வியாழன், செப்டம்பர் 07, 2006

பரிசு பெறும் பின்னூட்டம்

Economics என்ற தலைப்புடனான எனது பதிவுகளில் இடப்பட்ட பின்னூட்டங்களில் தேன்துளி எழுதியவை இந்த வாரத்தின் தலை சிறந்தவை என்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

கைப்புள்ள இந்த வாரமும் அருமையான கருத்தாழமிக்க இரண்டு பின்னூட்டங்களை கொடுத்திருந்தார். மதிப்பீடு செய்த சிவஞானம்ஜி ஐயாவுக்கும் துளசி அக்காவுக்கும் நன்றிகள்.

பின்னூட்டங்களின் தொகுப்பு அட்டவணையின் சுட்டி இதோ.

வாழ்த்துக்கள்.

கொசுறு மதிப்பு என்ற பதிவில் தேன்துளியின் பின்னூட்டம் இதோ:

"சிவகுமார். நீங்கள் கொசுறுவிலையை விட்டு கொடுக்க அந்த வாகனத்தை வாங்குவதன் மூலம் நீங்கள் பெற்றதாக உங்கள் சமுதாய அங்கீகரிப்பு இல்லை உங்களின் ஆசையை பூர்த்தி செய்த திருப்தியையும் வாங்கி இருக்கிறீர்கள். இதைத்தான் விற்பனையாளர்கள் பெற்றுவிட நினைக்கிறார்கள்.

கோகோகோலா பானம் என்பது ஒரு நாகரீக மாற்றத்தை அடைந்ததாகவோ இளமை, மகிழ்ச்சியை பெற்றதாகவோ விற்பனைவிளம்பரங்கள் மூலம் அடிமனதில் ஒரு எண்ணத்தை ஏற்படுத்தி அதை பூர்த்தி செய்ய ஒரு விலையை கூடுதலாக நிர்ணயிக்கிறார்கள். இதை நீங்கள் சமுதாய விற்பனைத்துறை( social marketing) காணமுடியும்.

sales is a common battle between sellers and buyers surplus. இதில் சில சமயம் தங்கள் கொசுறு விலையை விற்பனையாளர்கள் அது அந்த பொருளை விற்காமல் வைத்திருக்க ஆகும் விலையைவிட(holding cost) குறைவாக இருந்தா விட்டுவிடுவதையும் காணமுடியும். எளிமையாக அருமையாக நீங்கள் எழுதியிருந்தாலும் இது ஒரு சிக்கலான வியாபார நுணுக்கம். உங்கள் கடைசி கருத்துக்கள் முற்றிலும் உண்மை."

5 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

வாழ்த்து(க்)கள் பத்மா.

siva gnanamji(#18100882083107547329) சொன்னது…

தேன் துளி அவர்களை வாழ்த்துகின்றேன்

கைப்பிள்ளைக்குப் பாராட்டுகள்.

கைப்புள்ள சொன்னது…

பரிசு பெற்ற தேன்துளி அவர்களுக்கு வாழ்த்துகள். கோகா கோலா உதாரணத்தின் வாயிலாகக் கொசுறு மதிப்பை மிக அழகாக விளக்கியுள்ளார்.

பத்மா அர்விந்த் சொன்னது…

என் பின்னூட்டத்தை பரிசுக்குறியதாக தேர்ந்தெடுத்த குழுவிற்கு என் நன்றி. இன்றுதான் பார்த்தேன்.

மா சிவகுமார் சொன்னது…

பத்மா வாழ்த்துக்கள். நன்றி துளசி அக்கா, சிவஞானம்ஜி ஐயா, கைப்புள்ள.

அன்புடன்,

மா சிவகுமார்