வெள்ளி, செப்டம்பர் 08, 2006

விலைமதிப்பில்லா உயிர்கள்

"விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றெல்லாம் செய்தி வருகிறதே!"

  • அதெல்லாம் இந்தப் பத்திரிகைக்காரங்க செய்ற பம்மாத்து. நாட்டுல ஒவ்வொருத்தன் செத்துக்கிட்டுத்தான் இருக்கான். அதுக்கு ஒரு சாயம் பூசி தமுக்கு அடிச்சு பெரிசாக்குறாங்க!

  • வாழ்க்கைய ஒழுங்க நடத்தத் தெரியல, கடன வாங்கிக்கிட்டு கட்ட முடியாமல் செத்துப் போறாங்க அதுக்கு நாம என்ன செய்ய முடியும்!

  • வேலை இல்லை பணம் இல்லை எல்லாம் கதை. உழைக்க விருப்பமிருப்பவனுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கு. அத விட்டு விட்டு கழுத்தறுக்குறானுங்க!

  • செத்தா அரசு ஒரு லட்சம் கொடுக்கும் என்று எல்லாம் போய்ச் சேருது. போனது தொல்லை என்று அரசுகள் கண்டுக்காமல் இருந்தால்தான் புத்தி வரும்.

இப்படி எல்லாம் மேலே சொன்ன கேள்விக்கு விடைகள் வெள்ளை சட்டை போட்ட குளிரூட்டிய அறையில் பணி புரியும் நகர வாசிகளிடமிருந்து நான் கேட்டிருக்கிறேன்.

இதெற்கெல்லாம் பதிலாக இன்றைய இந்து நாளிதழில் ஒரு விரிவான கட்டுரை வெளியாகி உள்ளது. கண்களை மூடிக் கொண்டு பிரச்சனையே இல்லை என்று இருந்து விடுவது அபாயகரமானது. நமது சகோதரர்களின் துயரத்தை போர்க்கால அடிப்படையில் துடைக்க நடவடிக்கைகள் தேவை. இல்லையென்றால் காலம் கடந்து விடலாம்.

22 கருத்துகள்:

Amar சொன்னது…

கட்டுரையில் இருந்து..
//After 15 years of a battering from hostile policies and governments, the world of the peasant has turned highly fragile. But the onus of changing is on the farmer. Not on those driving a cruel process and system. //

சிவகுமார்,

இதை பற்றி உங்கள் கருத்து என்ன?

15 ஆண்டுகளாக என்றால் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கொள்கைகள் என்ன? அவை விவசாயிகளுக்கு எப்படி உதவின?

அசுரன் சொன்னது…

நான் பல இடங்களில் ஏற்கனவே சொன்னதுதான்.... 15 வருடமில்லை 57 வருட பாலிசியே அப்படித்தான்....

விவசாய துறையில் முதலாளித்துவ வளர்ச்சிக்கு ஒரு கேரண்டி யாராச்சும் கொடுங்க சாமி....

நானும் சாய் நாத் கட்டுரையை படித்தேன். அவர் வார்த்தைகளை பயன்படுத்தும் விதம் அடிவயிற்றில் புளி கரைக்கிறது.....

சொரனை வருமா நம்ம சகோதர யுப்பி வர்க்கத்துக்கு?....


அசுரன்

அசுரன் சொன்னது…

சமுத்ரா,

முன்பு ஈரத் துணீ போட்டு கொன்னாங்க இப்ப கழுத்துல கத்தி வைச்சி இந்துத்துவ பானில அறுக்கறாங்க. அவ்வளுவுதான் வித்தியாசம்

நீங்க இந்த இரண்டு வித்தியாசத்த பத்தி(before and after 15 yrs) என்ன சொல்றீங்கன்னு பதிய வைச்சீங்கன்னா எனக்கும் ரொம்ப வசதியா இருக்கும். என்னா எல்லா விசயத்த பத்தியும் நீங்க கருத்து வைச்சிருபீங்களே அதான் கேட்டேன்..... உங்களுக்கு மனிதாபிமானமும் ஜாஸ்தி..... எங்களவிட....


