ஞாயிறு, செப்டம்பர் 27, 2009

மென்பொருள் வணிகத்துக்கு சாவு மணி

http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_1239.html

30 கருத்துகள்:

Unknown சொன்னது…

சிறப்பான கட்டுரை சிவக்குமார்

மா சிவகுமார் சொன்னது…

நன்றி ராஜா. போன வாரம் உலக மென்பொருள் விடுதலை நாள் கொண்டாடப்பட்டது (Software Freedom Day).

இனி வரும் ஆண்டுகளில் திறவூற்று மென்பொருள் முறை வெகு வேகமாக பரவும். பரவ வேண்டும்.

அன்புடன்
மா சிவகுமார்

பகீ சொன்னது…

The best article ever..

த. சீனிவாசன் சொன்னது…

Nice article.

We invite you to write on www.kanimozhi.org.in

Thanks.

Shrinivasan

மா சிவகுமார் சொன்னது…

நன்றி பகீ. திறவூற்று முறையில் எல்லா மென்பொருள்களும் எழுதப்பட்டால் மென்பொருள் துறையில் வேலை வாய்ப்புகள் மறைந்து விடும் என்ற அவதூறு பெரிதாக பேசப்பட்டு வந்தது.

ரெட்ஹாட், ஐபிஎம் முதலான சேவை நிறுவனங்கள் திறவூற்று மென்பொருள் அடிப்படையிலான சேவை முறையை வெற்றிகரமாக செயல்படுத்தி அதை உடைத்தெறிந்திருக்கிறார்கள்.

ஸ்ரீநிவாசன்,

வணக்கம். கணிமொழியில் எழுத அழைத்ததற்கு நன்றி. என் இடுகைகளில் உங்களுக்குப் பொருத்தமாகப் படுவதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

வேறு என்ன வகையில் நான் பணியாற்ற முடியும் என்றும் சொல்லுங்கள்.

அன்புடன்,
மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் சர்வேசன்,

எல்லோரும் ஒரே வார்த்தையில் பாராட்டி விட்டு நிறுத்தினால் எப்படி? :-). திறவூற்று மென்பொருள் இயக்கம் குறித்த உங்க கருத்துக்களையும் அனுபவங்களையும் சொல்லுங்க!

அரசுத் துறைகளில் குறிப்பாக இந்தியா போன்ற வளரும் நாடுகளின் அரசுத் துறைகளில் திறவூற்று மென்பொருள்கள்தான் பயன்படுத்த வேண்டும் என்று கொள்கை முடிவு எடுப்பது பெரிதும் பலன் தரும்.

மக்களின் வரிப்பணத்தை தனியார் மென்பொருள் உரிமங்களுக்காகக் கொட்டிக் கொடுப்பதைத் தவிர்த்து அவற்றுக்கு இணையாக திறவூற்று முறையில் கிடைக்கும் மென்பொருளைப் பயன்படுத்தி உள்ளூரில் வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்திக் கொள்வது அரசாங்கங்களின் கடமையாக அருக்க வேண்டும்.

அன்புடன்,
மா சிவகுமார்

ச‌ஹ்ரித‌ய‌ன் சொன்னது…

டாட் நெட் ப‌த்தி என்ன‌ நினைக்கிறீங்க‌,

அதுவும் இப்ப‌ ஃப்ரீயாக‌ கிடைக்குது, சில‌ வ‌கை மூல‌ம், கூட‌,

ச‌ஹ்ரித‌ய‌ன்

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் சஹ்ரிதயன்,

டாட் நெட், மென்பொருளை அடிமைப்படுத்தி வைத்து ஆதாயம் சம்பாதித்த ஒரு பெருநிறுவனத்தின் இன்னொரு வெளியீடு.

அது சில வகை கட்டற்ற செயல்பாட்டிலும் கிடைக்கிறது என்றாலும், மென்பொருளை வணிக நோக்கத்தில் விற்பதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கும் மைக்ரோசாப்டை நம்பி நமது உழைப்பை எப்படி C#ல் செலவழிக்க முடியும்?

என்றென்றும் கட்டற்று கிடைக்கும் மென்பொருள்களில் மட்டுமே நமது நேரத்தை முதலீடு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.

டாட் நெட் செயல்படுத்தலான மோனோ குறித்து ரிச்சர்ட் ஸ்டால்மேனின் எச்சரிக்கை:

http://www.fsf.org/news/dont-depend-on-mono

அன்புடன்,
மா சிவகுமார்

Selvakumar சொன்னது…

மிக நல்ல கட்டுரை சிவகுமார். நன்றிகள் பலப் பல.

