சனி, மே 13, 2006

ஆயிரம் ஆண்டுகளின் தன்னிகரில்லாத் தலைவன் - 8

தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களின் உரிமைகளுக்காக கிளர்ச்சிகள் நடத்திய காந்தி, அந்த சமயத்தில் அங்கு வாழும் கறுப்பு இனத்தவருக்காக என்ன செய்தார்? தான் இந்தியன் என்பதால் இந்தியரின் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு போய் விட்ட அவர், இந்தியரின் நிலைமையை விட பல மடங்கு மோசமாக இருந்த கறுப்பர்களுக்காக எதுவும் செய்யவில்லையா?

தம்முடைய கொள்கைகள் மனித இனத்துகே வழி காட்டும் என்று கூறி வந்த மகாத்மா, தன் கண் முன்னால் நடந்திருக்கக் கூடிய கறுப்பர்களின் மீதான அடக்குமுறைகளுக்காக எதுவுமே செய்யவில்லையா?

விடை தெரியவில்லை.

5 கருத்துகள்:

வெற்றி சொன்னது…

//தம்முடைய கொள்கைகள் மனித இனத்துகே வழி காட்டும் என்று கூறி வந்த மகாத்மா, தன் கண் முன்னால் நடந்திருக்கக் கூடிய கறுப்பர்களின் மீதான அடக்குமுறைகளுக்காக எதுவுமே செய்யவில்லையா?//

நீங்கள் மேலே குறிப்பிட்ட கருத்துடன் எனக்கு உடன்பாடு இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மகாத்மா காந்தி தென் ஆபிரிக்க கறுப்பின மக்களுக்காக தென் ஆபிரிக்காவில் போராட்டத்தில் குதித்திருந்தாலும், கறுப்பின மக்கள் அவரின் தலைமை ஏற்று அவருக்கு ஆதரவு வழங்கியிருப்பார்கள் என்பது சந்தேகமே. காராணம், இந்தியர்களையும் கறுப்பின மக்கள் அந்நியர்களாகவே பார்த்தார்கள். வெள்ளையர்கள் போல இந்தியர்களும் தமது நாட்டைச் சுரண்ட வந்தவர்களே எனும் எண்ணமே கறுப்பின மக்கள் மத்தியில் ஆரம்ப காலத்தில் இருந்தது. இதை நான் சொல்லவில்லை. தென் ஆபிரிக்க கறுப்பின மக்களின் தன்னிகரற்ற தலைவன் நெல்சன் மண்டெலா அவர்களே தனது சுயசரிதையான "விடுதலைக்கான நீண்ட பயணம்" (Long Walk to Freedom) எனும் நூலில் இதைச் சொல்லியிருக்கிறார்கள்.பின்னர் தான் தனது கருத்தை மாற்றிக்கொண்டதாகவும் காந்தியே தன் ஊக்கி என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஆக காந்திக்கும் இந்த யாதார்தம் நன்றாகவே தெரிந்திருக்கும்.Charity starts at home என்பது போல் , அவர் இந்தியாவிற்கு வந்து போராட்டத்தை தொடங்கியிருக்கலாம். ஆகவே காந்தி அவர்கள் கறுப்பின மக்களின் அடக்குமுறையைக் கண்டு அவர் ஒன்றும் செய்யவில்லை என்ற முடிவுக்கு வருவது சரியல்ல என்றே நான் நினைக்கிறேன்.

மா சிவகுமார் சொன்னது…

நன்றி வெற்றி,

நீங்கள் அளித்த விளக்கத்திற்கு நன்றி. இதைப் பற்றி காந்தி எங்காவது கண்டிப்பாக எழுதியிருப்பார். உங்களிடம் அது பற்றிய விபரங்கள் உள்ளதா?

நீங்கள் எழுதிய விளக்கம் ஏற்றுக் கொள்ளும்படியாகத்தான் உள்ளது.

மீண்டும் நன்றி.

அன்புடன்

வெற்றி சொன்னது…

மா.சிவகுமார்,
முதலில் தங்களின் முதல் எழுத்தை தமிழில் எழுதி வருவதற்கு என் பாராட்டுக்கள். தங்களின் முதல் எழுத்துக்களை ஆங்கிலத்தில் எழுதி தமிழைக் கொலை செய்யும் பல தமிழக உறவுகள் மத்தியில் உங்கள் போன்றவர்களைப் பார்க்கும் போது ஈழத்தமிழனாகிய எனக்கு மிகவும் மகிழ்சியாக உள்ளது. இப் பழக்கத்தை தொடர்ந்து பின்பற்றுவீர்கள் என நம்புகிறேன்.

//இதைப் பற்றி காந்தி எங்காவது கண்டிப்பாக எழுதியிருப்பார். உங்களிடம் அது பற்றிய விபரங்கள் உள்ளதா? //

இது வரை நான் வாசித்த நூல்களில் காந்தி இது பற்றி எழுதியதாகத் தெரியவில்லை. நான் வாசிக்காத பல நூல்களில் அவர் இது பற்றிச் சொன்னாரா என்பது தெரியவில்லை. நீங்கள் கூறுவது போல் , அவர் எங்காவது இது பற்றி எழுதி இருக்கலாம். ஆனால் இது வரை நான் படிக்கவில்லை.

மா சிவகுமார் சொன்னது…

வெற்றி,

நன்றி. நான் கண்டிப்பாக என்னுடைய முதல் எழுத்தை தமிழிலேயே எழுதி வருவேன். இன்னொன்று கையொப்பம் இடும் போது தமிழில் இடுவது. அதையும் பின்பற்ற ஆரம்பிக்க வேண்டும். எப்பொழுதோ கல்லூரியில் படிக்கும் போது அந்தப் பழக்கம் ஆரம்பித்து விட, இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இனிமேலாவது புதிதாக உருவாக்கும் ஆவணங்களில் தமிழில் கையொப்பமிடும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

அசுரன் சொன்னது…

"ஆயிரம் ஆண்டுகளின் தன்னிகரில்லாத் தலைவன் - 10"

The comment I posted for the above posting is applicable to this posting also.