அசுரன்

மா சிவகுமார் சொன்னது…

சமுத்ரா வாங்க,

ஐம்பது கோடி பேருக்கு நாட்டின் இருபது சதவீதத்துக்கும் குறைவான வருமானம் போய்ச் சேருகிறது. ஆண்டு தோறும் உற்பத்தி / சேவைத் துறைகளின் வளர்ச்சி பத்து சதவீதத்துக்கு அருகில் இருக்கும் போது விவசாயம் இரண்டு சதவீதம் வளர்ந்து விட்டால் சாதனையாகப் படுகிறது.

இப்படியே ஆண்டுக்கு ஆண்டு விவசாய கிராமப்புற மக்கள் கையில் சேரும் பணம், நகரப் புற மக்களின் பணத்துடன் போட்டு போட்டு அவர்கள் தமது தேவைகளை நிறைவு செய்து கொள்ள முடியாத நிலை உருவாகி உள்ளது.

மொத்தம் இரண்டாயிரம் ரூபாய் செலவில் பொறியியல் படிப்பை முடித்துக் கொள்ள முடிந்த 1989-93 போய் லட்சக் கணக்கில் கட்டணம் கட்டினால்தான் படிக்க முடியும் என்ற நிலையைத் தாங்கிக் கொள்ளும் வளர்ச்சி விவசாயிக்குக் கிடைக்கவில்லை.

தாராள மயமாக்கம், உலக மயமாக்கம் என்று அரசு தனது கைகளை கழுவி விட, பொது வினியோகத்தை நசுக்கிவிடுகிறது, பொது சுகாதாரத்துறையை பலனற்றதாக்கி விடுகிறது. முட்டி வலிக்கும் அபொல்லோ போய் ஆயிரங்கள் கொட்டுவது கிடைப்பது போதும் என்று சமூகம் ஒதுங்கிக் கொள்கிறது. குடிநீருக்கு அரசு உத்தரவாதம் இல்லை, அதையும் தனியார் சந்தையே பாட்டிலில் அடைத்து லாரியில் போய் விற்றுக் கொள்ளட்டும் என்று ஒவ்வொரு சேவையிலும் நலிந்த விவசாயப் பிரிவினரை கசக்கும் வகையில் அரசு பின்வாங்கி விட்டது.

குளிரூட்டப்பட்ட அறைகளில் கணினியைத் தட்டிக் கொண்டிருக்கும் நமக்கெல்லாம் இவை எல்லாம் வளர்ச்சியாக புதிய வாய்ப்புகளாகப்படலாம். நமது உணவுக்காகப் பரம்பரை பரம்பரையாக வந்த தொழிலை செய்து கொண்டிருக்கும் விவசாயிக்கு வருமானம் வளாராமலே நின்று விட செலவுகள் தறி கெட்டு ஓட ஆரம்பிக்கின்றன.

இதுதான் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பும் இன்றும் இருக்கும் மாற்றம். இந்த ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசுக்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில்தான் நிலைமை மிக மோசமானது என்பது என் கருத்து.

அன்புடன்,

மா சிவகுமார்

அசுரன் சொன்னது…

இந்த ஒரு மாசத்துல 111 பேர் இறந்துருக்காங்க.... அய்யா இது நம்ம நாட்டுக்காக நாம வாய வச்சி திங்கறோமெ அந்த சோத்துக்காக செத்துகிட்டிருக்கிற அப்பாவிகள்..... இவர்களின் உழைப்புக்கு ஈடான விலை கொடுக்கும் நிலை வந்தால் இந்த பொருளாதார அமைப்பில் எந்த நாயும் சோத்தில் வாய் வைக்க முடியாது.....


கொஞ்சம் கூட நன்றியுணர்ச்சி.... பரிவுணர்ச்சி.... எதுவுமின்றி தனது சொந்த நலன்... அதைத் தாண்டி தனது குழந்தைகளின் நலனைக் கூட முன்னிறுத்த தாயரில்லாமல் ஒரு நுகர்வு வெறி சுய நல கூட்டத்தை வெற்றிகரமாக உருவாக்கியதற்க்கு ஏகாதிபத்தியத்தை எதைக் கொண்டு அடிக்க.....

புழுத்துப்போன கோதுமை... அடப் போங்கய்யா.... எழுத விருப்பமில்ல....