திறவூலம் பயன்படுத்துவது குறித்த சில சந்தேகங்களுக்குவிளக்கமளிக்க முடியுமா?

1. வணிக நோக்கில் வெளியிடப்படும் மென் பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட தரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தாண்டி வருகின்றன. அதன் தரம் விற்பவரின் லாபம் சார்ந்து இருப்பதாலும், இது ஏற்படுத்தும் போட்டியாலும் பயனாளர்களுக்கு கிடைக்கும் பொருளின் தரம் உயர்ந்து கொண்டு செல்வதற்கு வாய்ப்பு உள்ளதல்லவா? திறவூல மென் பொருளில் இதற்கான உத்திர வாதம் உள்ளதா?

2. விற்பனைக்குப் பிந்தைய சேவை அளிப்பதில் 'விற்கப்படும்' மென்பொருட்கள் திறவூல மென்பொருட்களை விட பயனாளரை அதிகம் கவர்வது இயல்பானதல்லவா? என்னதான் உலகின் பல மூலைகளிலுள்ள வல்லுனர்கள் இதில் ஈடுபட்டாலும் பயன்படுத்தும் போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைப்பதற்கான உத்திரவாதம் உள்ளதா?

3. தொழில் நுட்ப அறிமுகம் இல்லாத பிற துறையை சார்ந்த பயனாளர்களுக்கு எவ்வளவு தூரம் வசதிகரமானதாக இருக்கப் போகிறது?

4. இதில் உள்ள சவால்களாக நீங்கள் கருதுவது யாவன?

வாகனத்தை கொள்ளை விலைக்கு விற்று விட்டு அதன் இயங்கு தொழில் நுட்பம் பற்றி அறிவதற்கான பயனாளரின் உரிமையை மறுக்கும் அநியாயத்தை ஒத்த மென் பொருள் வணிகம் மாறியே ஆக வேண்டும். இதற்கான குரல்கள் மிகப் பரவலாக ஒலித்தாலும் எதிர்பார்த்த நல்ல மாறுதல்கள் மெதுவாகவே நடக்கின்றன என்பது என் வருத்தம். நன்றி. செல்வா.

மு. மயூரன் சொன்னது…

தெளிவான அருமையான கட்டுரை சிவகுமார். பாராட்டுக்கள்.

வெறுமனே தொழிநுட்ப விசயமாக கட்டற்ற மென்பொருள் விவகாரத்தைப் பலர் எடுத்துக்கொள்கிறார்கள் எழுதுகிறார்கள். அதன் உள்ளார்ந்த அரசியல், மெய்யியல் ஆழங்களை அலசி எழுதுபவர்கள் குறைவு.
உங்கள் கட்டுரை அழகாக அந்த ஆழங்களை விளக்கியிருக்கிறது.

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

நல்ல கட்டுரை சிவக்குமார்.

தலைப்பைக் கொஞ்சம் மாற்றலாமோ? திறமூல மென்பொருள்களும் மென்பொருள்கள் தானே? அவற்றை விற்கவும் அவற்றின் மூலம் பொருள் ஈட்டவும் முடியும் தானே? திறமூல மென்பொருள்கள், வழமையான மென்பொருள் சந்தையின் போக்கை, முறைமையை மாற்றும் என வேண்டுமானால் கொள்ளலாம்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

செல்வா, உங்கள் கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல முயல்கிறேன். உங்கள் மூன்று கேள்விகளுமே திறமூல மென்பொருள் குறித்த பொதுவான, பிழையான புரிதலால் வருபவை.

1. இலவசமாக கிடைப்பன எல்லாம் தரம் குறைந்ததும் இல்லை. காசு கொடுத்து வாங்குவன எல்லாம் தரமானதும் இல்லை. ஆனால், இப்படி புரிந்து கொள்ள பழக்கப்பட்டிருக்கிறோம் :)

விண்டோசு மென்பொருள் நீங்கள் குறிப்பிடும் எல்லா தரக்கட்டுப்பாடுகளையும் தாண்டித் தான் வருகிறது. பிறகு ஏன் அதில் இத்தனை சொதப்பல்?

திறமூல மென்பொருள்களுக்கு உலகின் மிகச் சிறந்த மென்பொருளாளர்கள், திறமூல சித்தாந்தத்தால் உந்தப்பட்டு, பங்களிக்கிறார்கள். வழமையான வணிக நிறுவனத்தில் உள்ள ஒரு சில மென்பொருளாளர்களை விட உலகெங்கும் இருந்து பங்களிக்கும் இவர்களது எண்ணிக்கை, திறன்கள், தகுதி, பின்னணி மேம்பட்டது.

