ஏற்கனவே பார்த்து போல விலை பத்து ரூபாய் இருக்கும் போது ஐம்பது ரூபாய் கொடுத்தும் பொருள் வாங்க விரும்பும் வாடிக்கையாளருக்கும் அதே பத்து ரூபாய் விலையில் விற்க வேண்டியிருக்கிறது. ஏதாவது ஒரு வழியில் ஐம்பது ரூபாய் கொடுக்க முடிபவரிடம் ஐம்பது ரூபாய் விலைக்கும், அந்த விலையில் வாங்காமல் போய் விடக் கூடியவர்களுக்கு குறைந்த விலையிலும் விற்க முடிந்தால் விற்பனையும் குறையாது ஆதாயமும் அதிகமாகும்.
இது எல்லா இடங்களிலுமே நடப்பதுதான்.
- ரயில் வண்டியில் முதல் வகுப்பில் போனாலும் இரண்டாம் வகுப்பில் போனாலும் போய்ச் சேருவது ஒரே இடம்தான். முதல் வகுப்பில் , கூடுதலாக சில வசதிகளை அளித்து இரண்டு மூன்று மடங்கு வசூலிக்கிறார்கள்.
- அமெரிக்க பாடப் புத்தகங்கள் இந்தியாவில் விற்கும் போது மூவாயிரம் ரூபாய் விலையை ஐநூறு ரூபாயாகக் குறைத்து Eastern Economy Edition என்று விற்கிறார்கள்.
- ஒரே பைக்கை சமுராய் என்று ஸ்டிக்கர் ஒட்டி பத்தாயிரம் ரூபாய் ஏற்றி விற்றது TVS நிறுவனம்.
இன்றைய விவசாய விளை பொருட்களுக்கான சந்தையைப் பார்த்தாலே இதற்கான விடை கிடைத்து விடும்.
- சந்தையிலிருந்து வரும் குறிகளை அவதானித்து அதற்கேற்ப உற்பத்தியை மாற்ற எல்லோருக்கும் சரியான, முழுமையான சந்தை நிலவரங்கள் (marker information) கிடைப்பதில்லை.
- அப்படியே விபரங்கள் கிடைத்தாலும் அதன் அடிப்படையில் செயல்பட்டு சந்தைக்கு பொருட்களைக் கொண்டு வரும் போது நிலவரம் தலை கீழாக மாறி, பெரும் இழப்பு ஏற்படுகிறது.
எல்லா விவசாயிகளுக்கும் அமோக விளைச்சல் கிடைத்தால் சந்தையில் அளவு கூடி விலை சரிந்து ஆறு மாதம் முன்பு கிடைத்தத் தகவலின் அடிப்படையில் செயல்பட்டதற்கு தண்டனை கிடைக்கிறது.
- சந்தையில் தமது பொருட்களுக்கான தேவையை கட்டுபடுத்த முடிந்தால்தான் ஒரு நிறுவனமோ தனி நபரோ சரியாகத் திட்டம் போட்டு பெரும் இழப்புகளைத் தவிர்க்க முடியும்.
புதிய பாணி உடைகள், புதிய கண்டு பிடிப்புகள் போன்றவை சந்தையில் விலை போகும் உறுதி இருந்தால்தான் உருவாகும்.
முழுமையான போட்டிச் சந்தையில் என்ன செய்தாலும் நமக்கு என்ன ஆதாயம் என்ற விரக்தியில் புதிய முயற்சிகளே இல்லாமல் சமூக முன்னேற்றம் தேங்கி விடும்.
இது ஒரு புறம் இருக்க, பெரும்பாலான உலகை மாற்றும் கண்டு பிடிப்புகள் தனிநபர்களின் வீட்டுப் பின்புறத்திலும், சிறு நிறுவனங்களின் அலுவலகங்களிலும் நடக்கின்றன என்பதையும் பார்க்க வேண்டும்.
2 கருத்துகள்:
மாசி,
எகனாமிக்ஸை இவ்வளவு அருமையாக கதை போல எழுத முடியுமா என்று வியப்பாக இருக்கிறது...
என் இன்ஸ்டிட்யூட்டில் ராமதுரை என்ற ப்ரபொஸர் சிரிக்க சிரிக்க எகனாமிக்ஸ் எடுப்பார். அதற்கு பிறகு இந்த சப்ஜெக்ட்டில் ருசி வருகிறது என்றால் உங்கள் பதிவில்தான்.
சந்தைப்பங்கு குவியும்போது நன்மை என்கிறீர்கள். அதாவது monopoly நல்லது என்கிறீர்கள். யாருக்கு? எப்படி? அது விவசாயத்தில் இருந்தாலும், வியாபாரத்தில் இருந்தாலும் எப்படி நல்லது ஆகும். minimum economics of scale இருந்தால் நல்லதுதான். ஆனால், Monopoly என்பது நுகர்வோருக்கு கெட்டது இல்லையா?
இது கொஞ்சம் புரியவில்லை.
நன்றி
//எகனாமிக்ஸை இவ்வளவு அருமையாக கதை போல எழுத முடியுமா என்று வியப்பாக இருக்கிறது...//
வசிஷ்டர் வாயால் ..... :-)
//Monopoly என்பது நுகர்வோருக்கு கெட்டது இல்லையா?//
மோனொபோலி மட்டும் இல்லாமல் oligopoly, monopolistic competition எந்த வகையிலும் சந்தை விலையைக் கட்டுப்படுத்த முடிவது புதிய முயற்சிகளை ஊக்குவிப்பதற்கு ஒரு உறுதி நிலையைக் கொடுக்கின்றன என்று ஜோசப் ஷும்ப்டர் என்ற பொருளாதார அறிஞர் கருத்துரைத்தாராம். அதை வெட்டியும் ஒட்டியும் பல விவாதங்கள் உள்ளன.
மோனொபோலி மட்டும் இல்லாமல் oligopoly, monopolistic competition எந்த வகையிலும் சந்தை விலையைக் கட்டுப்படுத்த முடிவது புதிய முயற்சிகளை ஊக்குவிப்பதற்கு ஒரு உறுதி நிலையைக் கொடுக்கின்றன என்று ஜோசப் ஷும்ப்டர் என்ற பொருளாதார அறிஞர் கருத்துரைத்தாராம். அதை வெட்டியும் ஒட்டியும் பல விவாதங்கள் உள்ளன.
நான் எழுதியது monopolyயை மட்டும் குறிப்பதாக அமைந்து விட்டது, இல்லை? :-).
இந்த சந்தைப் பங்கு குவிவது நடைமுறை உண்மை. அதன் விளைவுகளில் சில நுகர்வோருக்கும் தீமை, சில நன்மை. எது மேலோங்குகிறது என்று சீர்தூக்கி ஒழுங்குபடுத்துவது அரசின் கடமை.
அன்புடன்,
மா சிவகுமார்
கருத்துரையிடுக