என்னத்த சொல்ல.....

திரும்ப திரும்ப எத்தன தடவ சொல்ல.....

டேய் நீதான்டா படிச்சிருக்க... உனக்குதான்டா இந்த விசயங்கள உள்வாங்கி புரிஞ்சிகிறதுக்கான வாழ்னிலையும் வாய்ப்புகளும் ஜன நாயக அறிவு வளர்ச்சியும் இருக்கு...
உன் பொறுப்புலதாண்டா இந்தியாவின், உலகின் மனித சமுதாயத்தின் எதிர்காலம் இருக்குன்னு எத்தன சொன்னாலும் விளையாட்டா எடுத்துட்டு போறாங்க....

தன்னோட வீட்டில எழவு விழுந்தாக்கூட அடுத்த வேல சோத்த முதன்மைப் படுத்தற பண்ப ...... அய்யா மெக்காலே நீ வாழ்க....


உலக வங்கி, ஐ.எம்.ஃஎப், WTO.... இவற்றின் பாலிசிகள்.... டேய் உனக்கும் சேத்துத்தாண்டா ஆப்பு வைக்கிறாங்க..... எந்திரிடா நாதாரி.....

ம்..... தூங்குற மாதிரி நடிக்கிறாங்க.....

எத்தன நாளு...... நான் உன்னோட சகோதரன் புண்படுத்தாம எழுப்புறேன்.... என்னையும் உன்னையும் நம்ம சகோதரன் விவசாயியையும் சேர்த்து ஒருத்தன் விட்டு ஆட்டுறானே.... அவன் உன்ன எழுப்புவான் கூடிய விரைவில் அப்ப ரொம்ப புண்ணாகிப் போயிரும்......

இரண்டு நாள் முன்னாள இதே ஹிந்துல IMF பத்தி ஒரு கட்டுரை, அப்புறம் ஜெனிவா மீட்டிங் தோல்வி பற்றிய சில கட்டுரைகள் நேத்து, இன்னைக்கி காலையில இந்தக் கட்டுரை.... இது தொடர்ந்து உணர்ச்சி வசப்பட வைச்சி உடல் நிலையை பாதிக்குது....

இயலாமை சிறுக சிறுக கொல்லுது.... ஊர் கூடி தேர் இழுப்போம் வாங்க சாமிகளா........

மா சிவகுமார் சொன்னது…

//உங்களுக்கு மனிதாபிமானமும் ஜாஸ்தி..... எங்களவிட....//

அசுரன்,

ஒருவரது முந்தைய கருத்துகளை வைத்துக் கொண்டு ஒரு சாயம் பூசி அவரை பேச விடாமல் செய்வது மார்க்ஸ் சொன்ன அறிவியல் அணுகுமுறைக்கு எதிர் இல்லையா! கருத்துக்களை மட்டும் பதட்டப்படாமல் சொன்னால் எல்லோருக்கும் புரியும். இதை நல்ல விதமாகப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

அசுரன் சொன்னது…

மா. சிவகுமார்,

நீங்க இதப்பத்தி என்ன சொல்றீங்க.....

ஒரு முடிவு தெரியாம போறாப்பல இல்ல.....

ஏன் இப்படி சாவுறாங்க?

உழைக்காதவானா அவன்?.....

நாயைவிட கேவலமான ஒரு வாழ்க்கை....

அப்படி என்ன கம்மியா இந்த நாட்டுக்கு அவன் செய்யாம விட்டுட்டான்.

இல்ல இதுக்கு தீர்வு என்னன்னு சொல்லுங்க.....

வெறுமே ஒரு பதிவு போட்டிட்டு போற விசயமா இது...

அப்படின்னு அதையாவது வெளிப்படையா சொல்லுங்க....

ஒரு சமூகமே சீரழியும் போது நான் மட்டும் நல்ல வாழ்க்கை வாழ்வென் அதுவும் ஒரு நடுத்தர வர்க்க வாழ்வை வாழ்வேன்னு எந்த அடிப்படையில் நான் நம்பிக்கை வைப்பது?....

எனது சுய நலமும் சேர்ந்துல்ல தூக்கு மாட்டி தொங்குது.....