ஒரு மென்பொருளின் புதிய வடிவத்தை வெளியிடும் முன் இங்கும் alpha, beta நிலைகள், வழு திருத்தம் முதலிய பணிகள் செவ்வனே நடைபெறுகின்றன. ஏதேனும் வழு அறியப்படால் உடனே அவற்றுக்கான தீர்வும் செயல்படுத்தப்படுகிறது.

WordPress, Firefox, VLC media player இவையெல்லாம் திறமூல மென்பொருள்களே. இவற்றின் தரம் உலகறியும்.

2. பயன்பாட்டில் வரும் பாதிப் பிரச்சினைகளே மென்பொருள் தரமற்று இருப்பதால் தான். விண்டோசு உருப்படியா இருந்தால் நச்சுநிரல் ஏன் வருது? பிறகு அதை ஒழிக்க காசு வேற கொடுத்து இன்னொரு மென்பொருள் வாங்கணுமா?

முதல் பதிலில் குறிப்பிட்டபடி திறமூல மென்பொருள்களில் தரம் உறுதிப்படுத்தப்படுவதால் வரும் பிரச்சினைகளே குறைவு தான்.

அப்படியே பிரச்சினை வந்தாலும் எல்லா மென்பொருள்களுக்கும் பயனர் சமூகங்களின் உதவி மன்றங்கள் உள்ளன. இவற்றில் நெடுநாள் பயனர்கள், மென்பொருள் உருவாக்கிய நிரலாளர்களே நேரடியாகப் பங்கு கொள்கிறார்கள். இவர்கள் தரும் இலவச, உடனடி, நேரடி உதவி அருமையானது.

வணிக மென்பொருள் நிறுவனங்களின் உதவிப் பணியாளர்களுக்கு மேற்கண்ட அளவு அனுபவம் இருக்கும் என்று சொல்ல இயலாது. வழமையான உதவி பதில்களை எழுதி வாசிக்கும் கடைநிலை ஊழியர்களாக இருக்கலாம். தவிர, நோயை உருவாக்கி விட்டு மருந்தையும் விற்பது போல் குறையுள்ள பொருளைத் தந்து விட்டு அதற்கான உதவிக்கு காசும் கறக்கலாம்.

3. திறமூல மென்பொருள் என்றாலே பயன்படுத்த கடினமானது என்ற ஒரு தவறான எண்ணம் இருக்கிறது. சில மென்பொருள்களில் இது உண்மை தான் என்றாலும், பொதுப்படுத்தல் தவறு. திறமூல மென்பொருள்கள் மாறுபட்டவையே தவிர கடினமானவை அல்ல. பல திறமூல மென்பொருள்களும் தங்களின் பயனெளிமையைக் கூட்ட பெரும் முயற்சிகள் எடுக்கின்றன.

Internet explorer, Windows மட்டுமே அறிந்த நுட்ப அறிவு சிறிதே உள்ள நண்பருக்கு Firefox, Ubuntu அறிமுகப்படுத்தினேன். அடடா, மென்பொருள் என்றால் இப்படி எளிமையாக அல்லவா இருக்க வேண்டும் என்று அவர் மகிழ்ந்ததை மறக்க மாட்டேன்.

மு. மயூரன் சொன்னது…

//Firefox, Ubuntu அறிமுகப்படுத்தினேன். அடடா, மென்பொருள் என்றால் இப்படி எளிமையாக அல்லவா இருக்க வேண்டும் என்று அவர் மகிழ்ந்ததை மறக்க மாட்டேன். //

முற்றிலும் உண்மை. இவற்றின் பயனர் எளிமை அற்புதமானது.

முக்கியமாக உபுண்டு போன்றவற்றில் மென்பொருட்களை நிறுவிக்கொள்வது, தேவையான மென்பொருட்களைத் தேடியெடுப்பது போன்றவை மிகவும் கவர்ச்சிகரமான பயனர் எளிமை கொண்ட விடயங்கள்.

மா சிவகுமார் சொன்னது…

செல்வா வணக்கம்,

பரி/திறவூற்று மென்பொருட்களால் கடந்த 10 ஆண்டுகளாக பலனடைந்து வருகிறேன். நமக்குக் கிடைத்த நல்லதை நான்கு பேரோடு பகிர்ந்து கொள்வது கடமை என்பது ஒரு புறமிருக்க, திறவூற்று மென்பொருள் உருவாக்க முறை முழுமையாக பரவுவதற்கு நமது பங்களிப்பை செய்வது இன்னொரு முக்கிய கடமையாக இருக்கிறது.

