதாயத்தைப் பிரித்து, சில சந்ததியினர் முன்பு ஒன்றாக வாழ்ந்தவர்களை மதத்தின் அடிப்படையில் சண்டை மூட்டி, சகிப்புத் தன்மையை இழக்கச் செய்வது இந்துத்வாவாதிகளா?
இந்து மதத்தினால் தான் இந்தியாவில் இந்தியம் உயிருடன் இருக்கிறது. என்று, இந்து மதம் அழிகிறதே, அன்றே இந்தியா இல்லை. என்றாகிவிடும். சகிப்புத்தன்மையும் காணாமல் போய்விடும்.
இந்த சதி வஹாபிய சவூதிப் பணம் மற்றும் போப் ஆண்டவர் தயவால் அமோகமாக நடக்கிறது. இதனைத் தடுப்பது தற்பொழுது இந்துத்வா வாதிகள் மட்டுமே.
வஜ்ரா ஷங்கர்.
ஷங்கர்,
நாம் திரும்பத் திரும்ப சொல்வதேயே சொல்லி எழுதிக் கொண்டிருக்கப் போகிறோம் :-). இந்து மதத்தின் இயல்பே அதன் நெகிழ்வுத் தன்மை, அதுதான் அதன் வலிமை. அதை இசுலாம் போல விறைப்பாக மாற்றி இந்தியாவை சவுதி அரேபியா மாதிரி மாற்றத்தானே இந்துத்துவாவாதிகள் முனைகின்றனர். முஸ்லீம்கள் இப்படி நடக்கின்றனர், நாங்களும் இப்படித்தான் நடப்போம் என்று முஸ்லீம் தீவிரவாதிகளைக் காப்பி அடித்தால் நாம் அவர்களாக மாறி விடுவோம்.
நாம் நாமாக இருப்போம் என்பதுதான் எனது கருத்து.
#1)
//இந்துத்வா பற்றி நேரே, சாவர்கர், கோல்வார்கர், எழுதிய புத்தகங்களைப் புரட்டிவிட்டு வந்து எழுதுனீர்கள் என்றால் நன்று, அதை விடுத்து, தெருவில் கிடைக்கும் ஹிந்துத்வாவிற்கு எதிரான பிரச்சார புஸ்தகங்களிலிருந்து தான் உங்கள் ஹிந்துத்வா அறிவு வளர்கிறது என்றால் அதற்கு பாவம் ஹிந்துத்வாவாதிகள் என்ன செய்யமுடியும்.? உங்களுக்கு பதில் சொல்வது அவர்கள் வேலை அல்ல//
//உங்கள் இந்துத்வா அறிதல் அவ்வளவு தான் என்றால், அதற்கு ஒன்றும் செய்ய இயலாது.//
சங்கர் தாங்கள் இந்துத்துவா பற்றி தெரிந்து கொண்டுதான் பேசுகிறேர்களா?
ஏனென்றால் எனக்கு அளித்த ஒரு பதிலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தீர்கள்:
//Nobody claims to be hindutva vadi.
If you have questions about functioning of hindutva organizations find appropriate person to ask and read directly from Sarsanchalaks or if you have time go to one of the shakha meeting and listen. Do not just jump to conclusions..and shout...ha! ha! ha! i won, i won! Who cares, if you want to believe that i am a brahmin and hindutva vadi. How am i supposed to be responsible?
I am a hindu, and i am proud of being one.
//
தயவுசெய்து இந்துவுக்கும், இந்துத்துவாவுக்கும் வித்தியாசம் சொல்லுங்கள் ஏனென்றால் இங்கே கேள்விகேட்டால் அங்கே சென்றும் அங்கே கேள்வி கேட்டால் இங்கே வந்தும் great escape செய்கிறேர்கள். எனக்கு இப்படி jump அடித்து, குட்டிகரணம் போட்டு விவாதம் செய்வது பெருத்த இம்சையாக உள்ளது.
#2)
//சைவ வைனவ சமண மதச் சண்டைகளில் பாம் வீச மாட்டார்கள். !!//
தங்களது வராலாற்று அறிவு மெய் சிலிர்க்க வைக்கிறது. அப்போழுது அறிவியல் வளரவில்லை என்பது தெரியுமா சங்கர்? ஆனால் மாறாக சமணர்களை கழுவிலேற்றியது போன்ற மிக சாத்வீகமான முறையிலேதான் தங்களது முன்னோர்கள் நடந்துகொண்டார்கள்(எனது முன்னோருக்கு வேதத்திலும், மனிதர் listலும் இடமேயில்லை).
கருத்துரையிடுக