மா சிவகுமார் சொன்னது…

//டேய் நீதான்டா படிச்சிருக்க... உனக்குதான்டா இந்த விசயங்கள உள்வாங்கி புரிஞ்சிகிறதுக்கான வாழ்னிலையும் வாய்ப்புகளும் ஜன நாயக அறிவு வளர்ச்சியும் இருக்கு...
//

அன்புள்ள அசுரன்,

உங்கள் கோபமும் புரிதலும் மிக அரிதானவை. இது பரவலாகப் போய்ச் சேர வேண்டும். இணையத்தில் இணைவது, வலைப்பதிவு எழுதுவது, பிறருடன் விவாதிக்க முடிவது எல்லாம் பல கோடி பேருக்குக் கிடைக்காத பெரும் வாய்ப்பு. அதை பொறுப்பாகப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணி விடும் அளவில்தான் இருப்பது வருந்தத்தக்கது.

நீங்கள் அசுரன், போனபர்ட் என்ற வடிவங்களைக் களைந்து உண்மை முகத்துடன் உலாவும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். எதற்கு பயம்? யாரைக் கண்டு அச்சம்?

அன்புடன்,

மா சிவகுமார்

அசுரன் சொன்னது…

இப்படியே தொடர்ந்து போடுறேன்... இந்த தளத்துக்கு படிக்க வரவுங்க... அடங்கொய்யா இந்த பய வாயில தூண்டில போட்டு இழுக்கிறானேன்னு கமுக்கமா போறதுக்கான வாய்ப்புகள்தான் அதிகம்....

பரவாயில்ல.... இப்ப போட்டு வைக்கிறேன் ஒரு நாள் இந்த கருத்துக்களூக்கு பொருத்தமான ஒவ்வொருவரின் சொந்த வாழ்நிலை வரும்

சிறில் அலெக்ஸ் சொன்னது…

உண்மைதான் இந்த மாதிரி செய்திகளைப் படிக்கும்போது 'எங்கோ யாருக்கோ' என சும்மயிருந்துவிடுகிறோம், நீங்கள் சொல்வதுபோல நமக்குத்தெரிந்த ஏதாவது ஒரு முடிவைச் சொல்லி தப்பித்துக் கொள்கிறோம்.

குறைந்தபட்ச உணர்தலோ புரிதலோகூட இல்லாமல் இருக்கிறோம்..

மனம் வருந்துகிறேன்.

I have denied these news several times.

'என்னால் என்ன செய்ய முடியும்' என்பதும் கூட ஒட்டிக்கொள்கிறது.

:(

மா சிவகுமார் சொன்னது…

அசுரன்,

நான் என்னுடைய கருத்துக்களையும் நான் என்ன செய்கிறேன் என்பதையும் எழுதுகிறேன். உங்களுடன் கை கோர்த்து இது போன்ற பிரச்சனைகளுக்கு வழி காண முயல வேண்டும் என்பது எனது விருப்பம். என்னைத் தொடர்பு கொள்ளவும்.

மின்னஞ்சல் masivakumar@gmail.com, தொலைபேசி எண்: 9884070556

அன்புடன்,

மா சிவகுமார்

அசுரன் சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
அசுரன் சொன்னது…

தொடர்பு கொள்கிறேன்

மா சிவகுமார் சொன்னது…

இரவுகழுகு,

வருகைக்கு நன்றி.

இந்த நிலை மாற ஒரே வழி. வெறி பிடித்த மேற்கத்திய நுகர்வோர் கலாச்சாரம் மட்டுப்பட்டு, அசுரன் சொல்வது போலத் தன் சகோதரன் பட்டினி கிடக்கும் போது தனது குழந்தைகள் பட்டினிக் கிடக்கும் போது ஒரு தாய் எப்படி நடந்து கொள்வாளோ அப்படி நாமெல்லாம் நடந்து கொள்ள ஆரம்பிக்க வேண்டும்.

பதிவு போட்டு விட்டு அனுதாபம் தெரிவிப்பதோடு நின்று விடாமல் நமது வாழ்க்கை முறைகள்தாம் இந்த ஏழை விவசாயிகளை கொன்று போடுகின்றன என்பதை புரிந்து கொண்டு மறு பார்வை கொள்ள வேண்டும்.

