வியாழன், செப்டம்பர் 28, 2006

போட்டியில்லா விட்டால்..... (economics 22)

ஏகபோக ஆதிக்கத்தினால் என்ன விளைவுகள் ஏற்படும்?

சந்தையில் வந்து சேரும் பொருளின் அளவு குறைந்தால் விலை ஏறும் என்பது தெரியும். போட்டி நிலவும் போது விலையை யாரும் கட்டுப்படுத்த முடியாததால் ஒவ்வொரு விற்பனையாளரும் போட்டி போட்டுக் கொண்டு செலவுகளைக் குறைத்து சந்தை விலைக்குக் குறைந்த செலவில் தம்மால் எவ்வளவு உற்பத்தி செய்ய முடியுமோ அவ்வளவு உற்பத்தி செய்து விற்பார்கள்.

இதனால் சமூகத்தில் குறிப்பிட்ட காலத்தில் நிலவும் தொழில் நுட்ப வசதிகள், மூலப் பொருட்களைப் பயன்படுத்தி மிகச் சிறந்த முறையில் உற்பத்தி நடந்து அந்த விலைக்கு வாங்க விரும்பும் எல்லா வாடிக்கையாளர்களுக்கும் பொருள் கிடைத்து விடுகிறது. இதுதான் முழுமையான போட்டிச் சந்தையின் மிகப் பெரிய ஆதாயம்.

ஒரே நிறுவனம் மட்டும் விற்கவோ வாங்கவோ செய்தால் என்ன நடக்கும்?

அந்த நிறுவனம் சொல்வதுதான் விலை. அதனால் எந்த விலையில் தமது வருமானம் உச்சமாகிறதோ அந்த விலை அமையும் படி அளவைக் குறைத்துக் கொள்ளும் ஒரு ஏகபோக நிறுவனம்.

சோப்புப் பொடி தயாரிக்கும் நிறுவனத்தின் சந்தையை எடுத்துக் கொள்வோம். குறிப்பிட்ட விலையில் விற்கும் எடை விபரத்தைப் பார்க்கலாம்.

சந்தையில் பத்து கிலோ மட்டும் இருந்தால் 90 ரூபாய்க்கு விற்கலாம். 40 கிலோ விற்க வேண்டுமானால் விலை 20 ரூபாயாக குறைய வேண்டும். 90 ரூபாய்க்கு வாங்கியிருக்கக் கூடியவர்களுக்கும் இந்த விலைக்குறைப்பு கொடுக்க வேண்டியிருக்கும்.

























அளவுவிலை மதிப்பு
1090 900
20 70 1400
30 40 1200
40 20 800
மேற்சொன்ன அளவுகளில் உற்பத்தி செய்ய நிறுவனத்தின் செலவுக் கணக்கு இப்படி இருக்கலாம்.


























அளவு செலவு கிலோவுக்கு
10 1000 100
20 1140 57
30 1200 40
40 1240 31

போட்டிச் சந்தையில் எந்த விலையில் தேவையும் வழங்கலும் சமமாக இருக்குமோ அந்த அளவு உற்பத்தியாகி விற்றுப் போகும். மேலே சொன்ன சந்தையில் தேவையும் வழங்கலும் சமமாக இருக்கும் 30 கிலோ உற்பத்தியாகி 40 ரூபாய்க்கு விற்றுப் போகும்.

ஒரே நிறுவனம் உற்பத்தி அளவைக் கட்டுப்படுத்தும் சந்தையில் அந்த நிறுவனத்தின் ஆதாயம் தேடும் தன்மை இந்த அளவு உற்பத்தியைத் தராது. எந்த அளவில் நிறுவனத்தின் ஆதாயம் மிக அதிகமாக உள்ளதோ அவ்வளவுக்கு உற்பத்தியைக் குறுக்கிக் கொள்ளும் இந்த நிறுவனம்.
































அளவு செலவு வரவு ஆதாயம்
10 1000 900 -100
20 1400 1140 +260
30 1200 1200 0
40 1240 800 -440


மோனோபோலி நிறுவனம் 30 கிலோ உற்பத்தி செய்து 40 ரூபாய்க்கு விற்றால் எல்லாச் செலவும் போக ஒன்றும் மிஞ்சாது. அதனால் ஆதாயம் அதிகமாக இருக்கும் அளவான 20 கிலோ மட்டும் சந்தைப்படுத்தி 70 ரூபாய்க்கு விற்கும். இதனால் கூடுதலாக 10 கிலோ உற்பத்தி செய்ய வாய்ப்பு இருந்தும் உற்பத்தியாகாமல் போய் முப்பது ரூபாய்க்கு வாங்கியிருக்கக் கூடிய நிறைய பேருக்கு சோப்புப் பொடி கிடைக்காமல் போய் விரும்.