உங்கள் கேள்விகளுக்கு ரவிசங்கர் கொடுத்துள்ள பதில்களுடன் என்னுடைய சேர்க்கைகள் :

//1. வணிக நோக்கில் வெளியிடப்படும் மென் பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட தரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தாண்டி வருகின்றன. அதன் தரம் விற்பவரின் லாபம் சார்ந்து இருப்பதாலும், இது ஏற்படுத்தும் போட்டியாலும் பயனாளர்களுக்கு கிடைக்கும் பொருளின் தரம் உயர்ந்து கொண்டு செல்வதற்கு வாய்ப்பு உள்ளதல்லவா? திறவூல மென் பொருளில் இதற்கான உத்திர வாதம் உள்ளதா?//

கடைசிக் கேள்விக்கு முதலில் பதில் ஆமாம்

"given enough eyeballs, all bugs are shallow" . "Given a large enough beta-tester and co-developer base, almost every problem will be characterized quickly and the fix will be obvious to someone."

ரவிசங்கர் குறிப்பிட்ட மென்பொருட்களுடன், இணையத்தை செலுத்தும் மின்னஞ்சல் வழங்கிகள், DNS வழங்கிகள், TCP/IP தொடர், நான் இடுகையில் குறிப்பிட்டிருக்கும் லினக்சு, போஸ்ட்கிரெஸ்கியூஎல் போன்று நூற்றுக் கணக்கான திறவூற்று மென்பொருட்கள், உயர் நம்பகத்தன்மை தேவைப்படும் பயன்பாடுகளில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

திறமூல மென்பொருட்களில் மூலநிரலைக் கட்டுக்குள் வைக்கக் கூடாது என்பதுதான் ஒரே நிபந்தனை. வணிக நிறுவனங்கள் மென்பொருட்களுக்கு தர நிர்ணயம் செய்து, பயன்படுத்தத் தேவையான சேவைகளை நுகர்வோருக்கு வழங்கி பணம் சம்பாதிப்பதற்கு எந்தத் தடையும் கிடையாது.

ஐபிஎம் முதல் ரெட்ஹாட் வரை அத்தகைய சேவைகள் மூலம் ஆயிரக் கணக்கான கோடிகள் மதிப்பு ஈட்டுகிறார்கள். மென்பொருளை கட்டுடன் விற்கும் வணிகத்தை முழுவதும் போக்கி விட்டால் அதைச் சார்ந்த சேவைகளில் வேலை வாய்ப்பும், தொழில் வாய்ப்புகளும் ஏராளம் இருக்கின்றன.

2. விற்பனைக்குப் பிந்தைய சேவை அளிப்பதில் 'விற்கப்படும்' மென்பொருட்கள் திறவூல மென்பொருட்களை விட பயனாளரை அதிகம் கவர்வது இயல்பானதல்லவா? என்னதான் உலகின் பல மூலைகளிலுள்ள வல்லுனர்கள் இதில் ஈடுபட்டாலும் பயன்படுத்தும் போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைப்பதற்கான உத்திரவாதம் உள்ளதா?

மீண்டும் உறுதியான ஆமாம். முதல் கேள்விக்குச் சொன்னது போல, மென்பொருள் கட்டற்றுக் கிடைப்பதால், அதற்கு பயன்பாட்டு சேவை, பிரச்சனைகளுக்குத் தீர்வு, தனிப்பயனாக்கம் போன்றவற்றில் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் ஈடுபட்டு பயனர்களை கவர்ந்து வருகின்றன.

3. தொழில் நுட்ப அறிமுகம் இல்லாத பிற துறையை சார்ந்த பயனாளர்களுக்கு எவ்வளவு தூரம் வசதிகரமானதாக இருக்கப் போகிறது?

எந்த மென்பொருளுமே ஆரம்பக் கட்டங்களில் தொழில் நுட்ப அறிமுகம் உள்ளவர்களுக்கு மட்டும்தான் பயன் தரும்படியாக இருக்கும்.

கட்டுண்ட தனியார் மென்பொருள்களில் ஆரம்ப கட்டங்கள் வெளியில் தெரியாமல் நிறுவனத்தின் நான்கு சுவர்களுக்குள் இருந்து விடுகின்றன. கட்டற்ற திறவூற்று மென்பொருள் உருவாக்கம் வெளிப்படையாக நடக்கிறது.

இரண்டு முறையிலுமே மென்பொருள் குறிப்பிட்ட முதிர்ச்சியை அடைந்த பிறகு (alpha, beta நிலைகளுக்குப் பிறகு) தொழில் நுட்ப ஆர்வம் இல்லாத பயனர்களுக்குப் போய்ச் சேரும்.

4. இதில் உள்ள சவால்களாக நீங்கள் கருதுவது யாவன?