ஒருவர் இருவரில் ஆரம்பித்து வளர்ந்தால் நம்முடைய சகோதரர்களின் வாழ்வும் மலரும், அதற்கு பெரிய புரட்சியும் வெடிக்க வேண்டாம், ஆண்டுக்கு பன்னிரண்டு சதவீத வளர்ச்சியும் வேண்டாம்.

கொஞ்சம் பொறுமையாக சிந்தித்துப் பார்க்க முயற்சி செய்யுங்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

அசுரன்,

//எனது முகவரி தெரிந்தால்தான் எனது கருத்துக்களை ஏற்பீர்களா? //

உங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதில் தயக்கமே இல்லை. அதற்கு தீர்வு காண்பதற்கான வழி முறைகளில்தான் மாறுபடுகிறேன்.

//எனது முகத்தைக் காட்டி நட்பு பாரட்ட வலையில் உலாவரவில்லை. //

உங்கள் முகம் பார்த்து கொஞ்சுவதற்காக இல்லை. இந்தச் சமூகக் காட்டில் வளர்ந்திருக்கும் புதர்களை பதர்களை எரித்துப் போடத்தான்.

நீங்கள் அடுத்தப் பின்னூட்டத்தில் சொன்னது போல உங்களது தொடர்புக்குக் காத்திருக்கிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//'என்னால் என்ன செய்ய முடியும்' என்பதும் கூட ஒட்டிக்கொள்கிறது.//

நிறையச் செய்ய முடியும் சிறில்.

நமது சம்பாத்தியத்தை நன்கொடையாகக் கொடுக்க வேண்டாம். அது அவர்களுக்குத் தேவையில்லை.

நாம் செலவளிக்கும் ஒவ்வொரு பொருளின் பின்னணியைப் புரிந்து கொண்டு செயல்பட்டால் போதும். நாம் எடுக்கும் ஒவ்வொரு பொருளாதார முடிவுக்கும் என்ன விளைவுகள் வரும் என்பதை உணர்ந்து கொஞ்சம் மட்டுப்படுத்திக் கொண்டால் போதும்.

குடும்பச் சூழலில் கொஞ்சம் சிரமம்தான். பொறுமையாக அன்பாக விளக்கினால் பெண்களையும் குழந்தைகளையும் போல் புரிந்து கொள்வதற்கு நிகர் வேறு யாருமில்லைதானே

அன்புடன்,

மா சிவ்குமார்.

துளசி கோபால் சொன்னது…

சிவகுமார்,

//நாம் செலவளிக்கும் ஒவ்வொரு பொருளின் பின்னணியைப் புரிந்து கொண்டு செயல்பட்டால் போதும். நாம் எடுக்கும் ஒவ்வொரு பொருளாதார முடிவுக்கும் என்ன விளைவுகள் வரும் என்பதை உணர்ந்து கொஞ்சம் மட்டுப்படுத்திக் கொண்டால் போதும்.//

இன்னும் கொஞ்சம் விளக்கமா இதுபத்தி ஒரு தனிப்பதிவு போடுங்க.

என்ன செய்யலாம்னு தெரியாம என்னைப்போல பலர் இருக்கோம்.

இராம. வயிரவன் சொன்னது…

உங்கள் சிந்தனை ஆரோக்கியமாய் இருக்கிறது. பாராட்டுக்கள்.
- வயிரவன்

siva gnanamji(#18100882083107547329) சொன்னது…

"சொந்த சகோதரர்கள் துண்பத்தில் வாடல் கண்டும்
சிந்தை இரங்காரடி-கிளியே
சகத்தில் மறப்பாரடி.......
நெஞ்சு பொறுக்குதில்லையே...."

மா சிவகுமார் சொன்னது…

பதில் அளிக்கத் தாமதத்துக்கு சாரி அக்கா

தனிப் பதிவு ஒன்று கண்டிப்பாகப் போடுகிறேன், தேன் கூடு போட்டியில் கலந்து கொள்ளும் விதமாக.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

நன்றி வயிரவன்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

பொருத்தமான பாடல் வரிகளுக்கு நன்றி ஐயா.

அன்புடன்,

மா சிவகுமார்