40 ரூபாய் விலையில் உருவாகியிருக்கக் கூடிய நுகர்வோர் கொசுறு மதிப்பில் பெரும்பகுதி 70 ரூபாயில் மறைந்து விடுகிறது. கிடைக்கும் ஆதாயம் அனைத்தும் ஒற்றை நிறுவனத்துக்கே போய்ச் சேருகிறது.

இதன் விளைவாக, மோனோபோலி நிறுவனம் மூலப் பொருட்களை சரியான விகிதத்தில் பயன்படுத்தாமல் வீணடித்தல் நடப்பதற்கும் வாய்ப்புகள் உண்டு.

6 கருத்துகள்:

நாமக்கல் சிபி சொன்னது…

ஒன்றும் புரியவில்லையே! :(

போட்டியே இல்லாவிடில் தேவையான அளவு உற்பத்தி செய்து வைத்துக்கொண்டு, ஆனால் சந்தைக்கு கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு சென்றால்(அதாவது குறைந்த உற்பத்தி என்ற தோற்றத்தை உண்டு செய்தால்) தேவையும் அதிகமாகும். நினைத்த விலைக்கும் விற்கலாம் அல்லவா.

dondu(#11168674346665545885) சொன்னது…

நாமக்கல் சிபி அவர்களே, நீங்கள் சொல்வது போலச் செய்தால் உற்பத்தி செய்த பொருளை வைக்க கோடௌன், மற்ற செலவுகள் அதிகரிக்கும். இன்வெண்டரி மேனேஜ்மெண்ட் கந்தலாகி விடும்.

சில ஆண்டுகள் முன்பு வரை பி.எஸ்.என்.எல். மட்டும் கோலோச்சி வந்தது. தொலைபேசி தொடர்பு கிடைக்கவே 3-4 ஆண்டுகள் ஆயின. பில்லும் எகிறியது. இப்போது நிலைமை உங்களுக்குத் தெரியும்தானே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

மா சிவகுமார் சொன்னது…

//ஒன்றும் புரியவில்லையே! :(//

வாங்க சிபி,

நீங்கள் சொல்வது போலச் செய்ய மாட்டார்கள் என்பது ஒரு புறம், காரணங்கள் டோண்டு சார் சொல்வது.

மற்றொரு புறம், அதைச் செய்தாலும் குறிப்பிட்ட நாளில் எவ்வளவு இயலுமோ அவ்வளவு சந்தைப் படுத்தாமல் பலருக்குப் பொருள் கிடைக்காமல் செய்து விடுவது மாறப் போவதில்லையே!

இதுதான் மோனோபோலியின் பொருளாதார வீணாக்கல். இதனால் நன்மைகளும் உண்டு என்றும் வாதங்கள் உண்டு.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

நன்றி டோண்டு சார்,

அதற்குக் காரணம் பிஎஸ்என்எல் அரசு நிறுவனம் என்பது மட்டுமில்லை. போட்டிக்கு ஆள் வந்ததும் அதே அரசு நிறுவனம் எவ்வளவு மாறியிருக்கிறது பார்த்தீர்களா?

அன்புடன்,

மா சிவகுமார்

பொன்ஸ்~~Poorna சொன்னது…

சிவகுமார், இதற்கு டிமாண்ட் சப்ளை வரைபடங்கள் உண்டு தானே, அதை ஏன் பதிவில் சேர்க்கவில்லை?

அதுவும் இருந்தால் இன்னும் சுலபமாகப் புரியும் என்று தோன்றுகிறது..

மா சிவகுமார் சொன்னது…

பொன்ஸ்,

நீங்கள் சொல்வது சரிதான். வரைபடங்களை இணையத்திலிருந்தோ, அல்லது புத்தகத்திலிருந்தோ எடுத்து இணைப்பது புரிந்து கொள்ள உதவி செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

அன்புடன்,

மா சிவகுமார்