புதன், செப்டம்பர் 27, 2006

சோனியா என்ற அருந்தலைவி?

இந்தியாவில் நிலவும் நாடாளுமன்ற மக்களாட்சியில் அரசியல் கட்சிகள், மக்கள், அரசுகள் இவற்றுக்கிடையேயான உறவுகள் பெரும்பாலும் குழப்படியாகவே இருந்து வருகின்றன.

நேரு அதன் பிறகு இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என்று நீண்ட ஆதிக்கத்தில் கட்சியும் அரசும் ஒரே தலைமையின் கீழ் செயல்பட, யார் என்ன செய்ய வேண்டும் என்ற வரையறை மங்கலாகவே இருந்தது. தமிழ் நாட்டில் எம்ஜிஆர்/ஜெயலலிதா, கருணாநிதி தலைமைகளும் இப்படி இரண்டையும் ஒரே கையில்தான் வைத்திருந்தன.

கேரளா/மேற்கு வங்கம் மாநிலங்களில் கம்யூனிஸ்டுகள் கட்சித் தலைமையும் ஆட்சித் தலைமையையும் தனித் தனியாக வைத்து ஆரோக்கியமான உறவைப் பேணி வருகிறார்கள்.

இப்போது காங்கிரசு சோனியா காந்தியின் தலைமையிலும் அரசு மன்மோகன் சிங் தலைமையிலும் அப்படி ஒரு ஆரோக்கியமான உறவை உருவாக்கி வருவதை அலசும் கட்டுரை இன்றைய இந்து நாளிதழில்.

இது இப்படியே வளர்ந்தால் சோனியா காந்தியின் பங்கு வரலாற்றில் ஒரு முக்கியமான பத்தியில் இடம் பெற்று விடும்.

4 கருத்துகள்:

மருதநாயகம் சொன்னது…

அய்யா! என்ன இப்படி எழுதுவிட்டீர்கள். இந்தியாவை (அல்லது காங்கிரசை) உரோமாபுரி அரசிடம் அடகு வைத்துவிட்டீர்கள் என்று உங்கள் மீது குற்றம் சுமத்த ஒரு கூட்டம் காத்துக் கொண்டு இருக்கிறது

நாடோடி சொன்னது…

//கேரளா/மேற்கு வங்கம் மாநிலங்களில் கம்யூனிஸ்டுகள் கட்சித் தலைமையும் ஆட்சித் தலைமையையும் தனித் தனியாக வைத்து ஆரோக்கியமான உறவைப் பேணி வருகிறார்கள்.//

உங்க்ளோட ஒரே காமடி போங்க...

மா சிவகுமார் சொன்னது…

//இந்தியாவை (அல்லது காங்கிரசை) உரோமாபுரி அரசிடம் அடகு வைத்துவிட்டீர்கள்//

:-)

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//உங்க்ளோட ஒரே காமடி போங்க...//

அப்படி என்ன காமெடிங்க?

அன்புடன்,

மா சிவகுமார்