பயனருக்கும் சமூகத்துக்கும் பரவலாக நன்மை தருவதாக இருந்தாலும், உரத்த குரல் கொடுக்கும் செல்வாக்கு நிறைந்த சிறு கூட்டத்துக்கு அது இழப்பு கொடுப்பதாக இருந்தால் அது தடுத்து நிறுத்தப்படுவது மக்களாட்சி முறையில் உள்ள பெரிய குறை.

கட்டுண்ட மென்பொருள் விற்பனை மூலம் கொழுத்த, வணிக நிறுவனங்கள் பரப்பும் FUD (பயமுறுத்தல், குழப்புதல், ஐயமூட்டுதல்) பிரச்சாரங்களால் போடப்படும் தடைக்கற்கள்தான்
திறவூற்று மென்பொருள் இயக்கத்தின் முன் இருக்கும் பெரும் சவால்.

மற்ற குறைகளாக 10 ஆண்டுகளுக்கு முன்பு சொல்ப்பட்டவை எல்லாவற்றுக்குமே பதில்கள் கிடைத்து விட்டதாகவே எனக்குத் தெரிகிறது.

அன்புடன்,
மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

மயூரன்,

உங்கள் வலைப்பதிவிலிருந்து கொடுத்த சுட்டியின் மூலம் இதைப்பற்றி இன்னும் பேச வாய்ப்புக் கொடுத்தற்கு உங்களுக்கு சிறப்பு நன்றிகள் :-)

ரவிசங்கர்,
தலைப்பு மற்றும் தமிழாக்கத்தில் நிறையவே யோசிக்க வேண்டியிருந்தது.

மென்பொருள் வினியோகத்துக்கு, பராமரிப்புச் சேவைக்கு, பயனர் பயிற்சி அளித்தலுக்கு, தனிப்பயனாக்கத்துக்கு கட்டணம் வசூலிப்பதை மென்பொருள் வணிகம் (Software Business) என்பதை விட மென்பொருள் சேவை வணிகம் (Software Services Business) என்றுதான் சொல்ல வேண்டும்.

மென்பொருள் வணிகத்தைச் சாத்தியமாக்கும் தனியார் கட்டுறுக்கும் வழக்கத்தை குறிப்பிட்டுத்தான் தலைப்பு அப்படிக் கொடுத்திருந்தேன்.

"திறவூற்று மென்பொருட்களின் சிறப்பு" என்று பெயர் கொடுத்திருந்தால் கொஞ்சம் டல்லாக இருந்திருக்கும் அல்லவா :-)

பரி நிரல் என்பதா, திறவூற்று மென்பொருள் என்பதா அல்லது பரி/திறவூற்று மென்பொருள் என்பதா என்றும் தெரிவு செய்ய வேண்டியிருக்கிறது. படிப்பதற்கு தெளிவாக அமையும்படி பார்த்துக் கொண்டால் போதும்.

நமது பணியைத் தொடர்ந்து செய்து வருவோம்!

அன்புடன்,
மா சிவகுமார்

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

தலைப்பை மொக்கையா வைக்க முடியாது தான் :) உங்கள் ஆங்கில இடுகையில் உள்ளது போல் "தனியுரிம மென்பொருள் வணிகத்துக்குச் சாவு மணி" என்று மாற்றலாம்.

**

செல்வாவுக்கு நீங்கள் தந்த விளக்கம் மிக அருமை. இணையத்தின் முதுகெலும்பாக இயங்கும் பல நுட்பங்கள் திறமூல அடிப்படையிலானவை என்பது முக்கியமான ஒன்று.

**
ஆமா மயூரன், எங்கள் ஊரில் தமிழ் வழியில் பயிலும் பள்ளிக் குழந்தைகள் உபுண்டுவை எந்த வழிகாட்டலும் இன்றி பயன்படுத்த முடிந்தது. உபுண்டுவின் இடைமுகப்பு தெளிவாக, பெரிதாக இருப்பதும் காரணம். விண்டோசு அவர்களுக்குப் பிடிபடவில்லை.

மா சிவகுமார் சொன்னது…

நன்றி ரவிசங்கர்,

எங்கள் நிறுவனம் ஆரம்பித்து 8 ஆண்டுகளாக ஒவ்வொரு வாடிக்கையாளருக்காக திறவூற்று மென்பொருட்கள் குறித்து விளக்கி (நல்லது செய்வதற்கு அவ்வளவு கஷ்டம் :-) கொண்டு வர வேண்டியிருந்தது.

அதே நோக்கில்தான் இந்தக் கட்டுரையை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து எங்கள் துறை சார்ந்த வலைப்பதிவிலும் வெளியிட்டேன்.

