வியாழன், செப்டம்பர் 17, 2009

வலைப்பதிவர்கள்

தமிழ் வலைப்பதிவுகளைப் படிக்க ஆரம்பித்தது 2004ல். சில மாதங்களுக்குப் பிறகு நானும் எழுத ஆரம்பித்து நிறைய நேரம் செலவழித்து அந்த ஆர்வம் ஓய்ந்து போய் விட்டது.

ஆரம்ப காலத்திலிருந்தே தொடர்ந்து எழுதி மகிழ்வித்துக் கொண்டிருக்கும் பதிவர்கள், கொஞ்ச காலம் எழுதி ஒதுங்கி விட்டவர்கள், எழுதுவதில் பெரிதாக கவராவிட்டாலும் இணையத்துக்கு வெளியிலான சாதனைகளில் மதிப்பைப் பெற்றவர்கள் என்று நிறைய பேரை தெரிந்து கொள்ள முடிந்தது.

எனக்கு தமிழ் பதிவுலகில் துருவ நட்சத்திரங்கள்
1. பத்ரியின் எண்ணங்கள்
2. டோண்டு ராகவன்
3. லக்கி லுக்
4. ஆசிப்மீரானின் வேதம்
5. கண்ணபிரான் ரவிசங்கர்
6. துளசிகோபால்

ஒளி வீசி பயனளித்து இப்போது அடக்கி வாசிப்பவர்கள்
1. மோகன்ராஜ் - கைப்புள்ள
2. டிபிஆர் ஜோசப்
3. உருப்படாதது
4. ரோசா வசந்த்
5. முத்து தமிழினி

வலைப்பதிவுகள் மூலம் அறிமுகமாகி நிஜ உலகில் வியக்க வைப்பவர்கள்
1. பாலபாரதி
2. அதியமான்
3. வினையூக்கி
4. முனைவர் இளங்கோவன் (புதுவை)

வாசிப்பனுபவங்களுக்கு நன்றி.

7 கருத்துகள்:

வால்பையன் சொன்னது…

நானும் வலையுலகம் வந்ததிலிருந்து உங்களை சந்திக்கனும்னு ஆசைப்படுறேன்,
முடிய மாட்டிங்கிது!

:(

உண்மைத்தமிழன் சொன்னது…

///வால்பையன் said...

நானும் வலையுலகம் வந்ததிலிருந்து உங்களை சந்திக்கனும்னு ஆசைப்படுறேன், முடிய மாட்டிங்கிது!
:(///

வாலு.. ஏம்ப்பா இப்படி? நல்லாத்தான இருக்குற..? அப்புறம் எதுக்கு இதெல்லாம்..?

மா சிவகுமார் சொன்னது…

வால்பையன்,

உண்மைத்தமிழன் சொல்வது ஒரு புறமிருக்கட்டும் :-).
நாம் விரைவில் சந்திப்போம்.

அன்புடன்,
மா சிவகுமார்

துளசி கோபால் சொன்னது…

ஐயோ..... என்ன இப்படி?

என்னைவிடச் சிறப்பா எழுதும் பதிவர்கள் இருக்க.........

துருவ....... என்றதுதான் கொஞ்சம் பொருத்தம். தென் துருவத்துக்குப் பக்கத்துலே இருப்பதாலா:-))))

ஆனாலும் மனசின் மூலையில் மகிழ்ச்சி ஊற்றெடுப்பதைத் தவிர்க்க முடியலை. நன்றி.

மா சிவகுமார் சொன்னது…

துளசி அக்கா,
வலைப்பதிவுகளுக்குள் எட்டிப் பார்க்கும் போது என்ன நடக்கிறது என்று வழி காட்டுவதுதானே துருவ நட்சித்திரங்கள். அதில் நீங்கள் நிச்சயமாக இருக்கத்தான் செய்கிறீர்கள்.

அன்புடன்,
மா சிவகுமார்

- யெஸ்.பாலபாரதி சொன்னது…

அண்ணன் இன்னும் நினைவு வைத்திருப்பதற்கும்.. அதை பறை சாட்டியமைக்கும் நன்றி! :))

மா சிவகுமார் சொன்னது…

பாலா,
சங்கம் வைத்து வளர்க்கப்பட்ட உங்களை எப்படி மறக்க முடியும் :-)

அது ஒருபுறமிருக்க, வலைப்பதிவுகள் மூலம் சாதிக்க வேண்டும் என்று கனவு மட்டும் கண்ட என்னைப் போன்றவர்களுக்கு அதை நனவாக்க திட்டம் ஏற்படுத்திய உங்கள் சாதனை மறக்க முடியாத ஒன்றல்லவா!

அன்புடன்,
மா சிவகுமார்