அன்புடன்,
மா சிவகுமார்

சுதர்சன் MMW சொன்னது…

உங்களை போன்றவர்களுடன் படிப்பு அலது Open Source உட்கட்டமைப்பு தொடர்பான விடயங்கள் தொடர்பாக வாதிட எனக்கு அனுபவமோ அறிவோ இல்லை . ஆனால் பொது விடயங்கள் தொடர்பாக வாதிட அறிவும் ஆற்றலும் உள்ளது.

அவரவர்கள் தங்களை தாங்களே மிகைப்படுத்தி காட்டி கொள்ளவே கட்டற்ற மென்பொருள் முறைகளை கையாளுகின்றனர் என்ற ஒரு கதை அங்குஅங்கு அடிபடுகிறது. இதை பற்றி என்னகு ஒன்றும் தெரியாது.

அப்போ உலகத்தில் Windows பயன்படுத்தும் 90% மான பேர் கேனபயளுகளா ?

அப்படி உங்கள் முழு நேரத்தையும் ஓபன் சோர்ஸ் இல் முதலிட்டால் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவது ? வெளிநாட்டில் லினக்ஸ் Engineers கு பொண்டாட்டி பிள்ளைகள் இல்லையா ? அப்படி இருந்தாலும் அவர்களுக்கு பூவா (சாப்பாடு ) யாரு போடுவது ?


உண்மையாகவே லினக்ஸ் ஓர் மறைமுக Fraud & Cheated Community . இதை விளக்கமாக நான் தகவல்களை திரட்டிய பின் முழுமையாக தருகிறேன்.

மொத்தத்தில் லினக்ஸ் இன் முக்கிய புள்ளிகள் உங்களை போன்றவர்களை குனிய வைத்து குதிரை ஏறுகிறார்கள் .

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் சுதர்சன்,

//அவரவர்கள் தங்களை தாங்களே மிகைப்படுத்தி காட்டி கொள்ளவே கட்டற்ற மென்பொருள் முறைகளை கையாளுகின்றனர் என்ற ஒரு கதை அங்குஅங்கு அடிபடுகிறது. இதை பற்றி என்னகு ஒன்றும் தெரியாது.//

அது கதை அல்ல, கிட்டத்தட்ட உண்மை. மென்பொருள் வல்லுனர்கள், பொறியாளர்கள் தத்தமது திறமைகளை வெளிக்காட்ட உதவும் மாபெரும் மேடையாக விளங்குகிறது திறவூற்று மென்பொருள் முறைகள். அது மொத்த சமூகத்துக்கும் பலனளிப்பதாக இருக்கிறது என்பது இந்த முறையின் சிறப்பு.

//அப்போ உலகத்தில் Windows பயன்படுத்தும் 90% மான பேர் கேனபயளுகளா ?//

1947க்கு முன்பு பிரிட்டிஷ் காரன் இருந்த போதுதான் இந்தியாவில் நிர்வாகம் நன்றாக இருந்தது என்று சில பெருசுகள் இப்போது கூட சொல்கிறார்கள். இந்தியாவின் விடுதலை இயக்கம் நடந்து கொண்டிருக்கும் போது எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

Windows பயன்படுத்துபவர்கள் மீது தவறு கிடையாது. ஒரு கெட்டிக்கார நிறுவனம் துறையை தனக்கு சாதகமாக வளைத்து மென்பொருள் சூழலை ஒற்றை இயங்குதளமாக செய்து விட்ட சூழலில் பெரும்பாலான பயனர்கள் அதைத்தான் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

தொழில் நுட்பத்தில் தேர்ந்தவர்கள் அதில் இருக்கும் பெரும் இழப்பை உணர்ந்து உருவாக்கிய இயக்கம்தான் திறவூற்று மென்பொருள் இயக்கம்.

அது இப்போது மேலோங்கி வருகிறது என்பது மகிழ்ச்சியான நிகழ்வு.

(அமெரிக்காவில் 1860களுக்கு முன்பு நிலவிய அடிமை முறையும் தென்மாநிலங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டது. அதுதான் கறுப்பு இனத்தவர்களுக்கு நல்லது என்று வாதிட்டவர்களும் உண்டு.)

//அப்படி உங்கள் முழு நேரத்தையும் ஓபன் சோர்ஸ் இல் முதலிட்டால் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவது ? வெளிநாட்டில் லினக்ஸ் Engineers கு பொண்டாட்டி பிள்ளைகள் இல்லையா ? அப்படி இருந்தாலும் அவர்களுக்கு பூவா (சாப்பாடு ) யாரு போடுவது ?//

ரெட்ஹாட் லினக்சு முதல், ஐபிஎம் போன்ற சேவை நிறுவனங்கள் ஆண்டு தோறும் பல்லாயிரம் கோடி மதிப்பில் சேவை அளித்து வேலைவாய்ப்புகளும் உருவாக்கியிருக்கிறார்கள். எல்லோரும் நன்றாக வளமாக வாழ்கிறார்கள்.

//உண்மையாகவே லினக்ஸ் ஓர் மறைமுக Fraud & Cheated Community . இதை விளக்கமாக நான் தகவல்களை திரட்டிய பின் முழுமையாக தருகிறேன்.//

நீங்கள் விளக்கமாக தகவல்கள் திரட்டி படித்து விட்டால் இன்னும் தெளிவாக புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

//மொத்தத்தில் லினக்ஸ் இன் முக்கிய புள்ளிகள் உங்களை போன்றவர்களை குனிய வைத்து குதிரை ஏறுகிறார்கள் .//

யார் அந்த முக்கிய புள்ளிகள்? இது நாள் வரை நான்தான் அவர்கள் செய்த வேலையை பயன்படுத்தி குதிரை ஏறிக் கொண்டிருக்கிறேன். முடிந்த வரை திரும்பிக் கொடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

வஜ்ரா சொன்னது…

//
சுதர்சன் MMW
//

தமிழ் வலை உலகின் முதல் விண்டோஸ் அடி வருடி...

மு. மயூரன் சொன்னது…

சுதர்சன் ஒரு பாடசாலை மாணவர். கட்டற்ற ம்னெபொருட்கள் குறித்த சில அரசியல் ரீதியான அடிப்படை எண்ணக்கருக்கள் அவருக்கு இன்னும் ஏற்படவில்லை என்று நினைக்கிறேன். அங்கே பள்ளிக்கூடத்தில் லினக்ஸ்காரர்கள், வின்டோஸ்காரர்கள் டீம் பிரித்து இவரும் நண்பர்களும் அடிபட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று கேள்வி ;)

ஆமாச்சு சொன்னது…

இன்று இதே கட்டுரையை தமிழ் கம்ப்யூட்டர் ஏட்டிலும் வாசிக்கக் கிடைத்தது.
மிக்க மகிழ்ச்சி.

சில கருத்துக்கள்:

ஓப்பன் சோர்ஸோடு ஸ்டால்மேனை தொடர்பு படுத்தாது இருப்பது நல்லது. வேண்டாம்
என்று அவரே வலிந்து கட்டுரைகள் எழுதிய பிற்பாடும்[1] இங்ஙனம் செய்வது
தவிர்க்கப்படவேண்டிய ஒன்று. நாமே செய்கிற போது அது தமிழ்க் கம்ப்யூட்டர்
போன்ற ஊடகங்களின் மூலம் தவறான அபிப்ராயங்கள் பரவிட வழிவகுக்கிறது. தங்கள்
கட்டுரையில் இவ்விஷயத்தில் சற்றே தெளிவு தெரிந்தாலும் தமிழ்க்
கம்ப்யூட்டரில் இல்லை. இதனை முன்னர் கட்டற்ற மென்பொருள் புத்தக
அறிமுகத்திலும் தமிழ்க் கம்ப்யூட்டர் செய்திருந்தது நினைவிற்கு வருகிறது.

வலைப்பதிவில் இருந்து..

//தனக்குப் புதிதாகக் கிடைத்த இன்டெல் 386 IBM பயனர் கணினியை இயக்குவதற்காக
அவர் எழுதிப் பார்த்த இயங்குதளத்துக்கு செல்லமாக வைத்த பெயர் லினக்சு.
அப்படி எழுதிய இயங்குதளத்தின் மூலநிரலை பூட்டி வைக்காமல் இணையத்தில்
எல்லோரும் தகவிறக்கி பயன்படுத்தும் வண்ணம் வெளியிடும் போடும் பரிநிரல்
அறக்கட்டளையின் GPL உரிமத்தின் கீழ் வெளியிட்டார்.//

அவர் இயங்குதளம் எழுதவில்லை. கருவை எழுதினார், என்பதை தெளிவாகத்
தெரிவித்தல் நல்லது.

குனு லினக்ஸ் காலக்கோட்டை குறிப்பிடுகிற போது ஸ்டால்மேனின் முயற்சியை
குறிப்பிட்டுத் தொடர்ச்சியாக லைனஸ் டோர்வார்ட்ஸின் முயற்சியையும்
குறிப்பிட்ட பின்னர், இரண்டின் சேர்க்கையால் இயங்குதளம் உருவானது என்பதை
கட்டுரை தெளிவாக்க வேண்டும் என்பதைக் கேட்டுக்கொள்கிறேன்.

மற்றபடி தங்களைப் போன்ற மூத்த வலைப்பதிவரிடமிருந்து வந்திருக்கும்
இக்கட்டுரை அதிகப் பயன் கொடுக்கும் என்று ஆழமாக நம்புகிறேன்.

[1] - http://www.gnu.org/philosophy/open-source-misses-the-point.ta.html

--

ஆமாச்சு

Unknown சொன்னது…

ஒரு நல்ல செய்திக்கு ஒரு நல்ல தலைப்பை வழங்கியிருக்கலாம்! எனினும் வாழ்த்துக்கள்!

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

வணக்கம்.

TamilFOSS - கட்டற்ற, திறமூல மென்பொருள்கள் குறித்த தமிழ் உதவி மன்றத்தில் பங்கு கொள்ள அழைக்கிறோம்.

நன்றி.

மா சிவகுமார் சொன்னது…

வஜ்ரா,

//தமிழ் வலை உலகின் முதல் விண்டோஸ் அடி வருடி...//
எல்லோருமேதான் ஒரு கட்டத்தில் விண்டோசைத் தாண்டித்தானே வந்திருக்கிறோம். திறவூற்று மென்பொருள் இயக்கத்தின் தடுக்க முடியாத வெற்றிநடை காலத்தின் கட்டாயம்.

மயூரன்,

இது எல்லா இடத்திலும் உள்ள கதைதான் போலிருக்கிறது. எங்க அலுவலகத்தில் எனக்கு எதிரில் இருப்பவரிடம் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வாதித்துக் கொள்வேன் :-)

ஆமாச்சு,

நீங்கள் சொல்லும் கருத்தோடு முற்றிலும் உடன்பட்டாலும், இந்த நுண்ணரசியல் விபரங்கள் தெரியாத வாசகர்களுக்கு எழுதும் போது அவற்றையும் நுழைத்துக் குழப்புவது தேவையில்லை என்று நினைத்தேன்.

கூடவே, open sourceம் free softwareம் interchangeable ஆகவே இப்போது எனது புத்தியில் உறைந்திருக்கிறது :-)

நன்றி கணேசன்.

ரவிசங்கர். TamilFOSS தளத்துக்கு சிறப்பு நன்றி.

அன்புடன்,
மா சிவகுமார்

Pragash சொன்னது…

வணக்கம் செல்வா! அண்மையில் சில வாரங்களாக தான் திறவூற்று மென்பொருள் பற்றி அறிவதில் ஆர்வம் அதிகரித்துள்ளது.காரணம் சுரண்டி கொழுக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் அதன் அடிவருடிகளுக்கும் எதிராக ஏதாவது செய்தே ஆகவேண்டும் எனும் ஆதங்கத்தில் வின்டோஸ் மென்பொருளுக்கு மாற்றீடாக ஏதாவது கிடைக்குமா என தேடிக்கொண்டு இருக்கும் போது தான் தங்களது இடுகையை படிக்க நேர்ந்தது. அருமையான விளக்கங்களை அளித்துள்ளீர்கள். பாராட்டுக்கள். அ.பிரகாஷ்

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் பிரகாஷ்,

உபுண்டு அல்லது ஓப்பன சூசே லினக்சு பதிப்புகளை நான் இப்போது பயன்படுத்தி வருகிறேன். 10 ஆண்டுகளில் தனிநபர் கணினிகளில் பயன்படுத்தும் தேவைகளில் பெருமளவை லினக்சு சார்ந்த திறவூற்று மென்பொருட்கள் உருவாக்கி விட்டிருக்கின்றன.

லினக்சு பயன்படுத்துவது குறித்து ஏதாவது உதவி தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்கள். நிறைய மின்னஞ்சல் குழுக்களும் இணையத்தில் இயங்குகின்றன.

அன்புடன்,
மா சிவகுமார்

Unknown சொன்னது…

நன்றி மா.சிவகுமார்
நானும் உபுண்டு பயன் படுத்த விரும்புகிறேன் ஆனால் எப்படி பயன்படுத்துவது என்று தெரியவில்லை எனக்கு உதவி செய்ய முடியுமா?

மா சிவகுமார் சொன்னது…

ramesh kumar,

மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். உபுண்டு செயல்படுத்துவது குறித்து முடிந்த உதவி செய்கிறேன்.

மா சிவகுமார் சொன்னது…

ramesh kumar,

மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். உபுண்டு பயன்படுத்துவது தொடர்பாக என்னாலன உதவியை செய்கிறேன்.

நன்றி.